யமுனை நதி அழுவது ஏன்? அக்பர் பீர்பால் கதை அக்பர் தமது மனைவியுடன் யமுனை நதிக்கரையில் அமர்ந்து யமுனையின் அழகினை ரசித்துக் கொண்டிருந்தார். பேகம்…… யமுனை நதியின் நீரோட்டத்தின் சல சலப்பு உன்னை அழகி அழகி என்று கூறிக்கொண்டே செல்வது போல் தோன்றுகிறது… இல்லையா பேகம் என்றார் கொஞ்சும் குரலில். ஆனால் அரசியாரோ அக்பர் கூறியதை மறுத்து உங்களுக்கு அப்படித் தோன்றுகிறது யமுனை நதியின் சல சலப்பு ஒரு பெண் அழுது கொண்டிருப்பது போல தனது கண்களுக்கு ... Read More »
Category Archives: சிறுகதைகள்
யார் இருக்கனும்!!!
June 29, 2016
யார் இருக்கனும் …? ஒரு ஜென் குருவிடம் பல சீடர்கள் இருந்தனர். அவர்கள் தங்கள் பொருட்கள் அடிக்கடி திருடு போவதை அறிந்து,தங்களுக்குள் யாரோ திருடுகிறார்கள் என்று தெரிந்து,ஒரு நாள் திருடிய சீடனைக் கையும் களவுமாகப் பிடித்து குருவின் முன் நிறுத்தினார்கள். குரு அமைதியாக இருந்ததைப் பார்த்து அவரிடம் அந்த சீடனை வெளியே அனுப்பக் கோரினர்.குரு சிறிது நேரம் ஒன்றும் சொல்லாமல் இருந்துவிட்டுப் பின்னர் அவனை வெளியே அனுப்ப முடியாதெனத் திட்டவட்டமாகக் கூறினார். கோபமுற்ற சீடர்கள் அவனை வெளியே ... Read More »
25 வது திருமண விழா!!!
June 29, 2016
முன்னொரு நாள் ஒரு திருமணமான தம்பதிகள் தங்களது 25 வது திருமண ஆண்டு விழாவை மகிழ்வுடன் கொண்டாடினார்கள்..அந்த ஊரில் 25 வருட திருமண வாழ்வில் ஒரு நாள் கூட அவர்களுக்குள் சண்டை சச்சரவுகள், வாக்குவாதங்கள் இருந்ததில்லை என்ற புகழுடன் அந்த நகரத்தில் அவர்கள் வாழ்ந்தார்கள்.. ‘அப்படி அவர்கள் ‘மகிழ்வுடன் செல்லும் வாழ்க்கை’ வாழ என்ன ரகசியம் அவர்களுக்கிடையே பொதிந்துள்ளது’ என அறியும் ஆவலுடன் பத்திரிக்கையாளர்கள் அவர்களின் வீட்டில் குழுமினர்.. ஒரு பத்திரிக்கை ஆசிரியர்,” சார்.இது ஆச்சர்யமாகவும் நம்பமுடியாததாகவும் ... Read More »
வினை வலியது!!!
June 28, 2016
வினை(karma) வலியது …… மகான் ஒருவரைப் பார்க்கச் சென்ற ஒருவர் தனது எதிர்காலத்தைப் பற்றிச் சொல்லும்படி மகானிடம் கேட்டார். சற்று நேரம் அவரைக் கவனித்த மகான் அவரைப் பார்த்து ‘இந்த வாரத்தில்; நீர் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும்’ ஏன்றார். ‘ஏன் அப்படிக் கூறுகிறீர்கள்? நான் எந்தப் பிரச்சினைகளுக்கும் போவதில்லையே!’ என்று வந்தவர் கேட்க….’அதுபற்றி எனக்கு தெரியாது. ஆனால் இந்த வாரத்தில் உமது கர்மாவை அனுபவிக்க வேண்டுமென்று இருக்கிறது’ என்றார் மகான். வந்தவரும் குழப்பத்துடன் வீடு திரும்பினார். ... Read More »
அமெரிக்கவில் சர்தார்!!!
June 27, 2016
அமெரிக்க நகர் ஒன்றில், சர்தார் ஒருவர் காரில் தன் மனைவி , அம்மா எல்லோருடனும் சென்று கொண்டிருந்தார் . நீண்ட நேரமாக அவரை ஒரு போலிஸ் ஜீப் தொடர்ந்துக் கொண்டிருந்தது. சர்தாரும் அதை கவனித்துக் கொண்டு தொடர்ந்து வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார். சிறிது நேரத்துக்கு பிறகு போலிஸ் ஜீப் சர்தார் காரை முந்திக்கொண்டு சென்று , அவர் கார் முன் நின்றது. இறங்கி வந்த போலிஸ் , சர்தாரிடம் ‘குட் இவ்னிங் சார்.. ‘ சர்தார் ‘குட் ... Read More »
பதில் சொல்லுங்க கடவுளே!!!
June 24, 2016
ஓர் அழகான குளம். அக்குளத்தில் தாமரையும், ஆம்பலும் பூத்து இருந்தன. அதன் கரையோரத்தில் கொக்கு மீனுக்காகக் காத்து நின்றது. குளத்திற்குப் பக்கத்தில் பெரிய வேப்பமரம் வளர்ந்திருந்தது. அதன் வழியே நடந்து செல்பவர்கள் இளைப்பாற குளத்தில் நீரைக் குடித்துவிட்டு, அருகில் வளர்ந்துள்ள வேப்பமரத்தடியில் உறங்கிவிட்டுச் செல்வர். பருந்து ஆகாயத்தில் வட்டமிட்டுப் பறந்தது. வேப்பமரத்தைச் சுற்றிப் பறந்து வந்து கிளையில் உட்கார்ந்தது. குளக்கரையில் மீனுக் காகக் காத்திருந்த கொக்கு, மீன் கிடைக்காததால், பறந்து சென்று வேப்ப மரத்தின் உச்சியில் உட்கார்ந்து ... Read More »
நிம்மதியாக இருக்க!!!
June 20, 2016
நிம்மதியாக இருக்க முடியவில்லையா? பலருக்கும் ஒரு கேள்வி இருக்கிறது. வாழ்க்கையில் நிம்மதி என்பது எங்கே இருக்கிறது. நம்மால் நிம்மதியாக இருக்கவே முடியவில்லையே என்று எப்போதும் சிந்தித்துக் கொண்டிருப்பதுண்டு. மனதில் எழும் இந்த ஆதங்கம் சாதாரண ஏழை முதல் கோடீஸ்வரர்கள் வரை அனைவரும் இதற்கு விதிவிலக்கல்ல. இதே எண்ணம் தொடருமானால் வாழ்வில் விரக்தியும், சலிப்புமே மிஞ்சும். ‘எதுவாக இருந்தாலும் வாழ்க்கையை நேசித்து வாழ்ந்து விடு’ என்றான் ஒரு தத்துவ ஞானி. வாழ்வில் நிம்மதி எப்போது கிடைக்கும்? இதற்கான விடையை ... Read More »
தவறு சிறுசா இருக்க திருந்திக்கோ!!!
June 19, 2016
மணி ஒரு சோம்பேறி பையன், அவனை திருத்த நினைச்ச அவனோட அப்பா, அந்த ஊர்ல இருந்த ஒரு முனிவர் ஒருவர் கிட்ட சொன்னார். ” இவன் ரொம்ப சோம்பேரியா இருக்கான். என்ன சொன்னாலும் சில பழக்க வழக்கங்களை மாத்தவே மாட்டேங்கிறான். நீங்க தான் அவன திருத்தனும்” னு சொன்னார். முனிவர் ஒரு நாள் அவனை ஒரு காட்டுக்கு அழைத்து போனார். அங்க இருந்த ஒரு சிறிய செடிய பிடுங்க சொன்னார். உடனே ரொம்ப சுலபமா பிடிங்கி விட்டான். ... Read More »
கிராமப் பெண்ணை வியப்பில் ஆழ்த்திய நெப்போலியன்!!!
June 18, 2016
பிரபல பிரெஞ்சு மன்னன் நெப்போலியன் சாதாரணப் படை வீரனாக இருந்த சமயம் அவனும் மற்ற வீரர்களும் ஓர் இடத்தில் கூடாரம் அமைத்து முகாம் போட்டிருந்தார்கள். பகல் நேரத்தில் ஓய்வு மிகுதியாக இருந்தது. அதனால் வீரர்கள் அனைவரும் கூடாரத்தை விட்டு வெளியே சென்றார்கள். விளையாடிக்கொண்டும், சிங்காரப் பாடல் பாடிக்கொண்டு உல்லாசமாக அலைந்துகொண்டும் இருந்தார்கள். ஆனால், நெப்போலியன் மட்டும் பொழுதை வீணாக்கவில்லை. கூடாரத்திலேயே இருந்துகொண்டு நல்ல நூல்கள் சிலவற்றைக் கவனமாகப் படித்துக்கொண்டிருந்தான். அப்பொழுது தற்செயலாக அந்தப் பக்கமாக வந்த கிராமப் ... Read More »
முட்டாள் உழவன்!!!
June 18, 2016
உழவன் ஒருவனிடம் பெரிய தோட்டம் ஒன்று இருந்தது. அதில் காய்கறிகளை பயிரிட்டான் அவன். நாள்தோறும் ஒரு முயல் அந்தத் தோட்டத்திற்குள் நுழைந்து இலை, பிஞ்சுகளைத் தின்று வந்தது. அதைப் பிடிக்க அவன் பல முயற்சிகள் செய்தான். முயல் அவனிடம் சிக்கவே இல்லை. எப்படியும் முயலைப் பிடித்தாக வேண்டும் என்று நினைத்த அவன் அரசனிடம் சென்றான். “அரசே என் தோட்டத்தை முயல் ஒன்று பாழாக்குகிறது. நீங்கள்தான் எனக்கு உதவி செய்ய வேண்டும்” என்றான். சிரித்த அரசன் ‘ஒரு முயலைப் ... Read More »