பூபதி ராஜன் என்ற சோழ மன்னனின் ஆட்சியில் இருந்த இடமே கீழ் தஞ்சாவூரில் உள்ள பூபதி ராஜபுரம் என்பது. அதுவே தற்போது வரகூர் என்று அழைக்கப்படுகிறது. வரகூர் தஞ்சாவூரிலிருந்து 15 கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஒரு சிறிய கிராமம். இங்குள்ள வெங்கடேச பெருமான் ஆலயம் மிகவும் புகழ் பெற்றது. பல ஆலயங்கள் ஸ்வயம்புவாகத் தோன்றியதாகக் கூறப்படும் தெய்வங்களின் சிலையை கொண்டுள்ளதாக உள்ளதினால் அவை புனித தீர்த்தங்களாக ஆகி உள்ளன. அவற்றில் காவேரியின் கிளை நதியான குடமுருட்டி நதிக்கரையில் அமைந்துள்ள, ... Read More »
Category Archives: சிறுகதைகள்
இதுதான் பார்வை!!!
July 7, 2016
இதுதான் பார்வை…! ஒரு காட்டில் ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்குப் பார்வை கிடையாது. அவ்வழியாக வந்த ஒருவன் ” ஏ கிழவா, இந்த வழியாக சற்று முன் யாராவது சென்றார்களா? என்று அதிகாரத் தோரணையில் கேட்டான். அதற்குத் துறவி , “இதற்கு முன் இந்த வழியாக யாரும் சென்றதாகத் தெரியவில்லை.” என்றார். சிறிது நேரத்தில் மற்றொருவன் அங்கே வந்து, ” ஐயா, இதற்கு முன் யாராவது இப்பக்கமாகச் சென்றார்களா? என்று கேட்டான். ... Read More »
நாய் வால்!!!
July 5, 2016
குமாரபுரம் என்று ஒரு சிறு கிராமம் இருந்தது.அது மிகவும் அழகான கிராமம்.அந்த ஊரின் புறத்தே அழகிய காடு ஒன்று இருந்தது. அழகு மிகுந்த அந்தக் காடு குமாரபுரிக்கே ஒரு அரணாகவும் அழகு தருவதாகவும் இருந்தது. ஆனால் அந்தக் காட்டுக்குச் செல்லவோ அதன் அழகை அனுபவிக்கவோ முடியாதபடி அந்தக் காட்டில் ஒரு பிரம்ம ராக்ஷசன்இருந்து கொண்டு தடுத்து வந்தான். யாராவது தெரியாதவர்கள் அங்கு போய்விட்டால்அவர்களை விழுங்கிவிடுவான் அந்த அரக்கன். இதனால் மக்கள் மிகவும் பயத்துடனும் கவலையுடனும் வாழ்ந்து வந்தனர். ... Read More »
பொறாமைக்காரர்கள்!!!
July 4, 2016
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொழுதுபோக்கு உண்டு என்பது போல, கிருஷ்ண தேவராயர் நல்ல மணம் நிறைந்த மலர்ச் செடிகளை வளர்ப்பதைத் தன் பொழுது போக்காகக் கொண்டிருந்தார். அரண்மனைத் தோட்டத்தில் தோட்டக்காரனைக் கொண்டு விதம் விதமான மலர்ச் செடிகளையும், கொடிகளையும் வளர்த்து வந்தார். நல்ல மணம் தரும் பூக்கள் திடீர் திடீரென காணாமல் போய்விடும். இவ்விதம் திருட்டுப் போவது பற்றி அறிந்து பெரிதும் வேதனைப்பட்டார் மன்னர். காவலர்கள் பலர் இருந்தும், இவ்விதம் திருடிச் செல்கிறார்களே… என்பது மன்னருக்கு வருத்தத்தையே அளித்தது. ... Read More »
கண்ணன் நாமம் சொல்லும் கதை!!!
July 4, 2016
பீஷ்மர், சரமாரியாக அம்புகளை விட்டுக்கொண்டே இருந்தார். அத்தனை அம்புகளும் ஸ்ரீகிருஷ்ணரின் முகத்தில் வந்து காயத்தை ஏற்படுத்தியபடி இருந்தன. ‘எந்தச் சூழலிலும் ஆயுதம் எடுக்கமாட்டேன்’ என்று பகவான் ஸ்ரீகண்ணபரமாத்மா செய்து கொடுத்த சத்தியம் அர்ஜுனனுக்கு நினைவுக்கு வந்தது. இதனால் ரொம்பவே கலவரமாகிப் போனான் அவன். இந்தச் சத்தியத்தைத் தெரிந்து வைத்திருந்த பீஷ்மர், மேலும் மேலும் அம்புகளை விட்டுக்கொண்டே இருந்தார். எல்லா அம்புகளும் கிருஷ்ண பரமாத்மாவின் திருமுகத்தில் காயங்களை ஏற்படுத்திக்கொண்டே இருந்தன. அவை அனைத்தையும் சிரித்த முகத்துடன் தாங்கிக்கொண்டார் ஸ்ரீகிருஷ்ணன். அதுமட்டுமா? ... Read More »
பேசும் தெய்வம்!!!
July 3, 2016
குருஜாம்பக்ஷத்திர கிராமத்தில் குர்யாஜி என்ற பக்தர் இருந்தார். அவரது மனைவி ராணுபாய். இந்த கிராமம் கங்கைக்கரையில் அமைந்திருந்தது. குர்யாஜி சூரிய நமஸ்காரம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருநாள் சூரியன் நேரில் வந்து காட்சியளித்து, உனக்கு இருபிள்ளைகள் பிறப்பார்கள். ராமன் அம்சத்தோடு ஒருவனும், அனுமன் அம்சத்தோடு ஒருவனும் பிறப்பார்கள், என்று கூறி மறைந்தார். முதல் பிள்ளைக்கு கங்காதரன் என்று பெயரிட்டனர். இரண்டாவது குழந்தையை ராணுபாய் பெற்றெடுத்த போது, சூரியன் வாக்களித்தபடி அனுமனின் அம்சமாக சிறுவாலுடன் இருந்தான். அவன் சற்று ... Read More »
முட்டாள் வேலைக்காரங்க!!
July 2, 2016
ரெண்டு முதலாளிகள் பேசிகிட்டிருந்தாங்க. ஒருத்தர் சொன்னாரு, ‘என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள்’ னு. மறுத்த அடுத்தவர், ‘வாய்ப்பே இல்ல, என் வேலைக்காரனப் பத்தி தெரியாம சொல்றீங்க’ ன்னாரு. சரி சோதிச்சு பாத்துடுவோம்னு சொல்லி, மொத ஆளு தன்னோட வேலைக்காரனை கூப்பிட்டாரு. பத்து பைசாவை கொடுத்து ‘கடைக்கு போய், நல்லா பாத்து இன்னோவா கார் ஒன்னு வாங்கிட்டு வா’ ன்னாரு. ‘சரிங்க அய்யா’ ன்னு பவ்வியமா வாங்கிட்டு போயிட்டான். ‘பாத்திங்களா, என் ஆளு எப்படி, என்ன வாங்க ... Read More »
திருடன் கிடைச்சிட்டான்!!!
July 2, 2016
அது ஒரு சின்ன ஊரு. அதுக்கு ஒரு ராஜா. அந்த ராஜாவுக்கு தன் நாட்டு மக்கள் எப்படி இருக்காங்கன்னு பாக்க ஆசை. ஒருநாள் ஊரைச் சுத்தி வந்தாரு ராஜா. ஒரு தெருவுல, ஒருத்தர் அழுதுகிட்டு இருந்தாரு. “என்னப்பா விஷயம்? ஏன் அழற!”ன்னு ராஜா கேட்டாரு. “ராஜா! நான் ரொம்ப ஏழை! கால் வயித்து கஞ்சிக்குக்கூட வழியில்ல! நாலு நாளா பட்டினிங்க. பசி தாங்க முடியல. அதான் அழறேன்” என்றார் அவர். ராஜாவுக்கு அவர் மீது பரிதாபம் ஏற்பட்டது. ... Read More »
நல்லதையே செய்வோம். நல்லதே நடக்கும்!!!
July 2, 2016
ஒரு துறவிகிட்ட சாப்ட்வேர் இன்ஜினியர் வந்தார்.. நல்ல தெய்வ பக்தி,அறிவாளி. ஆனா அவருக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். அதாவது இந்த பூமியில பிறந்துட்டோம். ஒரு நாள் இந்த உலகத்தை விட்டு போகத்தான் போறோம். அப்படி இருக்கும்போது ஏன் நாம நல்லது மட்டும் தான் செய்யணும். கெட்டது செஞ்சா, அடுத்தபிறவியில அனுபவிக்கணும். அதாவது கர்மாவிடாதுன்னு எல்லா பெரியவங்களும் சொல்றாங்க. ஆனா எனக்கு அதுல உடன்பாடு இல்லை. எல்லாம் சுத்த பொய். அது எப்படி நாம செத்துபோய்ட்டா கர்மா நம்ம கூடவே வருதும்னு அவருக்கு சந்தேகம். அவருடைய சந்தேகத்தை துறவிகிட்ட சொன்னார்..துறவி கேட்டார். உனக்கு ... Read More »
ராஜா மோதிரம்!!!
July 2, 2016
அவந்தி புரத்து ராஜா அனந்த வர்மா ஒரு நாள் ஆத்துல மந்திரிகளோட சேர்ந்து குளிச்சிக்கிட்டு இருந்தாரு. அப்ப அவரு விரல்ல இருந்த ராஜாவோட முத்திரை மோதிரம் நழுவி ஆத்துக்குள்ள விழுந்துருச்சு. குளிச்சு கரையேறுன பின்னாடிதான் தெரிஞ்சது ராஜாவுக்கு தன்னோட முத்திரை மோதிரம் காணாம போன விஷயம். ஆத்துக்குள்ளதான் விழுந்திருக்கும்னு சொல்லி சேவகர்களை ஆத்துல மூழ்கித் தேடச்சொன்னாரு. அவங்களும் ஆத்துல மூழ்கி பல மணி நேரம் தேடிப்பார்த்தும் மோதிரம்கிடைக்கவே இல்லை. ராஜா உங்க மோதிரம் கிடைக்கவே இல்லை! மணலுக்குள்ள ... Read More »