தஞ்சையை அடுத்த நஞ்சையன்பட்டி என்னும் சிறப்பான ஒரு சிற்றூர் இருந்தது. அவ்வூரில்… முட்டாள், மூடன், மட்டி, மடையன், பேயன், என்று ஐந்து பேர்கள் நெருங்கிய நண்பர்கள் இருந்தார்கள்.இந்த ஐந்து பேர்களும் கல்வியறிவு என்பது கொஞ்சம் கூட இல்லாதவர்கள் நிழலுக்காகக்கூட பள்ளிக் கூட வாசலில் ஒதுங்காதவர்கள். கல்வி அறிவு இல்லையென்பது கூட பெரிது இல்லாதவர்கள் சுய அறிவும் அற்றவர்கள்.மற்றவர்கள் கூறும் அறிவுரையையும் கேட்க மாட்டார்கள் தாங்கள் செய்வதுதான் சரி என்று கூறுவார்கள். இவர்களுக்கு எந்த வேலையும் தெரியாது. அதுமட்டுமல்லாமல் ... Read More »
Category Archives: சிறுகதைகள்
துணி துவைத்த சீடர்கள்!!!
July 13, 2016
குருதேவா! ஜமீன்தார் ஜம்புலிங்கம் வீட்டில் துணி துவைப்பதற்கு ஆள் தேவையாம். அந்த வேலையைச் செய்தால் என்ன? என்று சீடர்கள் கேட்டனர். துணி துவைக்கிற தொழிலுக்குப் பொதி சுமக்கும் கழுதை வைத்திருக்க வேண்டும். நம்மிடம் அது இல்லையே, என்ன செய்வது? என்றார் பரமார்த்தர். கழுதை இல்லாவிட்டால் என்ன? அதற்குப் பதில் தான் நாங்கள் இருக்கிறோமே! என்று சீடர்கள் கூறினர். இருந்தாலும், நிஜமான கழுதை இருந்தால் நல்லது! நல்ல கழுதையாக ஒன்று வாங்கி வாருங்கள், என்று உத்தரவிட்டார், பரமார்த்த குரு. ... Read More »
மதிப்பு கொடுப்பதில் தவறில்லையோ!!!
July 11, 2016
”மதிப்பு கொடுப்பதில் தவறில்லையோ” ஒரு வீட்டில் சின்ன பூசல். வழக்கமான மாமியார்- மருமகள் சண்டை தான். பிள்ளைக்குப் பிடித்தமானது என ஒரு பொருள் பற்றி தாய் சொல்வதைத் தாரம் மறுக்க… முறுக்க என ஒரே சத்தம்! அவ்வழியே ஒரு ஞானி சென்றார். அவரிடம் தாய் முறையிட்டாள். “”சுவாமி…..! பெற்றெடுத்தவள், வளர்த்து ஆளாக்கினவள் நான். எனக்கில்லாத பாசமா நேற்று வந்தவளுக்கு இருக்கும்….? நீங்களே சொல்லுங்கள்… தாயின் பாசம் தானே பெரிது….?” மருமகளும் அவ்விதமே முறையிட்டாள். ஞானி சிரித்தபடிச் சொன்னார். ... Read More »
கடவுள் யாரையும் கைவிடுவதில்லை!!!
July 10, 2016
ஒரு நாள் நான் முடிவு செய்தேன் இந்த வாழ்க்கையை துறந்துவிடுவது என்று… ஆம், எனது வேலை, எனது உறவுகள், என் இறையாண்மை அனைத்தையும் விட்டுவிடுவது என்று. துறவிகள் போல வாழ்ந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து காட்டிற்குச் சென்றேன். அப்போது… கடைசியாக இறைவனிடம் ஒரு சில வார்த்தைகள் பேச விரும்பினேன். “கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்?” கடவுளின் பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது… “ஒரு முறை காட்டைச் சுற்றிப் பார். ... Read More »
வாழ்க்கையின் உண்மை அறிவோம்!!!
July 10, 2016
முதல் மனைவியை நேசியுங்கள்! ஒரு பணக்கார வணிகனுக்கு நான்கு மனைவிகள் இருந்தனர். வணிகனின் முதல் மனைவி உண்மையான வாழ்க்கைத் துணையாகத் திகழ்ந்தாள். அவனுடைய வீட்டையும், சொத்தையும், வணிகத்தையும் கவனித்துக் கொண்டாள். அவள் அவனை அதிகமாக நேசித்த போதிலும், அவன் அவளை நேசிக்கவில்லை. ஒருநாள் வணிகன் திடீரென்று நோய் வாய்ப்பட்டு படுக்கையிலிருந்தான். அவன் இறக்கப் போவதை அறிந்து கொண்டான். எனவே அவன், தான் அதிகமாக நேசித்த தன் நான்காவது மனைவியை அழைத்து, “நீ என் அருகில் இருந்து என்னைக் ... Read More »
நேரத்தை வீணடிக்காதீர்கள்!!!
July 8, 2016
அந்த செல்வந்தனுக்கு அன்று மரணத்துக்கு நாள் குறிக்கப்பட்டிருந்தது. அவனது உயிரை கவர்ந்து வர எமதர்மன், எமதூதன் ஒருவனை அனுப்பியிருந்தான். செல்வந்தன் வழக்கம் போல காலையில் படுக்கையிலிருந்து எழுந்தான். எழும்போதே அவனுக்கு எதிரே கையில் பாசக்கயிற்றுடன் கூற்றுவனின் சேவகன் நின்றுகொண்டிருப்பதை பார்த்து திடுக்கிடுகிறான். “யார் நீ? உனக்கென்ன வேண்டும்?” “நான் எமதர்மராஜனின் ஏவலாள். இன்றோடு, இத்தோடு உன் ஆயுள் முடிகிறது. புறப்படு என்னோடு!” “நான் சாவதற்கு தயாராக இல்லை. எனக்கு இன்னும் கடமைகள் பல பாக்கியிருக்கிறது. நீ போய்விட்டு ... Read More »
சீதையின் கூறிய கதை!!!
July 8, 2016
சீதையின் பொறுமை:- இலங்கை அசோகவனத்தில் ராவணனால் சிறைவைக்கப்பட்டிருந்த சீதையைக் கண்டு ராமன் அனுப்பிய செய்தியை அனுமன் சொன்னான். பின்னர், அங்கிருந்த அரக்கியர் கூட்டத்தைக் குறிப்பிட்டு, தேவி, உன்னைப் பயமுறுத்திய இவ்வரக்கியரை நான் கொல்ல நீ அனுமதிக்க வேண்டும். இவர்கள் கொடுமையே உருவானவர்கள்.இராவணனுடைய ஆணையால் மட்டுமல்ல; இவர்களுக்கு இயற்கையாக உள்ள கொடுமைக்குணம் உன்னைத் துன்புறுத்த இவர்களைத் தூண்டியது. இவர்களைத் தண்டிக்க வேண்டும். காது, மூக்கை, அறுக்க கீழே வீழ்த்தி உதைக்க வேண்டும் எனக்கு அனுமதி தா! என்றான். அனுமனின் ... Read More »
எதை நாம் செய்கிறோம்!!!
July 8, 2016
ஒரு நாள் சாயங்கால வேளையில் வயதான பெண்மணி ஒருவர் கார் அருகில் வெகு நேரமாக நிற்பதை ஒருவர்கவணித்தார். வாகணங்கள் செல்லும்போது அந்தபெண்மணி கை காட்டி நிறுத்தப்பார்த்தார் ,ஆனால் எந்த வாகனமும் நிற்கவில்லை. அந்த நபர் அருகில் சென்று என்ன பிரச்சனை என்று அந்த பெண்மணியிடம் கேட்டார்.கார் டயர் பஞ்சர் ஆகி விட்டது என்று அந்த பெண்மணி கூறினார். என் பெயர் தயாளன் நீங்கள் காரில் உட்காருங்கள் நான் டயர் மாத்தி கொடுக்கிறேன் என்று டயரை கழட்ட ஆரம்பித்தார்.சிறிது நேரத்தில் மிகவும் கஷ்டப்பட்டு ... Read More »
கீதை சொல்லும் பாதை!!!
July 8, 2016
கீதை சொல்லும் பாதை! ஒரு ஊரில் வயதான முதியவர் ஒருவர் தன் பேரனுடன் வசித்து வந்தார். தினமும் அதிகாலையில் எழுந்து, சமையலறை மேஜை அருகில் அமர்ந்து, பகவத் கீதை படிப்பது அவர் வழக்கம். அனைத்து விஷயங்களிலும் அவரைப் பின்பற்ற நினைத்த பேரனும், கீதை படிக்க முற்பட்டான். ஒருநாள் தாத்தாவிடம், நானும் உங்களைப்போல் தினமும் பகவத் கீதை படிக்கிறேன். ஆனால், எனக்கு அதன் அர்த்தம் விளங்கவில்லை; புரிந்த கொஞ்சமும், புத்தகத்தை மூடி வைத்ததும் மறந்துவிடுகிறது. இப்படி அதைப் படிப்பதால், ... Read More »
பெரிய முட்டாள்தனம்!!!
July 8, 2016
ஒரு பிச்சைக்காரன் விலை உயர்ந்த ஒரு வைரத்தை வழியிலே கண்டெடுத்தான்.அதன் மதிப்பு என்ன வென்று தெரியாம அதை தன் கூட இருந்த கழுதையோட காதிலே மாட்டிவிட்டான். அதைக் கண்காணிச்ச ஒரு வைர வியாபாரி அவனிடம் சென்று,,”இந்த கல்லை எனக்கு கொடுத்தால் நான் உனக்கு பணம் தருகிறேன்.எவ்வளவு வேண்டும் கேள்” என்றான். பிச்சைக்காரன், ‘அப்படியானால் ஒரு ரூபாய் தந்துவிட்டு இந்தக் கல்லை வைத்துக் கொள்’ என்றான். அதற்குள் வைரவியாபாரிக்குள்ள சாத்தான் பூந்துட்டு இன்னும் குறைவா வாங்குன்னு சொல்ல அவர்,’ஒரு ... Read More »