Home » சிறுகதைகள் (page 31)

Category Archives: சிறுகதைகள்

கனவு மட்டுமே காண்பவர்களுக்கு!!!

கனவு மட்டுமே காண்பவர்களுக்கு!!!

நினைப்பு தான் பிழைப்பை கெடுக்குமாம்” – அர்த்தம் தெரியுமா? ஒரு ஊரில் ஒரு சோம்பேறி இருந்தான். வீடு வீடாக போய் பிச்சையெடுத்து உண்பதே அவன் வேலை. எந்த வேலைக்கும் செல்ல விரும்பாத அவனுக்கு பெரிய பணக்காரனாகவேண்டும் என்கிற கனவு மட்டும் இருந்தது. ஒரு முறை அவன் பிச்சையெடுக்கும்பொது ஒரு வீட்டில், அவனுக்கு ஒரு பானை நிறைய பாலை கொடுத்தார்கள். பானை நிறைய பால் பிச்சை கிடைத்த சந்தோஷத்தில் அவன் அதை வீட்டுக்கு கொண்டுவந்து அதை காய்ச்சி அதில் கொஞ்சம் ... Read More »

விவசாய கிணறு!!!

விவசாய கிணறு!!!

ஒருவன் தனது கிணற்றை ஒரு விவசாயிக்கு விற்றான். வாங்கிய விவசாயி அடுத்த நாள் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க ஆவலுடன் கிணற்றுக்கு வந்தான். அப்போது விற்றவன் அங்கே நின்று கொண்டிருந்தான். விவசாயியை தண்ணீர் எடுக்க விடாமல் தடுத்தான். விவசாயிக்குக் கோபம் வந்தது. “எனக்குக் கிணற்றை விற்று விட்டு அதிலிருந்து தண்ணீர் எடுக்க விடாமல் செய்கிறாயே?” என்று விற்றவனை கோபத்துடன் கேட்டான். விற்றவன், “ஐயா! உமக்கு நான் கிணற்றை மட்டும்தான் விற்றேன். அதிலிருக்கும் தண்ணீரை அல்லவே!!” என்று தர்க்கம் செய்தான். ... Read More »

சிறந்த நகைச்சுவை இப்படியிருக்கனும்!!!

சிறந்த நகைச்சுவை இப்படியிருக்கனும்!!!

நகைச்சுவை அடுத்தவங்களுக்குத் துன்பம் குடுக்காம இருக்கனும். அடுத்தவங்க மனசைப் புண்படுத்தப்படாது. அதுதான் சிறந்த நகைச்சுவைங்கிறார். அதுக்கு அவர் ஒரு உதாரணமும் கொடுக்கிறார். ஓர் ஏரி ஓரமா ரெண்டு பையன்கள் நடந்து போய்கிட்டிருக்காங்க. அதுல ஒருத்தன் பணக்காரவீட்டுப் பையன். இன்னொருத்தன் ஏழை. இவங்க ரெண்டு பேரும் போய்கிட்டிருக்காங்க…. வழியில ஓர் இடத்துலே ஒரு சோடி செருப்பு இவங்க கண்ணுலே பட்டுது. ஒரு விவசாயி அந்தச் செருப்பை அங்கே விட்டுட்டு பக்கத்துலே இருந்த ஏரியிலே கை- கால் கழுவிக்கிட்டிருந்தார். உடனே ... Read More »

புத்தர் போட்ட முடிச்சுகள்!!!

புத்தர் போட்ட முடிச்சுகள்!!!

ஒரு நாள் புத்தர் காலை நேரத்தில் தம் சீடர்கள் முன்னால், கையில் சிறு துணியுடன் வந்தார். கைக்குட்டையைவிடப் சற்றுப் பெரிதாக இருந்தது அந்தத் துணி. வந்து மேடையில் அமர்ந்து எதுவும் பேசாமல் அத்துணியில் முடிச்சுகளைப் போட்டுக்கொண்டிருந்தார். சீடர்கள் புத்தரின் வழக்கத்துக்கு மாறான செயலைக் கண்டு திகைத்து நின்றனர். ஐந்து முடிச்சுகள் போட்டபின்னர் தலை நிமிர்ந்து பேசினார் புத்தர்.. “நான் ஐந்து முடிச்சுகள் போட்டேன். இதை அவிழ்க்கப்போகிறேன். அதற்குமுன் உங்களிடம் இரண்டு கேள்விகள் கேட்கப்போகிறேன்.“1. இந்த முடிச்சுகள் விழுந்துள்ள துணி, முன்பிருந்த துணிதானா? இல்லை வேறு ... Read More »

ராஜாவின் சிலம்பு!!!

ராஜாவின் சிலம்பு!!!

அறம் செய்க ஒரு ராஜாவின் அரண்மனையில் சிலம்பு ஒன்று காணாமல் போய்விட்டது. அரசனுக்கு கடுங்கோபம். சிலம்பைக் கண்டுபிடிக்க ஒற்றர்களை ஏவினார். சிலம்பை ஒரு மாதத்திற்குள் கண்டுபிடித்து தருபவர்களுக்கு நிறைய பொன், பொருள் பரிசாக அளிக்கப்படும் என்று கூறினார். அதற்கு பிறகு யாரிடமாவது இருந்து கண்டுபிடிக்கப்பட்டால் “மரண தண்டனை” என்றும் அறிவித்தார். அந்த ஊருக்கு புதிதாக வந்த துறவியின் கையில் சிலம்பு சிக்கியது. அந்த சிலம்பு பற்றி அங்குள்ள மக்களிடம் விசாரித்தார் துறவி. உடனே கொடுத்தால் பரிசு, குறிப்பிட்ட நாள்களுக்கு மேல் கொடுத்தால் “மரண தண்டனை” என்றனர். ... Read More »

அன்பும் தலை காக்கும்!!!

அன்பும் தலை காக்கும்!!!

தர்மம் மட்டுமல்ல… அன்பும் தலை காக்கும்!’ அவர் ஒரு சிமெண்ட் ஓடு தொழிற்சாலையில் வேலைபார்த்து வந்தார். ஒரு நாள் பணி முடித்து கிளம்பும் முன், எதையோ செக் செய்யவேண்டி, சிமெண்ட் மூட்டைகள் பிரித்து கொட்டப்படும் பகுதிக்கு சென்றபோது அங்கிருக்கும் பெரிய கொள்கலனில் தவறி விழுந்துவிடுகிறார். எத்தனையோ பலமாக கத்தியும் யார் காதுக்கும் அவர் கூக்குரல் விழவில்லை. பெரும்பாலானோர் ஏற்கனவே பணி முடித்து வெளியேறிவிட்டனர். இந்நிலையில் சிமென்ட்டில் கலக்க தண்ணீர் திறந்துவிடப்பட்டு அது கொள்கலனில் வந்துவிழுந்துகொண்டிருந்தது. இன்னும் சில ... Read More »

எதையும் கொண்டு போக முடியாது!!!

எதையும் கொண்டு போக முடியாது!!!

ஒரு மனிதன் இறந்து விட்டான். அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார். கடவுள்: “வா மகனே……..நாம் கிளம்புவதற்கான நேரம் நெருங்கி விட்டது…….” ஆச்சரியத்துடன் மனிதன் “இப்பவேவா? இவ்வளவு சீக்கிரமாகவா? என்னுடைய திட்டங்கள் என்ன ஆவது?” “மன்னித்துவிடு மகனே……..உன்னைக் கொண்டு செல்வதற்கான நேரம் இது………” “அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?” “உன்னுடைய உடைமைகள்………” “என்னுடைய உடைமைகளா!!!…….அதாவது என்னுடைய பொருட்கள், உடைகள், பணம்,………….?” “இவை அனைத்தும் உன்னுடையது அல்ல…….. அவை பூமியில் நீ வாழ்வதற்கானது………” “என்னுடைய நினைவுகளா?………….” “அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது………அவை காலத்தின் கோலம்……..” “என்னுடைய திறமைகளா?………..” “அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது………அவை சூழ்நிலைகளுடன் சம்பந்தப்பட்டது…….” “அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் நண்பர்களுமா?……” ... Read More »

உட்கார்ந்தால் எழுந்திருக்காதவன்!!!

உட்கார்ந்தால் எழுந்திருக்காதவன்!!!

புதிர் கதை ஒரு முதியவர் ஒருவர் அந்த ஊருக்கு வந்தார். அங்கிருந்த பெரியவர்களைப் பார்ஹ்து, ” ஐயா….நான் எனது மகனுக்குப் பொருத்தமான பெண்ணைத் தேடி இந்த ஊருக்கு வந்துள்ளேன்” என்றார். அங்கிருந்த பெரியவர்களும், ” ஐயா…கண்டிப்பாக உமக்கு ஒரு நல்ல மறுமகள் இந்த ஊரில் கிடைப்பாள்.முதலில் உங்கள் மகனைப் பற்றிக் கூறுங்கள்” என்றார்கள். “என் மகன் மிகவும் அழகாக இருப்பான்.எந்தவிதக் கெட்ட பழக்கமும் கிடையாது….. ஆனால் உட்கார்ந்தால் எழுந்திருக்க மாட்டான்” என்றார் முதியவர். முதியவர் கூறியதைக் கேட்டதும் ... Read More »

புது மனைவி!!!

புது மனைவி!!!

புது மனைவி சனியனே! உனக்கு ஒரு காப்பிகூட போடத்தெரியலை!” என்று டபராவைத் தூக்கி எறிந்துவிட்டு வந்துவிட்டான் – ஆபிசில் இருப்புக் கொள்ளலை. – புது மனைவியிடம் இப்படி கடிந்து எரிந்து விழுந்திருக்கக் கூடாதுதான். போன் செய்தான். அதை அணைத்து வைத்திருந்தாள். ஒரு எஸ்.எம்.எஸ். ஏற்கனவே வந்து இருந்தது. – நான் அம்மா வீட்டுக்குப் போறேன் அவனுக்குப் பகீரென்றது. – மாலை ஆபிஸ் முடிந்ததும், மல்லிகைப் பூ, அல்வா எல்லாம் வாங்கிக்கொண்டு 15 கி.மீ ஸ்கூட்டரை விட்டு அவளது ... Read More »

குரு சிஷ்யன்!!!

குரு சிஷ்யன்!!!

முன்னொரு காலத்தில் புகழ்பெற்ற குரு ஒருவர் இருந்தார். இவரிடம் இளைஞன் ஒருவன் சீடாக இருந்தான். தன்னுடைய சுற்றுப்புறத்தைப் பற்றியோ, தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களைப் பற்றியோ யோசிக்க மாட்டான். குருகுலத்திற்கு வந்து போகிறவர்கள் அவனைப் பார்த்துவிட்டு, “இவன் பூமிக்குப் பாரம், சோற்றுக்குத் தெண்டம்’ என்று ஏளனம் பேசினர். அவனைப் பற்றி சுவாமிகளிடம் குறை கூறினர். சுவாமிகளின் பார்வையோ வேறுவிதமாய் இருந்தது. அவருடைய கண்ணுக்கு அந்த இளைஞன் ஞானானுபவத்தில் திளைப்பவனாகவே தெரிந்தான். அவனுடைய அறிவு தீட்சண்யத்தை அவர் சரிவரப் புரிந்து ... Read More »

Scroll To Top