Home » சிறுகதைகள் (page 26)

Category Archives: சிறுகதைகள்

இதுதான் வாழ்க்கை!!!

இதுதான் வாழ்க்கை!!!

கவலையுற்ற மனிதன் ஒருவன் குருவைத் தேடி வந்தான். “குருவே! என் வாழ்க்கையில் மகிழ்ச்சியே இல்லை. என்னென்னவோ செய்து பார்க்கிறேன். மகிழ்ச்சி மட்டும் கிடைக்கவில்லை” என்றான். குரு அவனை ஒரு தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு பட்டாம்பூச்சிகள் அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்தன. “இதோ இவற்றில் ஒரு பட்டாம்பூச்சியைப் பிடித்து வா!” –குரு அவனிடம் சொன்னார். அவன் பட்டாம்பூச்சியைத் துரத்தித் துரத்தி ஓடினான். அவனால் எந்தப் பட்டாம்பூச்சியையும் பிடிக்க முடியவில்லை. “பரவாயில்லை. வா, நாம் இந்தத் தோட்டத்தின் அழகை ரசிக்கலாம்!” ... Read More »

சூஃபியும் கொடிய அரக்கனும்!!!

சூஃபியும் கொடிய அரக்கனும்!!!

சூஃபி ஞானி கதைகள் சூஃபி ஞானி ஒருவர், ஆளரவமற்ற மலைப்பாங்கான பகுதியில் தனியாகப் பயணம் போய்க் கொண்டிருந்தார். அவர் முன் திடீரென ஒரு அரக்கன் தோன்றி “உன்னைக் கபளீகரம் பண்ணப் போகிறேன்” என்று அவரிடம் சொன்னான். “அப்படியா சரி. உன்னால் முடிந்தால் முயற்சி செய்து பார். ஆனால் நான் உன்னை எளிதாக வென்றுவிட முடியும். நீ நினைப்பது போலில்லாமல், நான் உன்னைவிட அதிக பலசாலி” என்று பதில் சொன்னார் அந்த சூஃபி. “நீ சொல்வது முட்டாள்தனமான பேச்சு. ... Read More »

சாகாத வரம்!!!

சாகாத வரம்!!!

வையாபுரி பட்டினம் என்ற நகரம் கடற்கரை ஓரத்தில் அமைந்திருந்தது. வையாபுரி பட்டினத்தில் முத்து வியாபாரி மாணிக்கத்தை தெரியாதவர் இருக்கமுடியாது. மாணிக்கத்தின் வீடு அரண்மனையைப் போல் விசாலமாக இருக்கும். முத்து வியாபாரி மாணிக்கத்திற்கு முத்து, ரத்தினம், வைரம் என்று மூன்று மகன்கள். இவர்களில் பெரியவன் முத்து வெளிநாடுகளில் வியாபாரம் செய்து பெரும்பொருள் ஈட்டினான். அவன் தம்பி ரத்தினமும், வைரமும் உள்ளூர் வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டனர். முத்து வியாபாரி மாணிக்கத்திற்கு ஒரு நாள் திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போனது. தான் ... Read More »

கிளி ராஜாவான கதை!!!

கிளி ராஜாவான கதை!!!

விக்கிரமாதித்தன் கதை கிளி ராஜாவான கதை பட்டி ஊர் திரும்பியவுடன் அந்தப்புரத்திற்கு ஒரு செய்தி சொல்லியனுப்பினான். அதாவது அவர்கள் இருந்த விரதம் முடிந்து விட்டது என்றும் மகாராஜா இனி அந்தப்புரத்திற்குள் வருவதற்கு தடை இல்லையென்றும் ராஜாவிடத்தில் சொல்லிவிடுங்கள் என்பதுதான் அந்த செய்தி. அவர்களும் ஒஹோ, நமது ராஜனைப்பற்றி ஏதாவது செய்தி கிடைத்திருக்க வேண்டும், அதனால்தான் பட்டி இவ்வாறு சொல்லியிருக்கவேண்டும் என்று சந்தோஷப்பட்டு, அதே மாதிரி(கம்மாள) ராஜாவுக்கும் தோழிகள் மூலமாக சொல்லியனுப்பினார்கள். கம்மாளனும் ஆஹா, நம் நீண்டநாள் அபிலாட்சை நிறைவேறப்போகிறது என்று சந்தோஷத்துடன் ஆடைஆபரண அலங்கிருதனாய் அந்தப்புறம் ... Read More »

ஒளவைப்பாட்டியின் சமயோஜிதம்!!!

ஒளவைப்பாட்டியின் சமயோஜிதம்!!!

ஒரு முறை சோழ நாட்டிலே ஒரு சுவாரசியமான நிகழ்ச்சி அரங்கேறியது. அன்று சோழ மன்னனுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. மன்னன் தம் புலவர்களை எல்லாம் அழைத்து மறுநாள் பொழுது விடிவதற்குள் நாலு கோடிப்பாடல் பாடிவர வேண்டும் என்று கட்டளையிட்டார். ஒரு நாளில் நாலு பாடல் என்பதே பெரிய வேலை. அதுவும் புலமையுடன் எழுத வேண்டும். நாற்பது பாடல் என்றாலும் பரவாயில்லை. ஒரேயடியாக நாலுகோடிப் பாடல்கள் வேண்டுமானால் நாங்கள் எப்படி எழுதுவோம். ஐயோ சொக்கா…! என்று தருமியைப் போலப் ... Read More »

மக்கள் நான்கு விதமாகத்தான் பேசுவார்கள்!!!

மக்கள் நான்கு விதமாகத்தான் பேசுவார்கள்!!!

மாமன்னர் அக்பர் தன் நாட்டின் நடப்பு நிலை எப்படி இருக்கிறது என்று தனது ஒற்றர்களின் மூலம் அறிந்து கொள்வது வழக்கம். இருப்பினும் ஒருநாள் தன் நாட்டு மக்கள் தம்மைப்பற்றி என்ன நினைக்கின்றார்கள். என்பதை தாமே நேரில் அறிந்து கொள்ள ஆவல் ஏற்பட்டது. மன்னர் தன் எண்ணத்தை பீர்பால் அவர்களிடம் கூறினார். மக்களின் மனநிலையை அறிந்து கொள்வது மன்னரின் கடமையாகும். ஆதலின் நேரில் போய் சந்திப்போம் என்றார் பீர்பால்.நீங்கள் சொல்வது போல் நேரில் சென்று சந்தித்தால் மக்கள் உண்மையை ... Read More »

விக்கிரமாதித்தன் – வேதாளத்தின் கதை!!

விக்கிரமாதித்தன் – வேதாளத்தின் கதை!!

விக்கிரமாதித்தன் கதை கோதாவரி நதிக்கரையிலுள்ள பிரதிஷ்டானபுரம் என்ற ஊரை விக்ரமாதித்தன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுடைய தர்பாருக்கு ஒரு நாள் காந்திசீலன் என்ற முனிவர் வந்து, அவனுக்கு ஒரு பழத்தை அளித்து விட்டுச் சென்றார். விக்ரமனும் அதை வாங்கி தன் பொக்கிஷ அதிகாரியிடம் கொடுத்து பத்திரப்படுத்தச் சொன்னான். இதே போல தினமும் அந்த முனிவர் விக்ரமனுக்கு பழம் கொடுப்பதும், அதை அவன் பத்திரப்படுத்துவதும் வழக்கமாகி விட்டது. ஒருநாள் முனிவர் கொடுத்த பழத்தை, எங்கிருந்தோ வந்த குரங்கு ... Read More »

வெயிலும், நிழலும்!!!

வெயிலும், நிழலும்!!!

அன்று சக்கரவர்த்தி அக்பர் ஏதோ காரணத்தால் காலையிலிருந்தே எரிச்சலுடன் இருந்தார். அவருடைய கோபத்தைத் தணிக்க விரும்பிய பீர்பல், “பிரபு! நீங்கள் இவ்வாறு இருப்பது சிறிதும் நன்றாகயில்லை. சிறிது சாந்தமாக இருக்கக்கூடாதா?” என்று பணிவாகக் கூறினார். “எப்போது சாந்தமாக இருக்க வேண்டும், எப்போது கோபமாக இருக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும். நீ சொல்ல வேண்டிது இல்லை!” என்று அக்பர் பீர்பல் மீது எரிந்து விழுந்தார். “அதற்கு சொல்லவில்லை பிரபு! சிடுசிடுவென்று இருந்தால் இயற்கையில் அழகான உங்கள் முகம் ... Read More »

ராமு சுயநலவாதியா!!!

ராமு சுயநலவாதியா!!!

விக்கிரமாதித்தன் கதை ராமு சுயநலவாதியா? தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தில் ஏறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் அதைத் தோளில் சுமந்தவாறு மயானத்தை நோக்கிச் செல்கையில், அதனுளிருந்த வேதாளம் அவனை நோக்கி, “மன்னா! நீ இந்த பயங்கர மயானத்தில் எதற்காக கஷ்டப்படுகிறாய்?  பரோபகாரச் சிந்தையுடன் பொது நலத்திற்காக இப்படிப் பாடுபடுகிறாயா? ஏன் என்றால் உலகில் பலர் பரோபகாரம், பொதுநலம் என்று பேசுவார்கள். ஆனால் சுயநலவாதிகளாக இருப்பார்கள். அப்படிப்பட்ட ... Read More »

முத்திரை மோதிரத்தின் மகிமை!!!

முத்திரை மோதிரத்தின் மகிமை!!!

அக்பரின் தர்பாரில் இருந்தவர்களில், பீர்பால் அக்பருக்கு மிகவும் நெருக்கமானவர். பீர்பாலுடைய அறிவும், நகைச்சுவையும் அக்பரைப் பெரிதும் கவர்ந்திருந்தன. பல சமயங்களில் தன்னுடைய நகைச்சுவைத் துணுக்குகளினால் அக்பரைக் குலுங்கக் குலுங்க சிரிக்க வைப்பதில் மிகவும் வல்லவர். வழக்கப்படி அவர் ஒருநாள் அக்பரை சிரிக்க வைத்தபோது, வாய்விட்டு சிரித்த அக்பர் பீர்பாலைப் பார்த்து, “நீ சக்திவாய்ந்தவனாக இருப்பதன் காரணம் உன் மதியூகமும், நகைச்சுவை உணர்வுமே!” என்று விமரிசித்தார்.  “பிரபு! அதுதான் உங்களுக்கும், எனக்குமுள்ள வித்தியாசம்! நீங்கள் ஒரு சக்ரவர்த்தியின் பிள்ளை ... Read More »

Scroll To Top