விக்கிரமாதித்தன் கதை போஜராஜனும் சிம்மாசனமும் போஜராஜன் தருமாபுரி என்ற நகரத்தை நீதி நெறி வழுவாமல் ஆட்சி புரிந்து வந்தான். மக்கள் அவனுடைய ஆட்சியைப் புகழ்ந்தனர். ஒரு சமயம் அரசன், அமைச்சன் நீதிவாக்கியன் மற்றும் பரிவாரங்கள் சூழ, வேட்டைக்குச் சென்று, திரும்பி வந்து கொண்டிருக்கும்போது வழியில் களைப்பாறுவதற்காக ஓர் இடத்தில் எல்லோரும் தங்கினார்கள். அங்கே, அருகில் இருந்த கம்பங்கொல்லையைச் சரவணப் பட்டன் என்பவன் பரண் அமைத்துக் காவல் புரிந்து வந்தான். அவன் பரண்மீது இருந்தபடியே வேட்டைக்காரர்களை அழைத்து, “இங்கே உள்ள ... Read More »
Category Archives: சிறுகதைகள்
விதிக்கு விளக்கம் தெரியுமா?
September 14, 2016
ஒரு செல்வந்தரின் வீட்டில் அமர்ந்து முல்லா அவருடன் உரையாடிக் கொண்டிருந்தார். செல்வந்தருக்குத் திடீரென ஒரு சந்தேகம் வந்து விட்டது. “முல்லா அவர்களே விதி என்று மனிதர்கள் கூறுகிறார்களே அது என்ன?” என அவர் கேட்டார். “நாம் எதிர்பார்ப்பது நடக்காத போது அதற்கு விதி என்று பெயரிட்டு அழைக்கிறோம்.” என்றார் முல்லா. செல்வந்தருக்கு முல்லாவின் விளக்கம் சரியாகப் புரியவில்லை. “இன்னும் சற்று தெளிவாக இதைப் பற்றிச் சொல்லுங்களேன்” எனச் செல்வந்தர் கேட்டுச் கொண்டார். முல்லா உடனே “என் அருமை ... Read More »
ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் குழந்தையாக வியாபித்தல்!!!
September 14, 2016
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் தம்மை குழந்தைகளாக வியாபித்தல் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் கம்சனை வதம் செய்துவிட்டு, கம்சனின் சகோதரர்கள் கொல்லப்பட்டதன் பின் கம்சனால் சிறைப்படுத்தப் பட்டிருந்த தம் தாய் தந்தையரான வசுதேவரையும் தேவகியையும் விடுவித்தார்கள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் அவர்களின் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்தார்கள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவர்களின் மகனாகப் பிறந்த காரணத்தால் அவர்கள் மிகுந்த தொல்லைகளுக்கு உள்ளாக நேரிட்டது. ஏனெனில் தேவகியின் எட்டாவது குழந்தை கம்சனைக் கொல்லும் என்று வசுதேவர், ... Read More »
சிறந்த மாணவன்!!!
September 14, 2016
மஹாபாரதத்திலிருந்து ஒரு சின்ன சம்பவம்.. கெளரவர்களுக்கு பஞ்சபாண்டவர்களில் அர்ஜுனன் மேல் எப்போதும் பொறாமை உண்டு. பொறாமைக்கு காரணம் அவர்களுடைய குரு துரோணாச்சாரியர் அர்ஜுனன் மீது அன்பு செலுத்துகிறார் என்பதே. இதனை அவர்களின் குருவும் அறிவார். கௌரவர்களின் இந்த எண்ணம் தவறு என்று அவர்களுக்கு உணர்த்த ஒரு உபாயம் கண்டு பிடித்தார். துரோணர் எப்பொழுதும் மாணவர்களுடன் அருகில் உள்ள ஆற்றினில் குளிப்பது வழக்கம். அன்று குளியல் எண்ணையை வேண்டுமென்றே ஆசிரமத்தில் விட்டுச் சென்றார். ஆற்றங்கரையை அடைந்தவுடன், அர்ஜுனனை ஆசிரமத்திற்கு ... Read More »
ஒரு செயலை செய்ய!!!
September 13, 2016
ஒரு அலுவலக மேளாளர் ‘A” என்ற பணியாளரை ஒரு மிக அகலமான, வேகமான நீரோட்டம் உள்ள ஒரு ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்று, ஆற்றைக் கடந்து சென்று மறுகரையில் இருக்கும் ஒரு பெட்டியை எடுத்துவருமாறு பணிக்கிறார். மேலும் அந்த வேலையை ஒரு மணி நேரத்திற்குள் முடிக்குமாறும் கேட்டுக்கொள்கிறார். உடனே ‘A” என்பவர் பத்து ரூபாய் செலவு செய்து அங்கிருக்கும் படகுப் போக்குவரத்தைப் பயன்படுத்தி மறுகரைக்குச் சென்று பெட்டியை 55 நிமிடத்திற்குள் எடுத்து வந்துவிடவும், மேலாளர் “நன்று” என பாராட்டுகின்றார். ... Read More »
வாரிசாகத் தகுதியானவன் யார் ?
September 13, 2016
விக்கிரமாதித்தன் கதை வாரிசாகத் தகுதியானவன் யார் ? தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில்தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தி, பின்னர் அதைத் தோளில் சுமந்து கொண்டுசெல்லுகையில், அதனுள்ளிருந்த வேதாளம் விக்கிரமனை நோக்கி, “மன்னா? நீவீரமும், பராக்கிரமும் மிகுந்தவன் என்பதில் சந்தேகமில்லை. ஒரு மன்னனுக்கு வீரமும், பராக்கிரமும் எவ்வளவு தேவை என்று உன்னைப்பார்த்தாலே அறிந்து கொள்ளலாம். ஆனால் அறிவில் சிறந்தவர்கள் என்றுகருதப்படுபவர்கள் சிலருக்கு இந்த சாதாரண உண்மை புலப்படுவதில்லை.அவர்களுடைய தவறான ஆலோசனைகளினால் நாட்டிற்கே பெரிய தீங்கு ... Read More »
யாரை மணக்க வேண்டும்!!!
September 12, 2016
விக்கிரமாதித்தன் கதை யாரை மணக்க வேண்டும்? விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்கை மரத்தின் மீது ஏறிக் கொண்ட வேதாளத்தைப் பிடிக்கச் சென்று, பெரும் போராட்டத்திற்கு பிறகு வசமாகப் பிடித்துக் கொண்டான். தோளில் வேதாளத்தை சுமந்தபடி குகையை விட்டு நடக்கத் தொடங்கினான். அவனது பராக்கிரமத்தை பார்த்து வியந்தாலும் வேதாளம் தான் தப்பித்து கொள்வதற்கு வழி தேடிய வண்ணமே இருந்தது. அதனால் வேதாளம் மீண்டும் ஒரு கதையை விக்கிரமாதித்தனுக்குச் சொல்லத்துவங்கியது. விக்கிரமாதித்தா! உனக்கு ஒரு கதை சொல்கிறேன் கேள்! “யமுனை நதிக்கரையில் ... Read More »
அடியவருக்கு வளைந்த இறைவன்!!!
September 11, 2016
அதிகாரத்திற்கு வளையாத இறைவன் அடியவருக்கு வளைந்தார்!!! தூய்மையான, தன்னலமற்ற பக்திக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர்கள் நாயன்மார்கள். நம் மண்ணில் நம்மிடையே வாழ்ந்து மறைந்தவர்கள். எத்தனை சோதனை வந்தாலும் தாங்கள் எடுத்துக்கொண்ட தொண்டிலும், கடமையிலும் பக்தியிலும் குறை வைக்காதவர்கள். சிவனடியாரும் சிவனும் வேறு வேறு அல்ல என்று கருதி, அடியார்களையே இறைவனாக தொழுதவர்கள். வேதத்தை முழுவதும் கற்று ஓதுவதற்கு இணையானது இவ்வடியார்களின் வரலாற்றை படிப்பது. ஆவணி மூலம். குங்கிலயக் கலய நாயனாரின் குருபூஜை. அவர் இறைவனோடு இரண்டறக் கலந்த நாள். ... Read More »
குரங்கு கொடுத்த தண்டனை!!!
September 11, 2016
உழைக்காமல் உண்ண வேண்டும் என்ற ஆசை பரமார்த்த குருவுக்கு ஏற்பட்டது. ஒரு குரங்கைப் பிடித்து வந்து, அதற்குப் பயிற்சி கொடுத்து எல்லா பொருள்களையும் திருடிக் கொண்டு வர கற்றுத் கொடுத்தார்கள் “குருவே! உங்கள் வேட்டி எல்லாம் கிழிந்து விட்டது. அதனால் கட்டிக் கொள்வதற்கு நல்ல பட்டுத் துணியாகத் திருடி வரச் சொல்லுங்கள்” என்றனர் சீடர்கள். பரமார்த்தரும், துணி திருடி வருவதற்குக் குரங்கை தூதனிப்பினார். அந்நாட்டு அரண்மனைக்குள் நுழைந்தது குரங்கு…. அரண்மனைக் குளத்தில் குளித்துக் கொண்டு இருந்தான் அரசன். ... Read More »
பூஜ்யம் ஒரு தனி ராஜ்ஜியம்!!!
September 10, 2016
ஒரு நாள் கணித ஆசிரியர் ஒருவர் எல்லா எண்களையும் கலந்துரையாடலுக்கு அழைத்தார். நிகழ்ச்சி ஆரம்பிக்கும் சமயம் பூஜ்யம் அங்கு இல்லை என்பது தெரியவந்தது. பூஜ்யம் ஒளிந்து கொண்டது, மற்ற எண்கள் அதை ஆசிரியரிடம் கொண்டு வந்தன. ஆசிரியர், “ஏன் ஒளிந்து கொண்டாய்?” என்று கேட்டார். “நான் வெறும் பூஜ்யம்தானே. என்னை பற்றி யார் கவலைப்படுவார்கள்? எனக்கு மதிப்பே இல்லையே,” என்று வருத்தமாக கூறியது. புன்னகைத்த ஆசிரியர், “ஒன்று’ என்ற எண்ணை முன்னே வரச்சொன்னார். குழுவினரைப் பார்த்து, “இதன் ... Read More »