Home » சிறுகதைகள் (page 24)

Category Archives: சிறுகதைகள்

யானை எடை

யானை எடை

அன்றைக்கு ஒரு புது சாஃப்ட்வேர் புராஜெக்ட் ஆரம்பமாகிறது. எல்லோரும் பரபரப்பாகச் சுற்றிக்கொண்டிருந்தார்கள். 10 மணிக்கு கஸ்டமர் தரப்பிலிருந்து ஏழு பேர் வந்தார்கள். கூட்டம் ஆரம்பமானது. வந்தவர்களில் சீனியராகத் தோன்றிய ஒருவர் படபடவென்று பேசத் தொடங்கினார். ‘இப்போ எங்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் இருக்குன்னு ஏற்கனவே விளக்கமா சொல்லிட்டோம். அதையெல்லாம் உங்க சாஃப்ட்வேரால் தீர்க்க முடியுமா?’ அந்த சாஃப்ட்வேர் கம்பெனியின் முக்கிய பிரமுகர் புன்னகையோடு பதில் சென்னார். ‘முடியலாம்’. ‘என்னது? முடியலாமா? உங்களால் முடியும்னு நம்பித்தானே லட்சக்கணக்கில் காசைக் கொட்டியிருக்கோம். ... Read More »

மூன்று கம்ப்யூட்டர் குரங்குகள்

ஒருமுறை அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் ஒரு பெரிய கம்ப்யூட்டர்கண்காட்சி நடைபெற்றது. அதில் அனைத்து விதமான கம்ப்யூட்டர்கள், அதன்சாதனங்கள், மென்பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. ஒர் இடத்தில், மூன்று குரங்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இதைப் பார்த்த ஒரு கம்ப்யூட்டர் நிபுணர், குரங்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த காரணம்புரியாமல், “இந்தக் குரங்கு எத்தனை ரூபாய்?” என்று முதல் குரங்கைக் காட்டிக் கேட்டார். அதற்கு விற்பனையாளர், “25000 டாலர்கள்” என்றார். “என்னது?! ஒரு குரங்கு25000 டாலர்களா? அப்படி இது என்ன செய்யும்?” என்றார் பார்க்க வந்தவர். “இது எந்தவிதமான கம்ப்யூட்டரையும் இயக்கும். இதற்குப் பல கம்ப்யூட்டர் மொழிகள் தெரியும். எந்த கம்பெனியின் ரகசியங்களை வேண்டுமானாலும் இது கண்டுபிடித்துவிடும். இது ‘கம்ப்யூட்டர் நிபுணர்’ குரங்கு. ... Read More »

அந்தக் கதவுகள் மூடியே இருக்கட்டும்!

ஒரு முதியவரும், அவரது மருமகளும் தினமும் எதாவது வாக்குவாதம் செய்துகொண்டிருப்பர். இதனால், அவரது மகனுக்கு நிம்மதி இல்லாமல் போய் விட்டது.ஒருநாள் சண்டையில், மகன் தந்தையைத் திட்டி விட்டான். பெரியவர் வருத்தத்துடன் புறப்பட்டார். வழியில் மகான் ஒருவரைக் கண்டார். “”சுவாமி! முதுமையில் பிள்ளைகள் நமக்கு உதவப் போவதில்லை என்பது தெரிகிறது.இருந்தாலும், இளமையில் பேர் சொல்ல ஒரு பிள்ளை இல்லை என்று ஏங்குவதும்,அவர்கள் மீது பாசம் வைத்து வளர்ப்பதும் தேவைதானா?” என்று கேட்டார். மகான் சிரித்தபடி, “”சரியப்பா! நீ உன் பெற்றோர் இருந்த காலத்தில் அவர்களைக் கவனித்தாயா?” “”சுவாமி… ... Read More »

வாழும் வரை போராடு!

வாழும் வரை போராடு!

ஒரு வாலிபனுக்கு ஏராளமான பணம் இருந்தது. ஆனாலும், அவன் ஏதோபிரச்னைகளில் சிக்கி தவித்துக் கொண்டே இருந்தான். வாழ்க்கையே வெறுத்துப்போனது. ஒருமுறை, அவனது தந்தையின் நண்பர் அவனது வீட்டுக்கு வந்தார்.வாடிப்போன அவன் முகத்தைக் கண்டு “என்ன பிரச்னை?’ என்றார். “”ஐயா! நான் நிறைய சம்பாதிக்கிறேன். பொருளையெல்லாம் மனைவி,பிள்ளைகளுக்காக செலவழிக்கிறேன். ஆனால், அவர்கள் இன்னும்… இன்னும்… என்கிறார்களே தவிர, இருப்பதைக் கொண்டு திருப்தி அடைந்தபாடில்லை. என் நண்பர்களும் அப்படியே! நான் செலவழித்தால் உடன் வருகிறார்கள். இல்லாவிட்டால் ஓடி விடுகிறார்கள். எனக்கு வேலை செய்து செய்து அலுத்து விட்டது. நிம்மதியைத் தேடி அலைகிறேன்,” என்றான். பெரியவர் ... Read More »

குருவுக்கு காணிக்கை!!!

குருவுக்கு காணிக்கை!!!

விக்கிரமாதித்தன் கதை குருவுக்கு காணிக்கை தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் கீழேஇறங்கி, அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள்ளிருந்த வேதாளம் விக்கிரமனை நோக்கி, “மன்னா! உன்னுடைய ராஜ்யத்தின் ஏதோ மிகக் கடினமான பிரச்சினை ஒன்றுக்குத் தீர்வு காண்பதற்காக இத்தனை முயற்சிகளை மேற்கொள்கிறாய் என்று தோன்றுகிறது. சில சமயங்களில் மிக அறிவாளிகள் என்று நாம் நனைக்கும் சிலர் சாதாரண பிரச்சினையைக் கூட ... Read More »

நல்லாயிருக்கு!!!

நல்லாயிருக்கு!!!

சாப்பிட உட்கார்ந்தவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் . அன்று அவனுக்கு மிகவும் பிடித்தமான உணவைத்தான் அவள் சமைத்திருந்தாள். அவள் தான் சமைத்த உணவின் சுவையை அவன் முகபாவத்திலேயே பார்த்துத் தெரிந்துகொள்வாள். ஆனால் இன்றைக்கு அவன் முகம் எதையுமே பிரதிபலிக்கவில்லை. மிச்சம் மீதி வைக்காமல் சாப்பிட்டவன்…”போயிட்டுவாறன்” என்று சொல்லிவிட்டு உணவைப்பற்றி எதுவுமே சொல்லாமல் உடனேயே வெளியே கிளம்பிவிட்டான். ‘ஏதாவது சொல்லுவான்’ என எதிர்பார்த்து ஆவலோடு காத்திருந்தவளின் முகம் சட்டென்று வாடிப்போனது. அவன் கிளம்பியதிலிருந்து இவளுக்கு எந்தவேலையும் ஓடவில்லை. ‘தன் சமையல் சரியில்லையோ?’ ... Read More »

புரிந்து கொள்ளாத மக்கள்	!!!

புரிந்து கொள்ளாத மக்கள் !!!

விக்கிரமாதித்தன் கதை புரிந்து கொள்ளாத மக்கள்!! தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மரத்திலேறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் கீழேயிறங்கி, அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள்ளிருந்த வேதாளம், “”மன்னா! யாரையாவது பழி தீர்ப்பதற்காக இந்த நள்ளிரவில் மயானத்தில் அலைந்து திரிந்து உன்னை நீயே வருத்திக் கொள்கிறாயா? உன் நோக்கம் தான் என்ன? உன்னைப் போல் சிலர் உணர்ச்சிவசப்பட்டு ஏதாவது சபதம் எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் பல ... Read More »

யார் இங்கே திருடர்?

யார் இங்கே திருடர்?

ஒரு கிராமம். ஒரு காலத்தில் செழிப்பாக இருந்தது. பின்பு நிலைமை மாறிப்போய் விட்டது. பஞ்சம் வந்து விட்டது. அந்தக் கிராமத்தின் கோடியில் ஒரு பாழடைந்த குடிசை. அந்தக் குடிசையில் இருவர் அடைக்கலமாகிக் கொண்டனர். ஒருவர் பார்வையற்றவர். மற்றவர் கால்கள் அற்றவர். அவர்களுக்கென்று பிழைக்க வழி எதுவுமில்லை. மாலையில் கடைத்தெரு மூடப்படும் போது அவர்கள் போவார்கள். பழையது, சொத்தை, அழுகல் என்று மிஞ்சிய காய் கனி தானியங்களை மக்கள் அவர்களுக்குத் தருவார்கள். அதை உணவாக்கி அவர்கள் உண்டு வாழ்ந்தனர். ... Read More »

துருவன்!!!

துருவன்!!!

முன்னொரு காலத்தில் வாழ்ந்த மனு சக்கரவர்த்தியின் பேரனும், உத்தானபாதனின் மகனுமான துருவன், அவனுடைய தந்தை போருக்கு சென்று வெற்றியோடு திரும்பி வருகிறார் என கேள்விப்பட்டு, அவருக்கு வாழ்த்துச் சொல்லத் தாயை அழைக்கிறான். ஆனால் அவனது தாயான சூநிதியோ “நான் மகாராணியாக இருந்தபோதும், உன் சிற்றன்னைக்குத்தான் முதல் உரிமையை உன்னுடைய தந்தை வழங்கி இருக்கிறார். ஆகவே நீயும் செல்லாதே” என்கிறாள். அவனோ தந்தையைப் பார்ப்பது என் கடமை என சொல்லி செல்கின்றான். அவனுடைய தந்தையின் மடியில் அமர்ந்திருந்த துருவனைக் ... Read More »

மிகப்பெரிய விஷயம்!!!

மிகப்பெரிய விஷயம்!!!

அதிகாலை நேரம். ஒரு வயதானவர் கடற்கரை ஓரமாக நடந்து வருகிறார். அப்போது அங்கே ஒரு பத்து வயது சிறுவன் கரையிலிருந்து, எதையோ கடலுக்குள் வீசி கொண்டு இருக்கிறான். கொஞ்சம் அருகில் வந்து பார்த்த பிறகு தான் தெரிகிறது, அந்த சிறுவன் கடல் அலையால் கரைக்கு கொண்டு வரப்பட்டு திரும்பிச் செல்ல முடியாமல் கடற்கரை மணலில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த நட்சத்திர மீன்களை ஒன்று ஒன்றாக எடுத்து கடலுக்குள் வீசி கொண்டு இருந்தான். அவன் அருகில் சென்ற பெரியவர், ”தம்பி, ... Read More »

Scroll To Top