தியாகசீலர்களின் பெருமையை சுலபத்தில் அறிய முடியாது. மற்றவர்களால்அறிய முடியாதது மட்டுமல்ல! அவர்களின் சந்ததியாலேயே அறிந்து கொள்ள முடியாது. அவர்களின் தியாகத்திற்குவேறுவிதமாகப் பொருள் கொண்டு, விபரீதமாக எண்ணிப் பழிக்குப்பழிஎன்று கிளம்புவதும்உண்டு.அப்படிக் கிளம்பிய ஒருவரின் கதை தான் இது. ததீசி முனிவர் என்பவர், தேவர்கள் நல்வாழ்வு பெற தன் முதுகெலும்பையே ஆயுதமாகக் கொடுத்து உயிர் தியாகம் செய்தவர். அவர் அந்த தியாகத்தைப் புரிந்தபோது, அவரது மகன்பிப்பலாதன் சிறுவனாக இருந்தான். அவன்இளைஞனான பிறகு, அவன் தாயார் நடந்ததையெல்லாம் விவரித்தார். அதைக் கேட்டு ... Read More »
Category Archives: சிறுகதைகள்
பூலோகத்தில் கந்தர்வப் பெண்!!!
October 9, 2016
விக்கிரமாதித்தன் கதை பூலோகத்தில் கந்தர்வப் பெண் தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிக் கொண்டு இருந்த உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் அந்த உடலைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லும் போது, அதனுள்ளிருந்த வேதாளம் விக்கிரமனைப் பார்த்து, “மன்னா! உன்னைப் போல் விடாமல் முயற்சி செய்யும் சிலர் கடைசி நிமிடத்தில் தங்கள் கொள்கையைக் கைவிட்டு, அதுநாள் வரை செய்த முயற்சியை வீணாக்குகின்றனர். அத்தகைய ஒரு பெண்ணின் கதையை நான் ... Read More »
சொல்லப் பயந்த தெய்வம்!!!
October 9, 2016
அம்மன் சந்நிதிகளில் ஏராளமான மரக்கிளை, காய்,கனிகளால் பரப்பி வைத்து அம்பிகையை அலங்காரம் செய்வர். இதற்கு சாகம்பரி அலங்காரம் என்று பெயர். சாகம்பரியைப் பற்றி ஆதிசங்கரர் தன்னுடைய முதல் நூலான கனகதாரா ஸ்தோத்திரத்தில் கீர்தேவதேதி என்னும் பாடலில் சாகம்பரீதி எனக் குறிப்பிடுகின்றார். ஸ்ரீ தேவீ பாகவதம் சாகம்பரி தேவியைப் பற்றி விரிவாகவே குறிப்பிடுகிறது.அந்த சாகம்பரி தேவியைப் பற்றிய அபூர்வமான விபரத்தைப் பார்க்கலாம். மன்னர் ஒருவர் நல்ல விதமாக ஆட்சி செய்து வந்தார். திடீரென்று ஒரு சமயம்….. அந்நாட்டில் பயிர் ... Read More »
புழுதிச் சாலையில் ஒரு வைரம்!!!
October 9, 2016
அரசனுக்கே ஆசானாக இருந்தார் ஒரு குரு. ராஜகுருவாகவே இருந்தாலும், அரசபோகத்தை அனுபவிக்க விரும்பாத அவர், ஒரு தேசாந்திரியாக பயணித்து, மக்கள் தருவதைப் பெற்றுக் கொள்வது வழக்கம். ஒரு நாள் அந்த நாட்டின் தலைநகரை விட்டு, மற்றொரு நகரை நோக்கி நடந்தார். மாலை நேரமாகிவிட்டது. மழை வேறு. ஒரு கிராமம் எதிர்ப்பட்டது. முற்றாக நனைந்துவிட்ட குரு, விவசாய பண்ணைக்கு நடுவில் இருந்த ஒரு வீட்டை அணுகினார். வீட்டுக்கு வெளியே நிறைய ஷூக்கள், நனையாமல் இருந்தன. சரி, ஆட்கள் நிறைய ... Read More »
எண்ணங்களின் மூலம் நினைத்ததை அடைய முடியும்
October 1, 2016
இந்த இதழில் கொடுக்கப் பெற்றுள்ள எண்ணங்கள் பற்றிய கருத்துக்கள் எமர்சன்,ஜேம்ஸ் ஆலன், சுவாமி சிவானந்தர், வேதாத்திரி மகரிஷி, உதயமூர்த்தி ஆகியோரின் நூல்களிலிருந்து படித்த கருத்துக்கள். நடைமுறைக்கு ஏற்ற வகையில் எளிமைப்படுத்திக்கொடுக்கப் பெற்றுள்ளன. நம் எண்ணங்களை ஒழுங்குப் படுத்திக் கொண்டு நல்ல எண்ணங்களை வளர்த்துக்கொள்வதன் மூலம் தீய எண்ணங்களை நம் இதயத்தலிருந்து வெளியேற்றி விடுவோமானால், முதல் நன்மை நாம் துன்பங்களிலிருந்து விடுதலை அடைந்துவிடலாம். இது ஏதோ அறிவுரை அல்ல. முழுக்க முழுக்க அனுபவம் கடந்த 20 ஆண்டுகளில் 30ஆண்டுகளில் எந்தந்த எண்ணங்களால் வளர்ந்துள்ளோம் என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்த்தால் உண்மை பளிச்சென்று தெரிய வரும். ... Read More »
ஜென் தத்துவங்கள்
October 1, 2016
குருவே! எனக்கு ஜென் தத்துவம் புரியவில்லையே தாங்கள் விளக்க வேண்டும். ஜென் துறவியை அணுகி கேட்டார் ஒருவர். குரு ஆரம்பித்தார். ஜென் தத்துவம் என்ன சொல்கிறது தெரியுமா? என்றவர் போய்சிறுநீர் கழித்துவிட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு உட்புறம் சென்று விட்டார். சற்றுநேரம் கழித்து வந்த குரு, புரிந்ததா? என்பது போல் தலையசைத்து கேட்டார். வந்தவர் விழிக்கவே, அரசனோ, அறிஞனோ, அசடனோ, யாராக இருந்தாலும் சிறுநீர்கழிக்காமல் இருக்க முடியுமா? அதை செய்து தானே ஆக வேண்டும். எனக்கு பதில்உன்னை அனுப்ப முடியுமா? என்று கேட்டார் குரு. அவரவர் வாழ்க்கை அவரவர் கையில். அதை எவரிடமும் தள்ளி ... Read More »
அந்த ஏழு நாட்கள்!
September 30, 2016
மகான் ஏகநாதரிடம் பக்தர் ஒருவர், “”சுவாமி! பாவமே செய்யக் கூடாது என்று நினைக்கிறேன். ஆனால், என்னையும் அறியாமல் செய்து விடுகிறேன். இதைத் தடுக்க வழியே இல்லையா?” என்று கேட்டார். ஏகநாதர் அவரிடம்,”” என்ன பாவம் செய்திருந்தாலும், இன்னும் ஏழுநாட்கள் மட்டும் பொறுத்துக் கொள்ளுங்கள். அதன் பின் உங்கள் கவலை தீர்ந்து விடும்!” என்றார். “”ஏன்.. இன்னும் ஏழுநாட்களில் என்ன நிகழ்ந்து விடப் போகிறது?” என்றார் பக்தர். “”ஏழுநாளோடு உங்கள் ஆயுளே முடிந்து விடப் போகிறது என்பதை தான் சொன்னேன்” என்றார் ஏகநாதர். இதைக் கேட்டு, “”சுவாமி! என் ஆயுள் இன்னும் ஏழுநாள் தானா?’ என்று அதிர்ந்தார். “”ஆம்..” என்றார் ... Read More »
அடுத்தவர் பேச்சைப் பற்றி…..
September 29, 2016
அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்..!! ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத்தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக்கொண்டிருந்தான். தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு,கழியைத் தோளில் சுமந்து செல்வான். இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும். குறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி ... Read More »
வாழும் வரை போராடு!
September 28, 2016
ஒரு வாலிபனுக்கு ஏராளமான பணம் இருந்தது. ஆனாலும், அவன் ஏதோபிரச்னைகளில் சிக்கி தவித்துக் கொண்டே இருந்தான். வாழ்க்கையே வெறுத்துப்போனது. ஒருமுறை, அவனது தந்தையின் நண்பர் அவனது வீட்டுக்கு வந்தார்.வாடிப்போன அவன் முகத்தைக் கண்டு “என்ன பிரச்னை?’ என்றார். “”ஐயா! நான் நிறைய சம்பாதிக்கிறேன். பொருளையெல்லாம் மனைவி,பிள்ளைகளுக்காக செலவழிக்கிறேன். ஆனால், அவர்கள் இன்னும்… இன்னும்… என்கிறார்களே தவிர, இருப்பதைக் கொண்டு திருப்தி அடைந்தபாடில்லை. என் நண்பர்களும் அப்படியே! நான் செலவழித்தால் உடன் வருகிறார்கள். இல்லாவிட்டால் ஓடி விடுகிறார்கள். எனக்கு வேலை செய்து செய்து அலுத்து விட்டது. நிம்மதியைத் தேடி அலைகிறேன்,” என்றான். பெரியவர் ... Read More »
மனதையும் வெல்ல வேண்டும்!….ஒரு ஜென் கதை….
September 28, 2016
ஒரு சிறந்த வில்வித்தை அறிந்த குருவிடம் பயிற்சி பெற்ற ஒருவன் தான் சிறப்பாகக் கற்றுக் கொண்டதாகக் கர்வம் கொண்டான்.குரு அவனை அழைத்துக் கொண்டு மலைப் பகுதிக்கு சென்றார், இரண்டு மலை உச்சிக்கு இடையே ஒரு பலகை மட்டும் வைக்கப் பட்டிருந்தது. கீழே அதலபாதாளம். குரு அநதப் பலகையில் விறுவிறுவென நடந்து நடுவில் நின்று கொண்டு தன் வில்லை எடுத்து வானத்தில் பறந்து கொண்டிருந்த ஒரு பறவையைக் குறி வைத்து அடித்து வீழ்த்தினார். பின் சீடனை அவ்வாறே செய்யச்சொன்னார்.முதலில் ஆர்வமுடன் சென்ற அவன் நடுப்பகுதிக்கு சென்றவுடன் பயத்துக்கு உள்ளானான். ... Read More »