Home » சிறுகதைகள் (page 20)

Category Archives: சிறுகதைகள்

அட பணமே!

அட பணமே!

சீடர்களுடன் சென்று கொண்டிருந்த குருநாதருக்கு நேரமாகி போனதால் பசியெடுக்க ஆரம்பித்தது. வழியில் எதிர்ப்பட்டவரிடம், “”இந்த ஊரில் தர்ம சத்திரம் எங்கிருக்கிறது?” என்று கேட்டார். “”சுவாமி! தானம் செய்ய இங்கு ஆள் இல்லை. ஆனால், இங்கு உணவகம் ஒன்று இருக்கிறது. பணம் கொடுத்தால் சாப்பாடு கிடைக்கும்” என்றார். சீடரில் ஒருவர் குருவிடம், “”சுவாமி! உங்களை நேரில் பார்க்கும் போது எப்படிப்பட்டவரின் மனமும் மாறி விடும். நிச்சயம் அனைவருக்கும் இலவச சாப்பாடு கிடைக்கும்,” என்றார். எல்லாரும் உணவகத்தில் சாப்பிட்டனர். சீடர் எதிர்பார்த்ததற்கு மாறாக, உரிமையாளர் பணம் கேட்டார். மறுப்பேதும் சொல்லாமல் கேட்டதை கொடுத்து விட்டு குருநாதர் நடக்க ... Read More »

ஒன்பது திருடர்கள்

ஒன்பது திருடர்கள்

ஜப்பானில் ஒரு சிறு கிராமம் அது.. இங்கு வசித்து வந்த மக்களுக்கு பெரும் தொல்லையாய் இருந்தார்கள் ஒன்பது திருடர்கள். இவர்களை அடக்கி, தங்களைக் காக்க பக்கத்து நகரில் வாள்வீச்சில் புகழ் பெற்றிருந்த ஜென் குரு ஒருவரை அழைத்து வந்தனர். கிராமத்திற்கு வந்த குரு அங்கிருந்த உணவகம் ஒன்றிற்கு சென்று சாப்பிடுவதற்காக ஒரு கிண்ணத்தில் அரிசி சாதம் எடுத்து வரச் சொன்னார். தன்னுடைய இருக்கையில் அமர்ந்தவர் இடையிலிருந்த வாளை உருவி தனக்கு எதிரில் வைத்து விட்டு கிண்ணத்தில் வந்த ... Read More »

நரகலோகத்தில் பரமார்த்தர்!!!

நரகலோகத்தில் பரமார்த்தர்!!!

பரமார்த்த குரு கதைகள் நரகலோகத்தில் பரமார்த்தர் மட்டியும் மடையனும் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு, கவலையோடு இருந்தனர். மண்டுவும் மூடனும் போனாரே! எங்கள் குரு செத்துப் போனாரே! என்று மூக்கால் அழுது கொண்டு இருந்தனர். “இனி மேல் யார் சுருட்டுக்கு நான் கொள்ளி வைப்பேன்? எங்களைத் தனியாக விட்டுட்டு, இப்படி அநியாயமாச் செத்துட்டீங்களே!” என்று ஒப்பாரி வைத்தான், முட்டாள் அதன் பிறகு, ஐந்து சீடர்களும் மடத்துக்கு எதிரே தெருவில் கட்டிப்பிடித்து உருண்டார்கள். “செத்துப்போன நம் குரு, எங்கே ... Read More »

ஜென் கதைகள் – மூன்று தலைகள்	!!!

ஜென் கதைகள் – மூன்று தலைகள் !!!

மாமன்னர் அசோகர் குடிமைப் பணிகளைப் பார்வையிட்டு அரண்மனை திரும்பிக் கொண்டிருந்தார். போரே வேண்டாம்… போரே மன்னனின் தொழில்  என்றிருந்த அவர் புத்தரின் பாதையில் அன்பு வழி போதும் என மனதளவில் மாற்றம் அடைந்திருந்த நேரம்! இப்போது அவருக்கு எதிரில் வந்து கொண்டிருந்த ஒரு வயோதிக துறவியும் அவரது சீடர்களும் மன்னருக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றனர். அசோகரின் பார்வை ஒதுங்கி நின்ற துறவி மீது பட்டது.  உடனே தமது ரதத்தை நிறுத்திவிட்டு இறங்கிச் சென்று புத்த பிக்ஷுவின் காலில் ... Read More »

யார் கொடுப்பார்?

யார் கொடுப்பார்?

ஓர் ஊரில் செல்வந்தர் ஒருவர் இருந்தார். அந்த வட்டாரத்தில் உள்ள செல்வந்தர்களின் சொத்து மதிப்பைக் கணக்கிட்டால், அவர்தான் முதலிடம் பெறுவார். அந்த அளவுக்கு அவருக்கு சொத்துக்களும், செல்வமும் இருந்தன. அதாவது அசையும் சொத்து, அசையாச் சொத்து ஆகியவை அளவிட முடியாத அளவுக்கு இருந்தன. இவ்வளவு செல்வக் குவியலோடு இருந்த அந்தச் செல்வந்தர் தனது பெற்றோர் மற்றும் மனைவி, மகன்கள், மகள்களுடன் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். தனது மகனோ, மகளோ எதை விரும்பிக் கேட்டாலும், அடுத்த நொடியிலேயே ... Read More »

கடல்கன்னி ஹிசிகா!!!

கடல்கன்னி ஹிசிகா!!!

விக்கிரமாதித்தன் கதை கடல்கன்னி ஹிசிகா!!!   தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அதை சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள்ளிருந்த வேதாளம் விக்கிரமனை நோக்கி, “மன்னா! நீ அனுபவிக்க வேண்டிய ராஜபோகத்தைத் துறந்துவிட்டு, நிகழ்காலத்தை மட்டுமன்றி உன் எதிர்காலத்தையும் நீ வீணாக்கிக் கொண்டு இருக்கிறாய். உன்னைப் போல் பூஷணன் என்ற மன்னனும் தனக்குக் கிடைக்கவிருந்த ஐஸ்வரியங்களை தனது மதியீனத்தால் கை நழுவ ... Read More »

நன்றி கெட்டவன்!!!

நன்றி கெட்டவன்!!!

முன்னொரு காலத்தில் மருதபுரி நாட்டில் பொன்னுரங்கம் என்ற ஏழை இருந்தான். அவலட்சணமாக இருந்த அவன் மாடு மேய்த்து வாழ்க்கை நடத்தி வந்தான். அருகில் இருந்த காட்டிற்கு மாடுகளை ஓட்டிச் செல்வான். அங்கே மேய விடுவான். மரத்தின் நிழலில் அமர்ந்து புல்லாங்குழலை இசைப்பான். வழக்கம் போல, அவன் புல்லாங்குழலை இசைத்துக் கொண்டிருந்தான். அந்த இசையில் மயங்கிய தேவதை ஒருத்தி அவன் முன் தோன்றினாள். “”ஆ! இப்படி ஒரு இனிய இசையை நான் கேட்டது இல்லை. நீ என்னை மணந்து ... Read More »

அவசரபட்டு எடுக்கும் முடிவுகள்!!!

அவசரபட்டு எடுக்கும் முடிவுகள்!!!

தீபனும் திவ்யாவும் கணவன் மணைவி. இருவரும் தனிமையில் பேசி கொண்டிருக்கும் போது தீபன் கூறினான். நான் கல்யாணத்துக்கு முன்னடி ஒரு பெண்ணை காதலித்தேன் என்றான். உடனே திவ்யா, இதையேன் கல்யாணத்துக்கு முன்னடியே சொல்ல, இப்படி என்னை ஏமாத்திட்டிங்களே.! உங்க கூட இனி என்னால வாழ முடியாது என கூறி கோபத்தோடு தன் தாய் வீட்டுக்கு போய் விட்டாள் திவ்யா. தீபன் எவ்வளவோ எடுத்து சொல்லியும் திவ்யா கேட்கவில்லை. பிடிவாதமாக இருந்தாள். மனைவி பிரிந்த துக்கத்தில் அதிகமாக குடித்து ... Read More »

செல்வம் வேண்டாமா?

செல்வம் வேண்டாமா?

விக்கிரமாதித்தன் கதை செல்வம் வேண்டாமா? தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் முருங்கை மரத்தின் மீது ஏறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் அதைத் தோளில் சுமந்தவாறு மாயனத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள் இருந்த வேதாளம் அவனிடம், “உன்னுடைய எதிர்காலம் எப்படியிருக்கும் என்று என்னால் இப்போது சொல்ல முடியவில்லை. ஏனென்றால் நீயும் ராமநாதனைப் போலிருந்தால் மிகவும் கஷ்டப்பட்டு அடைந்ததை கை நழுவ விட்டு விடுவாய். அந்த ராமநாதன் தன் விருப்பத்தை ... Read More »

இறைவனுக்கு யாரைப் பிடிக்கும்?

இறைவனுக்கு யாரைப் பிடிக்கும்?

ஆலயம் ஒன்றில் இறைவனின் திருவுருவை சிறப்பாய் நிர்மாணிக்க எண்ணிய குரு ஒருவர் அதற்கு பணம் திரட்ட சீடர்களை ஊருக்குள் அனுப்பிவந்தார். அவர்கள் ஒரு சீமாட்டி வீட்டிற்குச் சென்று விவரம் கூற நிறைய தங்க நாணயங்களை அவள் நன்கொடை தந்தாள். அதைக் கண்ட வேலைக்காரச் சிறுமி தானும் ஏதாவது கொடுக்க வேண்டும் என எண்ணி பல நாட்களாக தான் வைத்திருந்த செல்லாத செம்பு நாணயம் ஒன்றை சீடர்களிடம் தந்தாள். செல்லாக் காசை கண்ட தலைமைச்சீடன் “இந்தக் காசு எதற்குமே ... Read More »

Scroll To Top