ஒரு காட்டில் முயல்கள் கூட்டம் ஒன்று வசித்து வந்தது. அவர்களுக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்து வந்தது. அதாவது முயல்கள் அனைத்தும் கோழைகளாக இருந்தன. ‘வேட்டைக்காரன் வந்ததும் நம்மைத்தான் வேட்டையாடுகிறான். சிங்கம், புலி போன்ற மிருகங்களும் நம்மைத் தான் அடித்து உண்ணுகின்றன. ஆகவே…நம் கூட்டம் இனி உயிர் வாழ்வதில் பயனில்லை, ஒன்றாக ஏதேனும் ஒரு குளத்தில் செத்து மடிவோம்’என முயல்களின் தலைவன் கூற அனைத்தும் ஒரு குளத்தை நோக்கிச் சென்றன. அந்தக் குளத்தில் நூற்றுக்கணக்கான தவளைகள் வசித்து வந்தன.அவை கரையில்அமர்ந்திருந்தன.முயல்கள் கூட்டமாக வருவதைப் பார்த்த தவளைகளின் தலைவன் ‘முயல்கள் கூட்டமாக நம்மைத்தாக்க வருகின்றன.நாம் கரையில் ... Read More »
Category Archives: சிறுகதைகள்
அந்தக் கதவுகள் மூடியே இருக்கட்டும்!
November 8, 2016
ஒரு முதியவரும், அவரது மருமகளும் தினமும் எதாவது வாக்குவாதம் செய்துகொண்டிருப்பர். இதனால், அவரது மகனுக்கு நிம்மதி இல்லாமல் போய் விட்டது.ஒருநாள் சண்டையில், மகன் தந்தையைத் திட்டி விட்டான். பெரியவர் வருத்தத்துடன் புறப்பட்டார். வழியில் மகான் ஒருவரைக் கண்டார். “”சுவாமி! முதுமையில் பிள்ளைகள் நமக்கு உதவப் போவதில்லை என்பது தெரிகிறது.இருந்தாலும், இளமையில் பேர் சொல்ல ஒரு பிள்ளை இல்லை என்று ஏங்குவதும்,அவர்கள் மீது பாசம் வைத்து வளர்ப்பதும் தேவைதானா?” என்று கேட்டார். மகான் சிரித்தபடி, “”சரியப்பா! நீ உன் பெற்றோர் இருந்த காலத்தில் அவர்களைக் கவனித்தாயா?” “”சுவாமி… ... Read More »
வாழும் வரை போராடு!
November 7, 2016
ஒரு வாலிபனுக்கு ஏராளமான பணம் இருந்தது. ஆனாலும், அவன் ஏதோபிரச்னைகளில் சிக்கி தவித்துக் கொண்டே இருந்தான். வாழ்க்கையே வெறுத்துப்போனது. ஒருமுறை, அவனது தந்தையின் நண்பர் அவனது வீட்டுக்கு வந்தார்.வாடிப்போன அவன் முகத்தைக் கண்டு “என்ன பிரச்னை?’ என்றார். “”ஐயா! நான் நிறைய சம்பாதிக்கிறேன். பொருளையெல்லாம் மனைவி,பிள்ளைகளுக்காக செலவழிக்கிறேன். ஆனால், அவர்கள் இன்னும்… இன்னும்… என்கிறார்களே தவிர, இருப்பதைக் கொண்டு திருப்தி அடைந்தபாடில்லை. என் நண்பர்களும் அப்படியே! நான் செலவழித்தால் உடன் வருகிறார்கள். இல்லாவிட்டால் ஓடி விடுகிறார்கள். எனக்கு வேலை செய்து செய்து அலுத்து விட்டது. நிம்மதியைத் தேடி அலைகிறேன்,” என்றான். பெரியவர் ... Read More »
அட பணமே!
November 7, 2016
சீடர்களுடன் சென்று கொண்டிருந்த குருநாதருக்கு நேரமாகி போனதால் பசியெடுக்க ஆரம்பித்தது. வழியில் எதிர்ப்பட்டவரிடம், “”இந்த ஊரில் தர்ம சத்திரம் எங்கிருக்கிறது?” என்று கேட்டார். “”சுவாமி! தானம் செய்ய இங்கு ஆள் இல்லை. ஆனால், இங்கு உணவகம் ஒன்று இருக்கிறது. பணம் கொடுத்தால் சாப்பாடு கிடைக்கும்” என்றார். சீடரில் ஒருவர் குருவிடம், “”சுவாமி! உங்களை நேரில் பார்க்கும் போது எப்படிப்பட்டவரின் மனமும் மாறி விடும். நிச்சயம் அனைவருக்கும் இலவச சாப்பாடு கிடைக்கும்,” என்றார். எல்லாரும் உணவகத்தில் சாப்பிட்டனர். சீடர் எதிர்பார்த்ததற்கு மாறாக, உரிமையாளர் பணம் கேட்டார். மறுப்பேதும் சொல்லாமல் கேட்டதை கொடுத்து விட்டு குருநாதர் நடக்க ... Read More »
மனம் ஒரு ஒட்டகம்!
November 7, 2016
மனம் போன போக்கில் நடக்கும் ஒரு இளைஞன், குருவாக ஒருவரை ஏற்றான்.ஆனால், அங்கிருந்த கட்டுப்பாடுகள் பிடிக்காமல், சுதந்திரமாக வாழ அங்கிருந்து புறப்பட்டான். செல்லும் வழியில், ஒரு ஒட்டகம் புல் மேய்ந்து கொண்டிருந்தது. அதன் அருகில் நின்றபடி, “”எனக்கு பொருத்தமான குரு யாரும் உலகில் இல்லையே” என்று தனக்குள் சொன்னான். அதை ஆமோதிப்பது போல, அந்த ஒட்டகம் தலையசைத்தது. “”ஆகா! வாயில்லா ஜீவன் என்றாலும், நான் சொல்வதைப் புரிந்து கொள்ளும் சக்தி இதற்கு இருக்கிறதே” என்று மகிழ்ந்தான். அந்த ஒட்டகத்தையே தன் குருவாக ஏற்றான். ஒட்டகத்தைக் கேட்காமல் எதுவும் செய்வதில்லை என்று முடிவெடுத்தான். சில நாட்களில் ஒரு பெண்ணைக் ... Read More »
குட்டிக்கதை
November 4, 2016
ஒரு ஊருல ஒரு முனிவர் இருந்தாரு. ஒரு நாளு அவரப் பாக்க 4 பேரு வந்திருந்தாங்க. முனிவர்கிட்ட அந்த 4 பேரும்,”சாமி உலகத்த புரிஞ்சிக்கவே முடியலயே அதுக்கு என்ன வழின்னு” கேட்டாங்க. அதுக்கு அந்த முனிவர் “தெரியலயப்பான்னு” ஒத்த வரில பதில் சொல்லிட்டாரு. ஆனாலும் வந்தவங்க விடாம.”என்ன சாமி நீங்க எவ்ளோ பெரிய முனிவர் இதுகூடத் தெரியலைன்னு சொல்லுறிங்களே!” அப்டின்னு கேட்டாங்க. அதுக்கு முனிவர் அவங்ககிட்ட “சரி இப்ப நான் உங்கள ஒரு புஷ்பக விமானத்துல அழைச்சிகிட்டுப் ... Read More »
ஆசையே அழிவிற்குக் காரணம்!!!
November 3, 2016
பள்ளியில் நீதி போதனை வகுப்பு நடந்து கொண்டிருந்தது. மாணவர்களிடம் ஆசிரியர், “”ராமாயணத்தையும், மகாபாரதத்தையும் ஒப்பிடுங்கள்,”என்றார். ஒரு மாணவன், “”ராமாயணத்தில் நான்கு சகோதரர்கள். மகாபாரதத்தில் ஐந்து சகோதரர்கள்,” என்றான். இன்னொருவன்,””ராமாயணத்தில் ஒவ்வொரு சகோதரருக்கும் ஒரு மனைவி. ஆனால்,பாரதத்திலோ ஐந்து பேருக்கும் ஒரு மனைவி,” என்றான். மூன்றாமவன், “”ராமாயணத்தின் அட்டை கறுப்பு. மகாபாரதத்தின் அட்டை நீலம்”என்றான். நான்காமவன்,””ஸ்ரீராமர் காட்டில் பதினான்கு வருடங்கள் வசித்தார். பாண்டவர்களின் வனவாசம் பதின்மூன்று வருடங்கள்,” என்றான். ஐந்தாவது மாணவன், “”ஐயா! பெண்ணாசையால் ராவணன் அழிந்தான். மண்ணாசையால் துரியோதனன் அழிந்தான்,” என்றான். அனைவருடைய பதில்களையும் கேட்ட ... Read More »
கடவுள் எங்கே?
November 3, 2016
அன்பு எங்கு உண்டோ அங்கு தான் கடவுள் இருக்கிறார் ஒரு பெரியவர் தன் வீட்டின் வழியே சென்ற குளிரால் கஷ்டப்படுகிறவனை பார்த்து,உள்ளே அழைத்து அவனுக்கு கொஞ்சம் தேநீர் கொடுத்து உபசரித்தார். மற்றொரு நாள், தன் வீட்டின் வழியே குழந்தைக்கு ஒட்டு துணி கூட இல்லாமல் குளிரால் நடுங்கி கொண்டு சென்ற ஸ்திரி ஒருத்தியைய் அழைத்து அவளுக்கு உண்ண உணவும் உடுத்த உடையும் கொடுத்தார். தனது ஆப்பிள் கூடையில் இருந்த ஒரு பழத்தை எடுத்ததற்காக, வியபாரக்காரி அந்த சிறுவனை திருடா என்று ... Read More »
ஆசை
November 2, 2016
கங்கையில் ஒரு வியாபாரி குளித்துக் கொண்டிருந்தான்.அப்போது அழகான கைத்தடி ஒன்று மிதந்து வந்தது. அதை எடுத்துக் கொண்டு கரையை நோக்கி நீந்தினான் அவன். அப்போது ஒரு நீர்ச்சுழலில் மாட்டிக் கொண்டான்.தப்பிக்கக் கடும் முயற்சி செய்தான்.ஒரு வழியாகப் போராடி உயிர் பிழைத்தான். ஆனால் அந்தக் கைத்தடி எங்கோ நழுவிப் போய் விட்டது. கரைக்கு வந்த அவன் அழகான கைத்தடியை இழந்து விட்டேனே என்று கதறினான். அங்கு இருந்த ஒரு துறவி, ”அய்யா, நீங்கள் குளிக்க வெறுங்கையுடன் வந்ததை பார்த்தேனே? இப்போது கைத்தடியை ... Read More »
பிஸினஸ் குட்டிக்கதை
November 2, 2016
ர விச்சந்திரனுக்கு இது ஏழாவது இன்டர்வியூ! ஏற்கெனவே காது கேட்காத, வாய்பேச முடியாத நிலையில் இருக்கும் அவனுக்கு வேலையில்லாதது கூடுதல் வேதனை. இத்தனைக்கும் ஒவ்வொருமுறையும் எழுத்துத் தேர்வில் தன் முழுத் திறமையையும் காட்டுவான். கூடவே, இன்டர்வியூவில் தன்னால் பேச முடியாது என்பதையும் அதிகாரிகள் கேட்கும் கேள்விகளை காதால் கேட்க முடியாது என்பதையும் எழுதிக் காட்டுகிறான். அவர்கள் திருப்தி அடையாமல், நிராகரித்து அனுப்பிவிடுகிறார்கள். ரவிச்சந்திரனின் வெறுப்பெல்லாம், ‘விண்ணப்பிக்கும்போதே நம்முடைய குறைகளைச்சொல்லித்தானே விண்ணப்பிக்கிறோம். எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்று நம்பிக்கையோடு இருக்கும்போது இப்படிச் சொல்கிறார்களே’ என்பதுதான். இந்த முறை இன்டர்வியூவில் தேர்வு செய்யப்படாவிட்டால் இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது ... Read More »