Home » சிறுகதைகள் (page 18)

Category Archives: சிறுகதைகள்

குழப்பம் குருவே குழப்பம்!

குழப்பம் குருவே குழப்பம்!

புகழ்பெற்ற துறவி அவர். அவருக்கு ஏராளமான மாணவர்கள். ஒருநாள், அந்த துறவியின் பழைய மாணவர் ஒருவர் அவரைப் பார்க்க வந்தார். பரஸ்பர விசாரிப்புகளுக்குப் பிறகு, ‘குருவே, எனக்கு ஒரு குழப்பம்,’ என்று ஆரம்பித்தார் மாணவர். ‘என்ன?’ ‘நான் உங்களிடம் படித்த தியானத்தை முறையாகத்தான் பின்பற்றுகிறேன். கவனமாகத்தான் செய்கிறேன். அவை எனக்கு மிகுந்த மன அமைதியையும் புத்திக்கூர்மையையும் தருகின்றன. அதை அனுபவபூர்வமாக உணர்கிறேன்!’ ‘மகிழ்ச்சி. மகிழ்ச்சி… இதில் என்ன குழப்பம்?’ ‘நான் தியானத்தில் இல்லாத வேளைகளில் முழுமையான நல்லவனாக ... Read More »

வெற்றியைத் தீர்மானிப்பது கடவுளா?

வெற்றியைத் தீர்மானிப்பது கடவுளா?

இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே வெகு மும்முரமாக சண்டை நடந்து கொண்டிருந்தது. எதிரி நாட்டுப் படையிடம் கிட்டத்தட்ட தோற்றுவிட்ட நிலை. ஆனாலும் தாய்நாட்டுப் படைத் தளபதிக்கு போரை இழக்கமாட்டோம் என்ற அசாத்திய நம்பிக்கை. ஆனால் துணைத் தளபதி உள்ளிட்ட அவன் வீரர்களுக்கு அந்த நம்பிக்கை கிஞ்சித்தும் இல்லை. எல்லோரும் ஓடுவதில் குறியாக இருந்தனர். என்னதான் நம்பிக்கை இருந்தாலும், வீரர்களில்லாம் தனி ஆளாய் என்ன செய்ய முடியும்? கடைசி நாள் சண்டை. போர்க்களத்துக்குப் போகும் வழியில் ஒரு கோயிலைக் ... Read More »

ஒண்ணை விட ஒண்ணு…!

ஒண்ணை விட ஒண்ணு…!

ஒரு ஊரில் ஒரு கல்வெட்டி இருந்தான். கல்லுடைப்பது அவன் வேலை. வருமானம் போதவில்லை. வாழ்க்கையே வெறுப்பாக இருந்தது அவனுக்கு. ஒரு நாள், அவன் போன வழியில் ஒரு பணக்கார வீடு தென்பட்டது. அந்த வீட்டின் வாசல் வழியே அவன் கண்ணில் பட்ட அத்தனை பொருள்களும் செல்வங்களும் அவனை விழிபிதுங்க வைத்தன. அடடா.. அந்த பணக்காரனுக்கு எத்தனை செல்வாக்கு… என நினைத்தான். பணக்காரன் மீது பொறாமையாக இருந்தது. தனக்கும் அப்படி ஒரு வாழ்க்கை கிடைத்தால் எப்படியிருக்கும்? என நினைத்துப் ... Read More »

அப்படியா!!!

அப்படியா!!!

ஒரு ஊரில் ஒரு ஜென் குரு இருந்தார். நல்ல குரு என்பதை விட, நல்ல மனிதராக இருக்க வேண்டும் என்பது அவர் கொள்கை. அப்பழுக்கில்லாதவர் என்ற பெயரை அந்த ஊர் மக்களிடம் பெற்றிருந்தார் குரு. அவர் இருந்த குடிலுக்குப் பக்கத்தில் ஒரு அழகான இளம்பெண்ணும் அவளது பெற்றோரும் வசித்துவந்தனர். அவர்கள் அந்த ஊரில் ஒரு உணவகத்தை நடத்தி வந்தார்கள். இளம்பெண் அடிக்கடி குருவைப் பார்ப்பது வழக்கம். ஒரு நாள் அந்த இளம்பெண் கர்ப்பமாக இருந்ததை பெற்றோர் கண்டுபிடித்து ... Read More »

நெஞ்சைத் தொட்ட குட்டிக்கதை..

நெஞ்சைத் தொட்ட குட்டிக்கதை..

ஒருவர் எதற்கெடுத்தாலும் மனைவியுடன் சண்டைப் போடுவார்.. ஒருநாள் ‘ஆபீஸ்’ போய் வேலை செய்து பார்.. சம்பாதிப்பது எவ்வளவுக் கஷ்டம் என்று புரியும் என்று அடிக்கடி சவால் விடுவார்.. அவள் ஒருநாள் பொறுமை இழந்து, ஒருநாள் நீங்க வீட்ல இருந்து பசங்களை பார்த்துக்கோங்க.. காலைல குளிப்பாட்டி சாப்பிட வச்சு, வீட்டுப் பாடங்கள் சொல்லிக்கொடுத்து சீருடை அணிவித்து பள்ளிக்கு அனுப்புங்க.. அதோடு சமைப்பது துவைப்பது எல்லாத்தையும் செஞ்சுதான் பாருங்களேன்.. என எதிர் சவால்விட்டாள்.. கணவனும் அதை ஏற்றுக் கொண்டான்.. அவன் வீட்டில் இருக்க.. இவள் ஆபீஸ் போனாள்.. ஒரே குப்பை, கூளமாக கிடந்தது ஆபீஸ்.. முதலாளி மனைவி என்பதை மனதில் கொள்ளாமல் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்தாள்.. வருகைப் பதிவேட்டை சரிபார்த்து ... Read More »

ஒரு ஊர்ல ஒரு ராஜா!

ஒரு ஊர்ல ஒரு ராஜா!

ஒரே ஒரு ஊரிலே, ஒரே ஒரு ராஜா. அந்த ராஜாவுக்கு ஒரு மனக்கவலை. அதை யாரிடமும் சொல்லமுடியாமல் குழப்பத்தோடு உட்கார்ந்திருந்தான். அரசனின் முகத்தைக் கவனித்த அமைச்சருக்கு ஏதோ பிரச்னை என்று புரிந்துவிட்டது. ஆனால் வற்புறுத்திக் கேட்டால் அவர் தவறாக நினைத்துக்கொள்வாரோ என்று அச்சம். ஆகவே அமைச்சர் ஒரு யோசனை சொன்னார். ‘அரசே, நீங்கள் வேட்டைக்குப் போய் ரொம்ப நாளாகிவிட்டதல்லவா?’ ‘ஆமாம்’ என்றான் அரசன். ‘ஆனால் இப்போது நான் வேட்டையாடும் மனநிலையில் இல்லையே!’ ‘மனம் சரியில்லாதபோதுதான் இதுமாதிரி உற்சாக ... Read More »

அவமரியாதை எனும் பரிசு!

அவமரியாதை எனும் பரிசு!

ஒரு வயதான போர் வீரர்… பெரும் வீரர் அவர். பல போர்க்களம் பார்த்தவர். போர்க்கலையிலிருந்து ஒதுங்கி கிராமத்தில் தங்கி இளைஞர்கள் பலருக்கு பயிற்சி தந்து கொண்டிருந்தார். வயதானாலும் எந்த எதிராளியையும் தோற்கடித்து விடும் உடல் வலிவும் மன பலமும் அவருக்கு இருந்தது. ஒரு இளம் வீரன் அந்த கிராமத்துக்கு வந்தான். இந்த முதிர்ந்த போர் வீரரை வீழ்த்தி முதன்மை வீரன் என தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளத் துடித்தான். அவனுக்கு உடல் பலம் மட்டுமல்ல, எதிராளியின் பலவீனத்தைக் கண்டுபிடித்து அவனை ... Read More »

தாண்டிச்செல் தடைகளை!

தாண்டிச்செல் தடைகளை!

ஒரு குரு மரத்தடியில் இளைப்பாறிக் கொண்டிருந்தார். சீடன் விளையாட்டாக மரத்தில் ஏறிக் கொண்டிருந்தான். அங்கே பட்டாம்பூச்சியின் வலைப்பின்னலைக் கண்டான். அந்த பூச்சி பின்னலை விட்டு வெளியே வர திணறிக் கொண்டிருந்தது. குழப்பத்துடன் சீடன், “”ரொம்ப சிரமப்படுதே! அதற்கு உதவி செய்தாகணும்!” என்ற எண்ணத்துடன் அதை நெருங்கினான். கண் விழித்த குரு சீடனைக் கண்டார். “சும்மாயிரு! அதன் போக்கிலேயே விட்டு விடு!” என்று சொல்லிவிட்டு மீண்டும் உறங்கினார். சீடனுக்கு மனம் கேட்கவில்லை.  குருவுக்கு தெரியாமல், தடுமாறும் அந்த பூச்சியை பின்னல் கூட்டில் இருந்து விடுவித்தான். ஆனால், அந்த பூச்சி பறக்க ... Read More »

உறுதியாக அணுகினால் எளிதாக தீர்வு கிடைக்கும்

உறுதியாக அணுகினால் எளிதாக தீர்வு கிடைக்கும்

அந்தப் பூட்டு பூட்டப்படவே இல்லை என்பதுதான் உண்மை. எவ்வளவு பெரிய பிரச்சினையையும் தெளிவாக,  பதட்டமில்லாமல், உறுதியாக அணுகினால் எளிதாக தீர்வு கிடைக்கும் என்பது இந்தக் கதையின் நீதி. குருவுக்கு வயசாகிவிட்டது. மரணப் படுக்கையில் கிடக்கிறார். சீடர்களைக் கூப்பிட்டார். ‘‘இன்று மாலைக்குள் இறந்துவிடுவேன்’’ என்று கூறிவிட்டார். சீடர்களுக்கு கவலை. விஷயம் கேள்விப்பட்ட அவர் நண்பர்கள் பலரும், வேறு சிஷ்யர்களும் மாலைக்குள் ஆசிரமத்துக்கு வந்துவிட்டனர். மூத்த சீடர் ஒருவர் திடீரென கடைவீதிக்குப் புறப்பட்டார். ‘‘ஏய்… என்ன மடத்தனம் பண்ணுகிறாய்… குரு ... Read More »

இது மவுனமான நேரம்!!!

இது மவுனமான நேரம்!!!

ஒரு துறவி ஆற்றங்கரையில் அமர்ந்து தண்ணீர் ஓடும் அழகையே பார்த்துக் கொண்டு இருந்தார். இயற்கையில் ஈடுபட்டு மனம் ஒருமுகப்பட்டதால் மவுனத்தில் ஆழ்ந்தார். அந்த நேரம் இளைஞன் ஒருவன் வந்தான். கடவுளைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற தேடல் அவனுள் இருந்தது. “”சுவாமி எனக்கு ஒரு சந்தேகம். கடவுள் என்பவர் யார் என்பதை உங்களால் சொல்ல முடியுமா?” என்று கேட்டான். துறவியோ அதைக் கண்டு கொள்ளாமல், தொடர்ந்து அமைதி காத்தார். கேள்வி அவரின் காதில் விழவில்லை என்பதை அவரின் மவுனம் உணர்த்தியது. “”சுவாமி! நான் சொல்வது ... Read More »

Scroll To Top