ஏழை விறகுவெட்டி ஒருவன் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஏழு மகன்கள் இருந்தனர். அவன் எவ்வளவோ கடுமையாக உழைத்தும் அவர்கள் பல நாட்கள் பட்டினி கிடந்தார்கள். ஒரு நாள் இரவு அவனுடைய மகன்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். மனைவி அவனிடம், “நாம் எவ்வளவு காலம் துன்பப்படுவது? வயிறார உண்டு எத்தனை நாட்கள் ஆகிறது? நம் மகன்களைக் காட்டில் விட்டுவிட்டு வந்து விடுங்கள். இருப்பதைக் கொண்டு நாம் மகிழ்ச்சியாக வாழலாம்” என்றாள். “நீ சொன்னபடியே செய்கிறேன். நாளை அவர்களுக்கு ... Read More »
Category Archives: சிறுகதைகள்
முல்லா, ஏன் அழுகிறாய்?
November 28, 2016
முல்லா ஒரு நாள் அழுதுகொண்டிருந்தார். அவரது நண்பர் கேட்டார்: “முல்லா, ஏன் அழுகிறாய்?” முல்லா சொன்னார்: “சென்ற மாதம் எனது பாட்டி ஐந்து இலட்ச ரூபாய் சொத்தை எனக்கு எழுதிவைத்துவிட்டு இறந்துவிட்டார்.” நண்பர் கேட்டார்: “அட மகிழ்ச்சியான செய்திதானே, ஏன் அழுகிறாய்?” முல்லா சொன்னார்: ” பதினைந்து நாட்களுக்குமுன் எனது பெரியப்பா இருபது இலட்ச ரூபாய் சொத்தை எனக்கு எழுதிவைத்துவிட்டு இறந்துவிட்டார்.” நண்பர் கேட்டார்: “மகிழ்ச்சியான செய்தி! அதற்காக ஏன் அழுகிறாய்?” முல்லா சொன்னார்: “சென்ற வாரம் ... Read More »
புதையல்!!!
November 27, 2016
திருவெண்ணெய் நல்லூரில் பேராசைக்காரன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் எந்த பொருளை பார்த்தாலும் அதைத் தான் அடைய வேண்டும் என நினைப்பான். எனவே, நாளடைவில் பார்த்தசாரதி என்ற அவனுடைய பெயரே மறைந்து போய் பேராசைக்காரனாயிற்று. ஒரு நாள்— வெளியூருக்கு வியாபார நிமித்தமாக வண்டியில் சரக்குகளை ஏற்றிக் கொண்டு சென்றான். வியாபாரம் முடிந்து காட்டு வழியாக வந்து கொண்டிருந்தான். தண்ணீர் வேட்கை கொண்ட அவன் கண்களுக்கு கிணறு ஒன்று தெரிந்தது. வண்டியை விட்டு இறங்கிய அவன் அந்தக் கிணற்றருகே ... Read More »
அடைந்ததை அழித்தல்!!??
November 27, 2016
ஒரு கடற்கரையிலே பெரிய நாவல்மரம் ஒன்றிருந்தது. அதில் எப்பொழுதும் பழங்கள் இருந்து கொண்டேயிருக்கும். அந்தமரத்தில் ரக்தமுகன் என்றொரு குரங்கு இருந்து வந்தது. ஒருநாள் கராலமுகன் என்ற பெரிய முதலை ஒன்று அந்த நாவல்மரத்தின் அருகில் வந்தது. ரக்தமுகன் அதைப்பார்த்து, ‘‘நீஎன்விருந்தாளி. அமுதத்துக்கொப்பான நாவற்பழங்களைத்தருகிறேன். சாப்பிடு!’’ என்று குரங்கு கூறி, நாவற்பழங்களை முதலைக்குக் கொடுத்தது. பழங்களை முதலைசாப்பிட்டது. வெகுநேரம் குரங்குடன் பேசி இன்பமடைந்த பின் தன் வீட்டுக்குத்திரும்பிச் சென்றது. இப்படியே நாள்தோறும் முதலையும் குரங்கும் நாவல் மரத்தின் நிழலையடைந்து ... Read More »
நயவஞ்சகர்களை நம்பலாமா?
November 26, 2016
செழிப்பான ஒரு புல்வெளியில் ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. அவற்றை மேய்த்துக் கொண்டு வந்தவன், மரத்தடியில் உட்கார்ந்து கண் மூடி, புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்தான். புல்வெளியைச் சுற்றி வேலி போடப்பட்டிருந்தது. அதன் அருகே, ஓர் ஆட்டுக்குட்டி மேய்ந்து கொண்டிருந்தது. வேலிக்கு வெளிப்பக்கம் இருந்த ஓநாய் ஒன்று ஆட்டுக் குட்டியைப் பார்த்தது. வேலிக்குள் முகத்தை நுழைத்துக் கொண்டு, ஓநாய் எதையோ பார்ப்பது போல பாசாங்கு செய்தது. அதைப் பார்த்த ஒர் ஆட்டுக்குட்டி, “உனக்கு என்னவேண்டும்?” என்று கேட்டது. ஓநாயும் “நண்பா, ... Read More »
ஒரு நிமிடக் கதை – சிரிப்பொலி!!!
November 26, 2016
நல்ல மழை. வானம் தூறிக்கொண்டே இருந்தது. மின்சாரம் வேறு இல்லை. ஒரே இருட்டாகவும் இருந்தது. கைத்தொலைபேசியில் மணியை பார்த்தான் சுப்பையா. அது எட்டை காட்டியது. ‘காலையிலிருந்து ஒரு போன் வரல. இதுக்கு வேற அப்பப்போ காசு போட வேண்டியிருக்கு. மணிபாக்கத்தான் இது லாயக்கு, இனிமேல் யாரு நம்ம கடைக்கு வரப்போகிறார்கள்’ என்று நினைத்தபடி கடையை அடைக்கும் முயற்சியில் இறங்கினான். சுப்பையா ஒரு நடுத்தரவாதி. ஊர் ஒதுக்குப்புறத்தில் ஒரு பெட்டிக்கடை வைத்துக்கொண்டு பிழைப்பை நடத்துபவன். அவன் கடையிலிருந்து ஒரு ... Read More »
சோம்பல் ஒரு சோக காரணி??!!?
November 23, 2016
ஒருவன் வேலை தேடி ஒரு செல்வந்தரிடம் போனான். என்ன வேலையானாலும் செய்யத் தயார் என்றான். எவ்வளவு சம்பளமானாலும் சம்மதமே என்றான். அந்த செல்வந்தருக்கோ மட்டற்ற மகிழ்ச்சி. இப்படியும் ஒருவன் வேலையாளாகக் கிடைப்பது என்பது அதிர்ஷ்டமே அல்லவா? அவன் தொடர்ந்து சொன்னான். “ஆனால் எனக்கு இரண்டே இரண்டு நிபந்தனைகள் …..” அவர் கேட்டார். “என்ன நிபந்தனைகள்?” அவன் சொன்னான். “முதலாவது நிபந்தனை- எனக்கு சாப்பிட்டவுடனேயே சிறிது நேரம் உறங்க வேண்டும்” அவர் சொன்னார். “அது ஒரு பிரச்னையல்ல. அடுத்த ... Read More »
குறையையும் நிறையாக்கலாம்!
November 22, 2016
ஒரு கார் விபத்தில் தன் இடது கையை இழந்திருந்த ஒரு பத்து வயது சிறுவனுக்கு ’ஜூடோ’ என்ற ஜப்பானிய மற்போர்க் கலையைக் கற்றுக் கொள்ள ஆவலாக இருந்தது. அவன் ஒரு வயதான ஜப்பானிய ஜூடோ ஆசிரியரிடம் தன் ஆவலைத் தெரிவித்தான். அந்த ஆசிரியர் அவன் ஊனத்தைக் கவனித்தும் பொருட்படுத்தாமல் அவனுக்கு ஜூடோ கற்றுக் கொடுக்க ஒப்புக் கொண்டார். அந்த சிறுவனும் அவரிடம் அந்த மற்போர்க் கலையைக் கற்றுக் கொள்ள பயிற்சியை ஆரம்பித்தான். சில மாதங்கள் கழிந்த பின்னும் ... Read More »
இந்தாப்பா உன் சந்தோஷம்!
November 21, 2016
ஒர் ஊரில் பெரிய கோடீஸ்வரன் இருந்தான். அவனிடம் இல்லாத விஷயங்களே இல்லை. அத்தனையும் அளவுக்கு அதிகமாக கொட்டிக் கிடந்தன. ஆனால் சந்தோஷமும் நிம்மதியும்தான் இல்ல. சரி, உள்ளூர்லதான் சந்தோஷம் கிடைக்கல. வெளியூர், விதவிதமான நாடுகளுக்குப் போனா கிடைக்குமான்னு, தேடித் தேடிப் போனான்… ம்ஹூம் நிம்மதி கிடைச்சபாடில்ல. மனசுக்குள்ள எப்பவும் பரபரப்பு… எந்த ஊருக்குப் போனாலும் அடுத்த நாளே, வீட்டுல என்ன ஆச்சோங்கிற கவலை. தண்டவாளப் பெட்டி பத்திரமா இருக்குமாங்கிற பயம்… சொந்தக்காரங்களே அமுக்கிடுவாங்களோங்கிற சந்தேகம்! சரி, இதை ... Read More »
கடவுளுடன் ஒரு பேட்டி!!!
November 20, 2016
ஒரு நாள் கடவுளை பேட்டியெடுப்பதாய் கனவு வந்தது அவனுக்கு. “உள்ளே வா” – அழைத்த கடவுள், “என்னைப் பேட்டியெடுக்கணுமா?” “ஆமாம்… உங்களுக்கு நேரமிருந்தால் கொடுங்கள்” -இது அவன். கடவுள் சிரித்தார். “என் நேரம் முடிவற்றது… எதையும் செய்யப் போதுமானது. சரி… என்ன கேட்கப் போகிறாய்?” “மனித இனத்தில் உங்களை ஆச்சர்யப்படுத்துவது எது?” கடவுள் சொன்னார்… “மனிதன் ரொம்ப நாள் குழந்தையா இருக்கப் பிடிக்காமல், சீக்கிரம் வளர்ந்து பெரியவனாகிறான்… ஆனால் வளர்ந்த பிறகு குழந்தையாகவே நீண்ட காலம் இருக்கிறான். ... Read More »