ஒரு நாள் முல்லா தெருவழியா நடந்து போய்க் கொண்டிருந்தார். ஒரு குடிசை வாசலை அவர் கடந்து சென்ற சமயம் குடிசைக்குள் ஏதோ சத்தம் கேட்கவே உள்ளே சென்றார். அந்தக் குடிசையில் ஒரு ஏழை விதவைப் பெண் வசித்து வந்தாள் துணிகளை தைத்துக் கொடுத்து அவள் கஷ்ட ஜீவனம் நடத்திக் கொண்டிருந்தாள் அவளுக்கு பத்து வயதில் ஒரு மகன் இருந்தான். அந்தக் குடும்பத்தைப் பற்றி முல்லாவுக்கு நன்றாகத் தெரியும் அவர்கள் மீது அவருக்கு அனுதாபமும் உண்டு. வீட்டுக்குள் தாயும் ... Read More »
Category Archives: சிறுகதைகள்
தட்டிவிடு சாம்பலை!
December 9, 2016
அமெரிக்காவில், தென் கலிபோர்னியாவில் உள்ள திருமதி கேரீ மீட் வைக்காப்பின் இல்லம். சில வருடங்களுக்கு முன்பு அது குதூகலம் மிக்க ஓர் ஆனந்தப் பூங்கா. இன்றோ…, வைக்காப் ஏன் இப்படி உருக்குலைந்து கிடக்கிறார்? இவரது சுறுசுறுப்பு எங்கே? சேவை எங்கே? எங்கே, எங்கே என்ற கேள்விக்கெல்லாம், வைக்காப்பின் ஒரே பதில், ஒரு பெருமூச்சுதான் – உஷ்ணமாக! எத்தனை எத்தனை இடர்கள் அவரைப் புரட்டிப் போட்டன. இவரா இப்படி? ஒரு காலத்தில் சூறாவளித் துறவிக்கே சமைத்துப் போட்ட அவரது ... Read More »
முள்ளங்கியும் முல்லாவும்
December 8, 2016
ஒரு முறை பக்கத்து கொல்லையில் முள்ளங்கி திருடும் போது கையும் களவுமாக மாட்டிக்கொண்டார் முல்லா . விசாரணைக்கு வந்த முல்லாவிடம் நீதிபதி கேட்டார் “பக்கத்து கொல்லைக்கு எதற்காக சென்றாய் …?” முல்லா சொன்னார் “காற்று என்னை அங்கே கொண்டு போய் தள்ளி விட்டது ..”நீதிபதி “உன் கையில் முள்ளங்கி வந்தது எப்படி …?” முல்லா “மேலும் காற்றில் பறக்காமலிருக்க முள்ளங்கி யை பிடித்து க்கொண்டேன் ” நீதிபதி “அப்படியானால் சாக்குப்பை உன்னிடம் வந்தது எப்படி .?” முல்லா ... Read More »
அவர் அதையும் நமக்காகச் செய்கிறார்!
December 8, 2016
”சேவை செய்ய வேணாம்னு நான் உங்களைச் சொல்லல்லை. ஆனா நம்ம பிஸினஸிலே கூடுதல் கவனம் தந்தா, நம்ம பொருளாதார நிலை வளருமில்லே?” என்று நீலா ஹரிஹரனிடம் கேட்டாள். களைத்து வந்திருந்த ஹரிஹரன் மனைவியை நோக்கினார். ‘செய்து வந்த சேவையைப் பார்த்துத் தான் இவள் என்னை விரும்பி மணந்தாள்; இன்று இப்படி மாறிவிட்டாளே!’ என எண்ணியபடி உண்ண ஆரம்பித்தார். ஒரு நடுத்தரக் குடும்பத்தின் நாயகன் ஹரிஹரன். நடுத்தரமான சிந்தனைகள் உடையவள் நீலா. ”நீலா, இன்னைக்கு மட்டும் ஒரு பத்துப் ... Read More »
மீன்
December 7, 2016
ஒரு தடவை அறவொழுக்கத்தை நேசிக்கும் பிரபலமான தத்துவவாதி ஒருவர் முல்லா வசிக்கும் ஊரை கடந்து செல்ல வேண்டியிருந்தது. அப்போது சாப்பாட்டு நேரமாகையால் அவர் முல்லாவிடம் நல்ல உணவு விடுதி எங்குள்ளது என்று கேட்டார். முல்லா அதற்கு பதில் சொன்னவுடன், தத்துவவாதி போகும் போது பேச ஆள் கிடைத்தால் நல்லது என்ற எண்ணத்தில் முல்லாவையும் தன்னுடன் சாப்பிட வருமாறு அழைத்தார். முல்லாவும் நெகிழ்ந்து போய் அந்த படிப்பாளியை அருகிலிருந்த உணவு விடுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கே போன பிறகு ... Read More »
சிவ சிவ சுவாமிஜி!
December 7, 2016
திருக்கைலாயம். தியானத்தில் கைலாசபதி வீற்றிருக்கிறார். சுற்றிலும் தேவர்கள், முனிவர்கள், ரிஷிகள், பூத, சிவ கணங்கள். ஸ்ரீருத்ர சமகம் பாராயணம் ஒலிக்கிறது. பிரணவ ஜபம் கைலாசத்தையே ஆனந்தமாக அதிரச் செய்கிறது. சிவபெருமான் ஆழ்ந்த தியானத்தில் மூழ்கித் தமது எல்லையற்ற மகிமையில் மக்னமாகியுள்ளார். அப்போது ஒரு தேவவாணி கேட்டது: ஏழைகளிடமும், பலவீனர்களிடமும் நோயாளிகளிடமும் சிவபெருமானைக் காண்பவன் தான் – உண்மையில் சிவபெருமானை வழிபடுகிறான். சிவபெருமானை விக்கிரகத்தில் மட்டும் காண்பவனின் பூஜை, ஆரம்ப நிலையில் தான் இருக்கிறது. ஒரே ஓர் ஏழைக்காவது, ... Read More »
அதிர்ஷ்டமான மனிதன்
December 6, 2016
முல்லாவும் அவரது மனைவியும் இரவு உணவு அருந்திக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் வீட்டுச் சுவர் பக்கமாய் ஏதோ சத்தத்தைக் கேட்டனர். முல்லா என்ன சத்தம் என்று பார்த்துவர கையில் வேட்டைத் துப்பாக்கியுடன் வெளியே வந்தார். தனது தோட்டத்தில் வெள்ளையாக ஏதோ அசைவதைப் பார்த்தார் முல்லா. துப்பாக்கியைத் தூக்கி குறிபார்த்து அதைச் சுட்டார் முல்லா. காலையில் எழுந்து, தான் எதைச் சுட்டோம் என்று பார்ப்பதற்காக முல்லா தோட்டத்திற்கு போனபோது, அது காய்வதற்காக மரத்தில் போட்டிருந்த தனது மிகச் சிறந்த ... Read More »
நம்பிக்கை
December 6, 2016
முல்லாவிற்கு அன்றுதான் திருமணம் முடிந்திருந்தது.புதுமனைவி மற்றும் உறவினர்களுடன் தனது ஊருக்கு புறப்பட்டார்.வழியில் பெரிய ஆற்றை கடந்து செல்லவேண்டும்!ஒரு பெரிய் படகில் மனைவி மற்றும் உறவினர்களுடன் ஆற்றை கடந்துசெல்ல புறப்பட்டார்கள்.படகு நடுஆற்றை கடக்கும் போது பெரிய சுழல்க்காற்று வீசி படகு அங்கும் இங்குமாக் தள்ளாடியது.முல்லாவை தவிர அனைவரும் பயத்தால் அலறி கொண்டிருந்தனர். முல்லா மட்டும் அமைதியாக இருந்தார்.இதை பார்த்த முல்லா மனைவிக்கு மிகவும் ஆச்சரியம்!முல்லாவிடமே கேட்டுவிட்டாள்.முல்லா பதில் ஏதும் பேசாமல் மனைவி அருகில் சென்று தன் இடுப்பில் இருந்த ... Read More »
விதியா? மதியா?
December 5, 2016
ஒருவன் ஒரு ஞானியிடம் சென்று கேட்டான். “மனித வாழ்க்கையில் எல்லாவற்றையும் தீர்மானிப்பது அவன் விதியா, இல்லை அவன் மதியா?”. ஞானி சொன்னார். “ஒரு காலை உயர்த்தி மறு காலால் நில்” கேள்வி கேட்டவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஆனாலும் இடது காலை உயர்த்தி வலது காலால் நின்றான். ஞானி சொன்னார். “சரி அந்த இன்னொரு காலையும் உயர்த்து” அவனுக்குக் கோபம் வந்து விட்டது. நம் நடிகர் வடிவேலு மாதிரி “என்ன சின்ன பிள்ளைத்தனமாக இருக்கு” என்று சீறினான். “இரண்டு ... Read More »
பானை
December 5, 2016
முல்லா ஒருமுறை பக்கத்து வீட்டுக்காரரிடம் ஒரு பானை இரவல் வாங்கினாராம். பல நாட்கள் வரை முல்லா பானையைத் திருப்பித் தராததால், பக்கத்து வீட்டுக்காரர் வந்து பானையைத் திருப்பிக் கேட்டார். அதற்கு முல்லா… “அடடே…, உங்களிடம் வாங்கிய பானையை திருப்பிக் கொடுக்காமல் இருந்ததிலும் ஒரு லாபம் இருக்கின்றது. அந்தப் பானை ஒரு குட்டி போட்டு இருக்கின்றது, “… என்று சொல்லி அதனுடன் ஒரு சிறிய பானையும் கொடுத்தார். பக்கத்து வீட்டுக்காரர் மகிழ்ச்சியில் இரண்டு பானையும் வாங்கிச் சென்றார். அதேபோல் ... Read More »