Home » சிறுகதைகள் (page 12)

Category Archives: சிறுகதைகள்

முல்லாவின் அறிவாற்றல்!!!

முல்லாவின் அறிவாற்றல்!!!

முல்லா நல்ல அறிவாளி என்றும் எவ்வளவு பெரிய ஆபத்து ஏற்பட்டாலும் தமது அறிவாற்றலினாலேயே அந்த ஆபத்திலிருந்து தப்பி விடுவார் என்றும் ஊரில் உள்ளவர்களில் பலர் கூறுவது மன்னரின் காதில் விழுந்தது. அவரது அறிவாற்றலைப் பரிசோதிப்பதற்காக மன்னர் ஒரு நாள் முல்லாவை தமது சபைக்கு வரவழைத்தார். முல்லா வந்து வணங்கி நின்றார். ” முல்லா உனது அறிவைப் பரிசோதனை செய்ய நினைக்கிறேன், நீங்கள் ஏதேனும் ஒன்றைக் கூறும், நீர் சொல்வது உண்மையாக இருந்தால் உமது தலை வெட்டப்படும், நீர் ... Read More »

மலிவான பொருள்!!!

மலிவான பொருள்!!!

ஓரு தடவை துருக்கி மன்னர் – காட்டுக்கு வேட்டையாடச் சென்றார். அவருடைய பரிவாரத்துடன் முல்லாவும் சென்றார். மன்னர் பரிவாரத்துடன் சமையல்காரர் குழு ஒன்றும் சென்றது. சமையல்கார குழுவின் தலைவன் காட்டில் கூடாரமடித்து சமையல் செய்வதற்கான ஏற்பாடுகளில் முனைந்தபோது அரண்மனையிலிருந்து உப்பு எடுத்து வர மறந்து விட்டது தெரிந்தது. சமையற்காரத் தலைவன் மன்னர் முன் சென்று அச்சத்தோடு தலை கவிழ்ந்து நின்றான். ” என்ன சமாச்சாரமஞ் என்று மன்னர் விசாரித்தார். சமையல் குழுத்தலைவன் நடுங்கிக்கொண்டே தான் உப்பு எடுத்து ... Read More »

நம்பிக்கை!!!

நம்பிக்கை!!!

ஓசோவின் கதைகள்: சூபி ஞானியான ஜுன்னேய்த்தின்மீது நம்பிக்கை வைத்திருந்த ஒரு சீடர்,ஒரு நாள் காட்டில் வேட்டை ஆடச் சென்றபோது,தூரத்தில்,ஜுன்னேய்த்தின் அருகில் முகத்திரை அணிந்த ஒரு இஸ்லாமியப்பெண் அமர்ந்து, மதுவை ஒரு கோப்பையில் அவருக்காக ஊற்றிக்கொண்டிருப்பதைக் கண்டு ஜுன்னேய்த் ஒருஏமாற்றுக்காரர் என்ற முடிவுக்கு வந்தான். அவனைக் கவனித்த ஜுன்னேய்த் அவனை அருகே அழைத்தார். அவன் முகக்குறிப்பை அறிந்த ஜுன்னேய்த் அப்பெண்ணின் முகத்திரையை விலக்கினார். அப்பெண் அவரதுதாயார்.ஜுன்னேய்த் கூறினார்,”நீ கற்பனை செய்த அழகான பெண் எங்கே?உன்னால் ஒரு மூதாட்டியைக் கற்பனை ... Read More »

பகை நட்பு

“குட் மார்னிங்! கொரட்டூர்னு ஒரு ஸ்டேஷன்…அங்க எங்க ட்ரெயின் இப்ப நின்னுட்டு இருக்கு. இஞ்சின்லேர்ந்து எட்டாவது கோச்.” குறுஞ்செய்தி தூக்கத்தை மட்டுமில்லாமல் இனிய காலை கனவையும் சேர்த்து கலைத்தது. ட்ரெயின் சென்ட்ரல் வர இன்னும் அரை மணி நேரத்திற்கு மேலாகும். அதற்குள் போய் விடலாம் என்று நினைப்பதற்குள் நித்திரா தேவி அவனை மீண்டும் ஆட்கொண்டாள். “பரத், பெரம்பூர் தாண்டிட்டோம். முந்தின மெஸ்ஸேஜுக்கு ஏன் பதில் அனுப்பல? வீட்டை விட்டு கிளம்பினாயா இல்லையா?” மீண்டும் கைப்பேசியின் நச்சரிப்பை அணைத்துவிட்டு ... Read More »

ஆந்தையாக உருமாறிய தேவதை

ஆந்தையாக உருமாறிய தேவதை

ஆலன் கார்னர் (Alan Garner) – என்ற இங்கிலாந்தின் பிரபல எழுத்தாளர் ஒரு கதை எழுதினார். வானுலகத்திலிருக்கும் ஒரு தேவதை பூமியைப் பார்க்க ஆசைப்படுகிறாள். அவளை ஒரு நிபந்தனையோடு பூமிக்கு அனுப்புகிறார்கள். ‘உலகத்தில் உள்ள எல்லாவற்றையும் பார்த்து ரசிக்கலாம். ஆனால் எந்த இளைஞனையாவது பார்த்து காதல் வயப்படக்கூடாது. அப்படி காதல் வயப்பட்டு அவனை திருமணம் செய்து, ஒரு நாள் வாழ்ந்தாலும், அடுத்த நாளே பொன்னிறமான இறக்கையுள்ள தேவதையான நீ அழகில்லாத ஆந்தையாக மாறிவிடுவாய்’. இப்படி எச்சரிக்கை செய்யப்பட்ட ... Read More »

நாறமீன்!!!

நாறமீன்!!!

காலை தொழுகை  முடிந்து தொப்பியை எடுத்து இடுப்பில் சொருகிகிகொண்டான். வானம் விடியலாமா என யோசித்துக் கொண்டிருப்பதாய் பட்டது. சைக்கிள் பழக்கப்பட்ட மாடு மாதிரி  வழக்காடி டீக்கடை பக்கம் சென்றது.   மோதியார் தனக்கும் முன்பே அங்கு ஆஜராயிருந்தது  குரலில் தெரிந்தது. “பால் கூடினாலும் பரவாயில்லை சீனியை குறைச்சுராதடே” வழக்கமான புளிச்ச ஜோக்.   ஒரு பன்னை தின்று தனக்கு வந்த டீயை குடித்தான்.   மோதியார் அருகில் வந்து குசுகுசுத்தார். “மருமக பெத்திருக்கா   நல்ல பூச்சிகாரலோ, விளமீனோ வாங்கிட்டு வந்துருடே மறக்காம” ” ... Read More »

ராமாயி தேடிய‌ தனபாலன்

“இப்ப இன்னான்ற? வந்ததுலேந்து பாக்கறேன், சொம்மா கூவிக்கினே இருக்க?” “எங்க போன? அத சொல்லேன் மொதல்ல.” “சொல்லாங்காட்டி இன்னா செய்வ? நானே அல்லாடிட்டு வந்துருக்கேன். சொம்மா நொய் நொய்னு நொச்சுக்கினு. போ அப்பால. சொல்றேன்ல, போய்யா அப்பால.” கண்ணை கசக்கிக்கொண்டே அடுப்பை ஊதி ஊதி சோறு பொங்கிக்கொண்டிருந்த ராமாயி எரிந்து விழுந்ததில் தனபாலன் முனகிக்கொண்டே மூலையில் சென்று முடங்கிக்கொண்டான். அரை மணி பொறுத்து, இரண்டு தட்டுகளில் சோறு, குழம்பு, பொரியல் என்று எடுத்து வைத்து, பேருக்கு இவனை ... Read More »

குப்பைத்தொட்டி’ல்’!

குப்பைத்தொட்டி’ல்’!

வெளியுலகம் கண்களுக்குப் புலப்படாவண்ணம் புழுதித்துகள்களால் புடை சூழ்ந்த அந்த மகிழ்வுந்தின் பக்கவாட்டுக்கதவின் கண்ணாடியை பிஞ்சுக் கரமொன்று கவனமாய்த் துடைத்துத் தூய்மைப்படுத்த, பின்னதன் மறுபக்கம் வெளிப்பட்டது  புன்னகைக்கும் சிறுவனின் பொன்முகம்.   ஆலமரத்தின் கிளைநுனிகள், கோணத்திற்கொன்றாய் திசையனைத்தும் வியாபித்திருப்பதைப் போன்று, சூரியனின் கிரணங்கள் கிஞ்சித்தும் பாகுபாடின்றி எண்திசையும் பாய்ந்தோடிப் பரவுதற்போன்று, அவன் பரட்டைத் தலைமயிர்க்கால்கள் முரட்டுத்தனமாய் அனைத்துப்பக்கமும் துளைத்துக் கொண்டிருந்தன.   மெதுவாய் சிரிக்கும் அவன் விழிகளின் ஆழத்துள் நுரைத்துத் தளும்பின சோகத்தின் சுமைகள்.   பட்டினிப் போரால் ... Read More »

தாய்மையின் சிறப்பு!!!

தாய்மையின் சிறப்பு!!!

இரவு 12 மணிக்கு சாலையில் ஓர் வாடகை கார் வேகமாகச் சென்று கொண்டிருந்தது. ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, அந்த காரை கையசைத்து நிறுத்தினார். “தம்பி ஆஸ்பத்திரி போகணும்” “நான் வரமுடியாது. சாப்பிட்டுட்டு, படுக்கப் போறேன்”. “என் மகளுக்கு பிரசவவலி வந்து விட்டது, தயவுசெய்து வரமாட்டேன்னு சொல்லிடாதேப்பா” என்றார் அப்பெண்மணி. “நீங்க இவ்வளவு சொல்றதாலே வர்றேன். 500 ரூபா ஆகும்” என்றான் அந்த கார் ஓட்டும் இளைஞன். அப்பெண்மணி 500 ரூபா என்ன 1000 ரூபாய் கேட்டால் ... Read More »

கருத்துகள் எல்லாம் தீர்ப்புகள் அல்ல

கருத்துகள் எல்லாம் தீர்ப்புகள் அல்ல

பெரும்பாலான மனிதர்கள் எதனுடைய மதிப்பையும் அடுத்தவர்களுடைய கருத்துகளை வைத்தே எடை போடுகிறார்கள். பலரும் ஒரு சாதாரண விஷயத்தை ஒஹோ என்று புகழ்ந்தால் அது உன்னதமாகத் தெரிகிறது. ஒரு உயர்ந்த விஷயத்தையும் பலரும் பரிகசித்தால் அது செல்லாக் காசாகி விடுகிறது. ஆனால் உண்மையான மதிப்பை பெரும்பாலானோரின் கருத்துகளை வைத்து எடை போடுவது சரியானதாக இருக்காது. ஏனென்றால் எல்லோரும் ஆழமாக அறிந்தே ஒன்றைப் பற்றிக் கருத்து கொள்ள வேண்டும் என்பது கட்டாயமில்லை. பெரும்பாலான மனிதர்கள் தங்கள் அறிவிற்கேற்பவே கருத்து கொள்கிறார்களே ... Read More »

Scroll To Top