ஒரு ஊரில் ஒரு தம்பதியினர் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது. அவள் பெயர் அனிதா. அவள் தாய் மீண்டும் கருவுற்றிருந்தாள். அவர்களுக்கு தெரியும் வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையாகத்தான் இருக்கும் என்று. பெற்றோர்கள் இருவரும் அனிதாவிடம் உனக்காக ஒரு தம்பி பாப்பா வரப் போகிறான், நீயும் அவனும் சேர்ந்து ஜாலியா விளையாடப்போறீங்க என்று சொல்லியே வளர்த்தார்கள். அனிதா அவள் அம்மா வயிற்றில் தினமும் கைகளால் தடவிக்கொண்டே டேய் தம்பி சீக்கிரம் வெளியே ... Read More »
Category Archives: சிறுகதைகள்
தன்வந்தரி பகவானன்!!!
January 5, 2017
தன்வந்தரி பகவானின் கதை என்ன ? தன்வந்தரி ஆயூர்வேத மருந்துகளின் அதிபதி. அவர் கதை என்ன ? அவர் ஒரு தேவர். தேவர்களும்அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து அமிருதத்தை எடுத்தபோது. ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு முதலில் அந்த கடலில் இருந்து எழுந்தவரே தன்வந்தரி. அவர் தன் கையில் அமிருத கலசத்தை எடுத்து வந்தார். வெளியில் வந்தவர் மகாவிஷ்ணுவை வணங்கி நின்றார். அவருக்கு அப்சா என விஷ்ணு பெயர்சூடினார். தன்வந்தரி விஷ்ணுவிடம் அமிருதத்தில் தேவர்களுக்கு இணையாக தன்னுடைய பாகத்தைத்தருமாறு கேட்டதற்கு விஷ்ணு கூறினார், ”நீ ... Read More »
மரம் நடு விழா!!!
January 4, 2017
‘ மரம் நடு விழா ‘ ஒரு ஊரில் நடைபெறுவதாக இருந்தது. இது சம்மந்தமாக அரசு மூன்று பேரை வேலைக்கு அமர்த்தியது.அவர்களதுவேலை…. முதலாவது நபர் … பத்தடி தூரத்துக்கு ஒன்றாக பள்ளம் தோண்ட வேண்டியது ஆகும். இரண்டாவது நபர்…அந்த பள்ளத்தில் ஒரு செடியை நட வேண்டும். மூன்றாவது நபர்…பள்ளத்தைமண் கொண்டு மூடவேண்டும். அவர்கள் இந்த வேலையை முதல் நாள் அந்த ஊரின்பத்து தெருக்களில் செய்து முடித்தனர். அடுத்த நாள் பத்து தெருக்கள் என ஏற்பாடு. அடுத்த நாள்.. ... Read More »
புத்திசாலித்தனம்!!!
January 3, 2017
விக்கிரமாதித்தன் கதை விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்கை மரத்தின் மீது ஏறிக்கொண்ட வேதாளத்தைப் பிடிக்கச் சென்று, பெரும் போராட்டத்திற்கு பிறகு வசமாகப் பிடித்துக் கொண்டான். தோளில் வேதாளத்தை சுமந்தபடி குகையை விட்டு நடக்கத் தொடங்கினான். அவனது பராக்கிரமத்தை பார்த்து வியந்தாலும் வேதாளம் தான் தப்பித்து கொள்வதற்கு வழி தேடிய வண்ணமே இருந்தது. அதனால் வேதாளம் மீண்டும் ஒரு கதையை விக்கிரமாதித்தனுக்குச் சொல்லத்துவங்கியது. விக்கிரமாதித்தா! உனக்கு ஒரு கதை சொல்கிறேன் கேள்! மஹாசேனன் என்ற அரசன் உஜ்ஜயனியை ஆண்டு வந்தான். ... Read More »
மேஜிக் வித்தைக்காரனை வெல்லுதல்!!!
January 2, 2017
டெல்லி மாநகரத்திலிருந்து ஒரு மேஜிக் வித்தைக்காரன் விஜய நகரத்துக்கு வந்திருந்தான். அவன் மேஜிக் செய்வதில் வல்லவன். அவன் அரண்மனையில் மன்னர் கிருஷ்ண தேவராயர் முன்னிலையில் கல்லைப் பொன்னாக்கினான். மண்ணை சர்க்கரை ஆக்கினான். மேலும் வெறும் தாளை ரூபாய் நோட்டுக்கள் ஆக்கினான். மேலும் அவன் தலையையே வெட்டி அவன் கைகளில் ஏந்தினான். இந்நிகழ்ச்சியைப் பார்த்த மன்னர் மகிழ்ந்தார். அப்போது மன்னரிடத்தில் “என்னை வெல்ல உங்கள் நாட்டில் யாரேனும் உண்டா …….” என்று சவால் விட்டான். இது மன்னருக்கு பெருத்த ... Read More »
நேரம் சரியில்லை!!!
January 2, 2017
நேரம் சரியில்லை இடி மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்தது.ஒரு கிராமத்தை நோக்கி வந்து கொண்டிருந்த மக்களில் பத்து பேர் மழைக்காக அருகில் இருந்த ஒரு பழைய கட்டிடத்தில் ஒதுங்கினார்கள். அவர்களில் ஒருவர் ஜோஷ்யர். அவர் சொன்னார்,”இங்குள்ளவர்களில் ஒருவருக்கு நேரம் சரியில்லை ஆகவே அவர் தலையில் சிறிது நேரத்தில் இடி விழப்போகிறது”. இதைக்கேட்டு அனைவருக்கும் பயமாகிவிட்டது,நேரம் சரியில்லாத ஒருவரால் அவ்வளவு பெரும் பாதிக்கப் படுவதா?அந்த ஆள யார் என்று எப்படிக் கண்டுபிடிப்பது? இறுதியில் ஒருவர் சொன்னார்,”இந்த வயதான கிழவன் ... Read More »
அச்சமின்மையே ஆரோக்கியம்…!!
January 1, 2017
அச்சமின்மையே ஆரோக்கியம்…!! அக்பரிடம் ஓர் அறிவாளி சவால் விட்டார். “என் வேலைக்காரன் பெருந்தீனிக்காரன்! அவனை ஒரு மாதம் வைத்திருந்து ஊட்டச்சத்துமிக்க உணவுகளைக் கொடுங்கள். அவன் வேலையோ உடற்பயிற்சியோ செய்யக்கூடாது. ஆனால் ஒரு கிலோகூட எடை கூடக் கூடாது!” அரசர் சார்பாக பீர்பால்அந்த சவாலை ஏற்றார். மூன்று வேளைகளும் மகத்தான விருந்து படைக்கப்பட்டது. மாதக்கடைசியில் எடையும் அப்படியே இருந்தது. அக்பருக்கு ஆச்சரியம். பீர்பால் சொன்னார், “அவனுடைய இரவுப்படுக்கையை சிங்கக்கூண்டுக்கு அருகே அமைத்தேன். கூண்டின் பூட்டு சரியாக இல்லை என்று ... Read More »
கோபம்!!!
January 1, 2017
”””’கோபம்”””” லின் சீ (Lin Chi) என்ற பிரபல ஜென் துறவிக்குச் சிறு வயதில் இருந்தே படகில் பிரயாணம் செய்வதில் மிகுந்த ஈடுபாடு. அவரிடம் ஒரு சிறு படகு இருந்தது. அருகில் இருந்த ஏரிக்குச் சென்று அந்தப் படகில் மணிக்கணக்கில் இருப்பார். பல சமயங்களில் கண்களை மூடித் தியானம் செய்வது கூட படகில் இருந்தபடி தான். ஒரு நாள் அவர் படகில் தியானம் செய்து கொண்டு இருந்த போது காலியான வேறொரு படகு காற்றின் போக்கில் மிதந்து ... Read More »
சூடான சூப்!!!
December 31, 2016
ஒரு தடவை முல்லா நண்பர்கள் பலருக்கு மத்தியில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார். நண்பர்கள் கூட்டத்தில் வெளியூரிலிருந்து வந்த சிலரும் இருந்தார்கள் . நண்பர்களில் ஒருவர் எழுந்த வெளியூரிலிருந்து வந்திருந்தவர்களுக்கு முல்லாவை அறிமுகப்படுத்தினர். முல்லாவைப் பற்றி அளவுக்க அதிகமாகப் பாராட்டிப் பேசிய நண்பர் முல்லாவுக்குத் தெரியாத விஷயமே உலகத்தில் இல்லை என்றார். அதைக் கேட்டு பிரமிப்பு அடைந்த வெளியூர் நண்பர்களில் ஒருவர் ” முல்லாவுக்கு குந்தீஷ் மொழி தெரியுமா?” என்று கேட்டார். முல்லாவுக்குக் குந்தீஷ் மொழி தெரியாது. அந்த ... Read More »
சூரியனா-சந்திரனா!!!
December 29, 2016
அறிஞர்கள் கூடியிருந்த ஒரு சபையில் மிகவும் பயனுடையது எது சூரியனா அல்லது சந்திரனா? என்பது குறித்துப் பட்டிமன்றம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. அங்கே பேசியவர்கள் பெரும்பான்மையினர் சந்திரனைவிட சூரியனால்தான் உலகத்திற்கு அதிகப் பயன் உண்டு என்ற கருத்தையே வலியுறுத்திப் பேசினர். அப்போது பேசியவர்களை நையாண்டி செய்து வேடிக்கை பார்க்க வேண்டும் என்று முல்லாவுக்குத் தோன்றியது. அவர் உடனே எழுந்து ” அறிஞர் பெருமக்களே, இங்கே நடந்த பட்டிமன்றம் தொடர்பாக எனது கருத்தைக் கூறலாமா?” என்று கேட்டார். இது ... Read More »