விக்கிரமாதித்தன் கதை சாப விமோசனம் தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் கீழேயிறங்கி, அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள்ளிருந்த வேதாளம், “மன்னா! இந்த உலகில் சில சோதிடர்கள் தங்களிடம் வரும் மக்களை பரிகாரம் என்ற பெயரில் பல இன்னல்களுக்கு ஆளாக்குகின்றனர். அப்படி யாரோ ஒரு சோதிடர் தான் உன்னையும் பரிகாரம் என்ற பெயரில் இவ்வாறு அலைய விட்டு ... Read More »
Category Archives: விக்ரமாதித்தன் கதைகள்
அபரஞ்சியிடமிருந்து தப்பித்த குருக்கள்!!!
August 16, 2016
விக்கிரமாதித்தன் கதை அபரஞ்சியிடமிருந்து தப்பித்த குருக்கள் முன்னொரு காலத்தில் உச்சினி மாகாளிபுரம் என்ற ஊரைத் தலைநகரமாகக் கொண்ட ஒரு ராஜ்ஜியத்தை விக்கிரமாதித்தன் என்ற வீரதீர பராக்கிரமம் பொருந்திய ராஜா ஆண்டு கொண்டிருந்தான். அவனுக்கு மதியூகம் மிகுந்த பட்டி என்ற மகா மந்திரி துணையாக இருந்தான். அவர்கள் இருவரும் நாடாறு மாதம், காடாறு மாதம் என்று தங்கள் ஆட்சிக்காலத்தைப் பிரித்து நாட்டை ஆண்டு வந்தார்கள். இப்படி இருக்கையில் அந்த ஊரில் உள்ள ஒரு கம்மாளனுக்கும் ராஜாவிற்கும் நட்பு உண்டாயிற்று. ... Read More »
வீரபாகுவின் நன்றி உணர்வு!!!
August 16, 2016
விக்கிரமாதித்தன் கதை வீரபாகுவின் நன்றி உணர்வு தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மரத்தில் ஏறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் கீழேயிறங்கி, அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள் இருந்த வேதாளம், “மன்னா! இரவு பகலாக இவ்வாறு காட்டிலும், மேட்டிலும் நடு நிசியில் திரியும் உன்னைக் கண்டு பரிதாபமாக இருக்கிறது. ஆனால் நீ தேடும் பொருள் உனக்குக் கிட்டும்போது, அதைக் கை நழுவ விட்டுவிடுவாயோ என்ற சந்தேகமும் எனக்குத் ... Read More »
பேசா மடந்தை பேசினாள்!!!
August 10, 2016
விக்கிரமாதித்தன் கதை பேசா மடந்தை பேசினாள்!!! உச்ஜயினி மாகாளிப் பட்டணத்தைச் சீரும் சிறப்புமாக விக்கிரமாதித்த மன்னன் ஆண்டு வந்த காலத்தில். பாடலிபுத்திர நகரில் பேரழகு வாய்ந்த இளவரசி ஒருத்தி இருந்தாள். தன் அரண்மனைக்குள் புகுந்து, யார் தன்னை மூன்று வார்த்தைகள் பேச வைக்கிறாரோ, அவரையே தான் திருமணம் செய்துகொள்வதாக அந்த அரசகுமாரி அறிவித்திருந்தாள். அதனால் அவள் பெயர் ‘போசா மடந்தை’ என்று வழங்கி வரலாயிற்று. பேசா மடந்தையை எப்படியாவது பேச வைத்து, அவளைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் ... Read More »
விக்கிரமாதித்தன் தலையை இரவல் வாங்கிய பட்டி!!!
August 9, 2016
விக்கிரமாதித்தன் கதை விக்கிரமாதித்தனும் பட்டியும் உஜ்ஜனிமாகாளிப்பட்டினத்தில் தங்கள் தேசத்தை நிர்மாணித்து அரசாண்டு வரும் வேளையில் நாடு மிகுந்த சுபிட்சமாயும் நாட்டு மக்கள் எல்லா வளங்களும் பெற்று சந்தோஷத்துடனும் இருந்தார்கள். நாட்டில் மாதம் மும்மாரி பெய்தது. புலியும் பசுவும் ஒரே துறையில் நீர் அருந்தின. கீரியும் பாம்பும் ஓடிப்பிடித்து விளையாடின. விக்கிரமாதித்தனும் நீதிநெறி தவறாமல் அரசாண்டு வந்தான். அவனுடைய புகழ் நாடு நகரமெங்கும் பிரசித்தி பெற்று விளங்கியது.இவ்வாறிருக்கும் நாளில் தேவலோகத்தில் ஒரு பிரச்னை உருவாயிற்று. தேவலோகத்தில் ரம்பை, மேனகை, ... Read More »
தலையும் உடலும்!!!
February 14, 2016
விக்கிரமாதித்தன் கதை தலையும் உடலும் விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்கை மரத்தின் மீது ஏறிக்கொண்ட வேதாளத்தைப் பிடிக்கச் சென்று, பெரும் போராட்டத்திற்கு பிறகு வசமாகப் பிடித்துக் கொண்டான். தோளில் வேதாளத்தை சுமந்தபடி குகையை விட்டு நடக்கத் தொடங்கினான். அவனது பராக்கிரமத்தை பார்த்து வியந்தாலும் வேதாளம் தான் தப்பித்து கொள்வதற்கு வழி தேடிய வண்ணமே இருந்தது. அதனால் வேதாளம் மீண்டும் ஒரு கதையை விக்கிரமாதித்தனுக்குச் சொல்லத்துவங்கியது. விக்கிரமாதித்தா! உனக்கு ஒரு கதை சொல்கிறேன் கேள்! முன்னொரு காலத்தில் பனாரஸ் நாட்டை ... Read More »