அந்த ஊரில் ஒரு வழக்கம் உண்டு யாராவது ஒருவர் நல்ல செய்தியொன்றைச் சொன்னால் அதற்காக அவர்களுக்கு பணம் வசூலித்து அன்பளிப்பாகக் கொடுப்பார்கள். அந்த வழக்கம் ஒருவிதமான மூடநம்பிக்கை என்பது முல்லாவின் கருத்து. அந்த மக்களுக்குப் புத்தி கற்பிக்க வேண்டும் என்று முல்லா கருதினார், ஒருநாள் அவர் சந்தை கூடும் இடத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்த ஒர் இடத்தில் நின்று கொண்டு ” அன்பார்ந்த பொதுமக்களே உங்களுக்குச் சொல்வதற்காக அருமையான நல்ல செய்தி ஒன்றை வைத்திருக்கிறேன் எனக்குப் ... Read More »
Category Archives: முல்லாவின் கதைகள்
யானைக்கு வந்த திருமண ஆசை
April 16, 2017
மன்னரின் யானையொன்று அண்டை அயல் நகரங்களுக்குச் சென்று பயிர்களை அழித்தும், மக்களில் பலரை நசுக்கிப் படுகாயப்படுத்தியும் அடிக்கடி பெருந்தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தது. இதுபற்றி பாதிக்கப்பட்ட சிலர் மன்னரிடம் முறையிட்ட போது மன்னர் அதனைப் பெரிய விஷயமாகக் கருதவில்லை. தன்னுடைய யானை மீது வீண் புகார்கள் கூறுவதாகச் சிலரைக் கடிந்தும் கொண்டார். அதனால் யானையின் அட்டகாசம் பற்றி மேற்கொண்டு முறையிட யாருக்கும் துணிச்சல் வரவில்லை. அவர்கள் முல்லாவைச் சந்திந்து மன்னரின் யானையால் தங்களுக்கு ஏற்படும் தொல்லைகளைப் பற்றி எடுத்துக்கூறி ... Read More »
தற்பெருமை!!!
April 8, 2017
ஒரு தடவை முல்லா ஒரு குளக்கரை ஒரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் இருந்த ஒரு கல் தடுக்கி குளத்தில் விழ அவருக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த ஒரு மனிதர் பாய்ந்து வந்து முல்லாவைக் குளத்தில் விழாமல் காப்பாற்றினார். முல்லா அவருக்கு நன்றி சொல்லிவிட்டுப் போய்விட்டார். ஆனால் முல்லாவைக் காப்பாற்றியவரோ சும்மா இருக்கவில்லை. முல்லாவை எந்த இடத்தில் யாருக்கு நடுவே சந்தித்தாலும் குளத்தில் விழ இருந்த முல்லாவை நான்தான் காப்பாற்றினேன் என்று சொல்ல தொடங்கிவிட்டார். அவருடைய ... Read More »
ரொட்டி என்றால் என்ன?
March 23, 2017
முல்லா நஸ்ருதீன் மன்னருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார், அது அரசுசவையில் இருந்த பலருக்கு பிடிக்கவில்லை. ஒருமுறை முல்லா ஒரு நண்பரின் திருமணத்திற்கு சென்ற போது பேச்சுவாக்கில் நாட்டில் உள்ள அறிஞர்கள் எல்லாம் குழப்பவாதிகள், எதையுமே உறுதியாக, தீர்மானமாகக் கூற இயலாதவர்கள் என்று சொன்னார். அதை அறிந்த முல்லாவின் எதிரிகள் மன்னரிடம் போய் “மன்னர் நீங்க அறிஞர்களை வைத்திருப்பதற்கு பதிலாக குழப்பவாதிகளை வைத்திருப்பதாகவும், சரியான முடிவு எடுக்கத் தெரியாமல் இருக்கும் அறிஞர்கள் பேச்சு கேட்பதாகவும் முல்லா சொல்லிக் கொண்டு ... Read More »
ஆட்டிப் படைத்த முல்லா!!!
February 15, 2017
ஒரு பணக்காரர் வீட்டில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு அறுசுவை விருந்து ஒன்று நடைபெற்று. விருந்தில் அந்த ஊர் பிரமுகர்கள் பலரும் சாப்பிட்டவாறு அரட்டையடித்துக் கொண்டிருந்தனர். விருந்துண்ணுவோர் கூட்டத்திலே முல்லாவும் இருந்தார். பிரமுகர்கள் ஒவ்வொருவரும் பொய்யும் புனை சுருட்டுமான நிகழ்ச்சிகளை தங்களுக்கு ஆதாரமாகக் கூறி தாங்கள் ஏதோ பெரிய சாகசக்காரர்கள் என்பது போல் தற்பெருமை பேசிக் கொண்டிருந்தனர். அவர்களுடைய தற்பெருமைத் தம்பட்டம் முல்லாவுக்கு விரசமாகவும் அருவெறுப்பாகவும் இருந்தது. அவர்களுக்குத் தக்க பாடம் ஒன்று கற்பிக்க வேண்டும் என்று ... Read More »
சூடான சூப்!!!
December 31, 2016
ஒரு தடவை முல்லா நண்பர்கள் பலருக்கு மத்தியில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார். நண்பர்கள் கூட்டத்தில் வெளியூரிலிருந்து வந்த சிலரும் இருந்தார்கள் . நண்பர்களில் ஒருவர் எழுந்த வெளியூரிலிருந்து வந்திருந்தவர்களுக்கு முல்லாவை அறிமுகப்படுத்தினர். முல்லாவைப் பற்றி அளவுக்க அதிகமாகப் பாராட்டிப் பேசிய நண்பர் முல்லாவுக்குத் தெரியாத விஷயமே உலகத்தில் இல்லை என்றார். அதைக் கேட்டு பிரமிப்பு அடைந்த வெளியூர் நண்பர்களில் ஒருவர் ” முல்லாவுக்கு குந்தீஷ் மொழி தெரியுமா?” என்று கேட்டார். முல்லாவுக்குக் குந்தீஷ் மொழி தெரியாது. அந்த ... Read More »
சூரியனா-சந்திரனா!!!
December 29, 2016
அறிஞர்கள் கூடியிருந்த ஒரு சபையில் மிகவும் பயனுடையது எது சூரியனா அல்லது சந்திரனா? என்பது குறித்துப் பட்டிமன்றம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. அங்கே பேசியவர்கள் பெரும்பான்மையினர் சந்திரனைவிட சூரியனால்தான் உலகத்திற்கு அதிகப் பயன் உண்டு என்ற கருத்தையே வலியுறுத்திப் பேசினர். அப்போது பேசியவர்களை நையாண்டி செய்து வேடிக்கை பார்க்க வேண்டும் என்று முல்லாவுக்குத் தோன்றியது. அவர் உடனே எழுந்து ” அறிஞர் பெருமக்களே, இங்கே நடந்த பட்டிமன்றம் தொடர்பாக எனது கருத்தைக் கூறலாமா?” என்று கேட்டார். இது ... Read More »
முல்லாவின் அறிவாற்றல்!!!
December 28, 2016
முல்லா நல்ல அறிவாளி என்றும் எவ்வளவு பெரிய ஆபத்து ஏற்பட்டாலும் தமது அறிவாற்றலினாலேயே அந்த ஆபத்திலிருந்து தப்பி விடுவார் என்றும் ஊரில் உள்ளவர்களில் பலர் கூறுவது மன்னரின் காதில் விழுந்தது. அவரது அறிவாற்றலைப் பரிசோதிப்பதற்காக மன்னர் ஒரு நாள் முல்லாவை தமது சபைக்கு வரவழைத்தார். முல்லா வந்து வணங்கி நின்றார். ” முல்லா உனது அறிவைப் பரிசோதனை செய்ய நினைக்கிறேன், நீங்கள் ஏதேனும் ஒன்றைக் கூறும், நீர் சொல்வது உண்மையாக இருந்தால் உமது தலை வெட்டப்படும், நீர் ... Read More »
மலிவான பொருள்!!!
December 27, 2016
ஓரு தடவை துருக்கி மன்னர் – காட்டுக்கு வேட்டையாடச் சென்றார். அவருடைய பரிவாரத்துடன் முல்லாவும் சென்றார். மன்னர் பரிவாரத்துடன் சமையல்காரர் குழு ஒன்றும் சென்றது. சமையல்கார குழுவின் தலைவன் காட்டில் கூடாரமடித்து சமையல் செய்வதற்கான ஏற்பாடுகளில் முனைந்தபோது அரண்மனையிலிருந்து உப்பு எடுத்து வர மறந்து விட்டது தெரிந்தது. சமையற்காரத் தலைவன் மன்னர் முன் சென்று அச்சத்தோடு தலை கவிழ்ந்து நின்றான். ” என்ன சமாச்சாரமஞ் என்று மன்னர் விசாரித்தார். சமையல் குழுத்தலைவன் நடுங்கிக்கொண்டே தான் உப்பு எடுத்து ... Read More »
முல்லாவின் கதை
December 17, 2016
முல்லா நஸ்ருதீன் மன்னருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார், அது அரசுசவையில் இருந்த பலருக்கு பிடிக்கவில்லை. ஒருமுறை முல்லா ஒரு நண்பரின் திருமணத்திற்கு சென்ற போது பேச்சுவாக்கில் நாட்டில் உள்ள அறிஞர்கள் எல்லாம் குழப்பவாதிகள், எதையுமே உறுதியாக, தீர்மானமாகக் கூற இயலாதவர்கள் என்று சொன்னார். அதை அறிந்த முல்லாவின் எதிரிகள் மன்னரிடம் போய் “மன்னர் நீங்க அறிஞர்களை வைத்திருப்பதற்கு பதிலாக குழப்பவாதிகளை வைத்திருப்பதாகவும், சரியான முடிவு எடுக்கத் தெரியாமல் இருக்கும் அறிஞர்கள் பேச்சு கேட்பதாகவும் முல்லா சொல்லிக் கொண்டு ... Read More »