அரச சபைக்கு தத்துவ ஞானி ஒருவர் வந்தார். தத்துவம் என்பதைப் பற்றி ஒரு சொற்பொழிவு நிகழ்த்திவிட்டு இறுதியில்,” நாம் கண்ணால் காண்பது, நாவினால் சுவைப்பது, மூக்கினால் நுகர்வது எல்லாமே நாம் அனுபவிப்பதாகத் தோன்றுமே தவிர, செய்யும் ஒவ்வொரு செயலும் பிரம்மையே தவிர உண்மையில் நாம் அப்படிச் செய்வதில்லை” என்று கூறி தத்துவ ஞானி என்பதற்கு ஏற்ப குழப்பமாகக் கூறி முடித்தார். அதனை சபையோர் ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பொறுமையோடு இதைக் கவனித்துக் கொண்டிருந்த தெனாலி ராமன் ... Read More »
Category Archives: தெனாலிராமன் கதைகள்
மேஜிக் வித்தைக்காரனை வெல்லுதல்!!!
January 2, 2017
டெல்லி மாநகரத்திலிருந்து ஒரு மேஜிக் வித்தைக்காரன் விஜய நகரத்துக்கு வந்திருந்தான். அவன் மேஜிக் செய்வதில் வல்லவன். அவன் அரண்மனையில் மன்னர் கிருஷ்ண தேவராயர் முன்னிலையில் கல்லைப் பொன்னாக்கினான். மண்ணை சர்க்கரை ஆக்கினான். மேலும் வெறும் தாளை ரூபாய் நோட்டுக்கள் ஆக்கினான். மேலும் அவன் தலையையே வெட்டி அவன் கைகளில் ஏந்தினான். இந்நிகழ்ச்சியைப் பார்த்த மன்னர் மகிழ்ந்தார். அப்போது மன்னரிடத்தில் “என்னை வெல்ல உங்கள் நாட்டில் யாரேனும் உண்டா …….” என்று சவால் விட்டான். இது மன்னருக்கு பெருத்த ... Read More »
குதிரையை விற்றுப் பணம்!!!
July 29, 2016
ஒரு சமயம் தெனாலிராமனுக்கு உடல் நலம் மோசமாகி விட்டது. வைத்தியரும் வந்து பார்த்தார். வைத்திய செலவு நிறைய ஆகும் என்று சொல்லி விட்டுப் போய் விட்டார். வைத்திய செலவுக்கு தெனாலிராமனிடம் பணம் இல்லை. ஆகையால் அவ்வூரில் வட்டிக்கொடுக்கும் சேட்டை அணுகினான். அதற்கு சேட்டும் “பணத்தை எப்போது திருப்பிக்கொடுப்பாய்” என்று கேட்டார். தெனாலிராமனும் உயர் ஜாதி அரேபியக் குதிரை வைத்திருந்தான். நல்ல விலை போகும் அதனால் உடல் நலம் தேறியதும் குதிரையை விற்றுப் பணம் தருவதாகச் சொன்னான். அவன் ... Read More »
அரசியின் கொட்டாவி!!!
May 28, 2016
(தெனாலி ராமன் கதைகள்) திருமலாம்பாள் என்ற அம்மையார் கிருஷ்ண தேவராயர் துணைவியருள் ஒருவர். அவர் அடிக்கடி கொட்டாவி விட்டுக்கொண்டே இருப்பார். அது பழக்கமாகி விட்டது. ஆனால் அரசருக்கோ அது பிடிக்கவில்லை. அன்றிரவு அரசர் ஆசையோடு நெருங்கிச் சென்ற போதும் அவள் கொட்டாவி விட்டுக் கொண்டே இருந்தாள். அப்போது அவள் முகத்தைப் பார்க்கவே மன்னருக்குப் பிடிக்கவில்லை. அன்றிலிருந்து அவளிருக்கும் பக்கம் செல்வதையே மன்னர் தவிர்த்து வந்தார்.அம்மயாருக்கு இது மிகுந்த வேதனையைத் தந்தது. மிகவும் வருத்தத்துடன் இருந்த அம்மையாரைப் பார்த்த ... Read More »
தெனாலி ராமன் கதை: வாய்கொப்பளிக்க தண்ணீர்!!!
April 23, 2016
தெனாலி ராமன் இரவில்படுக்க போகும் முன் திருடன் ஒருவன் தோட்டத்தில் புதரில் மறைந்துருப்பதை பார்த்துவிடுகிறான்… திருடன் என்று கத்தினால் நிச்சயம் மற்றவர்கள் பிடிப்பதற்குள் ஒடிவிடுவான்… தனிப்பட்ட முறையில் தெனாலிராமனால் முடியாது… மனைவியை கூப்பிட்டு வாய்கொப்பளிக்க தண்ணீர் கேட்கிறான்.. சொம்பு சொம்பாக வந்து கொடுக்கிறாள். புதரில் மறைந்து இருக்கும் திருடன் மீது கொப்பளிக்கிறான்.. ”என்னது..எவ்வளவு தண்ணீர் வந்து கொடுப்பது நிறுத்தமாட்டியா.”.கத்துகிறாள் மனைவி. ”என்னது எதிர்த்தா பேசுகிறாய்.”அவள் மேல் துப்புகிறான் ”என்னது கேட்பதுற்க்கு ஆளில்லையா..”அலற துவங்குகிறாள் மனைவி.. தெனாலி ராமன் ... Read More »
தெனாலிராமன் குதிரை!!!
April 16, 2016
கிருஷ்ண தேவராயரின் படைகளுள் குதிரைப் படையும் ஒன்று. குதிரைப்படையும் வலிமையுள்ளதாக இருந்தது சண்டை இல்லாத காலங்களில் குதிரைகளைப் பராமரிக்க மந்திரிகளில் ஒருவர் ஒரு யோசனை சொன்னர். அதாவது ஒரு வீட்டிற்கு ஒரு குதைரையையும் அதற்குத் தீனி போடுவதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையும் கொடுக்கப்பட்டு வந்தது. அத்தொகையைப் பெற்றுக்கொண்டு குதிரையை நன்கு ஊட்டளித்து வளர்த்தனர். அதே போல் தெனாலிராமனுக்கும் ஒரு குதிரை கொடுக்கப்பட்டது. ஆனால் தெனாலிராமனோ ஒரு சிறிய கொட்டகையில் குதிரையை அடைத்து வைத்து புல் போடுவதற்கு மட்டுமே ... Read More »
காலை வெட்டிய வீரம்!!!
April 15, 2016
ஒரு நாள் மாலை நேரம் அரண்மனை தோட்டத்தில் அரசரும் பெரிய தனவந்தர்களும் படைத் தளபதிகளும் கூடி இருந்தனர். ஒவ்வொருவரும் அவர்கள் சண்டையில் செய்த வீர தீரச் செயல்கள் பற்றி பேசிப் பெருமைபட்டுக் கொண்டிருந்தனர் . அப்போது தெனாலி ராமனும் அங்கு இருந்தான் . அவர்கள் பேச்சையும் கேட்டுக் கொண்டு இருந்தான் . அவர்கள் பேச்சு அவனுக்கு பிடிக்கவில்லை. போங்கள் அய்யா , நீங்கள் எல்லாம் என்ன பிரமாதமாக சாதித்து விட்டீர்கள் . நானும் போர்களம் சென்று இருக்கிறேன் ... Read More »
வாதுக்கு வந்த பண்டிதர்!!!
April 14, 2016
பெயர் பெற்ற ஒரிய நாட்டுப் பண்டிதர் ஒருநாள் “திடுதிடுப்” பென்று விஜயநகரம் வந்து சேர்ந்தார். நேரே அரண்மனைக்குச் சென்றார். அரண்மனை முன்வாசலில் கட்டியிருந்த அந்தப் பெரிய வெண்கல மணியை அடிக்கத் தொடங்கினார். விஜயநகரப் பேரரசின் பண்டிதர்களை வாதுக்கு இழுக்கும் அறிகுறி அல்லவா அது! அந்த மணி ஓசை கேட்டு அரசர் கிருஷ்ணதேவராயர் திடுக்கிட்டார். உடனே ஒரிய நாட்டுப் பண்டிதரை வாதுக்கு இழுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்! அப்பொழுது அரண்மனைப் பண்டிதர்களுக்கு ஆள் அனுப்பினார். அவர்களை உடனே அந்த ... Read More »
தாய்மொழியைக் கண்டுபிடித்த தெனாலிராமன்!!!
April 11, 2016
கிருஷ்ணதேவராயர் அரசவைக்கு ஒரு பன்மொழிப் புலவர் வந்தார். “உங்கள் அரசவையில் யாரேனும் என் தாய்மொழியைக் கண்டுபிடித்துச் சொல்ல முடியுமா?” என்று சவால் விட்டார். இராயர் அரசவையிலிருந்த அஷ்டதிக் கஜங்கள் எனப்பட்ட எட்டு பெரும் புலவர்களும் பல்வேறு மொழிகளில் அவரிடம் கேள்விகள் கேட்டனர். அவரும் அவரவர் கேட்ட மொழிகளில் தெளிவாகப் பதிலளித்தார். சப்ததிக் கஜங்கள் தோல்வி கண்டு தலைகுனிந்தனர். இராயர் அரசவையை ஏளனமாகப் பார்த்தார் அப் பன்மொழிப் புலவர். “அப்புலவனின் தாய்மொழியை நான் கண்டறிந்து நாளை அரசவையில் தெரிவிக்கிறேன்” என்றான் தெனாலிராமன். அரைகுறை நம்பிக்கையோடு ஒப்புக் கொண்ட ... Read More »
தெனாலிராமன் கேட்ட தண்டனை!!!
April 10, 2016
தெனாலிராமன் இராயரின் சபையில் பல வேடிக்கைகளைச் செய்தபடி இன்பமாக வாழ்ந்து வந்தான். ஒரு சமயம் இராயரிடம் பகை கொண்ட ஒருவன் அவரைக் கொல்ல ஒரு சதிகாரனை அனுப்பினான். சதிகாரனும் தெனாலிராமனின் உறவினன் என்று சொல்லிக் கொண்டு அவனது வீட்டில் தங்கியிருந்தான். ஒரு நாள் தெனாலிராமன் இல்லாத சமயம் பார்த்து அந்த சதிகாரன் இராயருக்குக் கடிதம் ஒன்று எழுதினான். அதில் அரசர் உடனே தன் வீட்டுக்கு வந்தால் அதிசயம் ஒன்றைக் காட்டுவதாக எழுதி தெனாலிராமன் என்று கையொப்பமிட்டு அனுப்பினான். ... Read More »