மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மைகண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல் போல பரந்து விரிந்த ஏரி. ஆங்காங்கே மலைகள். பசுமையாக குட்டி குட்டியாக தீவுகள். சுற்றுலா பயணிகளை கவரும் சுவாரஸ்யம் ஏராளம் என்றாலும், அங்கு போகும் மனிதர்கள் திடீரென மாயமாகி விடுகிறார்கள். இந்த மர்ம தீவு பற்றிய விஷயங்கள் திகிலூட்டுகின்றன. உலகிலேயே மிகப்பெரிய பாலைவனக் கடல் என்று பெயர் பெற்ற துர்கானா ஏரி கென்யாவில் உள்ளது. ருடால்ப் ஏரி என்று ஒரு காலத்தில் ... Read More »
Category Archives: அதிசயம் ஆனால் உண்மை
வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் – 8
January 10, 2015
‘அசாஸின்’ஸ் க்ரீட்: ரெவலேஷன்ஸ்’ (Assassin’s Creed: Revelations) கேமில், அட்மிரல் பிரி ரேய்ஸ் (Admiral Piri Reis) என்பவர் ஒரு கதாபாத்திரம். அந்தக் கதை நடக்கும் காலகட்டம்: கி.பி பதினாறாம் நூற்றாண்டு. ஹீரோ எஸியோ, தனது பணிக்காக கான்ஸ்டான்ட்டிநோப்லி நகருக்கு வருகையில் அவரை சந்திக்கும் பிரி ரேய்ஸ், தனது அனுபவத்தினால் குண்டுகள் தயாரிக்கும் வழிமுறைகளை எஸியோவுக்கு சொல்லிக்கொடுக்கிறார். கான்ஸ்டான்ட்டிநோப்லி என்பது தற்போதைய இரான். ஒட்டோமன் சாம்ராஜ்யத்தைப் பற்றி பள்ளியில் சரித்திரப் பாடத்தில் படித்திருக்கிறோம் அல்லவா? துருக்கியை தலைநகராகக் ... Read More »
இறந்த பின் எங்கு செல்கிறோம்? – 24
January 10, 2015
ஆவிகளுடன் பூவுலக மனிதர்களால் தொடர்பு வைக்கமுடியும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நாம் அழைக்கும் ஆவிதான் உண்மையில் எங்களுடன் வந்து பேசுகிறது என்பதும், நமது கேள்விகளுக்கு அவைகள் தரும் விடைகள் உண்மையானவை தான் என்பதும் கேள்விக்குறிகளாகவே இருக்கின்றன. மேற்கு நாடுகளில் தான் ஆவிகளுடன் தொடர்பு கொள்பவர்கள் கூடுதலாகக் காணப்படுகிறார்கள். இதறக்கென்றே குழுக்கள் அமைத்துக் கொண்டு செயல்படுகிறார்கள். “மீடியம்” களாக செயல்படுவதை தொழிலாக ஏற்றுள்ளவர்களும் இருக்கிறார்கள். “மீடியம்” ஆக செயல்படுபவரின் மனமும் உடலும் ஆவியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன் அவர் தன் ... Read More »
காகிதம் (பேப்பர்) பிறந்த கதை
January 9, 2015
காகிதம் (பேப்பர்) பிறந்த கதை – காகிதம் உருவான வரலாறு – History of paper making. எழுத்துக்கள் எப்படி தோன்றியிருக்கும் என்று எப்போதாவது சிந்தித்து பார்த்ததுண்டா நண்பர்களே., மனிதர்களின் நினைவாற்றலின் வலிமை ஒரு குறிப்பிட்ட எல்லையை கொண்டது, அதாவது மனிதனால் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு அனைத்து விசயங்களையும் நினைவில் வைத்துக்கொள்ள முடியாது. அந்த நினைவாற்றலின் எல்லையை தாண்டியும் சில தகவல்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்ட போது தோன்றியது தான் எழுத்து. அன்றைய அரசாங்கத்தின் ... Read More »
அகோரிகள் என்பவர்கள் யார்? – சில உண்மைகள் – 3
January 9, 2015
“நான் வங்காளத்தை ஆண்ட மன்னன், நான் இறந்த பிறகு எனது ஆட்சியை எனது மகனுக்கு கொடுக்காமல் எனது மைத்துனன் எடுத்து கொண்டான். பிரிடீஷ் வைஸ்ராய் இதில் தலையிட்டு நீதி வழங்க வேண்டும்” விசித்திரமான இந்த வழக்கை கண்டு நீதிபதி குழம்பினார். தான் இறந்துவிடேன் என சொல்லும் அரசன் உயிருடன் இருக்கிறான் என்றால் யாருக்கு தான் குழப்பம் வராது. நடந்தது இது தான்… வங்க தேசத்தின் கிழக்கு பகுதியை ஆண்டு வந்த அரசன் (ஜமீந்தார், குறுநில மன்னன் என்றும் சொல்லலாம்) சில ... Read More »
வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் – 7
January 9, 2015
1968ல் ஆர்தர் ஸி க்ளார்க்கின் கதை ஒன்றை மையமாக வைத்து அட்டகாசமான திரைப்படம் வெளியானது. அந்தத் திரைப்படத்தில், அக்காலத்திலேயே விஷுவல் எஃபக்ட்களில் விளையாடியிருந்தார் அதன் இயக்குநர். தனது திரைவாழ்வில், ஏற்கெனவே எடுத்த ஒரு திரைப்படத்தைப் போல் அடுத்த படத்தை எடுக்காமல், ஒவ்வொரு படத்தையும் முற்றிலும் வித்தியாசமான களனில் எடுத்து (ஒவ்வொரு ஷாட்டையும் செதுக்கியிருப்பார் என்பதே சரியான விவரிப்பு), இறக்கும் வரை எவராலும் விஞ்ச முடியாமல், இறந்தபின்னும் அவரது அற்புதமான – பிரம்மாண்டமான – அட்டகாசமான படங்களின் மூலம் ... Read More »
பயிர் வட்டம் (Crop Circle) – 10
January 9, 2015
இந்தத் தொடர் பத்தாவது அத்தியாயத்தில் காலடியெடுத்து வைக்கிறது. தொடரில் இதுவரை சொல்லப்பட்டவற்றை நீங்கள் என்ன விதத்தில், எந்தக் கோணத்தில் மனதில் உள்வாங்கிக் கொண்டீர்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் பேய்க்கதைகள் கேட்பது போல மர்மத்தையும், திகிலையும் மட்டும் எதிர்பார்த்து, இதை வாசித்திருப்பீர்களானால், நான் மாபெரும் தோல்வியுற்றவனாவேன். பேய்கள் போன்று பகுத்தறிவுக்கேஒத்துவராதவற்றைப் பார்த்ததாகச் சிலர் தலையிலடித்துச் சத்தியம் செய்வது போல, இவற்றையும் ஒரு மூடநம்பிக்கையாக நான் உங்களுக்குள் விதைக்கப் பார்க்கிறேன் என்று வாசிப்பவர்கள் யாராவது நினைத்தாலும், எனது நோக்கம் தோல்வியடைந்துவிடும். சிலர் ஒருபடி மேலே போய், “ஏலியனா! இதென்ன பைத்தியக்காரத்தனம்? ஏலியனும் இல்லை. பறக்கும்தட்டும் இல்லை. எல்லாமே ஏமாத்து வேலை” என்று ஏளனம் செய்வார்கள். ஒன்றை மட்டும் சொல்லிவிடுகிறேன். மூடநம்பிக்கைகளை எதிர்ப்பவர்களில் நான் யாருக்கும் ... Read More »
இறந்த பின் எங்கு செல்கிறோம்? – 23
January 9, 2015
டாக்டர் ஆப்ரஹம் கோவூர் போன்ற பகுத்தறிவுவாதிகள் எக்காலத்திலும் எல்லா நாடுகளிலும் இருந்திருக்கிறார்கள். எவ்வளவுதான் இப்பகுத்தறிவுவாதிகள் தெய்வங்கள், தேவதைகள்,பேய்கள், பிசாசுகள், ஆவிகள் எல்லாம் வெறும் கற்பனைகள் என்று அடித்துக் கூறினாலும், அவர்களுடைய விவாதங்களை ஏற்றுக் கொண்டவர்கள் வெகுசிலரே. மக்கள் இவைகளில் கொண்டுள்ள நம்பிக்கைகள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகக் கைவிடப்படாமல் தொடர்ந்து வந்திருக்கின்றன. கனிப்பொருளிலிருந்து பரிணாம வளர்ச்சியடைந்து மனித உருவை எய்திய மனிதன் வேறுவகைகளிலும் பரிணமித்து இயற்கை ஆவி உருக்களாக (Nature Spirits) தோற்றம் பெற்ற உயிரினங்களும் இருக்கின்றன. இயற்கையின் ... Read More »
அகோரிகள் என்பவர்கள் யார்? – சில உண்மைகள் – 2
January 8, 2015
அகோராத்ரா என்றால் காலம் என அர்த்தம். இவ்வார்த்தையிலிந்து தான் ஹோரை எனும் தமிழ் சொல்லும், ஹவர் எனும் ஆங்கில சொல்லும் வந்ததாக ஓரு பேச்சு உண்டு. இவர்களை அஹோராத்ரத்தை கடந்ததால் அஹோரிகள் எனவும் சொல்லலாம். காலத்தை கடந்த நிலையில் இருப்பதால் இவ்வகை யோகிகள் காலபைரவ அம்சமாக வணங்கப்படுகிறார்கள். ஸ்வாமிகள் என்பவர்கள் ஆன்மாவை உணர்ந்தவர்கள், யோகிகள் என்பவர்கள் இறைநிலையில் இரண்டர கலந்தவர்கள், ஞானிகள் என்பவர்கள் இறைவனாகவேஇருப்பவர்கள் என எளிமையாக விளக்கினாலும் உள்நிலையில் ஆன்மீகவாதி எப்படிபட்டவன் என கூறுவது கடினம். ... Read More »
வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் – 6
January 8, 2015
அத்தியாயம் 4 – திரைப்படங்களில் ஏலியன்கள் ஏலியன்கள் என்ற விஷயமே யாருடைய கவனத்தையும் எளிதில் கவர்ந்துவிடுவதாக இருக்கிறது அல்லவா? திரைப்படத்துறைக்கு இது ஒரு ஜாக்பாட். விஷுவல் மீடியத்தில் இப்படிப்பட்ட ஏலியன்களையும் அவர்களது உலகையும் மிக எளிதில் சித்தரித்துவிடலாம் என்பது ஒரு பெரிய ப்ளஸ் பாயின்ட். திரைப்படத்துறை ஏலியன்களை கையில் எடுப்பதற்கு முன்னரே, Science Fiction என்ற ஜானரில் எப்போதோ ஏலியன்களைப் பற்றி(யும்) எழுதிவிட்டனர் எழுத்தாளர்கள். குறிப்பாக எனக்கு மிகப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவரான H.G Wells. எனது ... Read More »