Home » அதிசயம் ஆனால் உண்மை (page 9)

Category Archives: அதிசயம் ஆனால் உண்மை

ஒரு நகரத்தின் கதை – 11

ஒரு நகரத்தின் கதை – 11

பத்து வாரங்களாக ராஃபிள்ஸ் கதையுடன் நகரத்தின் கதை இணைந்திருந்தது. இனி இந்த நகரத்தை அழகாக உருவாக்கிய ஒரு மனிதரின் கதையை இணைப்போம். பொதுவாகவே பிரிட்டிஷ்காரர்கள் தாங்கள் காலனிகளை அமைத்த நாடுகளில் தங்களுக்குத் தேவையான கட்டடங்களைக் கட்டுவதற்கு இராணுவக் கட்டட பொறியியலாளர்களின் உதவியை நாடுவார்கள். அவர்கள் அழகியல் உணர்வும் எந்தக் கலை நுட்பங்களும் இல்லாமல் ராணுவ பேரக்ஸ் என்று அழைக்கப்படும் படை வீரர்கள் தங்குவதற்காக அமைக்கப்படும் எளிமையான கட்டடங்களைக் கட்டுவார்கள் .அதே போன்ற கட்டடங்களை மற்ற தேவைகளுக்கும், அரசாங்கப் ... Read More »

ஒரு நகரத்தின் கதை – 10

ஒரு நகரத்தின் கதை – 10

ராஃபிள்ஸ் இறுதியாக பென்கூலனை விட்டு இங்கிலாந்து திரும்புவதற்கு ஃபேம்(FAME) என்ற கப்பலில் தன் பயணத்தைத் தொடங்கினார். ஆனால் கப்பல் கிளம்பி ஒரு நாளிலேயே கப்பலில் தீப்பற்றிக் கொண்டது. கப்பல் ஊழியர்களும், பயணிகளும் உயிர்காப்புப் படகுகளில் ஏறித் தப்பித்து மீண்டும் பென்கூலனுக்குத் திரும்பினார்கள். இப்படி தான் ஆவலுடன் எதிர்பார்த்தப் பயணம் தொடக்கத்திலேயே முடிந்து போனதில் ஓரளவு வருத்தம் அடைந்தாலும் அவரது மற்றொரு சோகம் அந்தக் கப்பலில் எரிந்து போன அவரது உயிரியல் சேகரிப்புகள். பல அரிதான தாவர வகைகள், ... Read More »

ஒரு நகரத்தின் கதை – 9

ஒரு நகரத்தின் கதை – 9

சர் ஸ்டாம்ஃபோர்ட் ராபிள்ஸும் அவர் மனைவி சோஃபியாவும் மீண்டும் சிங்கப்பூருக்கு 1822 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி வந்து சேர்ந்தனர். சிங்கப்பூர் துறைமுகம் வணிகக் கப்பல்களால் நிறைந்திருந்தது. மிக பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது. சயாம்(இன்றைய தாய்லாந்து) இந்தியா, அரேபியா, ஐரோப்பா, அரேபியா போன்ற நாடுகளிலிருந்து வந்த வணிகர்கள் சிங்கப்பூரில் தங்கியிருந்தனர். அன்றிலிருந்து கிட்டத்தட்ட மூன்று நான்கு ஆண்டுகள் முன்பு வரை சிறு கடற்கரை கிராமமாக எந்தவித சந்தடியும் இல்லாமல் அவ்வப்போது கடற்கொள்ளையர்கள் மட்டும் வந்து ... Read More »

ஒரு நகரத்தின் கதை – 8

ஒரு நகரத்தின் கதை – 8

ராஃபிள்ஸுக்கு இங்கிலாந்து சமூகம் மற்றும் அறிவியல் உலகத்தில் மாபெரும் வெற்றிகள் காத்திருந்தன. பெரும் மதிப்பிற்குரிய ராயல் சொசைட்டி என்ற அமைப்பின் அங்கத்தினர் ஆக்கப்பட்டார் (fellow of Royal society). தேசிய கலைகள் காட்சி கூடத்தில் அவரது உருவப்படம் இடம் பெற்றது. இங்கிலாந்தில் தங்கியிருந்த காலத்தில் இரண்டு பாகங்களைக் கொண்ட ‘ஜாவாவின் சரித்திரம்’ என்ற புத்தகத்தை எழுதி முடித்தார். ஜாவாவில் அவர் தங்கியிருந்த காலங்களின் வரலாற்றுச் சின்னமாக அந்தப் புத்தகம் பெருத்த வரவேற்பு பெற்றது. இதன் பலனாக ராஃபிள்ஸ்ஸுக்கு ... Read More »

ஒரு நகரத்தின் கதை – 7

ஒரு நகரத்தின் கதை – 7

மனைவி இறந்த சோகத்தில் மூழ்கி இருந்த ராஃபிள்ஸ் மெல்ல தன் பழைய நிலைக்குத் திரும்பினார். மனதில் புது உற்சாகத்துடன், உடலும் தேறியவுடன் இந்தோனேசிய நாட்டில் தன் முழுக் கவனத்தைச் செலுத்தினார். புட்டென்சோர்க் நகரத்தின் அருகிலுள்ள கிட்டத்தட்ட 7,000 அடி உயரமுள்ள குனாங்க் கெடே சிகரத்திற்குத் தன் நண்பர்களுடன் மலையேறினார். முதன் முதலில்  சிகரத்தின் உயரத்தை அளவிட முயன்று வெற்றி அடைந்தார். இந்தச் சிகரத்தின் உயரத்தை அளந்த வெற்றி இன்னும் மேலும் பல வெற்றிகளை அடைய வழி வகுத்தது. ... Read More »

ஒரு நகரத்தின் கதை – 6

ஒரு நகரத்தின் கதை – 6

இன்றைய சிங்கப்பூரில் வெளிநாட்டிலிருந்து வந்து வேலை பார்ப்பவர்களை மூன்று வகைப்படுத்தி அவர்கள் இங்கே தங்கியிருந்து வேலை  பார்ப்பதற்கு பலவகையான அனுமதி சீட்டுகளை வழங்குகிறது சிங்கப்பூர் அரசாங்கம். வேலை அனுமதிச் சீட்டுப் பெற்று சிங்கப்பூரில் குடும்பத்துடன் தங்கி நிரந்தரவாசியாகி பின்னர் குடியுரிமை பெற்று வாழ்பவர்கள்  ஒருபுறம் இருக்க, கட்டுமானப் பணியில் இருக்கும் தொழிலாளிகள், வீட்டு வேலைக்கு வரும் பணிப்பெண்கள், உணவகங்களில் சமையல் வேலை செய்பவர்கள், துப்புரவுத் தொழிலாளிகள், வேலையாட்கள் போன்றவர்களும் வெளிநாட்டிலிருந்து வருபவர்களே! ஆனால் இவர்களுக்குக் குறைந்த ஊதியம், ... Read More »

ஒரு நகரத்தின் கதை – 5

ஒரு நகரத்தின் கதை – 5

பினாங்கு வந்து சேர்ந்ததும் உதவிச் செயலாளராக இருந்த ராஃபிள்ஸ் தலைமைச் செயலாளராகப் பதவி உயர்வுப் பெற்றார். கூடவே மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றத் தொடங்கினார். பினாங்கு நகரை ஆங்கிலேயர்கள் கற்பனை செய்தது போல் அவ்வளவு எளிதாக த் தங்கள் வசதிக்கேற்றாற் போல் மாற்றியமைக்க முடியவில்லை. பினாங்கின் சூழல், பருவ நிலை எதுவுமே ஆங்கிலேய துரைகளுக்கும், கனவான்களுக்கும் ஒத்துக் கொள்ளவில்லை. ஏராளமான இயற்கை வளங்கள், பச்சைப் பசேல் காடுகள், நிறைய மழை, இவற்றோடு மலேரியா பரப்பும் கொசுக்களினால் மலேரியா காய்ச்சல், அதிக ... Read More »

ஒரு நகரத்தின் கதை – 4

ஒரு நகரத்தின் கதை – 4

ராஃபிள்ஸ் ஒரு தேர்ந்த ராஜதந்திரி போல் செயல்பட்டு சிங்கப்பூர் தீவில் தன் நாட்டுக் கொடியைப் பறக்க விட்டார். ஆனால் ராஃபிள்ஸ் தன்னை ஒரு சாமர்த்தியமிக்க அரசியல்வாதியாகவோ அல்லது பதவி மோகம் கொண்ட ஆளுநராகவோ மட்டும் தன்னைக் காட்டிக் கொள்ளவில்லை. அவர் மிகச்சிறந்த உயிரியலாளராக இருப்பதை மிகவும் விரும்பினார். மனிதநேயமிக்க அவரது மற்றொரு முகமும் சரித்திரத்தில் பதிவாகியிருக்கிறது. அவரது சமகால மாமனிதர்களான வில்லியம் பிட் இளையவர், நெப்போலியன், நெல்சன், வெலிங்டன் போன்றவர்களின் பெயர்களோடு நாம் ராஃபிள்ஸ் பெயரையும் இணைக்கலாம் ... Read More »

ஒரு நகரத்தின் கதை – 3

ஒரு நகரத்தின் கதை – 3

சிங்கப்பூரைக் குத்தகைக்கு வாங்குவதற்கு முன்னால் சிங்கப்பூர் டச்சு காலனியாக இருக்கிறதா என்று விசாரித்து விட்டுப் பின்னர்தான் வாங்கினார். ஹாலந்து என்று அழைக்கப்படும் நெதர்லாண்ட் நாட்டைச் சேர்ந்தவர்கள் டச்சுக்காரர்கள். ஐரோப்பாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு, குறிப்பாக ஆசிய நாடுகளில் தங்கள் வர்த்தகம் மற்றும் அரசியல் ஆளுமைகளை நிறுவியவர்கள் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமில்லை. பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல், நெதர்லாண்ட்ஸ், இத்தாலி  போன்ற நாடுகளும் தங்கள்  காலனிகளை உலகமெங்கும் நிறுவினார்கள். இதில் யார் எந்த  நாட்டில்  காலனி அமைத்தாலும் ஐரோப்பாவில் அந்த ... Read More »

ஒரு நகரத்தின் கதை – 2

ஒரு நகரத்தின் கதை – 2

அக்கால கடலோடிகள் தாங்கள் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்த நாட்டிற்கு இவர்களாக முயன்று ஒரு கடல் வழிப் பாதை கண்டுபிடித்துச் சென்றடைந்தனர். கொலம்பஸ் இந்தியாவுக்கும் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் கடல் வழியே செல்வதற்கு ஒரு புதிய பாதை கண்டுபிடிக்க முயன்று அமெரிக்காவை அடைந்தார். அந்தப் புதிய பூமியை அவர் தான் சாகும் வரை ஆசிய கண்டத்தின் ஒரு பகுதியாகவே, ஆசியாவின் கிழக்குப் பகுதி என்று நினைத்திருந்தார். அங்கே ஏற்கனவே வாழ்ந்து கொண்டிருந்த பழங்குடியினர் சற்று செந்நிறமாக இருந்ததால் சிவப்பிந்தியர்கள் ... Read More »

Scroll To Top