Home » அதிசயம் ஆனால் உண்மை (page 83)

Category Archives: அதிசயம் ஆனால் உண்மை

அமானுஷ்யன் – 7

ஆனந்த் ஆச்சார்யாவின் கொலை வழக்கு சம்பந்தமாக சேகரித்திருந்த எல்லா பத்திரிகைக் குறிப்புகளையும் படித்து முடித்தான். படித்த எதிலும் பெரிய உபயோகமான தகவல்கள் இருக்கவில்லை. அவன் கடிகாரத்தைப் பார்த்தான். மணி ஒன்பதரை. அம்மாவுக்கு ஃபோன் செய்ய வேண்டிய நேரம்…. செல்லை அழுத்தினான். “ஹலோ” சாரதாவின் குரல் களைப்புடன் இருந்தது. “நான் ஆனந்த் பேசறேன்ம்மா. ஏன் உன் குரல் களைப்பாய் கேட்கிறது?” “அப்படியொண்ணும் இல்லைப்பா. உனக்கு ஓட்டல் ரூம் எல்லாம் சௌகரியமாய் இருக்கா?” “இது ஸ்டார் ஓட்டல்ம்மா. நல்லாவே சௌகரியமாய் ... Read More »

அமானுஷ்யன் – 6

அவன் நன்றாக ஓய்வு எடுத்துக் கொண்டான். நிறைய நேரம் தூங்கினான். ஆனால் அவன் விழித்திருக்கும் பொழுதுகளில் புத்தபிக்குகளுக்குப் பெரும் உதவியாக இருந்தான். புத்த விஹாரத்தை சுத்தம் செய்ய, உணவு சமைக்க, துவைக்க என்று இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தான். அவன் வேலை செய்வதில் கச்சிதத் தன்மை இருந்தது. அதிகமாக அலட்டிக் கொள்ளாமல் எதையும் லாவகமாக, வேகமாக செய்து முடித்தான். மூத்த பிக்கு மற்ற பிக்குகளிடம் சொன்னார். “பாருங்கள். அவன் வேலை செய்யும் போது கூட சக்தியை அனாவசியமாய் ... Read More »

அமானுஷ்யன் – 5

மஹாவீர் ஜெயின் தன் எதிரே அமர்ந்து ·பைலில் மூழ்கியிருந்த ஆனந்தையே பார்த்துக் கொண்டிருந்தார். எத்தனையோ சினிமா கதாநாயகர்களை விட ஆனந்த் அழகாயிருந்தான். வயது 29 என்று ரிகார்டில் இருந்தாலும் இன்னும் இளமையாகத் தெரிந்தான். ஆனால் முகத்தில் ஒரு வித சோகம் கூட இருந்ததாகத் தோன்றியது. ஆச்சார்யாவின் கொலை பற்றிய பைலைப் படித்துக் கொண்டிருப்பதால் ஆச்சார்யாவை நினைத்து சோகமா, இல்லை வேறு ஏதோ வருத்தத்தில் அவன் இருக்கிறானா என்பதை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவன் படிப்பதை முடித்த ... Read More »

அமானுஷ்யன் – 4

மூத்த பிக்குவும் இளைய பிக்குவும் வந்தவர்கள் இருவரும் கண்ணை விட்டு மறையும் வரை நின்று பார்த்து விட்டு பரபரப்புடன் புத்த விஹாரத்தினுள் நுழைந்தார்கள். அவன் எப்படி மாயமாயிருப்பான் என்று வியப்புடன் தியான மண்டபத்திற்குள் இருந்த பிக்குகளிடம் போய் மூத்த பிக்கு “அவன் எங்கே போனான் பார்த்தீர்களா?” என்று கேட்டார். “நான் எங்கேயும் போகவில்லை. இங்கேயே தான் இருக்கிறேன்” என்ற குரல் புத்த பிக்குகளின் மத்தியில் இருந்து கேட்டது. மூத்த பிக்குவும், இளைய பிக்குவும் குழப்பத்துடன் புத்த பிக்குகளின் ... Read More »

அமானுஷ்யன் – 3

இரத்தக் கறையை முதலில் கவனித்தவன் இளைய பிக்குவிடம் சொன்னான். “நாங்கள் உள்ளே போய் பார்க்க வேண்டும்” இளைய பிக்கு தயங்கினார். அவரது தயக்கத்தைப் பார்த்தவன் தன் அடையாள அட்டையை நீட்டினான். “போலீஸ்” “நீங்கள் பிணத்தைத் தேடுகிறீர்கள். நாங்கள் பிணத்தை உள்ளே வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறோம்?” “இது என்ன ரத்தக் கறை?” கதவைக் காட்டி அவன் கேட்டான். மூத்த பிக்கு தன் கையில் பேண்டேஜுடன் வெளியே வந்தார். “என்ன விஷயம்?” இளைய பிக்கு சொன்னார். “எதோ ... Read More »

அமானுஷ்யன் – 2

CBI டைரக்டர் மஹாவீர் ஜெயின் தன் அலுவலகத்தின் முன் காரில் இருந்து இறங்குகையில் பத்திரிகை நிருபர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டார்கள். “சார் அடிஷனல் டைரக்டர் ஆச்சார்யாவைக் கொலை செய்தது யார் என்று தெரிந்து விட்டதா?” “உங்களுக்கு யார் மீதாவது சந்தேகம் இருக்கிறதா?” “CBI அடிஷனல் டைரக்டர் கொலைக்கு அரசியல் காரணங்கள் இருக்கும் என்று நினைக்கிறீர்களா?” மஹாவீர் ஜெயின் கைகளை உயர்த்தி மேலும் வரவிருக்கும் கேள்விகளை நிறுத்தினார். “அவரைக் கொன்றவர்கள் யார் என்பதை கூடிய சீக்கிரம் கண்டு பிடிப்போம். ... Read More »

அமானுஷ்யன் – 1

அந்த புத்த விஹாரத்தின் கூரையில் தொப்பென்று ஏதோ விழுந்து உருண்டு வாசற்புறத்தில் கீழே விழுந்தது நடுநிசியின் நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு கேட்டது. உறக்கத்தில் இருந்த புத்த பிக்குகள் கண் விழித்தார்கள். இளம் பிக்கு ஒருவர் சொன்னார். “ஏதோ மரம் விழுந்து விட்டது போலிருக்கிறது” இமயமலைச்சாரலில் உள்ள அந்த புத்த விகாரத்தின் மீது மரக் கிளைகளும், வேரறுந்த மரங்களும் விழுவது புதிதல்ல. ஆனால் அவர்களின் குருவான, எழுபது வயதைக் கடந்த மூத்த பிக்கு அமைதியாகச் சொன்னார். “சத்தத்தை வைத்துப் ... Read More »

நம் நாட்டுக்காக ஒரு இரண்டு நிமிடங்கள் செலவு செய்வீர்களா…?

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! தயவு செய்து அதிகம் ஷேர் (share ) செய்யவும் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! நீங்கள் செய்யும் ஒவ்வொரு SHARE-ம் நாம் நாட்டைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது…… சமீப காலமாக விலைவாசி உயர்ந்து விட்டதே என்று அரசைக் குறைக்கூறுவது நாம் செய…்யும் தவறு… விலைவாசி உயர்வுக்கு நாம் தான் காரணம்… கேட்பதற்கு ஆச்சரியமாக உள்ளதா….?? கீழே படியுங்கள்…… ஒரு வருடத்திற்கு முன் 1 US $ = ரூ 45. இன்று 1 US $ = ரூ ... Read More »

வைரல் ஃபீவர்

அடுத்த மாதம் நியூசிலாந்தில் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டி நடக்கவிருக்கிறது. இதற்கு 15 பேர் கொண்ட இந்திய அணியை பி.சி.சி.ஐ அறிவித்து இருக்கிறது. இதில் சேவாக், கம்பீர், யுவராஜுக்கு இடம் இல்லை. 50 போட்டிகள்கூட விளையாடாதவர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது திறமையான வீரர்களுக்கு இடம் இல்லையா என பி.சி.சி-யை இந்தியா முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தார்கள். இந்த நிலையில் ஐசிசி சேர்மன் மற்றும் இந்தியா சிமென்ட்ஸ் சேர்மன் என்.சீனிவாசனையும் தோனியையும் தாக்கி மீம்ஸ் ... Read More »

2015-ன் முதல் சூரிய நடுக்கம்

நில நடுக்கம் நமக்குத் தெரியும். ஆனால் சூரிய நடுக்கம் நமக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஆனால் நமது விஞ்ஞானிகள் சூரியனில் நடைபெறும் ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். சூரியனின் மேல்பகுதி பூமியைப் போல் பாறைகளால் அமைந்த தரைப்பகுதி கிடையாது. நெருப்புக்குழம்பாக அது கொதித்துக்கொண்டு இருக்கிறது. அதன் மேல்பகுதியில் வெடிப்புகளும் நடுக்கங்களும் நடந்து கொண்டுள்ளன. அப்படிப்பட்ட ஒரு நடுத்தரமான வெடிப்பு இந்த மாதம் 12-ந்தேதி ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் வெடிப்பான, அதன் தாக்கம் பூமிவரை இருந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது. ... Read More »

Scroll To Top