Home » அதிசயம் ஆனால் உண்மை (page 76)

Category Archives: அதிசயம் ஆனால் உண்மை

அமானுஷ்யன் – 77

கேசவதாஸ் வீட்டிற்குக் காவல் இருந்த நான்கு போலீஸ்காரர்கள் அன்றிரவும் யாரும் வருவார்கள் என்று நம்பவில்லை. சில நாட்களுக்கு முன் அப்படி ஒரு ஆள் வரக்கூடும் என்று தகவல் வந்துள்ளது என்று கூறி அவர்களைத் தருவித்த போது இருந்த சுறுசுறுப்பு இப்போது அவர்களிடம் இருக்கவில்லை. டிஐஜி கேசவதாஸ் அரசியல்வாதி அல்ல. அதே போல் அனாவசியமாக யாரையும் பகைத்துக் கொள்ளும் ரகமும் அல்ல. அப்படிப்பட்டவருக்கு யாரிடமிருந்தாவது ஆபத்து வரக் காரணம் வேறெதுவும் கூட இருப்பதாக அவர்களுக்குத் தோன்றவில்லை. மேலும் வரக்கூடிய ... Read More »

அமானுஷ்யன் – 76

மந்திரி சந்தேகத்துடன் கேட்டார். “அன்றைக்கே அவன் கேசவதாஸைப் போய் பார்ப்பான் என்றீர்கள். ஆனால் அவன் போகவில்லை. இப்போது மட்டும் அவன் அங்கே போவான் என்று என்ன நிச்சயம்?” “அப்போது நாம் அவருக்கு பாதுகாப்பை அதிகப் படுத்தி இருந்தோம். அதைப் பார்த்து தானோ இல்லை வேறெதாவது காரணத்தாலோ அவன் போகவில்லை. ஆனால் இப்போது அவன் கண்டிப்பாக அவரைப் போய்ப் பார்ப்பான் என்று என் உள்ளுணர்வு சொல்கிறது” “அந்த ஆள் முதலிலேயே அந்த அளவு பாதுகாப்பு தருவதை ரசிக்கவில்லை. அந்த ... Read More »

அமானுஷ்யன் – 75

ஆனந்த் சென்ற போது மஹாவீர் ஜெயின் அவனுக்காக நிலை கொள்ளாமல் காத்திருந்தார். அவனுடைய தாயும் கடத்தப்பட்டிருக்கிறார் என்ற செய்தி அவரை நிறையவே உலுக்கி இருந்தது. இந்த நாடு எங்கே போய்க் கொண்டு இருக்கிறது என்ற கேள்வி அவருக்குள்ளே பிரதானமாக எழுந்து நின்றது. அவன் வந்தவுடன் அவனைத் தன் தனியறைக்கு அழைத்துக் கொண்டு போனார். “உட்காருங்கள் ஆனந்த். உங்கள் அம்மாவை எப்போது கடத்தினார்கள்? எப்படி கடத்தினார்கள்? போலீசில் புகார் செய்தீர்களா? யார் கடத்தினார்கள் என்று ஏதாவது தகவல் கிடைத்ததா?” ... Read More »

அமானுஷ்யன் – 74

ஆனந்திற்கு அவர்கள் போன் வரவேயில்லை. ஏன் அவர்கள் இன்னும் பேசவில்லை என்று அவன் கவலையுடன் யோசித்தான். போன் பற்றி யோசிக்கும் போது தான் தன்னுடைய போன் ஒட்டுக் கேட்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் அவனுக்கு வந்தது. வெளிப்படையாகவே அவனைப் பின் தொடர்பவர்கள் போன் ஒட்டுக் கேட்பதில் முறையான வழியைப் பின்பற்றவா போகிறார்கள். அவன் கடைசியாக அம்மாவுடன் என்ன பேசினோம் என்று யோசித்துப் பார்த்தான். அம்மா அக்‌ஷய் பற்றி பேசியது நினைவுக்கு வந்தது. ஒட்டுக் கேட்டிருப்பார்களேயானால் நிலைமை மேலும் சிக்கலாக ... Read More »

அமானுஷ்யன் – 73

சஹானாவின் நிலைமையைப் பார்த்த மதுவிற்கு அக்‌ஷய் மீது தான் கோபம் வந்தது. அக்‌ஷய் மீது வந்த கோபத்தை வாய் விட்டே மது சொன்னான். “நான் அன்றைக்கே அக்‌ஷயை இங்கே சேர்க்க வேண்டாம் என்று உன்னிடம் சொன்னேன். ஆனால் நீ தான் கேட்கவில்லை. இப்போது பார் எந்த மாதிரியான நிலைமையை அவன் ஏற்படுத்தி விட்டான்!” ஆனால் சஹானாவிற்கு அந்த சூழ்நிலையிலும் அக்‌ஷயைத் தங்களுடன் அழைத்து வந்ததில் சிறிது கூட வருத்தம் தோன்றவில்லை. மதுவிடம் அவள் சொன்னாள். “அக்‌ஷய் மட்டும் ... Read More »

அமானுஷ்யன் – 72

சாரதா கடத்தப்பட்டிருக்கிறாள் என்பது உறுதியான பிறகு ஆனந்த், அக்ஷய் இருவராலும் நிறைய நேரம் எதுவும் பேச முடியவில்லை. பிறகு அக்ஷய் தான் மௌனத்தைக் கலைத்தான். “உனக்கு நானிருக்கும் இடம் தெரியும் என்பது அவர்களுக்கு உறுதியாகத் தெரிந்து விட்டது. உன்னிடம் இருந்து உண்மையை வரவழைக்கத் தான் அவர்கள் அம்மாவைக் கடத்தி இருக்கிறார்கள். எனக்கு புரியாதது என்ன என்றால் அம்மா எப்படி சிறிதும் யோசிக்காமல் யாரோ ஒரு ஆள் கூப்பிட்ட உடன் போய் விட்டார்கள்…” ஆனந்த் சொன்னான். “அம்மாவை ஏமாற்றுவது ... Read More »

அமானுஷ்யன் – 71

வருண் தெருக் கோடியில் இருந்த கடையில் இருந்து சாக்லேட் வாங்கிக் கொண்டு வீடு திரும்பும் போது கடத்தப்பட்டான். எல்லாம் ஒரு நிமிட நேரத்தில் நடந்து முடிந்தது. பின்னால் இருந்து யாரோ ஒரு கைக்குட்டையை அவன் முகத்தருகில் கொண்டு வந்தார்கள். அதற்குப் பிறகு அவனுக்கு நினைவில்லை. அவனைத் தூக்கி ஒரு காரில் போட்டுக் கொண்டு அங்கிருந்து கடத்தல்காரர்கள் பறந்தார்கள். அந்த தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு வயதான கிழவி தான் பார்க்கிற தொலைவில் இருந்தாள். அவளுக்கும் நடந்தது ... Read More »

அமானுஷ்யன் – 70

டெல்லியில் புறநகர்ப் பகுதியில் அந்த வீடு தனியாக இருந்தது. அந்த வீட்டைச் சுற்றியும் காலியிடமே இருந்தது. நூறு மீட்டர் தொலைவில் ஏதோ ஒரு ஃபேக்டரி மட்டுமே கண்ணுக்கெட்டிய தூரத்தில் இருந்தது. வேறு வீடுகளோ, கட்டிடங்களோ அந்தப் பகுதியில் இருக்கவில்லை. இரண்டு படுக்கையறை கொண்ட அந்த வீட்டில் எல்லா வசதிகளும் இருந்தன. ஆனால் போன் வசதி மட்டும் இருக்கவில்லை. அங்கு அவளை அழைத்துப் போன பட்டாபி ராமன் அவளுக்கு வீட்டை சுற்றிக் காண்பித்தான். சமையலறையில் எல்லா சாமான்களும் இருந்தன. ... Read More »

அமானுஷ்யன் – 69

ஆனந்த் சாரதாவிற்குப் போன் செய்த நேரத்திற்கு சுமார் மூன்று மணி நேரத்திற்கு முன்னால் ஒரு அதிகாரியைப் போலவும், கண்ணியமாகவும் தெரிந்த ஒரு நபர் சாரதாவின் வீட்டுக்கு வந்தான். சாரதாவிடம் தன் பெயர் பட்டாபிராமன் என்றும் சிபிஐயில் வேலை செய்வதாகவும் சொன்னான். சாரதா பட்டாபிராமன் ஆனந்தைத் தேடி வந்திருப்பதாக எண்ணி “ஆனந்த் டெல்லிக்குப் போயிருக்கிறானே” என்று சொன்னாள். “தெரியும். ஆனந்த் தான் என்னை டெல்லியில் இருந்து அனுப்பினார்….” “போனில் அவன் உங்களை அனுப்புவது பற்றி எதுவும் சொல்லவில்லையே…. என்ன ... Read More »

அமானுஷ்யன் – 68

“அக்‌ஷய் இன்னும் எத்தனை நாட்கள் நீ இப்படி இங்கேயே இருப்பதாக உத்தேசம்” ஆச்சார்யாவின் கேள்விக்கு அக்‌ஷய் உடனடியாக பதில் சொல்லவில்லை. அவனுக்கே அவனுடைய எதிர்கால வாழ்க்கை ஒரு கேள்விக்குறியாக இருந்தது. பிறகு சொன்னான். “தெரியவில்லை” “எது எப்படி நடக்க வேண்டுமோ அது அப்படியே நடந்திருக்கிறது. நீ வெறும் கருவி மாத்திரம். அப்படி இருக்கையில் நீ தேவை இல்லாமல் குற்றவுணர்ச்சியோடு இருப்பது புத்திசாலித்தனம் அல்ல. உனக்கு இருக்கும் திறமைகளை வீணடித்துக் கொண்டு முடங்கிக் கிடப்பது சரியில்லை” “நான் இப்போது ... Read More »

Scroll To Top