டிஐஜி கேசவதாஸ் அதிகாலை எழுந்திருக்கும் பழக்கம் உடையவர். எழுந்து காலைக்கடன்களை முடித்து விட்டு ஒரு லிட்டர் தண்ணீர் குடித்து விட்டு மேலோட்டமாய் டிவி செய்திகளை ஐந்து நிமிடம் பார்த்து விட்டு அருகே இருக்கும் மைதானத்தில் ஐந்து கிலோ மீட்டர் தூரம் நடப்பது அவருடைய நீண்ட கால வழக்கம். அன்றும் அப்படித்தான் அதிகாலையில் மேலோட்டமாய் டிவி செய்திகளைப் பார்க்க ஆரம்பித்தார். ஆனால் ஐந்து நிமிடம் பார்ப்பது போய் அது அரை மணி நேரத்திற்கும் அதிகமாக நீண்டது. காரணம் அவருக்கு ... Read More »
Category Archives: அதிசயம் ஆனால் உண்மை
அமானுஷ்யன் – 96
January 22, 2015
மது வேகமாக காரை ஓட்டிக் கொண்டிருந்தான். அவனருகில் வருணும் பின் சீட்டில் ஆனந்தும் சாரதாவும் அமர்ந்திருந்தார்கள். சாரதா சோகத்துடன் பின் கண்ணாடி வழியாக வந்த வழியையே பார்த்துக் கொண்டிருந்தாள். இளைய மகன் பற்றிய பயம் அவளை மறுபடியும் பிடித்துக் கொண்டது. ஆனந்தின் மனம் தாயின் சோகத்தைப் பார்த்து ரணமானது. “பயப்பட அவசியமே இல்லைம்மா. அவன் சீக்கிரமே வந்து விடுவான்”-அவன் தாயைத் தைரியப்படுத்தினான். சாரதா முழுவதும் நம்பிக்கை ஏற்படா விட்டாலும் தலையாட்டினாள். ஆனால் அவள் கண்களில் லேசாய் நீர் ... Read More »
அமானுஷ்யன் – 95
January 22, 2015
ராஜாராம் ரெட்டியின் செல் போன் சமய சந்தர்ப்பம் தெரியாமல் இசைத்தது. இந்த நேரத்தில் யார் என்று யோசித்தபடி செல்லை எடுத்துப் பார்த்தார். இரண்டு நிமிஷங்களுக்கு முன்னால் அவர் அக்ஷயின் தாயைக் கடத்த கட்டளை இட்ட வேன்காரன் தான். ‘இவ்வளவு தெளிவாகச் சொன்னோமே இன்னும் என்ன சந்தேகம் இவனுக்கு’ என்று எண்ணியவராக பேசினார். “ஹலோ. என்ன?” “சார். ஆறேழு கார், வேன்களில் பத்திரிக்கைக்காரர்களும், டிவிக்காரர்களும் எங்களுக்கு முன்னால் அங்கே வந்து கொண்டிருக்கிறார்கள். இப்போது தான் எங்களைக் கடந்தார்கள்…” ராஜாராம் ... Read More »
அமானுஷ்யன் – 94
January 22, 2015
அந்தக் கட்டிடத்திற்கு அருகே இருந்த தெருவிளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. அதற்கு சிறிது தூரம் தள்ளி அரையிருட்டில் ஒரு காரும் அதன் பின்னால் சிறிது தூரம் தள்ளி ஒரு போலீஸ் ஜீப்பும் நின்று கொண்டிருந்தது. ஆனந்த் முணுமுணுத்தான். “அவர்கள் முன்பே வந்து தயாராக நிற்கிறார்கள்” டாக்சி நின்றதும் இருவரும் இறங்கினார்கள். பணத்தைத் தந்தவுடன் டாக்சி திரும்பவும் வந்த வழியே திரும்பிப் போனது. இருவரும் அமைதியாகக் காத்திருந்தார்கள். போலீஸ் ஜீப்பில் மறைவாக உட்கார்ந்திருந்த ராஜாராம் ரெட்டி செல் போனில் ... Read More »
அமானுஷ்யன் – 93
January 22, 2015
ராஜாராம் ரெட்டியால் அன்றிரவு உறங்க முடியவில்லை. அரை மணி நேரத்திற்கொரு முறை அந்தக் கட்டிடத்தின் சுற்றுப் புறத்தில் நிறுத்தி வைத்திருந்த ஆட்களிடம் போன் செய்து பேசினார். ஏதாவது சந்தேகப்படும் படியான நிகழ்வுகள் நடந்திருக்கின்றதா என்று கேட்டார். ஒன்றுமில்லை என்ற பதில் வந்த போது அதை அவரால் ஒத்துக் கொள்ள முடியவில்லை. குடைந்து கேட்ட போது அன்று இருவேறு சமயங்களில் இரண்டு இளைஞர்கள் அந்த வழியாக ஸ்கூட்டரில் போனார்கள் என்று தெரிந்தது. அவர்கள் அந்த கட்டிடத்தைப் பார்த்தபடி நின்றார்கள் ... Read More »
அமானுஷ்யன் – 92
January 22, 2015
ஆனந்தும் மகேந்திரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். ‘நான் சமாளித்துக் கொள்வேன். என்னைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்’ என்று அக்ஷய் சொன்ன விதத்தைப் பார்த்தால் அவன் தன் மரணத்தைப் பற்றி சிறிதும் கவலைப்படவில்லை என்பதாகவே அவர்களுக்குப் பட்டது. ஆனால் அவர்களை அதைப் பற்றி மேலே யோசிக்க விடாமல் அக்ஷய் சொன்னான். “நமக்கு இப்போது முதல் பற்றாக்குறை நேரம் தான். அதனால் அதை வீணாக்காமல் அடுத்ததாக நாம் என்ன செய்யலாம் என்று யோசிப்போம்” ஆனந்த் சொன்னான். “எனக்கு மிஸ்டர் எக்ஸ் ... Read More »
அமானுஷ்யன் – 91
January 22, 2015
ராஜாராம் ரெட்டியின் முகத்தில் பேயறைந்த களை தெரிந்தது. மந்திரி தன்னை மிரட்டுகிறாரா இல்லை நிஜமாகவே தான் நினைப்பதைச் சொல்கிறாரா என்பதை அவரால் ஊகிக்க முடியவில்லை. மந்திரி தாழ்ந்த குரலில் சொன்னார். “அவர்கள் நமக்கு பணம் நிறையவே தந்திருக்கிறார்கள். வாங்கிய பணத்திற்கு அவனைப் பிணமாக ஒப்படைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இல்லா விட்டால் அவனுடைய அம்மாவையும், அந்தப் பையனையுமாவது ஒப்படைக்கச் சொல்கிறார்கள். அப்படி செய்யா விட்டால் அவர்கள் எதிரிகள் பட்டியலில் நம் பெயர் தான் முதலிடத்திற்கு வரும் என்கிறார்கள். ... Read More »
அமானுஷ்யன் – 90
January 22, 2015
“தெரியவில்லை. ஆனால் அந்தப் பெயரில் பேச எழுந்தது நான் தான்” “என்ன பேசினாய் என்பது நினைவுக்கு வரவில்லையா?” அக்ஷய் இல்லை என்று தலையசைத்தான். திரும்பவும் அந்த அறிவிப்பை எண்ணிப் பார்த்தான். “நம் இயக்கத்தின் தீவிர ஆதரவாளரும், சிறந்த பேச்சாளருமான அப்துல் அஜீஸ் அவர்களை பேச அழைக்கிறேன்”. அது என்ன இயக்கம்? யாரந்த அப்துல் அஜீஸ்? வேறொரு ஆளின் இடத்தில் அவன் ஏன் பேசப் போனான்? ஏன் அவன் அப்துல் அஜீஸ் அல்ல என்பதை மற்றவர்கள் கண்டு பிடிக்கவில்லை? ... Read More »
அமானுஷ்யன் – 89
January 22, 2015
குறுந்தாடிக்காரன் கதவைத் தட்டியவுடனே அந்த அறைக் கதவு திறக்கப் படவில்லை. மாறாக பக்கத்து அறைக் கதவு திறந்து ஒரு ஆள் எட்டிப் பார்த்தான். பின் கதவை மறுபடியும் கதவை மூடிக் கொண்டான். ஒரு நிமிடம் கழித்து தான் தட்டிய அறைக்கதவு திறக்கப்பட்டது. கதவைத் திறந்த ஒரு ஆள் அவனை உள்ளே விட்டு வெளியே கதவைத் தாழிட்டுப் போய் விட்டான். தாடிக்காரனுக்கு பயத்தில் குப்பென்று வியர்த்தது. பக்கத்து அறையிலும் அவர்கள் ஆட்களே இருப்பது புரிந்தது. வந்துள்ளது அவன் தானா ... Read More »
அமானுஷ்யன் – 88
January 22, 2015
ஆனந்தின் செல்போன் இசைத்தது. ஒரு கணம் தம்பியின் தியானம் பாதிக்கப்பட்டு விடுவோமோ என்று ஆனந்த் பயந்தான். ஆனால் அதற்கு அவசியமே இருக்கவில்லை. அக்ஷயை அந்த சத்தம் சிறிதும் பாதிக்கவில்லை. அவன் அப்படியே அசைவற்ற நிலையிலேயே இருந்தான். ஆனந்த் அவசரமாக செல்போனை எடுத்துப் பேசினான். ”ஹலோ” ராஜாராம் ரெட்டியின் குரல் கேட்டது. “ஹலோ ஆனந்த், நான் ராஜாராம் பேசுகிறேன்” “சொல்லுங்கள் சார்” ”நீயும் உன் தம்பியும் எப்போது வருகிறீர்கள்? எங்கே சந்திக்கலாம்?” ஆனந்த் சொன்னான். “இப்போது வர முடியாத ... Read More »