Home » அதிசயம் ஆனால் உண்மை (page 32)

Category Archives: அதிசயம் ஆனால் உண்மை

கேணிவனம் – 24

ஆஆஆஆ….! லிஷா அலறிவிட்டாள். அவள் அலறல் கேட்டு அனைவரும் அங்கு வந்து சேர்ந்தனர். ‘என்ன லிஷா என்னாச்சு..’ என்று சந்தோஷ் அவளை நெருங்கியபடி கேட்க, அப்போதுதான் அவனும் தாஸின் முகத்தைப் பார்த்தான். வித்தியாசமாக இருந்தது… ‘அய்யோ.. பாஸ்க்கு என்னாச்சு..?’ என்று அவனும் பதற்றமடைய… சக்கரவர்த்தி தாஸின் உடலை நெருங்கி வந்தார். ‘இருங்க.. நான் பாக்குறேன்..’ என்றுகூறி, அவனது கையைப் பிடித்துப் பார்த்தார். அவனது மார்பில் காதுவைத்துப் பார்த்தார்… ‘பயப்படாதீங்க… உயிரோடத்தான் இருக்கார்… ஆனா மயக்கமடைஞ்சியிருக்கார்…’ என்று கூறி, ... Read More »

கேணிவனம் – 23

திசைமாறி வந்துவிட்டோம் என்று தாஸ் சொன்னதைக் கேட்ட அனைவரும் அதிர்ந்து நின்றனர். ‘திக்கு தெரியாத காடு’ என்று கதைகளில் உபயோகப்படுத்தபடும் உவமை எவ்வளவு கொடுமையானது என்று அங்கிருந்த 6 பேரும் உணர்ந்து கொண்டிருந்தனர். காட்டில் தொலைந்து போவது என்பது, கிட்டத்தட்ட உயிருடன் இறந்து போவதற்கு சமம். அடுத்த என்ன செய்வதென்று தெரியாமல் அனைவரும் சிலையாய் நின்றிருக்க… சக்கரவர்த்தி மிகவும் கவலை கொண்டவராய் தாஸின் அருகில் வந்தார்… ‘தாஸ்? என்ன இப்படி சொல்றீங்க..? இது தப்பான ரூட்டுன்னு எப்படி ... Read More »

கேணிவனம் – 22

பானரோமிக் பார்வையில் மலைத்துப்பார்க்க வைக்கும் ஹரிஸாண்ட்டல் அதிசயம் இரயில்…. தாஸ், அந்த இரவு வேளையில் சென்ட்ரல் இரயில் நிலையத்தில் 11ஆவது ப்ளாட்ஃபாரத்தில் நின்றிருந்த ரயிலை, தன் மனதுக்குள் ரசித்தபடி, கவிதை என்று எதையோ எழுத முயன்றுக்கொண்டிருந்தான். இரயிலுக்குள், ஜன்னலோரத்தில் எதிரெதிர் இருக்கையில் சந்தோஷூம், லிஷாவும் அமர்ந்தபடி சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருந்தனர்… அங்கு பரவியிருந்த விளக்கு வெளிச்சத்தில், ஆங்காங்கே வெவ்வேறு ஊரைச் சேர்ந்த பயணிகளின் நடமாடிக்கொண்டிருக்க, அவர்களது முகமும், நடையும், உடையும் தாஸை ஒரு குழந்தையாய் மாற்றி, ரயில் நிலையத்தை ... Read More »

கேணிவனம் – 21

ப்ரொஃபஸர் கணேஷ்ராமின் வீடு… அவர் வீடு, பெரியளவில் இல்லாவிட்டாலும், ஒரு குட்டி பங்களா என்றே சொல்லலாம்…  ரசனையுடன் கட்டியிருந்தார்… வீட்டின் மாடியிலிருந்த ஒரு அறையை, பிரத்யேகமாக தனது ஆய்வுக் கூடமாக மாற்றியிருந்தார். (குட்டி ரகசியம் : முன்னொருநாள், இவர் வீட்டுக்கு வந்தபோது, இந்த அறையை பார்த்த தாஸ்-க்கு மிகவும் பிடித்துப் போகவேதான், பின்னாளில் பிரம்மாண்டமாய் Ancient Park என்று தனது ஆஃபீஸை வடிவமைக்க வேண்டும் என்று முடிவெடுத்து நிறைவேற்றினான்) இப்போது, அதே அறையில் தாஸ்-ம், சந்தோஷூம், லிஷாவும் ... Read More »

கேணிவனம் – 20

காலை 10.30 மணி… ரெட்ஹில்ஸலிருந்து பூதூர் செல்லும் ரோட்டில், ரெண்டு பக்கமும் வயல்களும் பனைமரங்களும் சூழ்ந்திருக்கும் வளைவான பாதைகளில், இன்ஸ்பெக்டர் வாசுதேவனின் ஜீப் சீறிக்கொண்டிருந்தது… சென்னை மாநகரத்தின் மிகச்சொற்ப தூரத்தில் இப்படி வயல்படர்ந்த கிராமம் இருப்பது சில சமயம் கடத்தல்காரர்களுக்கு சாதகமாக அமைந்துவிடுகிறது என்று மனதளவில் வாசுதேவன் வருத்தப்பட்டுக்கொண்டிருந்தார். லிஷா சந்தோஷூக்கு கடைசியாக செய்த ஃபோன்கால்-ஐ ட்ரேஸ் செய்ததில், அது இந்த பூதூர் கிராமத்தின் செல்ஃபோன டவரிலிருந்துதான் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது என்று இன்று காலை அவருக்கு தகவல் வந்திருந்தது… ... Read More »

கேணிவனம் – 19

இன்ஸ்பெக்டர் வாசு ஃபோனில் பேசிக் கொண்டிருக்க… தாஸூம் சந்தோஷூம் அவர் பேசுவதை ஆவலாக பார்த்துக் கொண்டிருதனர்… ‘ஹலோ..?’ ‘. . . . . . . . ‘ ‘அப்படியா..?’ ‘. . . . . . . . ‘ ‘அந்த ஃபோன்கால்-ஐ ட்ரேஸ் பண்ண மேட்டர் என்னாச்சு..?’ ‘. . . . . . . . ‘ ‘அப்படியா..? வேற எதுவும் வழி இல்லியா..?’ ‘. . . ... Read More »

கேணிவனம் – 18

கடத்தல்காரனிடமிருந்து வந்த ஃபோன்கால், ஒருவகையில் மிரட்டலை விட்டு சென்றாலும், ஒரு வகையில் லிஷா இன்னும் உயிரோடு இருப்பதை ஊர்ஜிதப்படுத்தியிருந்ததால் தாஸ் சற்று ஆறுதலாயிருந்தான்… ஆனால், இருப்பிடம் தெரியாத பிரம்ம சித்தர் சமாதியை, எங்கென்று போய் தேடுவது… சோழ மன்னன், அதுவும் எந்த காலத்து சோழன், அவன் பெயரென்ன என்று ஒன்றும் தெரியாத நிலையில் எப்படி தேடுவது… மேலும், நான் சித்தர் சமாதியை தேடிக்கொண்டிருப்பதை எப்படி வெளியே தெரிந்தது… யாரோ தன்னை ஆரம்பத்திலிருந்து தொடர்ந்து வந்திருக்கிறார்கள். யாராயிருக்கும்… இந்த ... Read More »

கேணிவனம் – 17

காலை 7.30 மணி… தாஸூம் சந்தோஷூம் தி-நகர் போலீஸ் ஸ்டேஷனில் அமர்ந்திருந்தனர்… இன்ஸ்பெக்டர் வாசு, சந்தோஷின் தொலைபேசி அழைப்பினால் ஸ்டேஷனுக்கு அந்த காலை வேளையில் துரிதமாக வந்திருந்தார். நடந்த நிகழ்வுகளை விசாரித்து, லிஷா முன்னாள் இரவு ஓட்டிக் கொண்டு போன தாஸின் கார் நம்பரை வெவ்வேறு ஸ்டேஷனுக்கு தெரிவித்து, தேடிப்பார்க்குமாறு உத்தரவிட்டிருந்தார். சந்தோஷ், ஒரு சிலையைப் போல் எங்கோ வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்… இரண்டு நாட்களுக்கு முன்பும், இதே போலீஸ் ஸ்டேஷனில், விரக்தியாய் அமர்ந்திருந்தது நினைவுக்கு வந்தது. ... Read More »

கேணிவனம் – 16

ஆபீசுக்கு பின்புறம், பீச் வியூ பார்க்கில், தாஸும் சந்தோஷூம் புகை பிடித்துக் கொண்டிருந்தனர்… சந்தோஷ் ஆழ்ந்த சிந்தனையில் கடற்கரையை பார்த்தபடி புகை இழுத்துக் கொண்டிருந்தான்… சிகரெட்டை பிடித்திருந்த அவனது கைகள், அவனுக்கும் தெரியாமல் நடுங்கிக் கொண்டிருந்ததை எதிரிலிருந்த தாஸ் கவனித்தான்… ‘சந்தோஷ்..? ஏதாவது பிரச்சினையா..?’ என்று கேட்டதும், கவனம் கலைந்த சந்தோஷ் தாஸிடம் திரும்பினான்… ‘ஏன் பாஸ்… அப்படி கேக்குறீங்க..?’ ‘உன் கை சிகரெட் பிடிக்கும்போது நடுங்குது!?! ஒருவேளை ஏதாவது பதற்றத்துல இருக்கியோன்னு தோணுது… அதான் கேட்டேன். ... Read More »

கேணிவனம் – 15

அந்த மதிய வேளையில் போலீஸ் ஸ்டேஷன் கொஞ்சம் அமைதியாகவே இருந்ததால்… லிஷா போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்தபோது, அனைவரது கவனமும் அவள்மேல் திரும்பியது. உள்ளே உணவருந்திமுடித்து தினசரியை புரட்டிக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர்  ‘வாசு’வுக்குஅருகில் சென்று நின்றாள்… ‘சார் வணக்கம் என் பேரு லிஷா…’ லிஷாவின் வணக்கத்தால் பேப்பரிலிருந்து கவனம் கலைந்த இன்ஸ்பெக்டர் வாசு, அவளை ஏறிட்டு பார்த்தார்… ‘என்னம்மா விஷயம்..?’ ‘சார், என் வருங்கால ஹஸ்பெண்ட்-ஐ இங்க அரெஸ்ட் பண்ணி வச்சிருக்கீங்க..? அதான் உங்ககிட்ட நடந்த உண்மையை சொல்லலாம்னு ... Read More »

Scroll To Top