Home » அதிசயம் ஆனால் உண்மை (page 31)

Category Archives: அதிசயம் ஆனால் உண்மை

இரை தேடிய இரவுகள் – 4

பயணிகள் கவனத்திற்கு…என்று ஆரம்பிக்கும் அறிவிப்புக்கள் தொடர்ந்தவண்ணமிருக்கிறது.. சென்னை சர்வதேச விமான நிலையம்.இ 1993ம் ஆண்டு மே மாதம் 16ம் திகதி மாலை 7.00 மணி அந்தப் பையைத் திறம்மா.. பயணிகளின் பயணப்பொதிகளை காவல்துறையினர் சோதனையிடுகின்றனர்..இது ஆரம்பம் யார் யாரு கூட வாறாங்க.. இல்லைங்க நான் தனியாத்தான் போறன் ஓ..லீவுல போறிங்களா.. கேள்விகளைக் கேட்டபடியே அவளுக்கான போடிங் காட்டினைத் தயார் செய்கிறார் உத்தியோகத்தர். ஒரு தடவைக்கு இரு தடவை அவளது கடவுச் சீட்டினை மேலும் கீழுமாக புரட்டிப்பார்த்தவர்.. உங்க ... Read More »

இரை தேடிய இரவுகள் – 3

மங்களம்.. மங்களம் உரத்த குரலில் தன் மனைவி மங்களத்தை அழைக்கிறான் சண்முகம் மீண்டும் ஒரு தடவை சற்று உரத்து அழைத்துப்பார்க்கிறான் இல்லை எந்தவித பதிலும் இல்லை எங்கே போயிருப்பாள் இவள்.தனக்குத் தானே கேள்வி கேட்டபடி சமையலறைக்குள் நுழைந்தவன் முகம் சிவந்தே போனது..ச்சீ பொம்பளையா இவள்..ராத்திரி சாப்பிட்ட ப்ளேட்..சமையல் பாத்திரங்கள்..எல்லாம் அப்படியே கழுவாமல்..ம் என்று பல்லைக் கடித்தவனாக குளியலறைப்பக்கம் தன் பார்வையைத் திருப்பினான். அங்கு சென்றவன் கண்களில் ஆத்திரம் இன்னும் அதிகமானது. என்ன பொம்பளை இவள்.. கழுவப் போட்ட ... Read More »

இரை தேடிய இரவுகள் – 2

அமைதியானதொரு மாலைப்பொழுது.. எழுப்பும் ஓசைகளையெல்லாம் இசையாக மாற்றிக்கொண்டு தன்பாட்டிலே பயணம் செய்துகொண்டிருக்கும் அந்த நதிக்கரையோரம்.. எதிர்க்கரையில் அழகிய மலையும் அதன் அடிவாரத்தில் இருள் கவ்வ நிறம் மாறிக்கொண்டிருக்கும் பச்சை மரங்களையும் பார்த்தபடி மலையிடுக்குகளுக்குள் மாலை நேர மேகங்களோடு கண்ணாம்பூச்சியாடும் ஆதவனை ரசித்துக்கொண்டிருந்தான் இளங்கோ.. புஸ்..புஸ்.. என்று சரவுண்ட் சிஸ்டத்தில் சவுணட் கேட்பது போல் காதுக்கருகே ஒரு உணர்வு.. தன்பாதையில் குறுக்கறுக்கும் கற்பாறைகளோடு நதியவள் மோதும் சப்தங்களை ரசித்துக்கொண்டிருந்த காதுகளில் இது வித்தியாசமான ஊடுருவல்.. சுதாரித்துக்கொண்ட இளங்கோ அங்கும் ... Read More »

இரை தேடிய இரவுகள் – 1

க்ர்ர்க்..டக்.. ம் வெளியிலெடுத்து கன நாளாயிட்டுது..இப்போ எல்லாம் முன்னம் மாதிரி வெளிய போக முடியுறுதில்லை.. என்று தனக்குத்தானே கூறிக்கொண்டு சிறியதொரு முக்கலுடன் இடக்கையால் கீழிளுக்க..மீண்டும் ட்ட்க்க் என்ற சத்தம்.. சிறியதாய் ஆனால் மெதுவாய்க் காணப்பட்ட அந்த வெள்ளைத்துணியால் பூவைக் கசக்காமல் வருடுவது போல் வருடிவிட்டு .. இலேசாய் திறந்திருந்த யன்னல் வழியே எட்டிப்பார்த்தான்.. சில்…லென்று வீசிய அந்த வாடிப்போன காற்று முகத்தில் படவே தனது இடக்கையால் முகத்தை தடவிய படி.. சட்..என்ற மெல்லிய ஒலியோடு யன்னலை மூடிவிட்டு ... Read More »

கேணிவனம் – 30 இறுதி அத்தியாயம்.

ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அந்த காலை வேலையில் தாஸ், சந்தோஷ், லிஷா மூவரும் காரில் சீறிக்கொண்டிருந்தனர். தாஸின் கையில், முன்னாள் இரவு, சந்தோஷ் வீடியோவில் கண்டெடுத்த சித்தரின் பாடல் ப்ரிண்ட் அவுட் இருந்தது. அதை தாஸ் ஆவலுடன் படித்துக் கொண்டிருந்தான். என்கண் நிறையிறை யவன் எண்கண்ணு வுடையவனா ஆனதில் நான் முகனவன் முகமதில் நாரெண் டெட்டாம் கண் நீகண்ட ததுவொன்றெனி லெஞ்சியுள தேழென வெடுத்துரைத்தேன் எனதா ஆசனுக்கு என்று சித்தர் எழுதிய இப்பாடலை பார்த்தபடி தாஸ் காரில் ... Read More »

கேணிவனம் – 29

2ஆம் காலக்கோட்டில் நடந்துக் கொண்டிருப்பது… இதுவரை தாஸின் லேப்டாப் திரையில், ஹேண்டிகேமிராவில் பதிவான 12ஆம் நூற்றாண்டு காட்சிகளையும், 1ஆம் காலக்கட்டத்தில் நடந்ததாக தாஸ் கூறியதையும் ஆச்சர்யத்துடன் கேட்டுக் கொண்டிருந்த லிஷாவும், சந்தோஷூம் கொஞ்சம் கொஞ்சமாக இயல்புநிலைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். ‘பாஸ்… என்னென்னவோ நடந்திருக்கு..! எங்க உயிரையே காப்பாத்தியிருக்கீங்க..! உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்ன தெரியல பாஸ்..!’ என்று சந்தோஷ் செண்டிமெண்டாக ஆரம்பித்தான். ‘நன்றி சொல்ல வேண்டியதெல்லாம் அந்த சித்தருக்குத்தான். இப்படி ஒரு கேணி இருக்கிறதாலதான் இதெல்லாம் சாத்தியமாச்சு.!’ ... Read More »

கேணிவனம் – 28

சடகோப சித்தர், தாஸின் முற்பிறவி இரகசியத்தை கூறியதும், தாஸினால் நிலைகொள்ள முடியாமல் தடுமாறினான். அவன் கையில் பிடித்திருந்த ஹேண்டிகேமிராவில் அவனது நடுக்கம் தெரிந்தது. ‘ஏனப்பா இப்படி நடுங்குகிறாய்…?’ என்று சித்தர் சிரித்தபடி கேட்டார் ‘ந… நான்தான் நீங்க… சொன்ன..  ராஜாவா..?’ ‘ஆம், இன்றிலிருந்து 53 வருடத்திற்கு முன்புவரை நீதான் இராஜசேகரவர்மனாக வாழ்ந்து வந்தாய்.. நீதான் கேணிவனக்கோவில் கட்ட காரணமாயிருந்தவன். மனிதப் போர்களை நிறுத்தி உலகில் அமைதியை நிலைநாட்ட எனக்கு உதவியவன். எல்லாம் நீதான்.’ ’53 வருஷத்துக்கு முன்னாடியா..! ... Read More »

கேணிவனம் – 27

12ஆம் நூற்றாண்டில் நடந்தது… தான் வந்தடைந்திருக்கும் வனப்பிரதேசம் வித்தியாசமாகவிருப்பதை கண்டு சுற்றிலும் தெரியும் வானவனாந்திரங்களை கண்ணிமைக்காமல் தாஸ் கண்டுகளித்துக் கொண்டிருந்தான். அகஸ்மாத்தாக அமர்ந்திருப்பதைவிட பாதசாரியாய் நடந்து பார்ப்போமென்று முடிவெடுத்தவன் எழுந்து நடக்கலானான். காற்றில் சந்தனவாசம் கலந்து வந்தது. சுற்றிலும் சந்தன மரங்கள். தான் சந்தனக்காட்டில் நடந்து கொண்டிருப்பதையுணர்ந்தான். தோளில் அவன் மாட்டியிருந்த ஹேண்டிகேமிரா அப்படியே இருந்தது. அதைக் கண்டதும் அதை எடுத்து இயக்கினான். சந்தனக்காட்டை, காட்சிப்பதிவில் கடத்திக் கொண்டான். காலம் நடந்தவற்றை மறக்கடிக்கும் அரிய மருந்து… ஆனால், ... Read More »

கேணிவனம் – 26

1-ஆம் காலக்கோடு (Timeline)-ல் நடந்தது..! (தொடர்ச்சி) லிஷாவை துப்பாக்கியைமுனையில் பிடித்தபடி சக்கரவர்த்தி அனைவரையும் அந்த கேணிவனக்கோவிலுக்குள் நடத்தி சென்றான். இன்ஸ்பெக்டர், சக்கரவர்த்தியை மெதுவாக நெருங்க முயற்சிக்க, சக்கரவர்த்தி அவர்பக்கமாய் திரும்பி அவருக்கும் துப்பாக்கியை நீட்டி எச்சரித்தான். ‘வேண்டாம் இன்ஸ்பெக்டர்… கிட்ட வராத… சுட்டுருவேன்…’ என்று மிரட்டவே, அவர் பின்வாங்கினார்… கோவில் மண்டபத்தில் ஆறு பேரும் நின்றிருக்க… சக்கரவர்த்தி, கொஞ்சம் பின்னுக்குவந்து அனைவரும் தனது பார்வையில் படும்படி வந்து நின்றுக்கொண்டான். அங்கிருந்த அனைவருக்கும் சக்கரவர்த்தியின் இந்த செயல் மிகவும் ... Read More »

கேணிவனம் – 25

1-ஆம் காலக்கோடு (Timeline)-ல் நடந்தது..! பொழுது விடிந்தது… லிஷா கண்விழித்தபோது, அந்த காலைவேளையில் காடு முழுவதும் பனி சூழ்ந்து… காடு கனவுலோகமாய் காட்சியளித்தது… சே! இந்தக் காட்டை பார்த்தா நேற்று நான் இப்படி பயந்தேன் என்று அவள் வியக்குமளவிற்கு அந்த காட்டுச்சூழல் ரசிக்கும்படியாய் ரம்யமாய் காட்சியளித்தது… திரும்பி கூடாரத்திற்குள் பார்க்க, தாஸ் மட்டும் இன்னமும் உறங்கிக்கொண்டிருந்தான். அனைவரும் எழுந்து ஆளுக்கொரு வேளையில் ஈடுபட்டிருந்தனர்… தாஸ் மட்டும் ஏன் இவ்வளவு நேரம் தூங்கிக்கொண்டிருக்கிறான் என்று அவனை எழுப்புவதற்காக அவனருகில் ... Read More »

Scroll To Top