மாலை 5.30 மணிக்கெல்லாம் நன்றாக இருட்டத் துவங்கியிருந்தது . இயற்கை தீட்டிய பச்சை வண்ணங்களுக்கு மத்தியில் எழுந்திருந்த கட்டிடங்கள் மீது மோதிக் கொண்டு நின்றிருந்த மேகக்கூட்டங்கள்… யூகலிப்டஸ் இலைகளை இறுக்கித் தழுவி, அதன் வாசனையை அள்ளிக் கொண்டு வந்த குளிர்ந்த காற்று… மேற்கு சிவக்காத வானம்… என்று ஊட்டியின் அன்றைய க்ளைமேட் ஆனந்தையும் ஷ்ரவ்யாவையும் உற்சாகம் கொள்ளச் செய்தது. பயணம் தந்த களைப்பை மறந்து அந்த உற்சாகத்தில் திளைத்திருந்தனர் அவர்கள். அப்போதுதான் ஆனந்துக்கு அந்த ஞாபகம் வந்தது. ... Read More »
Category Archives: அதிசயம் ஆனால் உண்மை
இரண்டாம் தேனிலவு – 16
April 1, 2015
அன்று குற்றாலத்தில் சீசன் அருமையாக இருந்தது. தனது குடும்பத்தினருடன் அமுதாவையும் அங்கே அழைத்து வந்திருந்த அசோக், அவளிடம் எப்படியாவது தனது காதலை நேரடியாகச் சொல்லிவிட வேண்டும் என்று நினைத்தான். ஏற்கனவே தொலைபேசி வழியாக அமுதாவிடம் காதலை மறைமுகமாகச் சொல்லியிருந்தாலும், மணிக்கணக்கில் அவளிடம் அரட்டையடித்து இருந்தாலும், ஐ லவ் யூன்னு சொல்வதற்கு மட்டும் அவனது நாக்கு ஏனோ தடுமாறியது. ஐந்தருவிக்கு எல்லோரும் குளிக்கச் சென்ற இடத்தில், அமுதா மட்டும் குளிக்கச் செல்லாமல் திரும்பிவர, தனி ஆளாகக் கையைப் பிசைந்து ... Read More »
இரண்டாம் தேனிலவு – 15
April 1, 2015
கோவையில் இருந்து காரில் ஊட்டிக்கு வந்த வழியில், கார் டிரைவர் ஏமாற்றிவிட்டு உடமைகளோடு ஓடிவிட… ஆபத்பாந்தவனாக வந்து உதவிய அரசு பேருந்தில் ஏறி, ஒருவழியாக ஊட்டிக்கு வந்து இறங்கினார்கள்… ஆனந்தும், ஷ்ரவ்யாவும். ஃபிரிட்ஜ் கதவைத் திறந்தால் வேகமாக முகத்தில் வந்து மோதுமே… அப்படியொரு குளிர்ச்சி ஊட்டியில்! ஊரே ஏ.சி. குளுமையில் ஜில்லென்றிருந்தது. கடுகடுக்க வைக்கும் மதிய வெயிலில் சென்னை தி.நகர் வீதிகளில் அலைந்து விட்டு, சரவணா ஸ்டோர் கடை முன்பு வந்தால்… அங்கிருந்து வந்து மோதும் ஏ.சி. ... Read More »
இரண்டாம் தேனிலவு – 14
April 1, 2015
பஸ் பயணம் அமுதாவுக்கு வெறுப்பாக இருந்தது. ஊட்டி எப்போ வரும்? எப்போது பஸ்ஸில் இருந்து கீழே இறங்குவோம் என்றிருந்தது, அவளுக்கு! சலித்துக் கொண்டு குணசீலனைப் பார்த்தாள். அவன் லேப் – டாப்பில் மும்முரமாக மூழ்கியிருந்தான். “என்னங்க… என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” குணசீலனிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. அமுதாவை திரும்பிக்கூடப் பார்க்காமல் தனது வேலையிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தான். “என்னங்க… நான் கேட்டுட்டே இருக்கேன்ல. பதில் சொல்லாமலயே இருருந்தா என்ன அர்த்தம்?” “நீ மறுபடியும் கூப்பிடனும்னு அர்த்தம்.” ... Read More »
இரண்டாம் தேனிலவு – 13
April 1, 2015
குன்னூருக்கு முன்னதாக அமைந்திருந்தது அந்த அழகான இடம். மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலையேறத் துவங்கிவிட்டாலே எல்லாமே அழகுதான் என்றாலும், போகப்போக அழகு இன்னும் மெருகேறிக்கொண்டே போகும். அப்படி அழகு மெருகேறி இருந்த இடம்தான் அது. “ஆனந்த் இது எந்த இடம்? நாம மட்டும்தான் இங்கே இருக்கோம். இப்படி தனியா இருக்குறதுனால எந்தப் பிரச்சினையும் இல்லையே…” மேட்டுப்பாளையம் மற்றும் ஊட்டி மெயின் ரோட்டில், வாடகைக்கு அமர்த்தி வந்த காரை ஓரமாக நிறுத்தி விட்டுக் காட்டுக்குள் சிறிது தூரத்திற்குத் தன்னை ... Read More »
இரண்டாம் தேனிலவு – 12
April 1, 2015
மதுரையை நெருங்கிக் கொண்டிருந்தது, குணசீலனும், அமுதாவுக்கு பயணித்துக் கொண்டிருந்த சொகுசுப் பேருந்து. திடீரென்று, தேசிய நெடுஞ்சாலையில் இருந்து விலகி இடது ஓரமாக திரும்பி, அங்கிருந்த மோட்டல் முன்பு நின்றது அந்த பஸ். “கால் மணி நேரம்தான் பஸ் இங்கே நிற்கும். ஓட்டல்ல சாப்பிடுறவங்க, இறங்கி சாப்பிட்டுட்டு வேகமா வந்திடுங்க. பஸ்ச தவறவிட்டா நாங்க பொறுப்பு இல்ல.” யாருடைய பதிலையும் எதிர்பார்க்காமல், வழக்கமாக மோட்டல் வந்தவுடன் தான் சொல்லும் டயலாக்கை சொல்லிவிட்டு டிரைவருடன் ஓசி சாப்பாடு சாப்பிட இறங்கிக் ... Read More »
இரண்டாம் தேனிலவு – 11
April 1, 2015
மேட்டுப்பாளையம் ப்ளாக் தண்டரைத் தாண்டி ஊட்டியை நோக்கி மலையேறத் துவங்கியிருந்தது ஆனந்தும், ஷ்ரவ்யாவும் பயணித்த கார். நீண்டு வளர்ந்த பாக்கு மற்றும் யூகலிப்டஸ் மரங்கள், கிளைகள் பரப்பித் தாறுமாறாக வளர்ந்திருந்த காட்டுப் பலா, தேக்கு மரங்களின் நிழலில் கோடை வெயில் கொஞ்சம் கொஞ்சமாக விடை பெற்றுக் கொண்டு வந்தது. அடிக்கடி குறுக்கிட்ட கொண்டை ஊசி வளைவுகள் வழியாக பயணித்த போதெல்லாம் கரு மேகங்களை எளிதில் தொட்டு விடலாம் போலிருந்தது. ஆங்காங்கே மரங்களில் அமர்ந்து கொண்டு சேட்டைகளில் ஈடுபட்டிருந்த ... Read More »
இரண்டாம் தேனிலவு – 10
April 1, 2015
பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது திருநெல்வேலி புதிய பஸ் நிலையம். கோவை செல்லும் தனியார் சொகுசுப் பேருந்தில் குணசீலனும், அமுதாவும் அமர்ந்திருந்தனர். “மாப்ள திடுதிப்புன்னு ரெண்டு பேரும் ஊட்டிக்குப் போறீங்க. அங்கே எங்கே தங்குவீங்க? ரெண்டு பேரும் தனியா இருக்குறதுனால எந்த பயமும் இல்லீயே…” பஸ் புறப்படுவதற்கு முன்னர் தனது சந்தேகத்தை கேட்டாள் பாக்கியம். “பயப்படாதீங்க அத்த. இந்த ஹனிமூன் டிரிப் என்னோட மெட்ராஸ் ப்ரெண்ட்ஸ்ங்க அரேஞ் பண்ணினது. என்னோட மேரேஜிக்கு கிப்ட்டா, ஊட்டியில் உள்ள ஸ்டார் ஓட்டல் ... Read More »
இரண்டாம் தேனிலவு – 9
April 1, 2015
முந்தைய நாள் இரவை, கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள நண்பன் அண்ணாதுரையில் வீட்டில் ஷ்ரவ்யாவுடன் கழித்த ஆனந்த், ஊட்டி புறப்படுவதற்கு தயாரானான். “ஆனந்த்… இப்போ நீங்க ரெண்டு பேரும் நேரா கோவை புது பஸ் ஸ்டாண்டுக்குப் போங்க. அங்கிருந்து 5 நிமிடத்திற்கு ஒரு பஸ் இருக்கும். இப்போ சீசன் நேரம் என்பதால் டூரிஸ்ட் நிறையபேர் வருவாங்க. அதனால கூடுதலா பஸ் விட்டிருப்பாங்க. பஸ்ல போகப் பிடிக்கலன்னா, பிரைவேட்டா கார்ல கூட்டிட்டுப் போவாங்க. எப்படியும் ஐந்து ஆறுபேர் ஏறுவாங்க. ... Read More »
இரண்டாம் தேனிலவு – 8
April 1, 2015
மே 2ஆம் தேதி திங்கட்கிழமை. அமுதாவின் கண்கள் தூக்கத்தை தொலைத்திருந்தது அப்பட்டமாக தெரிந்தது. குணசீலனும் ஏறக்குறைய அதே நிலையில்தான் இருந்தான். அமுதாவின் சொந்த ஊரில் இருந்தே, நேராகத் திருநெல்வேலி சென்று, அங்கிருந்து ஊட்டி செல்வது என்பது குணசீலனின் பிளான். ஊட்டிக்குப் போய்ச் சேர்வதற்குள் 12 மணி நேரத்திற்கும் மேலாகிவிடும் என்பதால் புளியோதரைச் சாப்பாட்டைத் தயார் செய்யப் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தாள் அமுதாவின் அம்மா பாக்கியம். அவளை நெருங்கி வந்தான் குணசீலன். “அத்த… மதியச் சாப்பாடு எல்லாம் ரெடி ... Read More »