மாலை 6.30 மணி.மஞ்சள் வெயில் கரைந்து, முழுமையான இருட்டு எங்கும் வேகமாக நிறைந்து கொண்டிருந்தது. அதேநேரம், பளிச்சிடும் வண்ண விளக்குகளால் இரவு நேர வாழ்க்கைக்கு தயாராகிக் கொண்டிருந்தது சென்னை மாநகரம். பயணிகளின் கனிவான கவனத்துக்கு, விழுப்புரம், திண்டுக்கல், திருச்சி, விருதுநகர் வழியாக தூத்துக்குடி வரை செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் இன்னும் சற்று நேரத்தில் நான்காவது பிளாட்பாரத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லும்..! என்கிற, கம்ப்யூட்டர் ரெக்கார்டர் வாய்ஸ் எக்மோர் ரயில் நிலையத்தில் இருந்து கசிந்து வந்து கொண்டிருந்தது. முத்துநகர் ... Read More »
Category Archives: அதிசயம் ஆனால் உண்மை
இரண்டாம் தேனிலவு – 36
April 1, 2015
“ஷ்ரவ்யா… உங்க தோழி லேகாவுக்கு நேர்ந்தது துரதிர்ஷ்டவசமானது. அவள் எடுத்தது தவறான முடிவு. தான் ஏமாற்றப்பட்டு விட்டோம் என உணர்ந்த அடுத்த நொடியே போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளெய்ன்ட் தந்து இருக்கலாம். அதுவும் இல்லன்னா… அவன் தப்பானவன்; அவன்கூட இனி எந்தத் தொடர்பும் வெச்சுக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணி, அவனுடைய தொடர்பு அத்தனையையும் துண்டிச்சு இருக்கலாம்.” “ஸாரி… இன்ஸ்பெக்டர். இந்த இடத்துலதான் நீங்க மட்டுமல்ல; இந்த ஒட்டுமொத்த சமூகமே தப்பு பண்ணுது. ஒரு பொண்ணு ஓர் ஆணால் ஏமாற்றப்பட்டு ... Read More »
இரண்டாம் தேனிலவு – 35
April 1, 2015
ஊட்டியின் அன்றைய காலைப்பொழுது வழக்கம்போல் குளுகுளுவென்று இருந்தது. ஆனால், போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக அமர்ந்திருந்த ஆனந்துக்கும் ஷ்ரவ்யாவுக்கும் வியர்த்துக்கொட்டியது.மேஜையில் லேப்- டாப்பை ஆன் செய்த இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், ஆனந்த் – ஷ்ரவ்யா இருவரது முகத்தையும் மாறிமாறி உற்றுப் பார்த்துவிட்டு, இறுதியாக ஷ்ரவ்யாவை பார்த்தார். “மேடம்… இன்னிக்கு விசாரணையை உங்ககிட்டே இருந்தே ஆரம்பிக்கலாம்னு நினைக்கிறேன். நீங்க ஒரு கால் கேர்ள். ஒரு வார அக்ரிமென்ட் போட்டுதான் உங்களை இங்கே கூட்டி வந்திருக்கறதா ஆனந்த் சொல்றாரு. உங்களோட நடவடிக்கைகளை பார்த்தால் ... Read More »
இரண்டாம் தேனிலவு – 34
April 1, 2015
அமுதாவும் குணசீலனும் தங்கியிருந்த லாட்ஜ் அறை அது. கீ-செயின் கேமரா அந்த அறை முழுவதையுமே படம் பிடிக்க முடியாமல் தோற்றுக்கொண்டிரு ந்தது. ஏதோ அதிசயமாய் குணசீலன், பெட்டில் ஆன் செய்து வைத்துவிட்டு போன லேப் டாப்பைத் துல்லியமாகப் பதிவு செய்து கொண்டிருந்தது. லேப்-டாப்பில் திறந்து வைக்கப்பட்டிருந்த குணசீலனின் ஃபேஸ்புக் பக்கத்தில் அவனது நண்பர்கள் கமென்ட்களை அள்ளித் தெளித்துக்கொண்டிருந்தனர். குளித்து முடித்து ஆடை மாற்றிவிட்டு வந்த அமுதா எதார்த்தமாக லேப்-டாப்பைக் கவனித்தாள். அடுத்த நொடியே அதிர்ச்சியாகி, லேப்-டாப் எதிரே ... Read More »
இரண்டாம் தேனிலவு – 33
April 1, 2015
“ஆனந்த்… இந்த வீடியோ மட்டும் என் கையில சிக்கலன்னா, இந்த ராஸ்கல படாத பாடுபட்டுதான் பிடிக்க வேண்டியது இருந்திருக்கும். ” இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் கோபத்தில் வார்த்தைகளை உதிர்த்தபோது, அவர் முன்பு கைகட்டி, தலை குனிந்து அமைதியாக நின்றிருந்தான் ரூம் பாய் விவேக்.பிறகு, ஆனந்த்தை தனியாக அழைத்து விசாரணை நடத்தினார். மேஜையில் இருந்த லேப்-டாப்பில் அந்த வீடியோ காட்சியை இயக்குவதற்கு முன்பாக ஆனந்திடம் அப்படியொரு கேள்வி கேட்டார். “மிஸ்டர் ஆனந்த். இந்த வீடியோ காட்சியிலதான், நடந்த உண்மைகள் எல்லாமே ... Read More »
இரண்டாம் தேனிலவு – 32
April 1, 2015
ஊட்டி போலீஸ் நிலையத்தில் கவலை தோய்ந்த முகத்தோடு அமர்ந்திருந்தனர் ஆனந்தும், ஷ்ரவ்யாவும்! ‘இவ்வளவு நெருங்கிப் பழகியும், பெரிய ரகசியத்தை மறைத்துவிட்டாளே இவள்’ என்று ஷ்ரவ்யா மேல் கோபமாக இருந்தான் ஆனந்த். ஆனால், ஷ்ரவ்யாவுக்கு ஆனந்த் ஊட்டி வந்ததன் நோக்கம் தெரியும் என்பதால் அமைதியாக இருந்தாள். “உங்க ரெண்டு பேருக்கும் என்ன ஆச்சு? ரொம்ப நேரமா ரெண்டு பேரையும் கவனச்சிட்டுதான் இருக்கேன். பேசாம அமைதியா இருக்கீங்க. உண்மையை மறைச்சிட்டோமேங்கற தயக்கமா?” – லத்தியைக் கையில் சுழற்றியபடி கேட்டார் இன்ஸ்பெக்டர் ... Read More »
இரண்டாம் தேனிலவு – 31
April 1, 2015
ஆனந்தும் ஷ்ரவ்யாவும் ஊட்டி லாட்ஜ்க்கு வந்து சேர்ந்த நேரம், அந்த இடமே பரபரப்பாக இருந்தது. பத்துக்கும் மேற்பட்ட போலீஸார் ஏதோ தீவிர விசாரணையில் இறங்கியிருந்தனர். போலீஸாரைப் பார்த்ததும் ஆனந்துக்கு சட்டென்று வியர்த்தது. ‘இவர்கள் எப்படி இங்கே வந்தார்கள்? ஒருவேளை உண்மை தெரிந்துவிட்டதா?’ என்று மனதுக்குள் எண்ணியபடியே ஷ்ரவ்யாவுடன் கைகோர்த்தபடி லாட்ஜூக்குள் நுழைந்த ஆனந்தை தடுத்து நிறுத்தினார் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன். “வெல்கம் மிஸ்டர் ஆனந்த் அன்ட் ஷ்ரவ்யா. அக்யூஸ்ட் தப்பி ஓடி தலைமறைவாயிட்டா… இன்னும் ஒரு வாரத்துக்கு தலைவலி ... Read More »
இரண்டாம் தேனிலவு – 30
April 1, 2015
ஊட்டி பி1 போலீஸ் நிலையத்தின் தொலைபேசி பலமாக அலறியது. இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ரிசீவரை எடுத்து காதுக்கு கொடுத்தார்.அவர் பேசுவதற்கு முன்பாகவே எதிர்முனையில் பேசிய நபர் பதற்றத்துடன் பேசினார். “சார்… போலீஸ் ஸ்டேஷன்தானே?” “ஆமா… நீங்க யாரு? ஏன் இவ்ளோ பதற்றமா பேசுறீங்க?” “சார்… நான் ஊட்டி லேக் ரோட்டில் உள்ள ….. லாட்ஜ் மேனேஜர் ஆறுமுகம் பேசுறேன். எங்க லாட்ஜ்க்கு இரண்டு நாளைக்கு முன்னாடி புதுமண ஜோடிங்க ஹனிமூன் கொண்டாட வந்திருந்தாங்க. இன்னிக்குக் காலையில இருந்தே அவங்க ... Read More »
இரண்டாம் தேனிலவு – 29
April 1, 2015
அரை மணி நேரத்துக்கும் மேலாக காணாமல் போன ஆனந்த் பதற்றமாக வந்தான். ஷ்ரவ்யா முகத்திலும் அதிர்ச்சி ஒட்டிக்கொண்டிருந்தாலும், அவனிடம் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. “ஆனந்த்… எங்கே போனீங்க? முதுமலைக்கு போறோம்னு கூட்டிட்டு வந்தீங்க. கார்ல கொஞ்ச தூரம் போன உடனேயே, “என்னோட மணி பர்ஸையும், பிரஸ் ஐ.டி. கார்டையும் லாட்ஜ்லயே வைச்சிட்டு வந்துட்டேன்; அதை எடுத்துட்டு வந்திடுறேன்” னு சொல்லிட்டுப் போனீங்க. இப்போ, அரை மணி நேரம் கழிச்சு வர்றீங்க. ஏன், இவ்ளோ லேட்?” “ஒண்ணும் இல்ல ... Read More »
இரண்டாம் தேனிலவு – 28
April 1, 2015
“அமுதா… இன்னிக்கு நாம வெளியே எங்கேயும் போகல. இன்னிக்கு முழுக்க நாம லாட்ஜ்லதான் இருக்கப் போறோம். இன்னும் ஓப்பனா சொல்லணும்னா… இதுவரைக்கும் நமக்குள்ள நடக்காத ஃபர்ஸ்ட் நைட், ஃபர்ஸ்ட் பகலா இன்னிக்கு நடக்கப் போகுது. தயவுசெய்து, வழக்கம்போல ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லித் தப்பிக்க முயற்சிக்காத. அப்படியே நீ முடியாதுன்னு மறுத்தாலும், நான் விடப்போறதாவும் இல்ல…”சினிமாவில் வரும் வில்லன் மாதிரியே பேசினான் குணசீலன். அவனது பேச்சு அமுதாவை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. அவனுக்குப் பதில் சொல்ல முடியாமல் தவித்தாள். ... Read More »