Home » அதிசயம் ஆனால் உண்மை (page 12)

Category Archives: அதிசயம் ஆனால் உண்மை

சுதந்திர கர்ஜனை – 28

தனிநபர் சத்தியக்கிரகம் தனிநபர் சத்தியாக்கிரகத்தைத் தொடங்க காந்திஜி சத்தியாக்கிரகிகளை தானே தேர்ந்தெடுத்தார் என்பதையும், முதல் சத்தியாக்கிரகியாக வினோபாஜியைத் தேர்ந்தெடுத்தார் என்பதையும் பார்த்தோமல்லவா? யார் இந்த வினோபா என்று  முதலில் சிறிது பார்க்கலாம். சுருக்கச் சொல்வதானால் மகாத்மா காந்தியை முழுமையாகப் புரிந்து கொண்டவர் வினோபாஜி என்று காந்தியே சொன்னார் என்றால் மற்றவற்றைச் சொல்லவா வேண்டும்? மகாத்மாவினுடைய அகிம்சைக் கொள்கை என்பதும் ‘காந்தியம்’ என்று பொதுவாகக் குறிப்பிடப்படும் கொள்கையும் ஒன்றே. ‘பூதான இயக்கம்’ என்ற ஒன்றைத் தொடங்கி மிகையாக நிலம் ... Read More »

சுதந்திர கர்ஜனை – 27

உலகப்போர் தொடக்கமும் காங்கிரசில் குழப்பமும் 1939-ஆம் வருஷம் அரசியலில் பல நிகழ்ச்சிகள் அரங்கேறின. ஜெர்மனி யுத்தத்துக்குத் தயாராக இருந்தது. எந்த நேரமும் யுத்தம் வெடிக்கும் என்று உலகமே எதிர்பார்த்திருந்தது. காந்திஜி ஹிட்லருக்கு ஒரு கடிதம் எழுதினார், உலகத்தை நாசம் செய்யும் யுத்தத்தைத் தொடங்க வேண்டாமென்று. கேட்கும் மனநிலையிலா ஹிட்லர் இருந்திருப்பார்? கட்சிக் கட்டுப்பாட்டை மீறிவிட்டார் என்று சுபாஷ் சந்திர போசை காங்கிரஸ் மூன்று ஆண்டுகளுக்கு வெளியேற்றிவிட்டது.  அந்த ஆண்டு ஆகஸ்ட் 20-ஆம் தேதி மத்திய சட்டசபையில் இந்திய ... Read More »

சுதந்திர கர்ஜனை – 26

நேதாஜியின் வீர முழக்கம் இந்திய சுதந்திரப் போரைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் ‘நேதாஜி’ என்று அன்போடு அழைக்கப்பட்ட சுபாஷ் சந்திர போஸ் பற்றி விரிவான பல செய்திகளைக் கொடுக்க வேண்டும். என்றாலும் கட்டுரையின் அளவு நீண்டு கொண்டே போகக் கூடாது என்பதால் சுருக்கமால சில செய்திகளைச் சொல்லிவிட்டுப் பின் வரலாற்றைத் தொடர்கிறேன். ‘பருப்பு இல்லாமல் கல்யாணமா?’ என்பது போல,      நேதாஜி இல்லாமல் இந்திய சுதந்திரப் போர் வரலாறா என்று கேட்பார்கள். “இந்தியா உடனடியாக சுதந்திரம் பெற்றாக வேண்டும், ... Read More »

சுதந்திர கர்ஜனை – 25

காந்திஜி விலகினார்! 1932. மகாத்மா காந்தி வரிகொடா இயக்கம் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. கள்ளுக்கடை மறியலும் அதனால் கைது நடவடிக்கைகளும், சிறைவாசமுமாக போராட்டக் களம் சூடு பிடித்துக் கொண்டிருந்தது. நாட்டில் சிறைச்சாலைகள் எல்லாம் சத்தியாக்கிரகிகளால் நிரப்பப்பட்டிந்தன. காந்தியடிகளும் சிறையில் இருந்த காலத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம் பல அரசியல் சீர்திருத்தங்களை அறிவித்தது. அதன்படி ஹரிஜனங்களுக்கென்று தனித்தொகுதி ஒதுக்கப்பட்டது. எரவாடா சிறையில் இருந்த காந்திஜி, முன்னமேயே அப்படி மக்களைப் பிரித்து ஹரிஜனங்களுக்கென்று தனித்தொகுதி ஒதுக்குவார்களானால் உண்ணாவிரதம் இருப்பேன் என்று ... Read More »

சுதந்திர கர்ஜனை – 24

காந்தி- இர்வின் ஒப்பந்தம் பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்கு என்ன சலுகைகள் வழங்கலாம், இந்தியாவின் தேவைகள் என்ன என்பது போன்ற விஷயங்களை இந்தியத் தலைவர்களுடன் விவாதித்து முடிவெடுப்பதற்காக, லண்டனில் வட்டமேஜை மகாநாடு என்ற பெயரில் கூட்டங்கள் நடத்துவது வழக்கம். அதில் இந்தியாவிலிருந்து பல பிரதிநிதிகள் சென்று வருவார்கள். 1930-இல் ஒரு வட்டமேஜை மகாநாடு லண்டனில் கூட்டப்பட்டது. அந்தக் கூட்டத்திற்கு இந்தியாவிலிருந்து காங்கிரஸ் தலைவர்கள் யாருமே செல்லவில்லை. காரணம் பெரும் தலைவர்கள் சிறையில் அடைபட்டிருந்தனர். இந்திய சுதந்திரத்துக்காகப் போராடும் மக்களின் ... Read More »

சுதந்திர கர்ஜனை – 23

பகத்சிங், சுக்தேவ், ராஜகுரு தியாகம் இந்திய சுதந்திரம் மகாத்மா காந்தியடிகளின் வழிகாட்டுதலுடனும், காங்கிரஸ் இயக்கத்தின் கீழ் மக்கள் திரண்டு போராடியதாலும் கிடைத்தது என்பதோடு, ஆங்காங்கே நடந்த சில அதீதமான தியாகச் செயல்களும் காரணிகள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. 1929 டிசம்பரில் நடந்த லாகூர் காங்கிரஸ் மாநாட்டையும் அதில் ஜவஹர்லால் நேரு அறிவித்த ‘பூரண சுயராஜ்யம்’ கோரிக்கையையும், அடுத்து 26 ஜனவரி 1930-ஐ சுதந்திர தினமாக அனுசரிக்கச் சொன்ன அதே காலகட்டத்தில், தனியொரு இயக்கமாக, நாடு தழுவிய ... Read More »

சுதந்திர கர்ஜனை – 22

போராட்டக் களம் தீவிரமடைந்தது 1928-ஆம் வருஷம் கல்கத்தாவில் நடந்த காங்கிரசுக்கு மோதிலால் நேரு தலைவராக இருந்தார். இந்த மாநாடு முக்கியத்துவம் வாய்ந்த மகாநாடாகக் கருதப்பட்டதற்குக் காரணம் இருந்தது. இந்த நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்ககூடிய மாநாடாக அது இருந்தது. நேருவின் தலைமையில் காங்கிரசின் வருங்காலத் திட்டம் பற்றி இதில் விவாதிக்கப்பட விருந்தது. இந்தியா ஒரு குடியேற்ற நாடு என்பதை பிரிட்டிஷ் அரசு ஒப்புக்கொள்ள வேண்டுமென்பது காங்கிரசின் விருப்பம். இந்தத் தீர்மானத்தை காந்திஜி விஷயாலோசனை கூட்டத்தில் முன்மொழிய, அதற்கு சுபாஷ் ... Read More »

சுதந்திர கர்ஜனை – 21

அடக்குமுறை தாண்டவம் சைமன் கமிஷன் இந்தியாவுக்கு விஜயம் செய்வதை எதிர்த்து இந்திய மக்கள் ஒன்று திரண்டு  ‘சைமனே திரும்பிப் போ’ என்று ஒரே குரலில் எதிர்ப்பதைக் கண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் திகைத்துப் போய் நின்றது. நெல்லிக்காய் மூட்டைகள் என நம்பியிருந்த இந்திய மக்கள் இப்படி ஒருமித்த குரலில் எதிர்ப்புக் குரல் எழுப்பியது அவர்களுக்கு அச்சத்தை ஊட்டியது போலும். அவர்கள் தங்கள் ஆத்திரத்தையும் கோபத்தையும் அடக்கு முறைகளைக் கையாண்டு பதிலடி கொடுக்கத் தொடங்கினர். லாகூர் நகரத்தில் ஒரு பிரம்மாண்டமான ... Read More »

சுதந்திர கர்ஜனை – 20

சட்டசபைக்குள் முட்டல் மோதல் காங்கிரசில் இரு பிரிவினர் இருந்தனர் என்பது ஊரறிந்த விஷயம் அல்லவா? அப்போதைய சுயராஜ்ய கட்சியின் முக்கியப் பிரமுகராக இருந்தவர் சி.ஆர்.தாஸ். மிகத் திறமையான வழக்கறிஞர், வங்காளம் தந்த சிறந்த தேசபக்தர்களுள் ஒருவர். அரவிந்தரும் வங்கத்தைச் சேர்ந்தவர். இவர் ஒரு புரட்சிக்காரராக விளங்கியவர். இவர் மீது அலிப்பூர் சதிவழக்கு என்ற பெயரில் ஒரு வெடிகுண்டு வழக்கைத் தொடுத்து இவரை எப்படியாவது சிறையில் தள்ளிவிட பிரிட்டிஷ் அரசு முயற்சி செய்து அவரை சிறைபிடித்தது. அப்போது அரவிந்தர் ... Read More »

சுதந்திர கர்ஜனை – 19

வைக்கம் போராட்டம் 1925-ல் காந்திஜி விடுதலையாகி வெளியில் வந்தவுடன் தேசபக்தர்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. சட்டசபைக்குச் செல்லவேண்டுமென்ற கட்சியார்  ‘சுயராஜ்ய கட்சியார்’ என அழைக்கப்பட்டனர். இந்த சுயராஜ்யக் கட்சியார் பல மாகாணங்களில் வெற்றி பெற்று மாகாண சட்டமன்றங்களுக்குள் சென்று விவாதங்களில் ஈடுபடலாயினர். மத்திய மாகாணம், வங்காளம் ஆகிய மாகாணங் களில் சுயராஜ்யக் கட்சியார் பெரும்பான்மை பலம் பெற்றுவிட்டனர். அங்கெல்லாம் இரட்டை ஆட்சி முறை தொடங்கப்பட்டது. ஆட்சியில் சட்டமன்றத்தில் சில துறைகளும், கவர்னரின் நேரடிக் கண்காணிப்பில் சில துறைகளும் இயங்கும் ... Read More »

Scroll To Top