தியானத்தின் சிறப்பு! ஆத்மன் அல்லது கடவுளைப் பற்றிய தொடர்ந்த எண்ணப்பெருக்கே தியானம். தியான சமயத்தில் மனம் ஒருநிலைப்பட்டு, நாடி நிற்கும் பொருளின் உருவத்தைக் கொள்கிறது. சிதறுண்ட மனக்கதிர்கள் மெதுவாக ஒன்று திரட்டப்பட்டு மனம் ஒருநிலைப்படுகையில் தியானத்தில் நீங்கள் இன்பத்தை அனுபவிப்பீர்கள். தியானத்தில் நீங்கள் ஒழுங்காக இருத்தல் வேண்டும். காலை நான்கு மணி முதல் ஆறு மணி வரை உள்ள பிரம்ம முகூர்த்தத்தில் தியானத்தை நீங்கள் பயிற்சி செய்தல் வேண்டும். தியானத்திற்காக இரண்டு அல்லது மூன்று இருக்கைகளைக் கொள்ளுங்கள். ... Read More »
Category Archives: பொது அறிவு
தியான யோக ரகசியம்-4
February 24, 2015
தனிமையும் தியானமும்! ஏசுநாதர், ஜனகமஹாராஜர் மற்றும் பலர் இவ்வுலகில் இருந்துகொண்டே ஆத்மீக சாதனை செய்து ஆத்மானுபூதி அடைந்தனர். உலகின் மூலமாகவே உண்மையை உணர வேண்டும் என்பதே கீதையின் நடுநாயகமான போதனை. இது கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. ஆனால் பெரும் பகுதி மக்களால் செய்யத்தக்கதன்று. சொல்லுதல் எளியது. ஆனால் செய்வது கடினம். எத்தனை ஜனகர்களும் ஏசுநாதர்களும் தோன்றியுள்ளனர். இவர்களுக்கெல்லாம் உண்மையில் யோகப்பிரஷ்டர்கள். பெரும்பான்மை மக்களுக்கு இது அசாத்தியமானதொன்றாகும். ஏசுநாதர் பதினெட்டு வருடங்கள் மறைவில் இருந்தார். புத்தர்பிரான் எட்டு வருடம் ... Read More »
தியான யோக ரகசியம் செய்திகள் – 3
February 24, 2015
மனதை ஒருநிலைப்படுத்துவது எப்படி? புறப்பொருள்கள் இடைவிடாது மூளையைத் தாக்கிக் கொண்டிருக்கின்றன. புலன்களில் ஏற்படும் பதிவுகள் பொறிவாயில்கள் மூலமாக மூளையை அடைந்து மன எழுச்சியை ஏற்படுத்துகிறது. இப்பொழுது உங்களுக்குப் புறப்பொருள்கள் புலப்படுகின்றன. புலன்களின் மேல் ஏற்படும் பதிவுகளாலுண்டான வெளிப்புறத் தூண்டுகோலாலோ உணர்வு அல்லது நினைவின் மூலம் ஏற்படும் உட்புறத் தூண்டுகோலினாலோ உண்டாகலாம். ஒவ்வொரு தனித்த புலன் மேல் பதிவும் சிக்கலான உணர்ச்சி மூட்டையேயாகும். வெளிப்பாகத்திலிருந்து மூளையை நோக்கிச் செலுத்தப்படுகின்றன உணர்ச்சிகள். மனதின் அடித்தட்டில் ஏற்படும் ஒரு விழிப்புத்தன்மையே உணர்ச்சி. ... Read More »
தியான யோக ரகசியம் செய்திகள் – 2
February 24, 2015
தியானத்திற்குதவும் உணவு வகைகள்! சாத்துவிக உணவை மிதமாக உட்கொள்ளுங்கள். சாதம், காய்கறிகள், பருப்பு, ரொட்டி முதலியவற்றை அதிகமாக உட்கொண்டு வயிற்றைக் கனமாக்கினால் சாதனை தடைப்படும். சாப்பாட்டு ராமன், புலன்வழி நிற்போன், சோம்பேறி முதலியவர்களால் தியானத்தை நன்கு பயில முடியாது. பாலுணவு சரீரத்தை மிக மிக லேசாக்குகிறது. ஒரே ஆசனத்தில் மணிக்கணக்காக உங்களால் உட்கார முடியும். பலகீனமாகத் தோன்றினால் ஓரிரண்டு நாள் சிறிது சாதம் அல்லது பால் அல்லது பார்லி அல்லது ஏதாவது சிற்றுண்டியை நீங்கள் உட்கொள்ளலாம். சேவை ... Read More »
தியான யோக ரகசியம் செய்திகள் – 1
February 24, 2015
எது தியானம்? ஒரு பொருள், இறைவன் அல்லது ஆத்மனின் தொடர்ந்த சிந்தனைப் பெருக்கே தியானம். தைலதாரை போன்று கடவுளின், ஒரே எண்ணத்தைச் சதா மனதில் கொள்வதே தியானம். யோகிகள் அதைத் தியானம் எனத் தெரிவிக்கின்றனர். பக்தர்கள் பஜன் என்கின்றனர். ஒரு புள்ளி அல்லது பொருளின் மீது மனதை ஒன்றச் செய்வதே ஒன்றித்தல். இதைத் தொடர்ந்து தோன்றி நிற்கிறது தியானம். தியானத்திற்குரிய தேவைகள்: காலம்: அதிகாலையில் 4லிருந்து 6வரை தியானத்தை அப்பியசியுங்கள். இதுவே தியானத்தைப் பயிலுவதற்கான சிறந்த காலம். ... Read More »
வினோத உலகம்
February 8, 2015
மலைப்பாம்பு கறியை சாப்பிட்ட ஆசாமிக்கு 9 ஆண்டு ஜெயில் ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்தவர் ஆர்ச்வெல் மரம்பா. அவர், அந்நாட்டில் ‘பாதுகாக்கப்பட்ட இனங்கள்’ பட்டியலில் உள்ள மலைப்பாம்பின் மாமிசத்தை அவர் சாப்பிட்டுள்ளார். அதற்காக அவருக்கு 9 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவ ரீதியிலான பலன்களுக்காக மலைப்பாம்பு மாமிசத்தை சாப்பிட்டதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். அரிசி சாதத்தில் குண்டு துளைக்காத உடை சீனாவில் ராணுவம் தன் வீரர்களுக்கு பல்வேறு போர்ப் பயிற்சிகளை தொடர்ந்து அளிப்பது வாடிக்கையான ஒன்று. இப்படி ... Read More »
தேம்ஸ் நதியின் நடுவே திறந்தவெளி நீச்சல் குளம்
February 7, 2015
தேம்ஸ் நதியின் நடுவே திறந்தவெளி நீச்சல் குளம் இங்கிலாந்தில், புகழ்பெற்ற தேம்ஸ் நதி பாய்கிறது. லண்டன் நகருக்கு மேலும் அழகு சேர்க்கும் வகையில் பாயும் இந்த நதி, இங்கிலாந்தின் நீளமான நதி என அறியப்படுகிறது. இந்த நதியின் நடுவே திறந்தவெளி நீச்சல் குளம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த நீச்சல் குளம் விக்டோரியா பகுதியில் அமைக்கப்படுகிறது. 25 மீட்டர் நீளத்தில் அமைக்கப்படும் இந்த குளத்தில், வடிகட்டும் அமைப்பு மற்றும் அழகுபடுத்துதல் என அனைத்து பணிகளுக்காக 10 ... Read More »
பிரச்சினைக்குரிய கடல் எல்லையில் மோதல் வடகொரியா, தென்கொரியா இடையே துப்பாக்கிச்சூடு
February 7, 2015
பிரச்சினைக்குரிய கடல் எல்லையில் ஏற்பட்ட மோதலில், வட கொரியாவும், தென் கொரியாவும் துப்பாக்கிச்சூடு நடத்தின. எதிரி நாடுகள் கொரிய தீபகற்பத்தில் 1953–ஆம் ஆண்டு நடந்து முடிந்த போருக்கு பின்னர், வடகொரியாவும், தென் கொரியாவும் பகைமை கொள்ள தொடங்கின. இரு தரப்பிலும் தொடர்ந்து பனிப்போர் நிலவி வந்தது. சமீபத்தில் தென் கொரியாவும், வடகொரியாவும் கூட்டு போர்ப்பயிற்சியில் ஈடுபட்டதற்கு வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பயிற்சியின்போது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்போவதாக மிரட்டலும் விடுத்தது. சமரசப் பேச்சு ஆனால் தென்கொரியாவில் இன்சியோன் ... Read More »
பல லட்சம் பேரைக் கொன்ற படுபயங்கர கொலை முகாம்
February 7, 2015
ஹிட்லரின் நாஜிப் படையினரால் உலகப் போர் காலகட்டத்தில் பல சித்திரவதை, கொலை முகாம்கள் ஏற்படுத்தப்பட்டன. அங்கு அடைக்கப்பட்டவர்கள் மொத்தம் மொத்தமாகக் கொன்று குவிக்கப்பட்டனர். அப்படி, போலந்து நாட்டின் அவுஷ்விட்சிலும் ஜெர்மானிய நாஜிக்கள் ஒரு கொலை முகாமை ஏற்படுத்தினர். 1940-1945 காலகட்டத்தில் பத்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த முகாமில் கொலை செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலோனோர் யூதர்கள். இங்கே உயிருடன் எஞ்சியிருந்தவர்களை சோவியத் படையினர் விடுவித்தனர். அந்த நிகழ்வின் 70-வது ஆண்டு நிறைவு தினம் சமீபத்தில் கடைபிடிக்கப்பட்டது. அப்போது, முகாமில் ... Read More »
எரிமலை சீற்றத்தால் அழியப்போகும் ஜப்பான் – அதிர்ச்சி தகவல்..
January 19, 2015
ஜப்பானில் உள்ள பயங்கர எரிமலைகளில் சீற்றம் ஏற்பட்டால் அது ஜப்பான் முழுதையும் அழிக்கும் அபாயம் இருப்பதாக புவி விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். மிகப்பெரிய எரிமலை சீற்றத்தினால் அடுத்த நூற்றாண்டில் ஜப்பான் நாடு முழுதும் அழிந்து விடும் அபாயம் உள்ளது என்றும் 127 மில்லியன் மக்கள் தொகைக்கு பெரிய ஆபத்து ஏற்படும் என்றும் புதிய ஆய்வு ஒன்று திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. இது குறித்து கோபே பல்கலைக் கழக புவி விஞ்ஞான ஆய்வுத்துறை பேராசிரியர் யொஷியுகி டட்சுமி கூறும்போது, “மிகப்பெரிய ... Read More »