Home » அதிசயம் ஆனால் உண்மை » நாவல்கள் (page 9)

Category Archives: நாவல்கள்

அப்பாயணம் – 7

அதே சமயம்.. கதவை உடைத்து அப்பாவும் டாக்டர் ஹென்றியும் போலீஸ் புடை சூழ உள்ளே நுழைந்தனர். டாக்டர் ஹென்றி என்னை ஆசுவாசப்படுத்த, அப்பா ரங்கபாஷ்யத்தின் மேல் புலிப் பாய்ச்சல் பாய்ந்தார். அவர் மாறி மாறி அடித்ததில் ரங்கபாஷ்யத்தின் வாயிலும் மூக்கிலும் ரத்தம் வடிந்தது. போலிஸ் அவனைக் கைது செய்து கொண்டு போனது. அப்பா என் வாட்சை கழற்றினார். ‘‘இது ஒரு ரெகார்டிங் டிவைஸ்’’ என்றார். ஆடியோ, வீடியோ துல்லியமாக ரெகார்ட் ஆகும். என் பாதுகாப்புக்காகவும், அவனை ஆதாரத்தோடு ... Read More »

அப்பாயணம் – 6

மறு நாள் காலை எட்டரை மணி. டாக்டர் ரங்கபாஷ்யத்தின் கிளினிக்கிலிருந்து சற்று தொலைவில் காரை நிறுத்திய அப்பா என்னை மட்டும் உள்ளே போகச் சொன்னார். கிளம்பும்போது அன்பளிப்பாக ஒரு வாட்சை கையில் கட்டி விட்டார். டாக்டர் ரங்கபாஷ்யத்தின் கன்சல்டேசன் அறை. சத்தமில்லாத ஏ.சி. இடப்பக்கம் சின்னப் படுக்கை, உபகரணங்கள், மருந்துகள், பக்கவாட்டு ஷெல்ஃபில் அவர் வாங்கிய மெடல்கள்…டாக்டர் ரங்கபாஷ்யம் என்னை ஆர்வத்தோடு வரவேற்று அமர வைத்தார். பட்டாம்பூச்சியாய் ஓடிய நர்ஸை வெளியே துரத்தினார். என் ஆரோக்கியம் பற்றி ... Read More »

அப்பாயணம் – 5

நேர்முகத் தேர்வை திருப்திகரமாக முடித்தேன். அறை எண் ஏழில் டாக்டர் ஹென்றி என்பவரை பார்க்கப் பணித்தார்கள். பெரிய சைஸ் ஆப்பிளை நினைவூட்டும் முகத்துடன் டாக்டர் ஹென்றி. டாக்டர் ரங்கபாஷ்யத்துக்கு கொடுத்த வாக்குறுதிப்படி செய்தேன். டாக்டர் ஜான் லீவர்ட், கல்லீரல் புற்று நோய், இரண்டு வாரக் கெடு, இத்யாதி எல்லாவற்றையும் சொன்னேன். காப்சூல் கவரை காட்டினேன். ‘‘ஜனவரி பதினேழா?’’ டாக்டர் ஹென்றி புருவம் உயர்த்தினார். ‘‘உங்கள் கேஸ் சம்மரி, ரிபோர்ட்ஸ் அடங்கிய ஃபைல் எங்கே? முக்கியமாக பயாப்சி ரிபோர்ட்? ... Read More »

அப்பாயணம் – 4

அப்பாவை அப்பாவாகப் பார்க்காமல் வெறுமனே ஆண்மகனாகப் பார்த்தேன். வெள்ளிக் கலசம் போல் தேகம். குதிரையின் லாவகமும் சிங்கத்தின் கம்பீரமும் இணைந்த உடல் அசைவுகள். அதற்கு மேல் பார்க்க பயம்மாக இருந்தது. ‘‘சைட் அடிச்சது போதும், வா’’ என்று கூப்பிட்டு விடுவார்! ஒரே இரவில் மாற்றி விட்டாரே! என் ஈகோ தடுத்தது. இவரா மாற்றினார்? மாற்றியது கல்லீரல் கான்சராக்கும். பாட்டி எதிர்பட்டார். பூஜையறையை சுத்தப்படுத்தி விட்டு வருகிறார் போலும். புடவை மடிப்பிலும் கை நகங்களிலும் விபூதி தீற்றல். ‘‘சௌதாமினி, ... Read More »

அப்பாயணம் – 3

வீறிட்டு அலறினேன்! பாட்டி ஓடி வந்தாள். பாட்டியின் வெள்ளைப் புடவையை பற்றினேன். ‘‘என்னாச்சு என்னாச்சு சௌதாமினி? ’’ பாட்டி பதறினாள். நான் நிலை குத்தி நின்றேன். மெதுவாக கைகளை எடுத்து விட்டு புடவையை பார்த்தேன். திட்டு திட்டாக மஞ்சள் நிறம். ‘‘பாட்டி நான் சாகப்போறேன்; சீக்கிரமே சாகப்போறேன்; கொஞ்ச நாள்ல வாயிலும் மூக்கிலும் ரத்தம் வரும். அவ்வளவுதான்… அவ்வளவுதான்.’’ திமிறி திமிறி கதறினேன். வயதான பாட்டியால் என்னை சமாளிக்க முடிய வில்லை. ‘‘அது வெறும் மஞ்சகாமாலை, சௌதாமினி, ... Read More »

அப்பாயணம் – 2

‘‘உங்க அப்பாவோட பணத்துக்கும் பவருக்கும் நீ இவ்வளவு கஷ்டப்பட தேவையில்லையே, சௌதாமினி?’’ மாதங்கி ஒரு முறை கேட்டபோது நான் ஆத்திரத்தில் வெடித்து விட்டேன். ‘‘நான் அந்த ஆளோட பொண்ணு. உன்ன மாதிரி அவர… ’’ அதற்கு மேல் பேசவில்லை. ‘‘எங்க அம்மாவுக்கு இடமில்லாத மனசிலும் வீட்டிலும் எனக்கும் இடம் வேண்டாம்.’’ இங்கு அம்மாவின் அம்மாவோடு இருக்கிறேன். அம்மாவின் பூர்வீகம் கேரளாவில் செட்டிலான தமிழ் குடும்பம். பாலகிருஷ்ணன் மகள் என்கிற அடையாளம் துறந்து ‘ மல்லிகே சேச்சி’ யின் ... Read More »

அப்பாயணம் – 1

தோட்டத்தில் பூத்துக் குலுங்கிய செவ்வந்திப் பூக்களை பார்த்து கொண்டிருந்தேன். என் கண் முன்னே பூவின் இதழ்களை ஒவ்வொன்றாக பிய்த்து போட்டது காற்று. பார்க்க சகிக்காமல் உள்ளே வந்தேன். ஒரு மண் புழுவை துள்ள துடிக்க எறும்புக் கூட்டம் மேய்ந்து கொண்டிருந்தது. ஏன் எங்கு பார்த்தாலும் சித்ரவதையாக இருக்கிறது? நெற்றிப்பொட்டை அழுத்தி கொண்டேன். தலையில் அழுத்தி விரல்களை எடுத்தபோது கொத்து முடி கையோடு வந்தது. அந்த காற்றைப் போல, எறும்புக் கூட்டத்தைப் போல என்னை சின்னா பின்னப்படுத்திக் கொண்டிருந்தது ... Read More »

Scroll To Top