நண்பகல் நழுவிக் கொண்டிருந்தது. பறவைகள் கூட்டம் கூட்டமாகப் பறந்து கொண்டிருந்தன. ஒரு வழியாக எல்லா நண்பர்களும் நார்மலாகி இருந்தனர். அனைவரும் கீழே புறப்படத் தயாராயினர். அதே சமயம் பரமேஸ்வரனும் அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தான். சுருளித் தீர்த்தம் போய் தேடி விட்டு, ஏதோ சமவெளியில் எட்டு பேர் நிற்பதை பைனாகுலர் வழியே கவனித்து விட்டு வந்திருக்கிறான்! தன்னைச் சூழ்ந்து நின்ற நண்பர்களின் ‘பேயடித்த’ தோற்றம் அவனுக்குப் பதற்றத்தைக் கொடுத்தது. ‘‘என்னடா ஆச்சு?’’ பரமேஸ்வரன் குழப்பத்துடன் தியாகுவை உலுக்கினான். ... Read More »
Category Archives: நாவல்கள்
கண்டாத்ரி கோயில் – 5
March 14, 2015
வேலாயுதமும் ஜெகனும் சித்தப் பிரமையிலிருந்து முற்றாக விடுபட்டு உள்ளதை உள்ளவாறே பார்க்கத் தொடங்கியிருந்தனர் ! அதற்கு மாறாக பழனிக்கும் ராகவனுக்கும் பாதிப்பு அதிகமிருந்தது! இடைப்பட்ட நிலையில் மற்றவர்கள். பழனியும் ராகவனும் குறுகலான பாதையில் இடது மூலையில் நின்றிருந்தவர்கள். சமவெளியின் இடது மூலையில் என்ன இருக்கிறது? போய்ப் பார்த்தாலென்ன? ஜெகனிடமும் வேலாயுதத்திடமும் சொல்லி விட்டு தியாகு இடப்பக்கம் போனான். வேலாயுதம் தியாகுவின் இடத்தில் நின்று கொள்ள, ஜெகன் தியாகுவுக்கு இடைஞ்சல் தராத, அதே சமயம் அவனுக்கு ஆபத்தென்றால் உதவக்கூடிய ... Read More »
கண்டாத்ரி கோயில் – 4
March 14, 2015
குளிர் இன்னும் வெடவெடத்தது. இருளைக்கூட சகித்துக் கொள்ளலாம். கண்ணாமூச்சி காட்டுகிற நிழல் மரண பயத்தை உண்டாக்கியது. தூரத்தில் சாரைப்பாம்பின் ஸ் ஸ் சத்தமும், அதைத் தொடர்ந்து பறவைகள் கீச்சொலியுடன் சிறகடிக்கிற சத்தமும்..தியாகு நண்பர்கள் ஒவ்வொருவரையும் அவர்கள் கண் மூடிய நிலையிலேயே கை பிடித்து அழைத்து வந்து சமவெளியின் மையத்தில் உட்கார வைத்தான்.. அவனுக்கும் சித்தப்பிரமை பிடித்து விடுமோவென்று பயமாக இருந்தது. நண்பர்களுக்கு திகில் விலகவில்லை. தியாகு அவர்களை ஆசுவாசப்படுத்தினான். ‘‘தியாகு, ரொம்ப நன்றிடா. இங்கதான இருக்க? நீ ... Read More »
கண்டாத்ரி கோயில் – 3
March 14, 2015
‘‘இந்தக் கோயிலைப் பார்த்தவங்க அடுத்த நாள் சூரியோதயத்தை பார்க்க முடியாதாமே? அப்ப… அப்ப… நாமெல்லோரும் சா…சாகப் போறோமா? ’’ நண்பர்கள் தங்களுக்குள் கேட்டுக் கொண்டனர். ‘‘அப்படி இருக்காதுடா.. இதுக்குள்ள விலையுயர்ந்த பொருள் எதுனா மறைச்சி வச்சிருப்பாங்க; யாரும் வந்து எடுத்துட்டு போகாம இருக்க வதந்தி கிளப்பி விட்ருப்பாங்க.’’ ஏறினார்கள்… நடந்தார்கள் ஏறினார்கள்..நடந்தார்கள்! ஒரு கட்டத்தில் கோயிலைக் காணவில்லை; உடைந்த ‘ட’ எழுத்தைப் போன்ற இடம் (‘| —’) வந்தது. எழுத்தின் படுக்கைக் கோடாக புதர் மண்டிய சமவெளி ... Read More »
கண்டாத்ரி கோயில் – 2
March 14, 2015
கம்பம் லாட்ஜிலிருந்து காலை ஏழு மணிக்கெல்லாம் மினி பஸ் சுருளி தீர்த்தம் நோக்கி சீறிப் பாய்ந்தது. டிரைவரின் வண்டியோட்டுதலில் நிதானமில்லை. ஆனால் அந்த கோஷ்டிக்கு அதுதான் பிடித்திருந்தது. வண்டியில் எல்லோரும் அரைத் தூக்கத்தில் இருந்தனர். வழியில் டிரைவரும் டிராபிக் கான்ஸ்டபிளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த நேரம் பரமேஸ்வரன் இயற்கை உபாதையைத் தணிக்க கீழே இறங்கினான். போகிற பாதையெல்லாம் திராட்சைத் தோட்டங்களும் பெரிய பெரிய மரங்களுமாய் மாறி மாறி வந்தன. மினி பஸ் சற்று தூரத்திலேயே நின்று விட பயணிகள் ... Read More »
கண்டாத்ரி கோயில் – 1
March 14, 2015
மதுரையிலிருந்து புறப்பட்ட தனியார் மினி பஸ் கண் மூடித்தனமாக பெரியகுளத்தை தாண்டி கம்பம் நோக்கி விரைந்து கொண்டிருந்தது. பஸ்ஸில் டிரைவரைச் சேர்க்காமல் மொத்தம் ஒன்பது பேர். அனைவருமே ‘மை க்ளீன்’ ரசாயணக் கம்பெனியில் சமீபத்தில் வேலைக்கு சேர்ந்தவர்கள். பரமேஸ்வரன், துரைராஜ், விவேக், ஜெகன், பழனி, வேலாயுதம், தியாகு, சரவணன் மற்றும் ராகவன். எல்லோருக்கும் வயது முப்பதிலிருந்து முப்பத்தைந்துக்குள்; யாருக்கும் மணமாகவில்லை. பஸ் முழுக்க பேச்சும் கூத்துமாக வழிந்தது. தியாகு மட்டும் டல்.அவனுக்கு மூக்கில் கட்டி; கூட ஜலதோஷம்; ... Read More »
ஹோட்டல் கோல்டன் பாலஸ் – 13 இறுதி அத்தியாயம்.
March 13, 2015
அன்று வெள்ளிக் கிழமை. ஆயிற்று! எல்லாம் முடிந்து விட்டது. அதாவது ஹோட்டலில் வேலையை முடித்து விட்டு கொஞ்சம் பழங்கள், ஹார்லிக்ஸ் எல்லாம் எடுத்துக்கொண்டு ஆரண்யா மேடத்தை பார்க்க பங்களாவுக்குப் புறப்பட்டேன். களைத்துப் படுத்திருந்த ஆரண்யா மேடம் என்னைப் பார்த்ததும் கனகம்மாளை வெளியே அனுப்பி கதவை லாக் செய்தார். “ மேடம் ” மெல்ல அழைத்தேன். “நவீனை நீங்க கொல்லல; அவன் செத்தது டிஎன்ஏ தெரபியால. அதுக்கு ஆதாரமே நீங்கதான். பன்னெண்டு எம்மெல் பாதரசத்தை நீங்க குடிச்சு இருபத்து ... Read More »
ஹோட்டல் கோல்டன் பாலஸ் – 12
March 13, 2015
அன்று வியாழக் கிழமை. நேற்றுப் போலவே பங்களாவில் வேலையாட்கள் இல்லை. ஆரண்யா மேடம் களைப்பாகத் தெரிந்தார். சொல்லத் தொடங்கினார். “ பார்வதி தாய்லாந்து ஹோட்டல்ல ட்ரைனிங் எடுத்துட்டிருந்த போது நவீன் ஒரு சின்னப் பொண்ணை கற்பழிச்சு கொலை பண்ணியிருக்கான். நேரில் பார்த்த சாட்சியோ, ஆதாரமோ இல்ல. கொலைப் பழியை பொண்ணோட வந்த கிழவன் ஏத்துக்கிட்டான். பெண்ணோட உடம்புல கிழவனோட விந்தணுக்கள் கிடைச்சிருக்கு. கிழவனுக்கு மரண தண்டனை கிடைச்சது. கிழவனோட குடும்பம் மியான்மருக்கு போயிடுச்சு. அவங்களுக்கு எங்கிருந்தோ கட்டு ... Read More »
ஹோட்டல் கோல்டன் பாலஸ் – 11
March 13, 2015
அன்று புதன் கிழமை. இரண்டு மாதம் ஓடியது தெரியவில்லை. கேஸ் ஒரு வழியாக முடிந்தது. மிதுன் பாண்டேயுடனான பிசினஸ் தொடர்பு உள்ளிட்ட அனைத்து உறவுகளும் அற்றுப் போயின. நிலைமையை சரியாக்க நான் மிகவும் மெனக்கெட்டேன். கடைசியில் போலிஸ் இன்ஸ்பெக்டர் நான் நன்றாக ஒத்துழைத்ததாக பாராட்டுமளவு நடந்து கொண்டேன். கோர்ட்டில் நவீனுடைய கேஸ் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட அந்த நாளே தள்ளுபடி செய்யப்பட்டது! இங்கேயும் நவீனுடைய மரணம் டிஎன்ஏ தெரபியின் பக்க விளைவு என்று முடிவானது! நவீனின் இறப்பு ... Read More »
ஹோட்டல் கோல்டன் பாலஸ் – 10
March 13, 2015
அன்று சனிக் கிழமை. மிதுன் பாண்டேயின் வற்புறுத்தலால் போலிஸ் கேஸாகி, நவீன் உடல் போஸ்ட் மார்ட்டம் செய்யபட்டது. நவீனின் வயிறு கழுவி விட்டாற் போல் காலியாக இருந்ததாம். வாந்தி பேதி சாம்பிளும் கிடைக்காத நிலையில் அவன் இறப்பு உணவில் விஷம் கலந்து ஏற்பட்டிருக்கலாம் அல்லது டிஎன்ஏ தெரபியின் பக்க விளைவாகவும் இருக்கலாம் என்றது ரிப்போர்ட். எங்கள் ஹோட்டலின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பக்காவாக இருந்ததால் இறப்பு டிஎன்ஏ தெரபியின் பக்க விளைவு என்று முடிவானது! நான் கண்களில் எரிச்சலும் ... Read More »