மதியம் 1.30 மணி – சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. பயணிகள் ரெயில் நிலையத்திற்குள் வருவதும் போவதுமாக இருந்தனர். எப்பொழுதாவது அதிரடியாக பின்பற்றப்படும் பாதுகாப்பு கெடுபிடிகள் இல்லாததால் மெட்டல் டிடெக்டர் சோதனை வாயில் வழியாக செல்வதை அலட்சியப்படுத்திச் சென்று கொண்டிருந்தனர் அவசர கதியில் ஓடிய பயணிகள். ரெயில் நிலையத்திற்குள் ஆங்காங்கே பளிச்சிட்ட பெரிய மானிட்டர்களில் எந்தெந்த ரெயில் எப்பொழுது புறப்படும் என்கிற விவரம் நின்று நிதானமாக ஓடி க்கொண்டிருந்தது. “பயணிகளின் கனிவான கவனத்திற்கு…” ... Read More »
Category Archives: நாவல்கள்
பயம் – 9
March 24, 2015
அமுதன் நம்பிக்கை இழந்தான். அவனது விழிகள் மெல்ல மூட ஆரம்பித்தன. அவனது அம்மாவை நினைத்து கண்ணீர் கொட்டியது. கைகளை விடதுணிந்த நேரம் அவனுக்கு ஓர் குரல் கேட்டது. அமுதா… நீ இறக்கமாட்டாய்… கையை விட்டுவிடாதே.. அசரீரி மீது அவனுக்கு நம்பிக்கை கொஞ்சம் கூட இல்லை ஆனால் அன்று அவனதை நம்பினான். சுற்றும் முற்றும் தேடிப்பார்த்தான் கோபியும் விகியும் மட்டுமே பேயரைந்ததைப்போல் இருந்தனர். கொஞ்சம் அவனுக்கு தைரியம் பிறந்தது . மூடிய கண்களை நன்றாக திறந்து தேடினான். ஒன்றும் ... Read More »
பயம் – 8
March 24, 2015
யாரோ தன்னை பின்னல் இழுப்பதை உணர்ந்ததும் அவன் கை வேகமாக அருகில் இருந்த சுவற்றில் இருந்த ஒரு சிறிய இடுக்கினை பற்றிக்கொண்டான். பயம் அவனுள் ஆழமாக குடிகொண்டிருந்தது.அதில் அவனுக்கு தெரிந்த அரைகுறை நீச்சலும் மறந்து போயிருந்தது. அவன் அந்த இடுக்கினை பிடித்தாலும் அவனதுகால்களை யாரோ பின்னோக்கி இழுத்தனர். அவனது நண்பன் தள்ளிவிடும்போது தான் நீரின் உள்ளோட்டதிற்கு அருகில் தள்ளபட்டிருப்பதை உணர்ந்தான் அமுதன். வருகின்ற நீரின் கொந்தளிப்பால் ஒரு பாதி நீர் உள்பக்கமாகவும் மறு பாதி வெளியேயும் அடித்து ... Read More »
பயம் – 7
March 24, 2015
அமுதனின்பின் மண்டைக்கு நேராய் அந்த கரிய உருவத்தின் இரும்பை ஒத்த கை மேல நன்றா ஓங்கி அடிக்க தயாரானது. திடீரென அமுதன் திரும்பினான். இவ்வளவு நாள் பயத்தையே காணாத அவனுக்கு பேயின் உருவத்தினை கண்முன்னே மிக அருகில் பார்த்தான். அவன் சிறிய வயதில் அவனது அண்ணன் , பக்கத்துக்கு வீட்டு அக்கா ஏரிக்கரையோரம் கண்முன்னே பார்த்தாய் சொன்ன அத்தனை அடையாளங்களும் அப்படியே ஒத்திருந்தது. அவனுக்கு பயப்பட கூட நேரமில்லை அடி இடது காதின் கீழ்புறம் விழுந்தது. கட்டிலில் ... Read More »
பயம் – 6
March 24, 2015
அதிகாலை 5 மணி. “டொக் டொக் ….” பதிலேதும் வரவில்லை. “டொக்..டொக்..டொக்..” கதவு இப்போது அதிகமாக தட்டப்பட்டது. “அம்மா.. போய் பால் வாங்கும்மா…! ” அமுதனின் அண்ணன் குரல் உள்ளே இருந்து கேட்டது. பொறுமை இழந்து அடுத்த முறை தட்ட முற்படும் போது கதவு திறந்தது. “கண்ணு..! என்னடா திடீர்னு வந்துருக்க.. நேத்திக்கே காலேஜ் லீவ் தான.. அப்பவே கிளம்பி வரவேண்டிதான.. ஏதாவது வேலை இருந்துச்சா?” என அமுதனின் அம்மா கேள்வி கனைகளை தொடுத்தாள். அமுதன் பதிலேதும் ... Read More »
பயம் – 5
March 24, 2015
முருகனை பார்த்துக்கொண்டிருக்கையில் பின்னே ஊர் உருவம் வெள்ளையாய் வந்து நின்றதும் மூளை நொடிப்பொழுதில் அவனது தலையை திருப்பியது. ” டே.. இப்படிதான் சத்தமே இல்லாம பின்னால வந்து நிப்பியா ? எரும..” அருதலடைந்தன் அமுதன். “ஏண்டா.. ” வெள்ளை நிற டி-ஷர்ட் ல் இருந்த கார்த்திக் ஒன்றும் புரியாமல் வினவினான். நிம்மதி அடைந்தான் அமுதான். ஆனால் கார்த்திக்கிடம் எதுவும் சொல்லாமல் படுக்க சென்றான். ரொம்ப நேரம் தூக்கம் வரத்து கருப்புநிற ஜீன்ஸ் பேண்டையே பார்த்துக்கொண்டிருந்து பின் அவனை ... Read More »
பயம் – 4
March 24, 2015
அங்கே கூடியிருந்தத அனைவரும் ஒருங்கே கவனத்தை செலுத்தியிருந்தனர். எவ்வளவோ முயன்றும் சிருக்கு அது என்ன என்பது விளங்க வில்லை. ஆனால் எதோ மிகப்பெரிய விஷயம் என வியந்து பார்த்துகொண்டிருந்தனர். மேடையிலிருந்த ஒருவர் மட்டும் குறுநகையோடு எவ்வித வியப்பும் இல்லாமல் நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். நடப்பது அவருக்கு பிடிக்கவில்லையா இல்லை அதில் அவர்க்கு ஆர்வம் இல்லையா என்பது தெரியவில்லை. அது அவரது பிரச்னை நமக்கு என்ன வந்தது. சில நிமிடங்களுக்கு பிறகு கூட்டத்திலிருந்து கைத்தட்டல் பறந்தது. ” புள்ளனா ... Read More »
பயம் – 3
March 24, 2015
” ச்ர்ர்ர்ர்….” என்ற சத்தம் கேட்ட நொடியில் அவன் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நடுங்கி போனான். அவனது மூளை அவனை எச்சரித்து உண்மையை உணரச்செய்தது. அப்பாதையில் உள்ள கடைசி கழிவறையில் யாரோ நீரினை உபயோகிக்கும் சத்தம் தான் அது என்பதை இப்போது அவன் உணர்ந்தான். மேலே நடக்கையில் மீண்டும் அதே இடம் வந்தது ” பார்க்காதே பார்க்காதே…” என் கட்டளையிட்டுக்கொண்டே நடையின் வேகத்தை அதிகப்படுத்தினான். மூன்றாவது மாடி சில நண்பர்களின் அறையை கடந்து போக வேண்டியிருந்தது. ... Read More »
பயம் – 2
March 24, 2015
“மச்சான்.. எங்க கேப்டன் சரியான சைகோ டா…” என ஆரம்பித்து புலம்பிக்கொனே வந்தான் அமுதன். கார்த்திக் அதை காதிலே வந்காதவனை போல சிறிது தூரம் சென்றதும் ” நான் தண்ணி முடுசிட்டு வரேன்.. நீ ரூம் கு போ..” என கழன்று கொண்டான். கால்கள் பயங்கரமாக வலிதததால் அமுதன் மெல்ல ஒவ்வொரு அறையாக கடந்து போய்க்கொண்டிருந்தான், அவன் மெதுவாக வரட்டும். அதற்குள் நாம் அவனையும், அவன் கல்லூரி விடுதியை பற்றியும் தெரிந்து கொண்டு வருவோம். அமுதன், பெயருக்கேற்றவாறு ... Read More »
பயம் – 1
March 24, 2015
நீண்டு வளர்ந்திருந்த அந்த ஆலமரத்திலிருந்து நெடுநாட்களாய் விடுதலைக்காக ஏங்கி, இன்று காற்றினால் அவ்வெண்ணம் நிறைவேறியது போல ஆலமர இலையொன்று காற்றில் மிதந்து வந்து ஒய்யாரமாய் தண்ணீரின் மேல் விழுந்தது. நீரில் விழுந்தும் அதன் ஆட்டம் குறையாது நீருக்கு ஏற்றவாறு அனும இங்கும் ஆடியும் தாநீருக்குள் மூழ்கியும் தனது சந்தோசத்தை கொண்டாடியது. அந்த இலையின் ஆட்டத்திற்கு ஏற்ப தனது தலையை ஆட்டிக்கொண்டே தன்னிலை மறந்து அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான் அமுதன். அந்த இல்லை இரண்டு முறை தண்ணீரில் மூழ்கி ... Read More »