ஆனந்தும் ஷ்ரவ்யாவும் ஊட்டி லாட்ஜ்க்கு வந்து சேர்ந்த நேரம், அந்த இடமே பரபரப்பாக இருந்தது. பத்துக்கும் மேற்பட்ட போலீஸார் ஏதோ தீவிர விசாரணையில் இறங்கியிருந்தனர். போலீஸாரைப் பார்த்ததும் ஆனந்துக்கு சட்டென்று வியர்த்தது. ‘இவர்கள் எப்படி இங்கே வந்தார்கள்? ஒருவேளை உண்மை தெரிந்துவிட்டதா?’ என்று மனதுக்குள் எண்ணியபடியே ஷ்ரவ்யாவுடன் கைகோர்த்தபடி லாட்ஜூக்குள் நுழைந்த ஆனந்தை தடுத்து நிறுத்தினார் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன். “வெல்கம் மிஸ்டர் ஆனந்த் அன்ட் ஷ்ரவ்யா. அக்யூஸ்ட் தப்பி ஓடி தலைமறைவாயிட்டா… இன்னும் ஒரு வாரத்துக்கு தலைவலி ... Read More »
Category Archives: நாவல்கள்
இரண்டாம் தேனிலவு – 30
April 1, 2015
ஊட்டி பி1 போலீஸ் நிலையத்தின் தொலைபேசி பலமாக அலறியது. இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ரிசீவரை எடுத்து காதுக்கு கொடுத்தார்.அவர் பேசுவதற்கு முன்பாகவே எதிர்முனையில் பேசிய நபர் பதற்றத்துடன் பேசினார். “சார்… போலீஸ் ஸ்டேஷன்தானே?” “ஆமா… நீங்க யாரு? ஏன் இவ்ளோ பதற்றமா பேசுறீங்க?” “சார்… நான் ஊட்டி லேக் ரோட்டில் உள்ள ….. லாட்ஜ் மேனேஜர் ஆறுமுகம் பேசுறேன். எங்க லாட்ஜ்க்கு இரண்டு நாளைக்கு முன்னாடி புதுமண ஜோடிங்க ஹனிமூன் கொண்டாட வந்திருந்தாங்க. இன்னிக்குக் காலையில இருந்தே அவங்க ... Read More »
இரண்டாம் தேனிலவு – 29
April 1, 2015
அரை மணி நேரத்துக்கும் மேலாக காணாமல் போன ஆனந்த் பதற்றமாக வந்தான். ஷ்ரவ்யா முகத்திலும் அதிர்ச்சி ஒட்டிக்கொண்டிருந்தாலும், அவனிடம் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. “ஆனந்த்… எங்கே போனீங்க? முதுமலைக்கு போறோம்னு கூட்டிட்டு வந்தீங்க. கார்ல கொஞ்ச தூரம் போன உடனேயே, “என்னோட மணி பர்ஸையும், பிரஸ் ஐ.டி. கார்டையும் லாட்ஜ்லயே வைச்சிட்டு வந்துட்டேன்; அதை எடுத்துட்டு வந்திடுறேன்” னு சொல்லிட்டுப் போனீங்க. இப்போ, அரை மணி நேரம் கழிச்சு வர்றீங்க. ஏன், இவ்ளோ லேட்?” “ஒண்ணும் இல்ல ... Read More »
இரண்டாம் தேனிலவு – 28
April 1, 2015
“அமுதா… இன்னிக்கு நாம வெளியே எங்கேயும் போகல. இன்னிக்கு முழுக்க நாம லாட்ஜ்லதான் இருக்கப் போறோம். இன்னும் ஓப்பனா சொல்லணும்னா… இதுவரைக்கும் நமக்குள்ள நடக்காத ஃபர்ஸ்ட் நைட், ஃபர்ஸ்ட் பகலா இன்னிக்கு நடக்கப் போகுது. தயவுசெய்து, வழக்கம்போல ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லித் தப்பிக்க முயற்சிக்காத. அப்படியே நீ முடியாதுன்னு மறுத்தாலும், நான் விடப்போறதாவும் இல்ல…”சினிமாவில் வரும் வில்லன் மாதிரியே பேசினான் குணசீலன். அவனது பேச்சு அமுதாவை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. அவனுக்குப் பதில் சொல்ல முடியாமல் தவித்தாள். ... Read More »
இரண்டாம் தேனிலவு – 27
April 1, 2015
“ஆனந்த் இன்னிக்கு தேதி என்ன?” – முதுமலை வனவிலங்குகள் சரணாலம் டூர் ப்ளானை அப்ரூவல் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஆனந்த்திடம் அப்படிக் கேட்டாள் ஷ்ரவ்யா. “நான்காம் தேதி… ஏன், திடீர்னு தேதி கேக்குற?” “அப்போ… நாம மீட் பண்ணி நாலு நாள்தான் ஆகுதா?” “நாம மீட் பண்ணினது மட்டுமல்ல, நாம பிரியறதுக்கும் இன்னும் நாலு நாள்தான் இருக்கு…” “ஏன் ஆனந்த் அப்படி பேசறீங்க?” “நம்ம ரெண்டு பேரோட ரிலேசன்சிப்க்கு போட்டு இருக்கற அக்ரிமென்ட் கரெக்ட்டா எட்டே நாள்தான். ... Read More »
இரண்டாம் தேனிலவு – 26
April 1, 2015
மே 4ஆம் தேதி. ஊட்டியின் காலைப் பொழுது வழக்கமான குளிரை இழுத்துப் போர்த்திக் கொண்டு விடிந்தது. அந்த நேரம், அமுதாவின் வாழ்க்கையோடு விளையாட சதித் திட்டம் தீட்டிக் கொண்டிருந்தான் ரூம் பாய் அசோக். அமுதாவின் அழகைப் படம் பிடிக்க நினைத்த அவன், அந்தக் கீ செயினைத் தன் கைகளில் அழகு பார்த்துக் கொண்டிருந்தான். “என்னடா… காலையிலேயே கீ செயினை கையில் வெச்சுகிட்டு விளையாடிட்டு இருக்க-? காஃபி வாங்கப் போகலீயா-?” வந்ததும் வராததுமாகக் கேட்டான் மற்றொரு ரூம் பாயான ... Read More »
இரண்டாம் தேனிலவு – 25
April 1, 2015
இரண்டாவது நாளாக ஊட்டியின் முழு இரவை அனுபவிக்க தயாராகிக் கொண்டிருந்தாள் ஷ்ரவ்யா. ஊட்டியின் குளுமை அவளது சிகப்பு மேனியில் என்னமோ மாயாஜாலங்களை செய்து கொண்டிருக்க, அதைப் புரிந்து கொள்ளாத ஆனந்த் சிறிதுநேரம் வெளியே சென்று விட்டு வருவதாக அவளிடம் சொன்னான். “என்ன ஆனந்த்… நீங்க மட்டும் தனியா போறதாச் சொல்றீங்க? நீங்க முதல்லயே சொல்லியிருந்தா நானும் உங்க கூட வந்திருப்பேன்; நைட் டிரெஸ்சுக்கு மாறியிருக்க மாட்டேன்ல?” “இல்ல ஷ்ரவ்யா. இது என்னோட பெர்சனல் வேலை. அதனாலதான் நீ ... Read More »
இரண்டாம் தேனிலவு – 24
April 1, 2015
அன்று, மாலை ஐந்து மணிக்கெல்லாம் இருட்டத் தொடங்கியிருந்தது ஊட்டி. குணசீலனும் அமுதாவும் ஊட்டியில் உள்ள ரோஸ் கார்டன், போட்டிங் ஹவுஸ், குன்னூர் சிம்ஸ் பூங்கா ஆகிய இடங்களுக்கு காரில் சென்று சுற்றிப் பார்த்துவிட்டு, ஊட்டியில் தங்கியிருக்கும் லாட்ஜூக்கு வந்து சேர்ந்தனர். சுற்றிப் பார்க்கச் சென்ற இடத்தில் அமுதா தன்னுடன் முழுஅளவில் ஒத்துழைக்காததால் கோபமாய் இருந்த குணசீலன், ஊட்டிக் குளிருக்கு இதமாக வெந்நீர் குளியல் போட பாத்ரூமுக்குள் நுழைந்தாள். ஜீன்ஸ், டீ – ஷர்ட்டில் இருந்த அமுதா, எப்போது ... Read More »
இரண்டாம் தேனிலவு – 23
April 1, 2015
“ஆனந்த்… எனக்கு இந்த பொட்டானிகல் கார்டன் போர் அடிக்குது. வேற எங்கேயாச்சும் கூட்டிட்டுப் போங்க…” மதியம் 12 மணி தாண்டி கடிகாரம் ஓடியதுகூட தெரியாமல் ஊட்டி தாவரவியல் பூங்காவின் அழகில் லயித்துக் கிடந்த ஆனந்த்தை உசுப்பி விட்டாள் ஷ்ரவ்யா. “என்ன ஷ்ரவ்யா… அப்படியொரு வார்த்தை சொல்லிட்ட? நாள் முழுக்க இந்த பூங்காவோட அழகுல மூழ்கிக் கிடக்குற ஜோடிகள் எத்தனையோ பேர் இருக்காங்க. உதாரணத்துக்கு, அங்கே தோளோடு தோள் உரசி, தாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதுகூட அடுத்தவர்கள் ... Read More »
இரண்டாம் தேனிலவு – 22
April 1, 2015
ஊட்டியில் உள்ள பிரபலமான ஓட்டல் ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டிருந்த அமுதா, தன்னை யாரும் கவனிக்கிறார்களா என்று அடிக்கடி பார்ப்பதும், வளைந்து நெளிந்து ஆடையைச் சரி செய்வதுமாக இருந்தாள். குணசீலன் கட்டாயப்படுத்தி அணியச் சொன்ன ஜீன்ஸ் பேண்ட், டீ-சர்ட் அவளுக்குப் புதிது என்பதால், அந்த ஆடை அவளுக்கு அசவுகரியமாகத் தோன்றியது. ஆனால், அமுதாவின் நடவடிக்கைகளால் மிகச் சிலரே அவளை பார்த்தார்களே தவிர, மற்றபடி அவளைப் பார்க்க வேண்டும் என்று யாரும் பார்க்கவில்லை. அமுதாவின் மனஓட்டத்தைப் புரிந்துகொண்ட குணசீலனே பேசினான். ... Read More »