Category Archives: நாவல்கள்

பருவநட்சத்திரங்கள் – 5

அவருக்கு தலையில் அடிபட்டதால ஸ்கேனும் செய்தாங்க.. அப்போ தான் புரிஞ்சது.. அவருக்கு மூளையில் ஏற்கனவே ஒரு காயமானதால் பழைய நினைவுகள் அழிக்கப்பட்டிருக்கு என்பது.. அதனால்.. தன் பற்றிய எந்த விவரத்தையும் அவரால சொல்ல முடியலை.. எனக்கு என்ன பண்றதுன்னே புரியலை கலா… அப்படியே விட்டுப் போகவும் மனமில்லை.. அவருக்கு தான் படிச்ச படிப்பு… பெயர், அன்றாட நாம் நமக்கு செய்து கொள்ளும் வேலைகள், தாய்மொழி எதுவுமே மறக்கலை.. என் நண்பன் கிட்ட சொன்னப்ப.. அவன் வந்து பார்த்தான்.. ... Read More »

பருவநட்சத்திரங்கள் – 4

(எல்லாரிடமும் விடைப்பெற்றுக் கொண்டு மீண்டும் காரில் செல்ல ஆயித்தமானார்கள் கலாவும் காமேஷும்.) காமேஷின் கார், ஜிபி தியேட்டர் தாண்டி, நூறடி சிக்னலில் நின்றிருந்தது. “அவளுக்கென்ன அம்பா சமுத்திரம்.. ஐயரு ஹோட்டலு அல்வா மாதிரி தாழம்பூவென தளதளதளவென வந்தா வந்தாள் பாரு..! அவனுக்கென்ன ஆழ்வார்க்குறிச்சி அழகுத் தேவரு அருவா மாதிரிபர்மா தேக்கென பளபளபளவென வந்தா வந்தான் பாரு…………!” – ஜில்லுனு சந்தோசமாக துள்ளல்ப் பாடலைக் கேட்டபடியே கலா- காமேஷ் ஜோடியைச் சுமந்த படி கார் பிரதான சாலையில் பயணப்பட்டிருந்தது. ... Read More »

பருவநட்சத்திரங்கள் – 3

(ஒருவரைப் பார்த்து கலா அதிர்ந்து சிலையானாள்.) அந்த ஒருவர் 70 வயதுடைய ஒரு முதியவர். 70 வயது என்று சொல்ல முடியாத அளவு 60 வயது போல் இருந்தது அவரது உடலமைப்பு. சிலையாய் நின்ற கலாவின் கண்களில் வட்ட வட்டமாய் சுழலும் அந்த கால திரைப்பட பாணியில் ஒரு சுழல் வந்து 10 வருடம் பின்னோக்கி பழைய நினைவுகளை தோண்டி எடுக்கத் துவங்கியிருந்தது. அந்த பெரியவரின் முகம் மறக்கவே முடியாமல் இன்னும் கலாவின் நினைவில் அப்படியே இருந்தது. ... Read More »

பருவநட்சத்திரங்கள் – 2

கோயிலுக்குள் நுழைந்த கலா பயத்துடனே பிரகாரத்தைப் பார்த்தாள். இருபுறமும் ஆல மரத்தாலும் வேப்ப மரத்தாலும் சூழப்பட்டு கீழே இலைகளின் காய்ந்த சருகுகள் மண்டி மண்ணோடு மண்ணாக மட்க எத்தனித்துக் கிடந்தன. அரண்ட கலாவின் கண்களுக்கு சருகுகளும் அரவமாய் தெரிந்தன. மெல்ல திரும்பி பின்னால் பார்த்தாள் கலா. துரத்திய பாம்பு வாயிற்படியைத் தாண்டி நுழைந்து ஆக்ரோசமாய் சீறியபடி அவள் நோக்கிவந்து கொண்டிருந்தது. கோயிலில் கற்ப கிரகம் பூட்டி யாருமில்லாமல் இருந்ததால்… கோயிலில் பின் பக்கம் நோக்கி அதிகரிக்கும் இதயத்துடிப்புடனே ... Read More »

பருவநட்சத்திரங்கள் – 1

‘கலா குட்டி…!! எங்கடா இருக்கே??’ என்று தன் மனைவியை கூப்பிட்டபடியே வீட்டிற்குள் நுழைந்தான் காமேஷ். அடுப்படியில் தம் பிரிய கணவருக்காக கேசரி செய்து இறக்கிய கலா, ‘இதோ வர்றேங்க..!!’ என்று கூறிய வண்ணமே முகப்பு அறைக்கு வந்து நின்றாள். ‘இந்தா..!! நான் உனக்கு என்ன வாங்கி வந்திருக்கேன்னு பாரு டா…?!!’ ‘எதுக்குங்க இப்ப பட்டுபுடவை எல்லாம்? அதான் வீட்ல நிறைய இருக்கே! நாம ஏற்கனவே முடிவு செஞ்சதை மறந்துட்டீங்களா?’ ‘என்ன முடிவு???’ என்று புருவத்தை உயர்த்தி யோசிக்கலானான் ... Read More »

இரண்டாம் தேனிலவு – 46 இறுதி அத்தியாயம்.

இரண்டாம் தேனிலவு – 46 இறுதி அத்தியாயம்.

அமுதாவை பிடிப்பதற்காக பாய்ந்த குணசீலனின் கால்களில், அவனால் உருவி வீசப்பட்டுக் கிடந்த அமுதாவின் சேலை சிக்கிக் கொள்ள… சட்டென்று தடுமாறினான். அக்கணமே நிலைதடுமாறி விழலானான். தன் மீது அவன் விழுந்து விடாமல் இருக்க விலகிக் கொண்டாள் அமுதா. ஓடிவந்த வேகத்தாலும், தடுமாறவிட்ட சேலையாலும் வேகமாக அப்படியே கீழே விழுந்தான். விழுந்த வேகத்தில்… “அம்மா” என்று பலமாகக் கத்தினான். கஷ்டப்பட்டு அவன் திரும்பிய போது, அவன் மார்பில் கத்தி பாய்ந்திருந்தது. அதிலிருந்து ரத்தம் வேகமாகப் பீறிட்டது. அந்தக் காட்சியைக் ... Read More »

இரண்டாம் தேனிலவு – 45

இரண்டாம் தேனிலவு – 45

அமுதாவை பிடிப்பதற்காக பாய்ந்த குணசீலனின் கால்களில், அவனால் உருவி வீசப்பட்டுக் கிடந்த அமுதாவின் சேலை சிக்கிக் கொள்ள… சட்டென்று தடுமாறினான். அக்கணமே நிலைதடுமாறி விழலானான். தன் மீது அவன் விழுந்து விடாமல் இருக்க விலகிக் கொண்டாள் அமுதா. ஓடிவந்த வேகத்தாலும், தடுமாறவிட்ட சேலையாலும் வேகமாக அப்படியே கீழே விழுந்தான். விழுந்த வேகத்தில்… “அம்மா” என்று பலமாகக் கத்தினான். கஷ்டப்பட்டு அவன் திரும்பிய போது, அவன் மார்பில் கத்தி பாய்ந்திருந்தது. அதிலிருந்து ரத்தம் வேகமாகப் பீறிட்டது. அந்தக் காட்சியைக் ... Read More »

இரண்டாம் தேனிலவு – 44

இரண்டாம் தேனிலவு – 44

“அமுதா… நீ இந்த அளவுக்குப் பேசுவன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல. நானும் பழம் கனிஞ்சு, மடியில விழும்னு காத்திட்டு இருந்தா… அது நடக்கற மாதிரியே தெரியல. இன்னிக்குப் பழத்த சாப்பிட்டுற வேண்டியதுதான்.” குணசீலனின் பேச்சு அமுதாவுக்கு ஆரம்பத்தில் புரியவே இல்லை. அவன் பேச்சின் அர்த்தம் புரியாமல் பயத்தில் விழிகளை உருளவிட்டாள். “என்னடி… பாக்குற. இப்போ நம்ம ரெண்டு பேருக்கும் ஃபஸ்ட் நைட் நடக்கப் போகுது. நீ ஒத்துழைக்கலன்னாலும் அது இன்னிக்கு இப்போ நடந்தே தீரும். நீ கத்திக் ... Read More »

இரண்டாம் தேனிலவு – 43

இரண்டாம் தேனிலவு – 43

அமுதாவும் குணசீலனும் தங்கியிருந்த லாட்ஜ் அறையில் சிறிதுநேரத்துக்கு மவுனமே நிலவியது. அந்த மவுனத்தை கலைத்துக் கொண்டு கத்தியது காலிங்பெல். வெளியில் சென்ற குணசீலன்தான் திரும்பி வந்திருக்க வேண்டும் என்கிற கணிப்போடு, கேமராவில் தன்னைப் பதிவு செய்தாள் அமுதா. திடீரென்று என்ன நினைத்தாளோ, கதவைத் திறப்பதற்காகச் சென்றவள், ஷெல்ஃப் கண்ணாடி அருகில் வந்து நின்றாள். அவளது முகம் அந்தக் கண்ணாடியில் எந்த அளவுக்கு க்ளோஸ்-அப் காட்சியாக தெரிந்ததோ, அதே அளவுக்குக் கேமராவின் கண்களிலும் பதிவாகி இருந்தது.தான் அழும் ஓசை ... Read More »

இரண்டாம் தேனிலவு – 42

இரண்டாம் தேனிலவு – 42

ஊட்டி காவல் நிலையத்தில் அன்றைய தினம் வழக்கத்துக்கு மாறாக ஒருவித சோக அலை அடித்துக் கொண்டிருந்தது. எதிரெதிர் இருக்கைகளில் அமர்ந்திருந்த ஆனந்தும் அமுதாவும் பல மாதங்களுக்குப் பிறகு நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்பு கிடைத்தும், பார்க்க முடியாமல் திணறினார்கள். தலை கவிழ்ந்திருந்த இருவரது கண்களில் இருந்தும் எக்குதப்பாய் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. “அரை மணி நேரம் ஆச்சு. நீங்க ரெண்டு பேருமே இப்படி பேசாம அமைதியா இருந்தா, நாங்க எப்படி விசாரணை பண்ண முடியும். உங்களோட இந்த ... Read More »

Scroll To Top