பூத்தது புதிய யுகம்! 1947 ஆகஸ்ட் 15. இந்திய வரலாற்றில் மறக்கமுடியாத நாள். அடிமைப்பட்டுக் கிடந்த இந்திய சுதந்திரமாக எழுந்து நின்ற நாள். நாமக்கல்லார் பாடியபடி ‘கத்தியின்றி ரத்தமின்றி’ நடந்த யுத்தத்தில் கிடைத்த வெற்றி இது. இங்கு இந்த ‘கத்தியின்றி ரத்தமின்றி’ எனும் இந்தச் சொற்றொடரின் பொருள் வேறு. நம்மை ஆண்ட பிரிட்டிஷாரின் மீது கத்தி வீசாமலும், அவர்களது ரத்தத்தைச் சிந்தாமலும், நம்மை வருத்தி இந்திய தேசபக்தர்களின் ரத்தத்தின் மீது கட்டப்பட்ட சுதந்திர மாளிகை இது. ... Read More »
Category Archives: தொடர் கதை
சுதந்திர கர்ஜனை – 39
May 5, 2015
ஜவஹர்லால் நேருவின் சுதந்திர உரை 1947 ஆகஸ்ட் 14-ஆம் நாள் நள்ளிரவு 12 மணிக்கு தில்லி மாநகரில் பிரிட்டனின் யூனியன் ஜாக் கொடி இறக்கப்பட்டு இந்தியாவின் மூவண்ண சுதந்திரக் கொடி ஏற்றப்படுகிறது. அரசியல் சட்டம் இயற்ற அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபை கூடுகிறது. தலைமைப் பீடத்தில் பாபு ராஜேந்திர பிரசாத். சரியாக 12 மணிக்கு ஜவஹர்லால் நேரு எழுந்து நாட்டு மக்களுக்கு ஓர் உரையாற்றுகிறார். மிகப் பிரபலமான அவரது உரையின் தமிழக்கத்தை இப்போது பார்ப்போம். (தில்லியில், இந்திய அரசியல்சட்டத்தை ... Read More »
சுதந்திர கர்ஜனை – 38
May 5, 2015
ரத்தச் சேற்றில் பூத்த சுதந்திரத் தாமரை பிரிட்டிஷ் பிரதமர் ஆட்லி இங்கிலாந்து காமன்ஸ் சபையில் இந்தியாவுக்கு 1948 ஜூன் மாதத்தில் சுயாட்சிப் பொறுப்பு வழங்கப்படும் என்று அறிவித்தாரல்லவா? அந்த அறிவிப்பை ஓரளவு துணிச்சலான அறிக்கைதான் என்றார் ஜவஹர்லால் நேரு. அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி கூடி பிரிட்டிஷ் பிரதமரின் அறிவிப்பை வரவேற்று தீர்மானம் நிறைவேற்றியது. மதக் கலவரங்கள் நடந்த இடங்களுக்கெல்லாம் சென்று மக்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு காந்திஜி 1947 மார்ச் மாதம் பிகாரிலுள்ள பாட்னாவுக்கு வந்தார். ... Read More »
சுதந்திர கர்ஜனை – 37
May 5, 2015
சுதந்திரம் வந்தது! தேசம் உடைந்தது! இரண்டாம் உலக யுத்தம் ஒரு முடிவுக்கு வந்தது. 1945 மே மாதம் 7-ஆம் தேதி நேச நாடுகளிடம் ஜெர்மனி நிபந்தனையின்றி சரணடைந்து விட்டது. பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்குச் சில சலுகைகளை அறிவித்தது. சிறையிலிருக்கும் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற அறிவிப்பும் வந்தது. அதே ஆண்டில் ஜூலை 26-இல் நடந்த பிரிட்டன் பொதுத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி தோற்று, தொழிற்கட்சி ஆட்சியைப் பிடித்தது. கிளெமண்ட் ஆட்லி இங்கிலாந்தின் பிரதமரானார். இந்தியாவிடம் அனுதாபம் ... Read More »
சுதந்திர கர்ஜனை – 35
May 5, 2015
தேவகோட்டை தேசபக்தர்கள் கோட்டையாயிற்று! ”போராட்டம்! போராட்டம்! முடிவில்லாத போராட்டம். இதுவே பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு நமது பதிலாகும்” (Struggle! Struggle! Eternal struggle. This is my reply to the British Imperialism). -இது ஜவஹர்லால் நேரு 1942 பம்பாய் காங்கிரசில் உதிர்த்த எழுச்சி உரையாகும். அங்கு தன்னுடைய உரையில் ஜவஹர்லால் நேரு சொன்ன கருத்து: “இந்தியாவின் தன்மானம் பேரம் பேசப்படும் பொருள் அல்ல. இந்திய சுதந்திரத்தை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்து பேரம் பேசி வாங்க முடியும் என நம்மில் ... Read More »
சுதந்திர கர்ஜனை – 34
May 5, 2015
குலசேகரப்பட்டினமும் ‘தூக்குமேடை’யும் 1942 ஆகஸ்ட் புரட்சியை தலைமையேற்று நடத்த காங்கிரசின் தலைமையில் யாருமே வெளியில் இல்லை; அனைவருமே சிறையில் அடைபட்டுவிட்டனர் என்றால், இதை பின் யார் தான் வழிநடத்தியிருக்க முடியும்? காங்கிரஸ் தீர்மானத்தில் காணப்படுவதைப் போல அவரவர் தனக்குத் தானே தலைவராக ஆகியிருந்தால் ஒரேமாதிரியான போராட்டம் நாடு முழுவதும் எப்படி நடந்திருக்க முடியும்? யாருமே சிந்திக்க வேண்டிய செய்தியல்லவா இது. ஆம்! சில தலைவர்கள் இருந்தார்கள். இந்த ஆகஸ்ட் புரட்சிக்குத் தலைமை வகித்தார்கள். வரலாற்று நாயகர்களான அவர்கள் ... Read More »
சுதந்திர கர்ஜனை – 33
May 5, 2015
மதுரை மாநகரத்தில் பெண்கள் இட்ட தீ! காந்திஜி பம்பாய் ஆசாத் மைதானத்தில் எழுப்பிய “செய் அல்லது செத்து மடி” எனும் கோஷம் இந்தியாவின் நாலாபுறங்களிலும் எதிரொலிக்கத் தொடங்கியது. திரும்பிய இடங்களில் எல்லாம் போராட்டம்; இதுவரை காந்திய வழியில் நடந்த போர் இப்போது யாருடைய உயிருக்கும் ஆபத்தை விளைவிக்காமல் முக்கியமான தொலைதொடர்பு சாதனங்களை அழித்து ஆளும் ஆங்கிலேய வர்க்கத்துக்கு போர்க்காலத்தில் நெருக்கடி கொடுக்கும் போராக அமைந்திருந்தது. காந்திஜி தன்னுடைய தீர்மானத்தில் இப்படித்தான் இந்தப் போராட்டம் இருக்கும் என்பதைச் சொல்லவில்லையாயினும், ... Read More »
சுதந்திர கர்ஜனை – 32
May 5, 2015
எங்கெங்கு நோக்கினும் பற்றி எரியுது கோவைப் பகுதியில் நடந்த நிகழ்ச்சிகளை சுருக்கமாகப் பார்த்தோம். இனி தஞ்சை மாவட்டத்தில் நடந்த இரு நிகழ்ச்சிகளைப் பார்ப்போம். முதல் நிகழ்ச்சியில், திருவையாறிலுள்ள அரசர் கல்லூரியில் தொடங்கி அங்கிருந்த அரசு அலுவலகங்கள் தீக்கிரையான செய்திகளையும், தொடர்ந்து சீர்காழியில் ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள உப்பனாற்றுப் பாலத்துக்கு வெடிகுண்டு வைத்த வழக்கையும் பார்க்கலாம். முதலில் திருவையாற்று நிகழ்ச்சி. ஆன்மீகத் துறையில் மட்டுமல்லாது திருவையாறு அரசியலிலும் முன்னணி வகித்திருக்கிறது. இந்திய சுதந்திரப் போர் உச்ச கட்டத்தை ... Read More »
சுதந்திர கர்ஜனை – 31
May 5, 2015
பற்றி எரிந்தது நாடு இதென்ன கொடுமை! காங்கிரஸ் மகாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றினார்கள், அதில் ‘இத்தனை ஆண்டுகாலம் இந்த நாட்டை சுரண்டிய அன்னியனே நீ வெளியேறு’ என்று குரல் கொடுத்தார்கள். முடிந்தால் உடனே கப்பல் ஏறியிருக்க வேண்டும், அல்லது உங்களோடு ஒட்டும் உறவும் வைத்துக்கொண்டு ஆட்சியை உங்களிடம் தந்துவிடுகிறோம் என்று சமாதானமாகப் போயிருக்க வேண்டும். இரண்டும் இல்லாமல் இந்த மண்ணில் வந்து தங்கிக் கொண்டு, இந்த மண்ணின் மைந்தர்களைக் கண்மூடித்தனமாக தாக்கியும், துப்பாக்கியால் சுட்டும், சிறையில் அடைத்தும் ... Read More »
சுதந்திர கர்ஜனை – 30
May 5, 2015
வெள்ளையனே இந்தியாவை விட்டு வெளியேறு! 1942, ஆகஸ்ட் மாதம் 8-ஆம் தேதி. பம்பாய் ஆசாத் மைதானம். ஆயிரக் கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் அமைதியாக மகாத்மா காந்தியடிகளின் உரையைக் கேட்டுக் கொண்டிருக் கின்றனர். ‘Quit India’ தீர்மானத்தை முன்மொழிந்து மகாத்மா வாதங்களை முன்வைக்கிறார். ‘ஆகஸ்ட் க்ரந்தி’ என்று இந்தி மொழியில் சொல்லப்படும் இந்தப் போராட்டம் அமைதி வழியில் பிரிட்டிஷாரை இந்த நாட்டைவிட்டுப் போய்விடும்படி கேட்டுக் கொள்ளும் போராட்டம். இதற்கு முன் எத்தனையோ போராட்டங்களை காந்திஜியின் தலைமையில் காங்கிரஸ் நடத்தியிருந்தும், இந்தப் ... Read More »