ஜான் கிராஃபோர்டுக்குப் பிறகு சிங்கப்பூர் நிர்வாக அமைப்பில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. சீனாவுடன் அதிக அளவில் வர்த்தகம் ஏற்படவும், கிழக்கிந்தியக் கம்பெனியின் வர்த்தகத்தை விரிவுபடுத்தவும் பல திட்டங்கள் தீட்டப்பட்டன. மலாக்கா, பினாங் இவற்றுடன் சிங்கப்பூரும் ஸ்ட்ரெயிட்ஸ் செட்டில்மென்ட் என்ற பெயரில் இணைந்தது. மூன்று நகரங்களுக்கும் பொதுவான ஒரு ஆளுனர், தனித்தனியே நகரத் தலைவர்கள் என நிர்வாக அமைப்பு மாற்றம் கண்டது. 1824 ஆம் ஆண்டு, ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ராபர்ட் ஃபுல்லர்டான் (Robert Fullerton) பினாங் ஆளுனராகப் பணியாற்றினார். ... Read More »
Category Archives: தொடர் கதை
ஒரு நகரத்தின் கதை – 19
May 15, 2015
1823 ஆம் ஆண்டு ராஃபிள்ஸ் இங்கிலாந்து திரும்பிய பின்னர் ஜான் கிராஃபோர்ட் சிங்கப்பூரின் ஆளுனராகச் செயல்படத் தொடங்கினார். கிராஃபோர்ட் நிர்வாகக்தின்கீழ் சிங்கப்பூர் மேலும் வளர்ச்சியடைந்தது. மக்கள் தொகை பெருகியது. இதனால் வர்த்தகம் வளர்ந்து அரசாங்கத்துக்கு அதிக வருமானம் கிடைத்தது. கிராஃபோர்ட் வருமானத்தைப் பெருக்குவதற்குப் பெரும் முயற்சிகள் எடுத்தார். சிங்கப்பூர் துறைமுகத்தையும், அதனை ஒட்டி வளர்ந்து வரும் நகரத்தையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்தார். கப்பல்களைத் துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்துவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நிலையை ... Read More »
ஒரு நகரத்தின் கதை – 18
May 15, 2015
இனி சிங்கப்பூரை நிர்வகிக்க வந்த அடுத்த ஆளுநரைப் பற்றிப் பார்ப்போம். இவரையும் ராஃபிள்ஸ்தான் தேர்ந்தெடுத்தார். அவர் டாக்டர் ஜான் கிராஃபோர்ட். 1783 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தில் பிறந்தவர். இவர் அப்பா ஒரு மருத்துவர். எனவே இவரும் தம் இருபதாவது வயதில் எடின்பர்க் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்துப் பட்டம் பெற்றார். கிழக்கிந்தியக் கம்பெனியில் இந்த மூன்று பேரும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில்தான் வேலைக்குச் சேர்ந்தனர். ஃபர்குவார் இராணுவப் பிரிவில், ராஃபிள்ஸ் நிர்வாகப் பிரிவில், கிராஃபோர்ட் மருத்துவப் பிரிவில் ... Read More »
ஒரு நகரத்தின் கதை – 17
May 15, 2015
ராஃபிள்ஸ் ஃபர்குவாரின் நெருங்கிய நண்பர். ஒன்றாக வேலை செய்தவர்கள் என்ற உறவுக்கு அப்பாற்பட்டு இருவரும் செயல்பட்டனர். வில்லியம் ஃபர்குவார் மட்டுமில்லை, ராஃபிள்ஸும் உள்ளூர் மலாய் மக்களிடம் பெரிய மதிப்பும் அன்பும் கொண்டவர். ஆனால் இப்படிப் பட்ட கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டபோது, ராஃபிள்ஸ் ஃபர்குவாருக்குக் கிடைத்த மலாய் உறவுகளைப் பற்றி சற்று ஏளனமாகப் பேசினார். மலாய் மனைவி, அவர் குழந்தைகள் இவர்களைப் பற்றியும் மலாய் தொடர்பினால் கிடைத்தவை என்று சற்று கிண்டலுடன் குறிப்பிட்டார். மேலும் வில்லியம் ஃபர்குவாரைத் தான் ... Read More »
ஒரு நகரத்தின் கதை – 16
May 15, 2015
வில்லியம் ஃபர்குவார் மலாக்காவில் தங்கியிருந்த நாட்கள்தான் அவர் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாட்கள். இளமையான துடிப்பான வாலிபனாக பலவற்றையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்துடன் கிழக்கிந்தியக் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தார். டச்சுக்காரர்கள் வசம் இருந்த மலாக்காவைக் கைப்பற்றி பிரிட்டிஷ் அரசாங்கத்தின் வசம் கொண்டு வருவதற்கான சண்டையில் கலந்து கொண்டு மலாக்காவை பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வந்தார் என்பதை சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். மலாக்காவின் இராணுவத் தலைமையும், ஆட்சியாளர் பொறுப்பையும் இவர் ஏற்றார். சுல்தான்களின் அரசாட்சியில் இருந்த ... Read More »
ஒரு நகரத்தின் கதை – 15
May 15, 2015
வில்லியம் ஃபர்குவார் சிங்கப்பூர் ஆற்றின் வடகிழக்குப் பகுதி, சதுப்பு நிலமாக இருந்த பகுதியை சுத்தம் செய்து பெரிய கடைத்தெருவாக மாற்றினார். 1820 ஆம் ஆண்டு, சிங்கப்பூர் உருவாக்கப்பட்ட மறு ஆண்டே குடியேறிகளின் பாதுகாப்பிற்காக முறையான போலீஸ் படையை உருவாக்கினார். மலாக்காவில் இருந்தபோது மலாய் மக்களின் நன் மதிப்பைப் பெற்று ‘மலாக்காவின் ராஜா’ என்று அனைவரும் அழைத்தனர். அதனால் மலாக்காவிலிருந்த பல மக்கள் சிங்கப்பூருக்குக் குடி பெயர்ந்தனர். வில்லியம் ஃபர்குவார் மேல் இருந்த அன்பினாலும் மதிப்பினாலும் மலாக்காவிலிருந்து சிறு ... Read More »
ஒரு நகரத்தின் கதை – 14
May 15, 2015
சிங்கப்பூர் 1819ஆம் ஆண்டிலிருந்து ஒரு முக்கியமான வணிக மையமாகச் செயல்படத் தொடங்கியது. இன்று சிங்கப்பூர் நகரமாக உருவாகி கிட்டத்தட்ட நூற்றுத் தொண்ணூறு ஆண்டுகள் கடந்து விட்டன. இது ஒரு கனவு நகரமாக ராஃபிள்ஸுக்கு இருந்தது என்பதைக் கடந்த அத்தியாயங்களில் பார்த்தோம். இதே கனவை ராபிள்ஸுடன் பகிர்ந்து கொண்ட மற்றொருவர் வில்லியம் ஃபர்குவார் ஆவார். 1774 ஆம் ஸ்காட்லாண்டில் பிறந்தவர். 1791 ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் தேதி பதினேழு வயது இளைஞனாக மெட்ராஸ் வந்து சேர்ந்தார். ... Read More »
ஒரு நகரத்தின் கதை – 13
May 15, 2015
கோல்மென் பல கட்டடங்களை வடிவமைத்துக் கட்டுவதில் வெற்றி பெற்றதால் அவருக்கு மேலும் பல வாய்ப்புகள் கிடைத்தன. பொதுக் கட்டடங்கள், வீடுகள், தேவாலயங்கள் போன்ற கட்டடங்கள் மட்டுமல்லாது பெரிய மனிதர்கள் நினைவாக பல நினைவுச் சின்னங்கள் உருவாக்கவும் பல வாய்ப்புகள் கிடைத்தன. ஊர் பெரிய மனிதர்கள், உயர் அரசு அதிகாரிகள், செல்வச் செழிப்பில் இருந்த வணிகர்கள் போன்றவர்கள் இறந்ததும் அவர்களுக்காக நினைவுச் சின்னம் கட்டுவது ஒரு பழக்கமாக இருந்தது. முக்கியமாக கிறிஸ்துவர்கள், சீனர்கள், இஸ்லாமியர்கள் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக ... Read More »
ஒரு நகரத்தின் கதை – 12
May 15, 2015
கோல்மென் கட்டடக் கலைஞராக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மேலும் பல வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தது. மேக்ஸ்வெல் ஹவுஸ் கட்டி முடித்த பிறகு அதன் அருகில் மூன்று மாளிகைகள் கட்டினார். எஸ்பிளனேடை நோக்கி அமைக்கப்பட்ட தோட்டத்துடன் கட்டிய மாளிகைகள் பிற்காலத்தில் ஹோட்டல் டி யூரோப் என்ற புகழ் பெற்ற விடுதியாக மாற்றம் கண்டது. 1936 ஆம் வருடம் அந்த விடுதியை இடித்து விட்டு உயர் நீதிமன்றம் கட்டப்பட்டது. பழைய நாடாளுமன்றக் கட்டிடத்தின் அருகே கம்பீரமாக நிற்கும் உயர் ... Read More »
ஒரு நகரத்தின் கதை – 11
May 15, 2015
பத்து வாரங்களாக ராஃபிள்ஸ் கதையுடன் நகரத்தின் கதை இணைந்திருந்தது. இனி இந்த நகரத்தை அழகாக உருவாக்கிய ஒரு மனிதரின் கதையை இணைப்போம். பொதுவாகவே பிரிட்டிஷ்காரர்கள் தாங்கள் காலனிகளை அமைத்த நாடுகளில் தங்களுக்குத் தேவையான கட்டடங்களைக் கட்டுவதற்கு இராணுவக் கட்டட பொறியியலாளர்களின் உதவியை நாடுவார்கள். அவர்கள் அழகியல் உணர்வும் எந்தக் கலை நுட்பங்களும் இல்லாமல் ராணுவ பேரக்ஸ் என்று அழைக்கப்படும் படை வீரர்கள் தங்குவதற்காக அமைக்கப்படும் எளிமையான கட்டடங்களைக் கட்டுவார்கள் .அதே போன்ற கட்டடங்களை மற்ற தேவைகளுக்கும், அரசாங்கப் ... Read More »