மரியாவும், அமீனாவும் மரியாவின் கணவன் மன்சூர் மூவரும் விசாரணைக்காகக் காத்திருந்தனர். மரியா முஸ்லிம்கள் நல சங்கத் தலைவர் எம்.ஏ.மஜீத் வீட்டில் தங்கியிருந்தாள். வெளியே சென்றால் பொதுமக்கள் அவளை அதிக ஆர்வத்தோடு கவனித்தனர். இது மரியாவுக்கு அதிக சங்கடத்தை ஏற்படுத்தியது. இந்த அளவுக்கதிமான கவனிப்பால் மரியா வெளியே செல்வதைக் கூடியமட்டும் தவிர்த்து வீட்டிலேயே இருந்தாள். சிங்கப்பூரில் மட்டுமல்லாது உலகஅளவில் அனைத்து இஸ்லாமிய நாடுகளில் இருந்த மக்களும் கவனிக்கத் தொடங்கினர். பாகிஸ்தான் முஸ்லிம் சங்கங்கள் மரியாவுக்குத் தேவையான நிதியுதவி செய்வதாகக் ... Read More »
Category Archives: தொடர் கதை
ஒரு நகரத்தின் கதை – 29
May 15, 2015
இரண்டாம் உலகப்போரின் இறுதிகட்டங்கள் உலக அரசியலிலும், ஆட்சிகளிலும் பலமாற்றங்களைக் கொண்டு வந்தன. போர் முடியும் வரை போர் எப்போது முடியும்? இயல்பு வாழ்க்கைக்கு எப்போது திரும்ப முடியும் என்று காத்திருந்தார்கள். ஆனால் போர் முடிந்த பிறகு திரும்பும் வாழ்க்கை எப்படிப்பட்ட வாழ்க்கையாக இருக்க முடியும்? தொடர்ந்த இரு உலகப்போர்களால் நிலைகுலைந்த பல ஐரோப்பியநாடுகள் தாங்கள் காலனி அமைத்தநாடுகளில் தங்கள் ஆட்சியை மீண்டும் நிலைநிறுத்த முடியாத சூழல் உருவானது. இந்திய விடுதலைப் போரின் உச்சகட்டமாக இரண்டாம் உலகப்போரின் முடிவில் ... Read More »
ஒரு நகரத்தின் கதை – 28
May 15, 2015
ஷோனன்தோ நகர வாழ்க்கை அங்கு வாழ்ந்த மக்களுக்கு எப்படியிருந்தது? தொடர்ந்து பல வருடங்களாக நடந்து கொண்டிருந்த உலகப் போரினால் உலகமே பொருளாதாரச் சீர் கேட்டினால் நிலை குலைந்து போயிருந்தது. போரை நேரிடையாக சந்தித்து தோல்வி அடைந்து எதிரிகளின் வசம் பிடிபட்ட நாடு எப்படிப்பட்ட வறுமையில் வாடியிருக்கும்? உணவுப் பற்றாக்குறையினால் பட்டினிச் சாவுகள்! உணவுப் பங்கீட்டு முறையில் வழங்கப்பட்ட அரிசி, எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் எந்தக் குடும்பத்திற்கும் போதுமான அளவு கொடுக்கப்படவில்லை. மரவள்ளிக் கிழங்கை சுட்டுத் தின்றனர். ... Read More »
ஒரு நகரத்தின் கதை – 27
May 15, 2015
1942 ஆம் ஆண்டு ஃபிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி ஜப்பானியர்கள் சிங்கப்பூரைக் கைப்பற்றினார்கள். 1945 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி சிங்கப்பூர் மீண்டும் பிரிட்டிஷ் காலனி நாடுகளில் ஒன்றாக ஆனது. கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகள் ஷோனன்தோ என்ற பெயரில் அழைக்கப்பட்ட சிங்கப்பூரில் பல இன மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தனர். இதில் பலர் சிங்கப்பூரைத் தன் தாய் நாடாக நினைக்கவில்லை. சீனர்கள் சீனாவைத் தங்கள் சொந்த நாடாகவும், இந்தியர்கள் இந்தியாவைத் தங்கள் தாய் நாடாகவும் ... Read More »
ஒரு நகரத்தின் கதை – 26
May 15, 2015
ஜப்பானிய ராணுவ தளபதி யமஷிடா ஜோஹோர் சுல்தானின் அரண்மனையைத் தன் ராணுவத் தலைமைச் செயலகமாகக் கொண்டு சிங்கப்பூரிலிருந்து வரும் பீரங்கித் தாக்குதல்களைத் தவிர்த்தார். சிங்கப்பூரின் வடமேற்குப் பகுதி வழியாக ஜப்பானியப் படைகள் நுழைவதைப் போல் ஒரு நாடகம் நடத்தி பிரிட்டிஷ் படைகளை வட கிழக்குப் பகுதியிலிருந்து வடமேற்குப் பகுதிக்கு இடம் மாறச் செய்தார். சாங்கிப் பகுதியில் ஜப்பானியர்களைத் தாக்கத் தயாராக இருந்த பிரிட்டிஷ் படைகளை ஏமாற்றி வட கிழக்குப் பகுதி வழியாக மலேயாவையும் சிங்கப்பூரையும் பிரிக்கும் குறுகிய ... Read More »
ஒரு நகரத்தின் கதை – 25
May 15, 2015
எதிரிகளால் நுழைய முடியாத கோட்டை சிங்கப்பூர் என்று ஆங்கிலேயர்கள் பெருமையாக நினைத்திருந்த சிங்கப்பூர் 1942 ஆம் ஆண்டு ஃபிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி ஜப்பானியர்களின் நகரம் ஆயிற்று. சிங்கப்பூர் வீழ்ச்சிக்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆங்கிலேயர்கள் தங்கள் ராணுவ வீரர்கள் ஜப்பானிய ராணுவத்தினரை விட தொழில்நுட்பத்திலும், போர் செய்வதிலும் வல்லவர்கள் என நினைத்திருந்தார்கள். ஜப்பானிய இராணுவ வீரர்களை விட அதிக எண்ணிக்கையில் பிரிட்டிஷ் இராணுவத்தினர் இருந்தும் அதைப் பற்றி சரியான தகவல் தெரியாததால் ஜப்பானிய ராணுவத்தினரின் ... Read More »
ஒரு நகரத்தின் கதை – 24
May 15, 2015
ஜூலை 8 ஆம் தேதி 2009 ஆம் ஆண்டு ‘தி ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்’ என்ற சிங்கப்பூர் நாளிதழில் நெதர்லாண்ட்ஸ் நாட்டைச் சேர்ந்த மரியா ஹெர்டோக் என்ற 72 வயதுப் பெண்மணி இரத்தப்புற்று நோயால் இறந்து போனதாக ஒரு செய்தி வந்தது. ஹியுமெர்கன் என்ற ஊரில் வாழ்ந்து வந்த மரியா ஹெர்டோக் என்ற பெண்மணிக்கும் சிங்கப்பூருக்கும் என்ன தொடர்பு? சிங்கப்பூர் வரலாற்றில் இடம் பெறுமளவிற்கு அந்தப் பெண்மணி என்ன செய்தார்?……………. 1942 ஆம் ஆண்டு டிசம்பர் 29 ஆம் ... Read More »
ஒரு நகரத்தின் கதை – 23
May 15, 2015
சர் ஆர்தர் யங் நிர்வாகத்தில் மக்கள் வாழ்க்கை முறையில் முன்னேற்றம் ஏற்பட்டது. நகரத்தில் கழிவு நீர்க் குழாய்கள் அமைக்கப்பட்டன. சர் லாரன்ஸ் கில்லமர்ட் 1919 ஆம் ஆண்டிலிருந்து 1927 ஆம் ஆண்டு வரை ஆளுநராகப் பதவி ஏற்றார். நகர நிர்வாகத்தில் பல புத்தாக்கங்களையும், புதிய முறைகளையும் துடிப்புடன் உருவாக்கிச் செயல்படுத்தியவர். பொது மக்கள் அரசியலில் ஈடுபட ஊக்கப்படுத்தினார். ஸ்ட்ரெயிட்ஸ் செட்டில்மெண்ட் அஸோஸியேஷன், யுரேஷியன் அஸோஸியேஷன் போன்ற அமைப்புகள் மூலம் நகர நிர்வாக அதிகாரியைத் தேர்ந்த்தெடுத்தார். (முனிசிபல் கமிஷனர்). ... Read More »
ஒரு நகரத்தின் கதை – 22
May 15, 2015
1893 ஆம் ஆண்டிலிருந்து 1894 ஆம் ஆண்டு வரை சர் வில்லியம் எட்வர்ட் மாக்ஸ்வெல் என்ற ஆளுநர் ஆட்சியில் இருந்தார். இவர் ஒரு வருட காலமே ஆளுநராக இருந்ததால் குறிப்பிடத்தக்க எந்த மாற்றங்களும் இல்லாமல் ஆங்கிலேய ஆட்சி தொடர்ந்தது. 1894 ஆம் ஆண்டிலிருந்து 1899 ஆண்டு வரை சர் சார்லஸ் ஹுஜ் மிட்சல் ஆளுநராகப் பணியாற்றினார். 1896 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மலாய் ஃபெடரேட்டட் ஸ்டேட்ஸ் என்று ஒரு தலைமையின்கீழ் ஆளப்பட்ட பெராக், பஹாங், நெகிரி செம்பிலான் ... Read More »
ஒரு நகரத்தின் கதை – 21
May 15, 2015
போன்ஹாமுக்குப் பிறகு வில்லியம் ஜான் பட்டர்வொர்த் ஆளுநராக நியமிக்கப்பட்டார். 1843 ஆம் ஆண்டிலிருந்து 1855 ஆம் ஆண்டு வரை சிங்கப்பூர், மலாக்கா, பினாங் என்ற மூன்று நகரங்களுக்கும் பொறுப்பெடுத்துக் கொண்டார். இந்திய இராணுவத்தில் கர்னலாகப் பணியாற்றியவர். இவர் பொறுப்பெடுத்துக் கொண்ட காலம், அரசாங்கத்துக்கும் பொது மக்களுக்கும் இடையே நிலவி வந்த நட்புறவோடு இருந்த சுமுக உறவு ஒரு முடிவுக்கு வந்தது. எந்த பிரச்சினைக்கும் தீர்வு ஆட்சி செய்பவரால் சொல்ல முடியாது என்ற சூழலினால் இந்தப் பதவிக்கு யாரும் ... Read More »