Home » அதிசயம் ஆனால் உண்மை » தொடர் கதை (page 55)

Category Archives: தொடர் கதை

அமானுஷ்யன் – 54

அந்த ஓட்டலில் இருந்து அக்‌ஷய் வேகமாக வெளியேறிய போதும் மூன்று பேர் பின் தொடர்வதை அவன் கவனித்தான். அவன் மெல்ல நடந்தால் அவர்களும் மெல்ல நடந்தார்கள். அவன் வேகமாக நடந்தால் அவர்களும் வேகமாக நடந்தார்கள். கிட்டத்தட்ட அருகிலேயே இருந்தார்கள். அந்த மூவர் கையிலும் செல் போன்கள் இருந்தன. அக்‌ஷய் புன்னகைத்தான். அவனுக்கு ஏனோ அவர்களுடைய அருகாமை பயமுறுத்தவில்லை. அமைதியாக நடந்து கொண்டிருந்தான். பின் திடீரென்று ஓடிப் போய் ஒரு ஓடும் பஸ்ஸில் ஏறிக் கொண்டான். அந்த மூவரும் ... Read More »

அமானுஷ்யன் – 53

அறை எண் 210 வாசலில் நின்றிருந்தவன் இசைக்கும் செல்போனை எடுத்த போதும் அக்‌ஷய் அவனிடம் “சார்” என்று பணிவாக அழைக்க அந்த ஆள் கண்களில் தீப்பொறி பறந்தது. அந்த அனல் பார்வைக்குப் பயந்து அங்கிருந்து நகர்கிற மாதிரி அக்‌ஷய் நகர்ந்தான். அவன் மிக வேகமாகவும் அல்லாமல் மிக நிதானமாகவும் அல்லாமல் அந்த ஓட்டலில் இருந்து வெளியேறும் எண்ணத்தில் இயங்கினான். சிபிஐ மனிதன் அறை எண் 210 வாசலில் நின்றிருந்தவனிடம் புதிதாக ஏதாவது தகவல் இருக்கிறதா என்று கேட்டான். ... Read More »

அமானுஷ்யன் – 52

அக்‌ஷயிற்கு அது கனவா இல்லை கடந்த கால நினைவா என்பது தெரியவில்லை. டெல்லிக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்த போது சிறிது கண்ணயர்ந்த போது தான் அது மனத்திரைக்கு வந்தது. அவன் ஒரு புத்த விஹாரம் ஒன்றில் இருக்கிறான். அந்த புத்த விஹாரத்தில் ஒரு புத்தர் சிலை முன் மண்டியிட்டு அவன் தாங்க முடியாத துக்கத்தில் அழுது கொண்டிருக்கிறான். ஒரு முதிய பிக்கு புத்தர் சிலைக்கு அருகில் ஒரு பிரதான இருக்கையில் அமர்ந்து ஜபமாலையை உருட்டி தியானம் செய்து ... Read More »

அமானுஷ்யன் – 51

ஆச்சார்யாவின் மனைவி லலிதா ஆனந்திற்குப் போன் செய்து அவன் தம்பி கிடைத்து விட்டானா, ஏதாவது தகவல் அவனிடம் இருந்து கிடைத்ததா என்று கேட்டு போன் செய்திருந்தாள். ஆனந்த் அவன் கிடைத்து விட்டான், ஆனால் தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்று சொல்லி நேரில் ஒருமுறை வந்து எல்லாவற்றையும் விவரமாகச் சொல்வதாக உறுதியளித்து விட்டு போனை வைத்தான். பின் அம்மாவிற்குப் போன் செய்தான். அவன் போன் செய்த போது அக்‌ஷய் கிளம்பிப் போயிருந்தான். சாரதா தான் பேசினாள். அவள் குரலில் ... Read More »

அமானுஷ்யன் – 50

“எங்கே போய் விட்டு வருகிறாய்?” மகன் வந்தவுடன் சாரதா கேட்டாள். அவளுக்கு அவன் வரும் வரை ஏனோ ஒரு இனம் புரியாத படபடப்பு இருந்தது. போனால் திரும்பி வருவானோ இல்லையோ என்ற அர்த்தமில்லாத பயம். இப்போது அவன் சின்னக் குழந்தை அல்ல என்று பல தடவை மனதிற்கு சொல்லிக் கொண்டாலும் மனம் சொன்னதைக் கேட்பதாயில்லை. வாசலிலேயே நின்று அவன் வரும் வரை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அவனைப் பார்த்த பின் தான் மனம் அமைதியடைந்தது. அக்‌ஷய் சொன்னான். “அண்ணியைப் ... Read More »

அமானுஷ்யன் – 49

‘அமானுஷ்யன்’ அந்தப் பெயரே ஆனந்த் மனதில் அன்று முழுவதும் ஒலித்துக் கொண்டிருந்தது. அக்‌ஷயிற்கு அந்தப் பெயரை வைத்தது யார் என்று அவனுக்குத் தெரியாது. ஆனால் அந்தப் பெயர் அவனுக்கு மிகப் பொருத்தமானது என்பதில் ஆனந்திற்கு சந்தேகமே இல்லை. ஆனந்த் மனதில் அக்‌ஷயை சந்தித்த அந்த முதல் கணம் வந்து போனது. கண்ணிமைக்கும் நேரத்தில் அவனைத் தூக்கி கட்டிலில் வீசியது எப்படி என்று அவனுக்கு இன்னமும் விளங்கவில்லை. ஏதோ சில அபூர்வ வித்தைகளை அவன் அறிந்திருக்கிறான் என்று புரிந்தது. ... Read More »

அமானுஷ்யன் – 48

“நீ இவ்வளவு வருஷம் எங்கே இருந்தாய் அக்‌ஷய்? எப்படி இருந்தாய்?” அம்மாவின் அந்தக் கேள்விக்கு அக்‌ஷய் உடனடியாக பதில் சொல்லவில்லை. பின் சிரித்துக் கொண்டே சொன்னான். “அது தான் தெரியவில்லை” சாரதா தன் இளைய மகனைப் பொய்க் கோபத்தோடு முறைத்தாள். “சும்மா விளையாடாதே. கிண்டலுக்கு ஒரு அளவில்லையா?” தாயின் மேல் சாய்ந்து அமர்ந்து கொண்டிருந்த அக்‌ஷய் அவள் புடவைத் தலைப்பு நுனியில் முடிச்சு போட்டுக் கொண்டே சொன்னான். “விளையாடலைம்மா. எனக்கு நிஜமாகவே தெரியவில்லை” புரியாமல் விழித்த தாயிடம் ... Read More »

அமானுஷ்யன் – 47

அக்‌ஷய் இப்போது கல்லூரி மாணவன் போல ஸ்டைலான டிரஸ்ஸில் இருந்தான். கையில் ஒரு வளையல், ஒரு காதில் மட்டும் சின்ன ரிங், எதற்கும் கவலைப்படாத நடையில் அவன் சென்னையில் உள்ள ஆனந்தின் வீட்டுக்கு வந்து சேர்ந்தான். இது வரை யாரும் அவனைப் பின்தொடரவில்லை. அந்த வீட்டின் முன்னும் யாரும் வேவு பார்ப்பது போலத் தெரியவில்லை. அழைப்பு மணி அடித்துக் காத்திருந்தான். சாரதா கதவைத் திறந்தாள். “யார் வேண்டும்?” ஒரு நடைப்பிணம் போல் மீளாத சோகத்தில் ஒடிசலாக இருந்த ... Read More »

அமானுஷ்யன் – 46

“அக்‌ஷய் உனக்கு நினைவு திரும்புவது மிக முக்கியம். ஏதோ பெரியதாக நடக்கப் போகிறது. அதைத் தெரிந்து கொண்ட ஆச்சார்யா வெளியே சொல்லி விடுவார் என்றுதான் அவரைக் கொலை செய்திருக்கிறார்கள். உன்னையும் அவர்கள் கொல்ல முயற்சி செய்வதும் அதனால்தான். அது நடப்பதற்கு முன் உனக்கு நினைவு திரும்பினால்தான் நாம் ஏதாவது செய்ய முடியும்” “எனக்கு புரிகிறது ஆனந்த். ஆனால் நான் என்ன முயற்சி செய்தும் நினைவு வரமாட்டேன்கிறது. எல்லா நினைவும் அழித்து வைத்த மாதிரி வெறுமைதான் மிஞ்சுகிறது” “அன்றைக்கு ... Read More »

அமானுஷ்யன் – 45

“யாரந்தப் பெண்?” அக்‌ஷய் கேட்டபோது ஆனந்த் விழித்தான். “எந்தப் பெண்?” “உன் சூட்கேஸில் அம்மா போட்டோ தவிர இன்னொரு போட்டோவை ஒளித்து வைத்திருந்தாயே அந்தப் பெண்” ஆனந்த் முகம் லேசாகச் சிவந்தது. என்ன சொல்வது என்று தடுமாறினான். அக்‌ஷய் சிரித்துக் கொண்டே சொன்னான். “ரொம்பவும் கஷ்டப்படாதே. எனக்கு புரிந்து விட்டது. அந்தப் பெண் பெயர் என்ன? என்ன செய்கிறாள்” ஆனந்த் சொன்னான். “அப்படியெல்லாம் ஒன்றுமில்லை” அக்‌ஷய் மீண்டும் சிரித்தான். “நான் ஒன்றும் சொல்லாமலேயே அப்படி எல்லாம் ஒன்றுமில்லை ... Read More »

Scroll To Top