Home » அதிசயம் ஆனால் உண்மை » தொடர் கதை (page 53)

Category Archives: தொடர் கதை

அமானுஷ்யன் – 74

ஆனந்திற்கு அவர்கள் போன் வரவேயில்லை. ஏன் அவர்கள் இன்னும் பேசவில்லை என்று அவன் கவலையுடன் யோசித்தான். போன் பற்றி யோசிக்கும் போது தான் தன்னுடைய போன் ஒட்டுக் கேட்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் அவனுக்கு வந்தது. வெளிப்படையாகவே அவனைப் பின் தொடர்பவர்கள் போன் ஒட்டுக் கேட்பதில் முறையான வழியைப் பின்பற்றவா போகிறார்கள். அவன் கடைசியாக அம்மாவுடன் என்ன பேசினோம் என்று யோசித்துப் பார்த்தான். அம்மா அக்‌ஷய் பற்றி பேசியது நினைவுக்கு வந்தது. ஒட்டுக் கேட்டிருப்பார்களேயானால் நிலைமை மேலும் சிக்கலாக ... Read More »

அமானுஷ்யன் – 73

சஹானாவின் நிலைமையைப் பார்த்த மதுவிற்கு அக்‌ஷய் மீது தான் கோபம் வந்தது. அக்‌ஷய் மீது வந்த கோபத்தை வாய் விட்டே மது சொன்னான். “நான் அன்றைக்கே அக்‌ஷயை இங்கே சேர்க்க வேண்டாம் என்று உன்னிடம் சொன்னேன். ஆனால் நீ தான் கேட்கவில்லை. இப்போது பார் எந்த மாதிரியான நிலைமையை அவன் ஏற்படுத்தி விட்டான்!” ஆனால் சஹானாவிற்கு அந்த சூழ்நிலையிலும் அக்‌ஷயைத் தங்களுடன் அழைத்து வந்ததில் சிறிது கூட வருத்தம் தோன்றவில்லை. மதுவிடம் அவள் சொன்னாள். “அக்‌ஷய் மட்டும் ... Read More »

அமானுஷ்யன் – 72

சாரதா கடத்தப்பட்டிருக்கிறாள் என்பது உறுதியான பிறகு ஆனந்த், அக்ஷய் இருவராலும் நிறைய நேரம் எதுவும் பேச முடியவில்லை. பிறகு அக்ஷய் தான் மௌனத்தைக் கலைத்தான். “உனக்கு நானிருக்கும் இடம் தெரியும் என்பது அவர்களுக்கு உறுதியாகத் தெரிந்து விட்டது. உன்னிடம் இருந்து உண்மையை வரவழைக்கத் தான் அவர்கள் அம்மாவைக் கடத்தி இருக்கிறார்கள். எனக்கு புரியாதது என்ன என்றால் அம்மா எப்படி சிறிதும் யோசிக்காமல் யாரோ ஒரு ஆள் கூப்பிட்ட உடன் போய் விட்டார்கள்…” ஆனந்த் சொன்னான். “அம்மாவை ஏமாற்றுவது ... Read More »

அமானுஷ்யன் – 71

வருண் தெருக் கோடியில் இருந்த கடையில் இருந்து சாக்லேட் வாங்கிக் கொண்டு வீடு திரும்பும் போது கடத்தப்பட்டான். எல்லாம் ஒரு நிமிட நேரத்தில் நடந்து முடிந்தது. பின்னால் இருந்து யாரோ ஒரு கைக்குட்டையை அவன் முகத்தருகில் கொண்டு வந்தார்கள். அதற்குப் பிறகு அவனுக்கு நினைவில்லை. அவனைத் தூக்கி ஒரு காரில் போட்டுக் கொண்டு அங்கிருந்து கடத்தல்காரர்கள் பறந்தார்கள். அந்த தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு வயதான கிழவி தான் பார்க்கிற தொலைவில் இருந்தாள். அவளுக்கும் நடந்தது ... Read More »

அமானுஷ்யன் – 70

டெல்லியில் புறநகர்ப் பகுதியில் அந்த வீடு தனியாக இருந்தது. அந்த வீட்டைச் சுற்றியும் காலியிடமே இருந்தது. நூறு மீட்டர் தொலைவில் ஏதோ ஒரு ஃபேக்டரி மட்டுமே கண்ணுக்கெட்டிய தூரத்தில் இருந்தது. வேறு வீடுகளோ, கட்டிடங்களோ அந்தப் பகுதியில் இருக்கவில்லை. இரண்டு படுக்கையறை கொண்ட அந்த வீட்டில் எல்லா வசதிகளும் இருந்தன. ஆனால் போன் வசதி மட்டும் இருக்கவில்லை. அங்கு அவளை அழைத்துப் போன பட்டாபி ராமன் அவளுக்கு வீட்டை சுற்றிக் காண்பித்தான். சமையலறையில் எல்லா சாமான்களும் இருந்தன. ... Read More »

அமானுஷ்யன் – 69

ஆனந்த் சாரதாவிற்குப் போன் செய்த நேரத்திற்கு சுமார் மூன்று மணி நேரத்திற்கு முன்னால் ஒரு அதிகாரியைப் போலவும், கண்ணியமாகவும் தெரிந்த ஒரு நபர் சாரதாவின் வீட்டுக்கு வந்தான். சாரதாவிடம் தன் பெயர் பட்டாபிராமன் என்றும் சிபிஐயில் வேலை செய்வதாகவும் சொன்னான். சாரதா பட்டாபிராமன் ஆனந்தைத் தேடி வந்திருப்பதாக எண்ணி “ஆனந்த் டெல்லிக்குப் போயிருக்கிறானே” என்று சொன்னாள். “தெரியும். ஆனந்த் தான் என்னை டெல்லியில் இருந்து அனுப்பினார்….” “போனில் அவன் உங்களை அனுப்புவது பற்றி எதுவும் சொல்லவில்லையே…. என்ன ... Read More »

அமானுஷ்யன் – 68

“அக்‌ஷய் இன்னும் எத்தனை நாட்கள் நீ இப்படி இங்கேயே இருப்பதாக உத்தேசம்” ஆச்சார்யாவின் கேள்விக்கு அக்‌ஷய் உடனடியாக பதில் சொல்லவில்லை. அவனுக்கே அவனுடைய எதிர்கால வாழ்க்கை ஒரு கேள்விக்குறியாக இருந்தது. பிறகு சொன்னான். “தெரியவில்லை” “எது எப்படி நடக்க வேண்டுமோ அது அப்படியே நடந்திருக்கிறது. நீ வெறும் கருவி மாத்திரம். அப்படி இருக்கையில் நீ தேவை இல்லாமல் குற்றவுணர்ச்சியோடு இருப்பது புத்திசாலித்தனம் அல்ல. உனக்கு இருக்கும் திறமைகளை வீணடித்துக் கொண்டு முடங்கிக் கிடப்பது சரியில்லை” “நான் இப்போது ... Read More »

அமானுஷ்யன் – 67

மறு நாள் காலை அக்‌ஷய் வீட்டு முன் ஒரு கும்பலே கூடி நின்றது. அதில் பெரும்பாலானோர் பெண்கள். அவர்களில் சிலர் கைக்குழந்தைகளுடன் வந்திருந்தார்கள். சில வயதானவர்களும் வந்திருந்தார்கள். அக்‌ஷயைப் பார்க்க வேண்டும் என்று அவர்கள் சொன்ன போது பீம்சிங் பயந்து போனான். “இது என்ன புதுத் தலைவலி” என்று திகைத்தவன் அக்‌ஷயை அழைத்து வந்தான். அக்‌ஷயைக் கண்டவுடன் அத்தனை பேரும் சாஷ்டாங்கமாக வாசலிலேயே விழுந்து நமஸ்கரித்தார்கள். அக்‌ஷயின் கைத் திறத்தால் ஆஸ்பத்திரியில் ஐசியூவில் கிடக்கும் ஆட்களின் குடும்பமும், ... Read More »

அமானுஷ்யன் – 66

அக்‌ஷய் வீட்டில் சாய்ரா பானுவை முதலில் பார்த்தது பீம்சிங் தான். அவன் அவளைப் பார்த்ததும் வெடித்தான். “கொலை செய்ய நீங்களுமா வந்து விட்டீர்கள்?” சாய்ரா பானு ஒரு கணம் கூனிக் குறுகிப் போனாள். ஆனால் ஒன்றும் பேசாமல் தலை குனிந்து நின்றாள். பீம்சிங் கடுமை குறையாமல் கேட்டான். “என்ன வேண்டும்?” சாய்ரா பானு பலவீனமான குரலில் சொன்னாள். “எனக்கு அக்‌ஷயைப் பார்க்க வேண்டும்” பீம்சிங் அவளை உட்காரச் சொல்லவில்லை. அக்‌ஷயிடம் அவள் வந்திருப்பதைச் சொல்லப் போனான். அக்‌ஷய் ... Read More »

அமானுஷ்யன் – 65

அதிகாலை நான்கு மணிக்கு தங்கள் காருடன் வேறு இரண்டு டாக்சிகளும் வந்து வாசலில் நின்று ஒலியெழுப்பிய போது தான் இப்ராஹிம் சேட் கண் விழித்தார். அவர் வெளியே வந்து பார்த்த போது சகதேவ் மட்டும் பரிதாபமாக காரில் இருந்து இறங்கி மந்திரித்து விட்டவனைப் போல் நின்றான். அவனை அடையாளம் கண்டு பிடிக்க இப்ராஹிம் சேட்டிற்கு சிறிது நேரம் தேவைப்பட்டது. குழப்பத்துடன் அவர் அவனிடம் சரமாரியாகக் கேள்வி கேட்டார். “நீ எப்படி எங்கள் காரில் இருந்து இறங்குகிறாய்? எப்போது ... Read More »

Scroll To Top