நாளை மறு நாள் குண்டுகள் டெல்லியில் வெடிக்கும் என்று யூகித்த பின்னால் ஆனந்திற்கும், மகேந்திரனிற்கும் இருப்பு கொள்ளவில்லை. அக்ஷய் திரும்பி வரும் வரை, அல்லது முக்கியமான தகவல் ஏதாவது தரும் வரை சும்மா இருக்க முடியாமல் என்ன செய்வது என்று யோசித்தார்கள். ஆனால் மகேந்திரன் எந்தக் காரணத்தைக் கொண்டும் ஆனந்த் வெளியே செல்ல வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்தான். ஒரு தடவை அதிர்ஷ்டம் ஆனந்திற்கு உதவியது போல அடுத்த முறையும் உதவும் என்பதற்கு எந்த விதமான உத்திரவாதமும் ... Read More »
Category Archives: தொடர் கதை
அமானுஷ்யன் – 103
January 22, 2015
கேசவதாஸ் டிவியில் அமானுஷ்யனின் புகைப்படத்தைப் பார்த்தார். டில்லி புறநகர்ப்பகுதியில் வெடிகுண்டு வைத்த தீவிரவாதி, ஒரு கல்லூரியில் வெடிகுண்டு வைக்க முயன்று அவனைப் பிடிக்க வந்த போலீஸ்காரர்களைத் தாக்கி விட்டு தப்பி விட்டான் என்றும் அவனைப் பிடித்துத் தருபவர்களுக்கு ஒரு கோடி வரை பரிசு அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்கள். இத்தனை பெரிய தொகை சர்வதேச தீவிரவாதிகளைப் பிடித்துத் தருபவர்களுக்கு மட்டும் தான் பெரும்பாலும் அளிக்கப்படுகிறது. இவனிற்குப் போய் இப்படி அறிவித்தது அநியாயத்தின் உச்சம் என்று தோன்றியது. ஆனால் உண்மைக்கு ... Read More »
அமானுஷ்யன் – 102
January 22, 2015
டிக்கெட்டுடன் வெளியே வந்த அக்ஷய் அடுத்த தெருவில் இருந்த ஒரு பொதுத் தொலைபேசியில் மதுவை அழைத்துப் பேசினான். அவன் குரலைக் கேட்டவுடன் மது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. “அக்ஷய். அங்கே இருந்து தப்பித்து விட்டாயா? நிஜமாகவே எங்கள் பிரார்த்தனை வீண் போகவில்லை. முக்கியமாய் உன் அம்மாவின் பிரார்த்தனை…” அந்த சந்தோஷம் அவன் மனதை நெகிழ வைத்தாலும் அப்போதைய அவசர நிலை காரணமாக அக்ஷய் அவன் வருணையும், தாயையும் காப்பாற்ற எடுத்துக் கொண்ட முயற்சிகளுக்காக மனமார நன்றி ... Read More »
அமானுஷ்யன் – 101
January 22, 2015
சிறிது நேரத்தில் சேரியைத் தாண்டி ஒரு கடைத் தெருவிற்கு அமானுஷ்யன் போய் சேர்ந்தான். அவன் பின்னால் ஒருவன் தொடர்வது குறித்து சந்தேகம் ஏற்பட்டது போலவே காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் சலீமும் அவனை மிக ஜாக்கிரதையாகவே பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தான். அக்ஷய் திடீரென்று ஒரு பொதுத் தொலைபேசி அருகே நின்று விட்டு சுற்றும் முற்றும் பார்த்து விட்டு அதை உபயோகித்து ஆனந்திடம் பேசினான். “ஹலோ ஆனந்த் நான் அக்ஷய் பேசுகிறேன்” ஆனந்த் திகைத்தான். ‘எந்தக் காரணத்தைக் கொண்டும் ... Read More »
அமானுஷ்யன் – 100
January 22, 2015
அக்ஷய் கண்களை மூடி அடுத்த மின்னல் வேக நடவடிக்கைக்குத் தயாரானான். அவனுடைய குருவின் வார்த்தைகள் அவன் காதில் இன்னமும் ஒலித்தன. “எந்த முக்கிய செயலுக்கும் முன்னால் முதலில் ஆழ்ந்த அமைதிக்குப் போ. அந்த அமைதி தான் அந்த முக்கிய செயலுக்கு சக்தியை சேகரித்துக் கொடுக்கிறது. பல்லியைப் பார்… சிங்கத்தைப் பார்…. அது தன் இரையைத் தாக்குவதற்கு முன் எப்போதுமே ஒரு கணம் அசையாமல் அமைதியாக தன் சக்தியைச் சேகரித்து வைத்துக் கொண்டே பின் இயங்க ஆரம்பிக்கிறது. அது ... Read More »
அமானுஷ்யன் – 99
January 22, 2015
கேசவதாஸ் இன்னமும் டிவி முன் தான் அமர்ந்திருந்தார். டிவியில் ராஜாராம் ரெட்டியைப் பார்த்த போது அவருக்கு ஏற்பட்ட திகைப்பு கொஞ்ச நஞ்சமல்ல. இந்த ஆளுக்கு இங்கு என்ன வேலை என்ற கேள்வி அவர் மனதில் உடனே எழுந்தது. இதற்கு ஒரே பதில் தான் இருக்க முடியும் என்பது அவருக்குப் புரிந்தது. சிபிஐயும் அமானுஷ்யன் விஷயத்தில் சம்பந்தப்பட்டு இருக்கிறது. ராஜாராம் ரெட்டியைப் பார்க்கப் பார்க்க மனதில் ஏதோ நெருட ஆரம்பித்தது. இந்த ஆள் தான் இப்போது சிபிஐயின் தலைவர் ... Read More »
அமானுஷ்யன் – 98
January 22, 2015
சலீம் டெல்லிக்கு வந்து மூன்று நாட்கள் ஆகின்றன. ஐந்து நட்சத்திர ஓட்டலில் தான் தங்கி இருந்தான். இந்த மூன்று நாட்களிலும் அவன் ஓட்டல் அறையை விட்டு வெளியே போனது ஒரு சில மணி நேரங்கள் தான். அறைக்குள் இருந்த நேரங்களில் அமானுஷ்யனின் ஃபைலை முழுமையாகப் படித்தான். நிறைய மனிதர்கள் அமானுஷ்யனுடன் பழகிய தங்கள் அனுபவங்கள் பற்றி சொன்னதை எல்லாம் விரிவாகப் படித்தான். சிலவற்றை திரும்பத் திரும்ப படித்தான். அவனுடைய லாப் டாப்பில் அவன் நிறைய வீடியோக்கள் பார்த்தான். ... Read More »
அமானுஷ்யன் – 97
January 22, 2015
டிஐஜி கேசவதாஸ் அதிகாலை எழுந்திருக்கும் பழக்கம் உடையவர். எழுந்து காலைக்கடன்களை முடித்து விட்டு ஒரு லிட்டர் தண்ணீர் குடித்து விட்டு மேலோட்டமாய் டிவி செய்திகளை ஐந்து நிமிடம் பார்த்து விட்டு அருகே இருக்கும் மைதானத்தில் ஐந்து கிலோ மீட்டர் தூரம் நடப்பது அவருடைய நீண்ட கால வழக்கம். அன்றும் அப்படித்தான் அதிகாலையில் மேலோட்டமாய் டிவி செய்திகளைப் பார்க்க ஆரம்பித்தார். ஆனால் ஐந்து நிமிடம் பார்ப்பது போய் அது அரை மணி நேரத்திற்கும் அதிகமாக நீண்டது. காரணம் அவருக்கு ... Read More »
அமானுஷ்யன் – 96
January 22, 2015
மது வேகமாக காரை ஓட்டிக் கொண்டிருந்தான். அவனருகில் வருணும் பின் சீட்டில் ஆனந்தும் சாரதாவும் அமர்ந்திருந்தார்கள். சாரதா சோகத்துடன் பின் கண்ணாடி வழியாக வந்த வழியையே பார்த்துக் கொண்டிருந்தாள். இளைய மகன் பற்றிய பயம் அவளை மறுபடியும் பிடித்துக் கொண்டது. ஆனந்தின் மனம் தாயின் சோகத்தைப் பார்த்து ரணமானது. “பயப்பட அவசியமே இல்லைம்மா. அவன் சீக்கிரமே வந்து விடுவான்”-அவன் தாயைத் தைரியப்படுத்தினான். சாரதா முழுவதும் நம்பிக்கை ஏற்படா விட்டாலும் தலையாட்டினாள். ஆனால் அவள் கண்களில் லேசாய் நீர் ... Read More »
அமானுஷ்யன் – 95
January 22, 2015
ராஜாராம் ரெட்டியின் செல் போன் சமய சந்தர்ப்பம் தெரியாமல் இசைத்தது. இந்த நேரத்தில் யார் என்று யோசித்தபடி செல்லை எடுத்துப் பார்த்தார். இரண்டு நிமிஷங்களுக்கு முன்னால் அவர் அக்ஷயின் தாயைக் கடத்த கட்டளை இட்ட வேன்காரன் தான். ‘இவ்வளவு தெளிவாகச் சொன்னோமே இன்னும் என்ன சந்தேகம் இவனுக்கு’ என்று எண்ணியவராக பேசினார். “ஹலோ. என்ன?” “சார். ஆறேழு கார், வேன்களில் பத்திரிக்கைக்காரர்களும், டிவிக்காரர்களும் எங்களுக்கு முன்னால் அங்கே வந்து கொண்டிருக்கிறார்கள். இப்போது தான் எங்களைக் கடந்தார்கள்…” ராஜாராம் ... Read More »