ஸ்டோன் ஹென்ஜ் உலகின் தீரா மர்மங்களில் ஸ்டோன் ஹென்ஜ் முக்கியமான ஒன்றாகவே கருதப்படுகிறது. தோராயமாக இதன் வயதை 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கணித்திருக்கிறார்கள். இன்றைய பிரிட்டனின் மிகப்பழமையான புராதனச்சின்னங்களில் இதுதான் முதலிடம் என்பது கூடுதல் சிறப்பு. ஸ்டோன் ஹென்ஜ் பார்க்க எண்ணி பயணீத்தீர்களேயானால், ஒரு சில மலைகளைத் தாண்டிச் செல்லும் பயணத்தில் திடீரென இந்த அமானுஷ்ய இடத்துக்குள் நுழைவீர்கள். இந்த இடத்தின் மயான அமைதியும், வீசும் வித்தியாசமான காற்றும் உங்களுக்குள் ஒரு மர்மத்தாக்கத்தை நிச்சயம் உண்டாக்கும். இது ... Read More »
Category Archives: தொடர் கதை
உலகின் தீரா மர்மங்கள் – 2
March 2, 2015
மர்மங்கள் என்று எடுத்துக்கொண்டால் இவ்வுலகம் முழுவதும் விதவிதமாக கொட்டிக்கிடக்கும். பல மர்மங்களில் ஒரு சில காலப்போக்கில் விடை காணப்பட்டிருக்கின்றன. ஆனால் சில மர்மங்கள் பலவிதமான ஆராய்ச்சிகளுக்குப் பின்னரும் இன்னமும் விடையின்றி தீரா மர்மங்களாகவே நீடித்துக்கொண்டிருக்கின்றன. இந்த தீரா மர்மங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று இணையத்தை அலசினால் வியத்தகு தகவல்கள் வந்து வியாபிக்கின்றன. உடனே இதைப்பற்றி பகிர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தின் விளைவு மட்டுமே இந்தப் பதிவே தவிர மற்றபடி இதை மூடநம்பிக்கையை வளர்ப்பதாகவோ, வேறு எந்த ... Read More »
உலகின் தீரா மர்மங்கள் – 1
March 1, 2015
பயிர் வட்டங்கள் 2012 வரை தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த பயிர் வட்டங்கள் ஒரு சுவாரசியமான மர்மங்கள். விளைந்திருக்கும் பயிரில் ஒரே இரவில் ஏதோவொரு அமானுஷ்ய சக்தி இதுபோன்ற உருவங்களை உருவாக்கிச் செல்வதாய் கதைகள் நீள்கின்றன. இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் இந்த பயிர் வட்டங்கள் தோன்றியிருக்கும் போதும் கிட்டத்தட்ட 80 சதவீதத்திற்கும் அதிகம் பதியப்பட்டிருப்பது இங்கிலாந்தில்தான். பெரும்பாலான உருவங்கள் ஒரே இரவில் மனிதர்கள் உருவாக்க சாத்தியமேயில்லாத முறையில் உருவாக்கப்பட்டிருப்பது இதன் மர்மத்தை மேலும் கூட்டுகிறது. இரவுப்பொழுதில் ... Read More »
நளதமயந்தி பகுதி-26
February 26, 2015
நெருப்பில்லாமல் சமைக்கிறான் என்றால், அவன் நிச்சயம் தன் கணவன் தான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டாள் அவள். நெருப்பினால் அவனுக்கு எந்த இடைஞ்சலும் வராது என்ற வரத்தைத் தந்த அதே அக்னி பகவான், நெருப்பின்றியே சமைக்கும் வரத்தையும் அவனுக்கு கொடுத்திருந்தார். இந்த விஷயம் தமயந்திக்குத் தெரியும். தன் தந்தையிடம் ஓடினாள். தந்தையே! இங்கே சமையல்காரராக இருப்பவர் என் கணவர் தான், என்று உறுதியாகச் சொன்னாள். இதைக்கேட்ட வீமராசன் மனம் பதைத்து சமையலறைக்கு ஓடினான்.நளனிடம்,உண்மையைச் சொல்! நீ யார்? உன் ... Read More »
நளதமயந்தி பகுதி-25
February 26, 2015
அரசே! இந்த ஆடையைப் போர்த்திக் கொண்டால் நீ உன் உண்மை உருவை அடைவாய். ஆனால், இப்போதைக்கு இதை அணியாதே. உன் நன்மைக்கே சொல்கிறேன். இனி நீ வாகுகன் (அழகு குறைந்தவன்) என அழைக்கப்படுவாய். இங்கிருந்து அயோத்தி செல். அந்நாட்டு மன்னன் இருதுபன்னனுக்கு தேரோட்டியாகவும், சமையல் காரனாகவும் இரு, என சொல்லி விட்டு மறைந்து விட்டது. நளனும் அயோத்தி வந்து சேர்ந்தான். அரசனை சந்திக்க அனுமதி பெற்றான். இருதுபன்னனிடம் பேசி சமையல்காரன் ஆனான். இதனிடையே கணவனைப் பிரிந்து தந்தை ... Read More »
இந்தியாவின் தீராத மர்மங்கள் – 3
February 25, 2015
என்னை ஆச்சர்யப்பட வைத்த விஷயங்களில் ஒன்று… இந்தியாவின் தீரா மர்மங்களைப்பற்றி ஆராயும்போது பெரும்பாலும் மரணங்களே அதில் வியாபித்திருப்பதுதான்… சஞ்சய் காந்தி… இந்திரா காந்தியின் இளைய மகன். அரசியலில் எவ்வித பதவியும் வகிக்காமலேயே அசுர வளர்ச்சியடைந்தவர். இவரது அண்ணன் ராஜீவ் காந்தி எந்தளவுக்கு அமைதியானவரோ அதற்கு நேரெதிர் சஞ்சய் காந்தி! தடாலடிப்பார்ட்டி என்றும் அடாவடிப்பார்ட்டி என்றும் பலவிதமான தகவல்கள் நிலவுகின்றன. நமது இன்றைய மாருதி-சுசூகி கம்பெனி இவரால்தான் நிறுவப்பட்டது என்பது நம்மில் பலர் அறிந்திருக்காத ஆச்சர்யச்செய்தி!. இந்திராகாந்தி 1975ல் எமெர்ஜென்சி பிரகடனம் ... Read More »
தியான யோக ரகசியம்-6
February 24, 2015
தியான யோக ரகசியம்! சத்-சித்-ஆனந்த வடிவினனான கடவுள் ஒருவர் இருக்கிறார் எனப் பூவுலகப் பெருமதங்கள் எல்லாம் ஒரே குரலில் பறைசாற்றுகின்றன. இவ்வுயரிய கடவுள் உங்களிலிருந்து அப்பாற்பட்டவர் அல்லர் என்று கூறும் என்னை நம்புங்கள். அவர் உங்களுக்கு வெகு அருகிலேயே இருக்கிறார். அவர் உங்களது சரீரக் கோவிலில், இதயக் குகையினுள் வாசம் செய்கிறார். உங்கள் மனத்தின் மௌன சாட்சியாக விளங்கும் அவர் உங்களின் அறிவுத்துறை வேலைகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார். மறை நூல்கள் தெரிவிக்கும் மிக உயரிய சக்தி ... Read More »
தியான யோக ரகசியம் செய்திகள் – 1
February 24, 2015
எது தியானம்? ஒரு பொருள், இறைவன் அல்லது ஆத்மனின் தொடர்ந்த சிந்தனைப் பெருக்கே தியானம். தைலதாரை போன்று கடவுளின், ஒரே எண்ணத்தைச் சதா மனதில் கொள்வதே தியானம். யோகிகள் அதைத் தியானம் எனத் தெரிவிக்கின்றனர். பக்தர்கள் பஜன் என்கின்றனர். ஒரு புள்ளி அல்லது பொருளின் மீது மனதை ஒன்றச் செய்வதே ஒன்றித்தல். இதைத் தொடர்ந்து தோன்றி நிற்கிறது தியானம். தியானத்திற்குரிய தேவைகள்: காலம்: அதிகாலையில் 4லிருந்து 6வரை தியானத்தை அப்பியசியுங்கள். இதுவே தியானத்தைப் பயிலுவதற்கான சிறந்த காலம். ... Read More »
இந்தியாவின் தீராத மர்மங்கள் – 2
February 22, 2015
இந்தியாவின் தீராத மர்மங்களில் இரண்டாவது இடத்தை லால் பகதூர் சாஸ்திரியின் மரணம்தான் பிடித்திருக்கிறது. லால் பகதூர் சாஸ்திரி இந்தியாவின் இரண்டாவது பிரதமர் என்பதைத்தவிர பெரும்பாலான விஷயங்கள் பலருக்குத் தெரியாது. அக்டோபர்-2, 1904ல் பிறந்த லால் பகதூர் சாஸ்திரி இந்திய சுதந்திரப் போராட்டக் காலங்களில் இண்டியன் நேஷனல் காங்கிரசின் குறிப்பிடத்தக்க தலைவர்களுள் ஒருவராய்த் திகழ்ந்தவர். சுதந்திர இந்தியாவின் நேருவின் அமைச்சரவையில் தொடர்ந்து பதவி வகித்த போதும், பெரிதாய் பரபரப்பாய் வெளியில் தெரியாத அமைதியான அரசியல்வாதியாகவே இருந்தவர். மே-27, 1964ல் ... Read More »
பக்தர்களை கொன்ற சாமியார்!!!
February 21, 2015
914 பக்தர்களை கொன்ற சாமியார் ‘ஜிம் ஜோன்ஸ்’ வசூல் ராஜா படத்தில் கமல் ஒரு வசனம் சொல்லுவார், ‘கடவுள் இல்லைன்னு சொல்றவனை நம்பலாம், கடவுள் இருக்குன்னு சொல்றவனையும் நம்பலாம், ஆனா நான் தான் கடவுள்ன்னு சொல்றவனை மட்டும் நம்பாதே’ என்று. இன்றும் சிலர் நான் தான் கடவுள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் நம் நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இருக்கிறார்கள். அவர்களையும் நம்பி இந்த நவநாகரிக உலகத்தில் கூட ஒரு கும்பல் சுற்றிக்கொண்டிருக்கிறது. இந்த ... Read More »