Home » அதிசயம் ஆனால் உண்மை » தொடர் கதை (page 39)

Category Archives: தொடர் கதை

மர்ம சந்நியாசி – 5

மர்ம சந்நியாசி – 5

இறுதியாக, சாட்சியங்களின் அடிப்படையில் நீதிபதி ஒரு பட்டியல் தயாரித்தார். மேஜோகுமாருக்கும் சந்நியாசிக்குமான ஒற்றுமை/வேற்றுமை பட்டியல் அது.   இந்த வழக்கு நடந்த சமயத்தில் கை ரேகைவியல் நிபுணத்துவம் அடைந்திருந்த போதிலும், வழக்கில் பயன்படுத்தப்படவில்லை. காரணம் சந்நியாசியின் கைரேகையை ஒப்பிட்டுச் சொல்வதற்கு மேஜோ ராஜாவின் கைரேகை கிடைக்கவில்லை. இப்போது இருப்பது போன்று டிஎன்ஏ-வை வைத்து உண்மையை கண்டுபிடிக்கும் முறை அன்று இருந்திருந்தால், பாவல் சந்நியாசியின் வழக்கு எளிதாக முடிந்துபோயிருக்கும். சாட்சியங்கள் சந்நியாசிக்கு ஆதரவாக இருந்தாலும் பிபாவதியின் வழக்கறிஞரான சவுத்ரி விடுவதாக ... Read More »

மர்ம சந்நியாசி – 4

கிரிக்கெட் விளையாடத் தெரியுமா? ஸ்டம்ப்ஸ் என்றால் என்ன? LBW என்றால் என்ன? Crease என்று எதைக் குறிப்பிடுகிறார்கள்? அம்பயர் என்பவர் யார்? டென்னிஸ் விளையாட்டில் டியூஸ் என்றால் என்ன? வாண்டேஜ்-இன் என்றால் என்ன? பில்லியர்ட்ஸ் விளையாட்டு என்றால் என்ன? கால்பந்து விளையாட்டில் cue half-back மற்றும் centre forward  என்றால் என்ன? அடுத்ததாக மேற்கத்திய ஆடைகளைப் பற்றியும் கேள்விகள் கேட்கப்பட்டன. மிலிட்டரி காலர் என்றால் என்ன? Lounge suit என்றால் என்ன? Chesterfield cloth என்றால் என்ன? அடுத்ததாக சாப்பாட்டு மேஜையில் வைக்கப்படும் ... Read More »

மர்ம சந்நியாசி – 3

ஜமீனின் மேலாளர் நீதாம் எழுதிய கடித்தின் ஒரு பிரதி, இறந்த மேஜோ குமாரின் மனைவியான பிபாவதி தேவிக்கு அனுப்பப்பட்டது. சத்திய பாபு உஷாரானான். அவன் சந்நியாசியைச் சந்திக்கவில்லை. மாறாக Secretary, Board of Revenue  – லேத்பிரிஜ் என்பவரைச் சந்தித்து மேஜோ குமார் இறப்பு குறித்த அரசு ஆவணங்களின் நகலைப் பெற்றான். அதை டாக்கா கலெக்டருக்கு அனுப்பிவைத்தான். சத்திய பாபு இவ்விஷயம் குறித்து, வைசிராய் கவுன்சில் உறுப்பினரான திரு. லீ என்பவரைச் சந்தித்தும் பேசினான். பின்னர் டார்ஜிலிங் சென்று, ... Read More »

மர்ம சந்நியாசி – 2

மேஜோ குமார் தனக்குப் பிரியமான ஃபுல்மாலா யானையின் மீது ஏறி வேட்டைக்கு செல்வோரை வழிநடத்திச் சென்றான். மரத்தின் உச்சியில் மறைவான கூடாரம் அமைக்கப்பட்டது. கீழே, புலியை வரவைப்பதற்காக மூன்று மாடுகள் கட்டப்பட்டிருந்தன. கூடாரத்தில் கிச்சனர் துரை துப்பாக்கியும் கையுமாக தயாராக இருந்தார். கூடவே மேஜோ குமார் மற்றும் வேட்டைக்குழுவை சேர்ந்தவர்களும் தயாராக இருந்தனர். ஆனால் புலிதான் வரவில்லை. கிச்சனர் துரை பொருத்து பொருத்துப் பார்த்தார், புலி வருவதாகத் தெரியவில்லை. வேறுவழியில்லாமல், அங்கு அப்பாவியாக வந்த ஒரு மானைச் ... Read More »

மர்ம சந்நியாசி – 1

ராஜ்குமார் இறந்துவிட்டார் என்று டார்ஜிலிங்கிலிருந்து பாவல் சமஸ்தானத்துக்கு தந்தி அனுப்பப்பட்டது. குடும்பத்துடன் கோடை விடுமுறையை கழிக்கச் சென்ற பாவல் ஜமீனின் இரண்டாவது ராஜகுமாரன். ராஜ்குமார் ராமேந்திர நாராயண ராய் என்பது முழுப்பெயர்.  மேஜோ குமார் என்றும் அழைக்கப்படுவார். பாவல் ஜமீன் டார்ஜிலிங்கிலிருந்து நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஜமீனைச் சேர்ந்தவர்கள், குடும்ப உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் என்று யாரும் இன்னும் வந்து சேரவில்லை. இன்னும் அவர்களுக்குத் தந்தியே கிடைக்கவில்லை. இருப்பினும் இறந்த இராஜ்குமாரை அவசரமாக அடக்கம் செய்ய ஏற்பாடு ... Read More »

பேய்கள் ஓய்வதில்லை – 33

பெரும் பாறைக்கற்கள் தன் மீது பறந்து வருவதைக் கண்டு மிரண்டு கிரானைட் குவாரி இருக்கும் திசையில் ஓடினான் ரெட்டி. செல்வியின் மீது இருந்த ப்ரவீணா  அதைக் கண்டு கெக்கலித்து சிரித்தாள். ஏய் ரெட்டி! என்னை எப்படி கதற கதற கற்பழித்து கொன்றாய்? உன் பணத்திமிரும் ஜாதி வெறியும் இப்போது எங்கு போயிற்று! முடிந்தால் உன்னை காப்பாற்றிக் கொள்!  என்று கத்தினாள். ரெட்டியால் ஒன்றும் பேச முடியவில்லை! அவன் நிற்கும் போது மேலே பறந்து வந்த கற்கள் அவனை ... Read More »

பேய்கள் ஓய்வதில்லை – 32

அவனுக்கு சாவு மணி அடித்து விட்டது என்று எக்காள சிரிப்புடன் சொன்ன செல்வியை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் முகேஷ். அதே நேரம் கொண்டபள்ளியின்  மிகப்பெரிய வீடு ராமையா ரெட்டியின் வீட்டில் ஒரே அதகளமாக இருந்தது.  ஏமய்யா!  ஸ்வாமி காரு ஓச்சினாரா! என்று பரபரப்பாக பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர் வீட்டின் முன் அந்த பழைய அம்பாசிடர் வந்து நின்றது. அதிலிருந்து சுவாமிஜி மெல்லிய சிரிப்புடன் இறங்கினார். வாங்கோ சுவாமிஜி! நீங்க தான் எங்க ஐயாவை காப்பாத்தனும்! ரெண்டு ... Read More »

பேய்கள் ஓய்வதில்லை – 31

தாயே என்னை மன்னித்து விடு என்று காலில் விழுந்தவனை ஆவேசத்துடன் பார்த்தாள் ப்ரவீணா. அன்னிக்கு நானும் இப்படித்தானே கதறினேன்! என்னை விட்டு விடுங்கள் என்று சொன்னேனே கேட்டீர்களா? கதற கதற கற்பழித்து கொன்றீர்களே? தாயே! அப்படி நடக்கும் என்று கனவிலும் நினைக்க வில்லை! நான் அந்த வீட்டை வாடகைக்கு விட்டவன். என்னிடம் ஏமாற்றி விட்டார்கள். வீட்டை கொடுத்ததை தவிர வேறு எந்த பாவமும் அறியாதவன் நான். செல்வி எகத்தாளமாய் சிரித்தாள். அதனால் தான் பாவமன்னிப்பு கேட்கிறாயா? போ! ... Read More »

பேய்கள் ஓய்வதில்லை – 30

குஹாத்ரி மலையின் மாலைப்பொழுது மிகவும் ரம்யமாக இருந்தது. ஒன்றிரண்டு குயில்கள் கூவ சில்லென்று மலைக்காற்று வீசிக் கொண்டிருக்க சூரியன் அஸ்தமனத்திற்காக மேற்கில் மறைந்து கொண்டிருந்தான். குஹாத்திரி மலையில் பழனி ஆண்டவர் வடிவமாக வீற்றிருக்கும் அந்த தண்டபாணி கோயிலின் முன் வாசலில் சுவாமிஜியின் எதிரில் நின்று கதறி அழுது கொண்டிருந்தான் ரவி! சுவாமிஜி! என்னை மன்னிச்சுருங்க! எனக்கு பேய் எல்லாம் பிடிக்கலை! என்னோட அக்காவை கொன்னவங்களை பழிவாங்கத்தான் இப்படி பேய் பிடிச்சா மாதிரி நடிச்சேன். ஆனா என் துரதிருஷ்டம் ... Read More »

பேய்கள் ஓய்வதில்லை – 29

அந்த அதிகாலை வேலையிலும் ப்ரவீணாவின் தாய் பொன்னம்மாளுக்கு வியர்த்துக் கொட்டியது. மகளைக் காணாது தவியாக தவித்தாள்.எங்கு சென்றிருப்பாள் ஒருவேளை மகேஷுடன் எங்காவது ஓடிப் போய் விட்டாளோ? கடவுளே அப்படி ஏதும் நடந்து விடக்கூடாது! அப்புறம் ஊரில் தலைக்காட்ட முடியாது. நமக்குப் போய் இந்த நிலை வரவேண்டுமா? என்று அவள் நெஞ்சம் குமுறிக்கொண்டிருந்தது. விடிந்ததும் ஒவ்வொருவராய் விசாரிக்க ஆரம்பித்து விடுவார்களே? என்ன பதில் சொல்வது. அவள் கலங்கி நின்றபோதுதான் பக்கத்து ஊர் தர்காவின் ஓதுதல் காதில் ஒலித்தது. ஒரே ... Read More »

Scroll To Top