பிறவி மர்மங்கள் – முகவுரை “Many Lives Many Masters” – உண்மை நிகழ்வுகள் மட்டுமே கொண்ட ஒரு நூல். DR.Brian Weiss – என்ற பெயருடைய மன நல மருத்துவர் 1988-ல் எழுதி வெளிவந்தது. என்னால் முடிந்தவரை மொழி பெயர்க்க முயற்சி செய்கிறேன். இனி புத்தகத்திற்கு செல்வோம். முகவுரை நமது வாழ்க்கையில் ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஏதாவது ஒரு காரணம் உண்டென்பது எனக்குத் தெரியும். ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடந்தால் அது ஏன் நடக்கிறது, பிறகு என்ன ... Read More »
Category Archives: தொடர் கதை
பேய்கள் ஜாக்கிரதை – 5
March 8, 2015
திங்கட்கிழமை மதியம். நரேன் எங்களெல்லாரையும் அழைத்து வைத்து அமைதியாக நிற்கிறான். அவன் முகத்தில் ஒரு படபடப்பு குவிந்திருக்கிறது. கொஞ்சம் நடுக்கத்துடன் தன் செல்லில் எடுத்து வைத்திருந்த புகைப்படத்தைக் காட்டினான். காட்டிவிட்டு எங்களனைவரையும் மேலும் கீழும் பார்த்தான். பின்பு வேகமாக எல்லோரையும் இழுத்துக் கொண்டு அந்தக் கட்டடச் சுவர் பக்கம் ஓடினான், “என்ன எழுதியிருக்கு , வாசி….” “என்னடா நரேன் . அதேதானே இது?” “டேய் சிவா.. நல்லாப் பாருடா. நாங்க எழுதுன தமிழில எழுத்துப்பிழை இருக்கு. இப்போ ... Read More »
பேய்கள் ஜாக்கிரதை – 4
March 8, 2015
நானும் அருளும் நரேனைக் குண்டுக்கட்டாகத் தூக்கிக்கொண்டு வருகிறோம். கூடவே பதட்டமாகவும் குழப்பமாகவும் மற்றவர்கள். நரேனுடன் அறையிலிருக்கும் ரத்னகுருவுக்கே ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தான். உள்ளே கொண்டு சென்று கட்டிலில் கிடத்தினால், நரேன் ஏதோ எல்லாம் தெரிந்த ஞானி மாதிரி எதையோ வெறித்து விழித்துக்கொண்டிருக்கிறான். அர்ஜுன் பயத்தோடும் பதட்டத்தோடும் கேட்டான், “டேய் என்னடா ஆச்சு…. இவனுக்கு என்ன ஆச்சு? எங்க இருந்தான்?” ரத்னகுரு சொன்னான், “அர்ஜுன், ஒரு பத்து நிமிஷம் முன்னாடி நான் எந்திரிச்சு பாத்ரூம் போகப் போனேன். எழுந்தப்பவே ... Read More »
பேய்கள் ஜாக்கிரதை – 3
March 8, 2015
நீண்ட நிசப்தத்துக்குப் பிறகு, தூரத்தில் ஒரு கட்டைக் குரல் கேட்டது. படக்கென்று அர்ஜுன் விழித்தெழுந்தான். புதுக்கட்டடத்தின் திசையிலிருந்து அவனுக்குக் குரல் கேட்கிறது. “நரேன், நரேன் ….. ராகேஷ்.. ராகேஷ்…. இது உங்களுடைய இடம் இல்லை. எங்களுடைய இடம்.. நரேன்.. ராகேஷ்..” தூக்கிவாரிப்போட்டது அவனுக்கு. மிகத் துல்லியமாக வந்தது குரல். இதே விஷயத்தைத் தொடர்ந்து இரண்டு மூன்று முறை சொன்னது. அர்ஜுன் வியர்த்துப் போனான். சுற்றிப் பார்க்கிறான். மற்ற அனைவரும் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். அர்ஜுன் சித்தார்த்தை உலுக்கி ... Read More »
பேய்கள் ஜாக்கிரதை – 2
March 8, 2015
தூரத்தில் மருதமலை உச்சியில் கொழுந்து விட்டு எரியும் ஜுவாலை தெரிந்தது. முருகன் படிக்கட்டுகள் பாதி மலையிலேயே முடிந்துவிடும். அதற்கும் மேலே யாரும் அறியாத மலை உச்சிக்காடுகளில் பல இரவுகள் இபடிப் பற்றி எரிவதைப் பார்த்திருக்கிறோம் எங்கள் மொட்டை மாடியிலிருந்து. சிலர் காட்டுத்தீ என்கிறார்கள். அங்கே ஆதிவாசிகள் இருப்பதாகவும் ஒரு பேச்சு உண்டு. கைலாசம் மாதிரி ஆட்கள் மூலம் சில பேய் விளக்கங்களும் உண்டு. இந்தப் பேச்சின் தொடர்ச்சியோடு, பற்றி எரியும் நெருப்பைப் பார்க்கையில், அந்த மண்டை ஓட்டுப் ... Read More »
பேய்கள் ஜாக்கிரதை – 1
March 8, 2015
குப்பையோடு குப்பையாக இருளில் அந்த மண்டை ஓடு விகாரமாக வாய் பிளந்து கிடந்தது. கட்டடம் கட்ட அஸ்திவாரம் தோண்டின போது தட்டுப்பட்டதாம். அதன் உடலில் இருந்து பிரித்துக் குப்பையில் வீசிவிட்டிருக்கிறார்கள். சுடுகாட்டின் மேல் எழும்பிக் கொண்டிருக்கும் கட்டடம். எங்கள் துறைக்காக அரசுப் பணத்தில் புதுசாய் விரசாய் எழும்பிக் கொண்டிருக்கிறது. நேராக அந்த மண்டை ஓட்டின் பார்வை படும் திசையிலேயே கட்டடச் சுவரில் கரியில் எழுதியிருக்கிறது அந்த வாக்கியம். பத்தடி தூரத்தில் வாட்ச்மேன் கைலாசம் தாத்தா கடிகாரத்தில் மணி ... Read More »
மர்ம சந்நியாசி – 9 : இறுதி அத்தியாயம்
March 8, 2015
வங்காளத்தின் பிரபல அரசியல் தலைவரும் மேற்கு வங்காளத்தின் முதலமைச்சருமான திரு பி.சி.ராய், பன்னாலால் பாசுவைத் தன்னுடைய அமைச்சரவையில் கல்வி அமைச்சராகவும், நில வருவாய் துறை அமைச்சராகவும் பணியாற்றும்படி கேட்டுக்கொண்டார். பன்னாலால் பாசு, ஜமீன்தார் முறை ஒழிய வேண்டும் என்ற கருத்து கொண்டவர். அவருடைய ஜமீன் எதிர்ப்பின் ஆர்வத்தில் உருவானதுதான் வங்காள நில சீர்திருத்தச் சட்டம். 1955ம் ஆண்டு பன்னாலால் பாசு அவர்களால் இந்தச் சட்டம் இயற்றப்பட்டது. பன்னாலால் பாசுவின் உடல் நலம் சரியில்லாத காரணத்தால், அவரால் பி.சி.ராயின் ... Read More »
மர்ம சந்நியாசி – 8
March 8, 2015
நீதிபதி ஒரு விஷயத்தில் மிகவும் உறுதியாக இருந்தார். சுரேந்திர சக்ரவர்த்தி அளித்த அறிக்கையை அப்படியே ஏற்றுக் கொள்ளமுடியாது. தரம் தாஸ், சுந்தர் தாஸ் போன்ற பெயர்களை வட நாட்டில் பலரும் வைத்திருக்கிறார்கள். இவைகளெல்லாம் பொதுப் பெயர்கள். சுரேந்திர சக்ரவர்த்தியின் அறிக்கையில் கண்டுள்ள விவரங்கள் உண்மையானதுதான் என்பதை நிரூபிக்க தனிப்பட்ட சாட்சிகளை விசாரித்தாக வேண்டும் என்று சொல்லிவிட்டார். டாக்கா வரை வந்து சாட்சியம் சொல்லமுடியவில்லை என்றாலும் பரவாயில்லை, சாட்சிகள் லாகூரிலேயே விசாரணை கமிஷன் முன்னர் ஆஜராகி சாட்சியம் அளிக்கலாம் ... Read More »
மர்ம சந்நியாசி – 7
March 8, 2015
மேஜோ குமாருக்கு ஏற்பட்ட அறிகுறிகளை வைத்தும், ஏனைய மருத்துவர்களின் சாட்சியத்தை வைத்தும் மேஜோ குமாருக்கு என்ன நடந்தது என்று நீதிபதி தன்னுடைய தீர்ப்பில் பின்வருமாறு தெரிவித்திருக்கிறார். ‘மேஜோ குமார் முதலில் அஜீரணக் கோளாறால் அவதிப்பட்டிருக்கிறார். பின்னர் அவருக்குத் தாங்கமுடியாத வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. பின்னர் சம்பவம் நடந்த அன்று காலை மேஜோ குமார் வாந்தி எடுத்திருக்கிறார். அதைத் தொடர்ந்து அவருக்கு அடிக்கடி வயிற்றுப் போக்கு ஏற்பட்டிருக்கிறது. அதிகமாக நீர்ச் சத்து வெளியேறியதால் உடல் இயக்கம் பாதிக்கப்பட்டிருக்கிறது. ரத்தப் ... Read More »
மர்ம சந்நியாசி – 6
March 8, 2015
நீதிமன்றத்தில் மேஜோ குமாரின் மரணம் அல்லது மரணமாகக் கருதப்படும் சம்பவத்தைக் குறித்து இரு வேறு கதைகள் முன்வைக்கப்பட்டன. ஒன்று சந்நியாசியின் கூற்று. இன்னொன்று எதிர் தரப்பான பிபாவதியின் கூற்று. மேஜோ குமார் டார்ஜிலிங்கில் இருக்கும்போது நல்ல ஆரோக்கியத்துடன் தான் இருந்தான். சிப்பிலிஸ் நோய்க்குகூட முறையான மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டு அந்த நோயிலிருந்து மீண்டான். டார்ஜிலிங்கில் இருக்கும்போது தினந்தோறும் காலையில் போலோ விளையாடச் செல்வான். மாலை வேலைகளில் ஸ்னூக்கர், பில்லியர்ட்ஸ் விளையாடுவான். சந்நியாசி நீதிமன்ற சாட்சிக் கூண்டில், மேஜோ ... Read More »