பக்கென்று பயம் இவன் நெஞ்சை அடைத்தது.. இவன் பார்க்க பார்க்க.. அவர்கள் பக்கத்தில் வந்து கொண்டிருந்தார்கள்… அவர்கள் நடந்து வருகிறார்களா இல்லை பறந்து வருகிறார்களா என்று கூட தெரியவில்லை… ஆனால் நடப்பது போல சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டே இருந்தது… தன்னைப் பார்த்துத்தான் வருகிறார்களோ… எப்படி தப்பிப்பது….. என இவன் யோசிக்கும் முன்னே.. அவர்கள் அருகிலேயே வந்து விட்டார்கள்.. இவனுக்கு மூச்சை அடைப்பது போன்று இருந்தது… மயக்கம் வருவது போல இருந்தது… பயத்துடனே பார்த்துக் கொண்டிருந்தான்.. ஆனால்… ஆனால்… ... Read More »
Category Archives: தொடர் கதை
திடுக்கிடும் திருப்பங்கள் – 4
March 14, 2015
அவன் ஒன்றும் புரியாதவனாய் ஒரு வித அதிர்ச்சியுடன் நின்று கொண்டிருந்தான். மீண்டும் ஏதோ நினைத்தவனாய் கிணற்றுக்குள் எட்டிப்பார்த்தான். இப்போது சற்று நேரம் முன்பிருந்த தண்ணீரைக் காணவில்லை. சிலை கீழே படுத்தவாறு வானம் பார்த்துக்கொண்டிருந்தது. உள்ளே இருந்த சிலையின் முகத்தை இப்போது தான் கவனித்தான். அது இவன் முகமாய் இருந்தது… ஆம்… இது இவனுடைய சிலையே தான்… அப்போ… அப்போ… என்னையே நான் துரத்தினேனா…!!! ஏன்…? எப்படி….? எதற்கு…..? ஒன்றுமே விளங்காமல் இவன் நின்ற பொழுது… ‘சரக்’ ‘சரக்’ ... Read More »
திடுக்கிடும் திருப்பங்கள் – 3
March 14, 2015
இவனுக்கு ஒன்றுமே புரியவில்லை… மனம் முழுவதும் பயம் ஆக்கரமிப்பு செய்திருந்தது.. சுற்றி சுற்றி இங்கும் அங்கும் பார்த்தான். ஒரு பறவை கூட கத்தாமல்.. அந்த இடமே மனித நடமாட்டமில்லாத மயானம் போல் கண்ணில் பட்டது. திடீரென சுற்றுப்புறம் முழுதும் ஒரு இருள் சூழ்ந்தது.. இப்பொழுது தானே விடிந்தது… அதற்குள் என்ன இருட்டு…?!?!? என நினைத்துக் கொண்டு இருக்கும் போதே…. இவன் நினைவுகள் பின்னோக்கி சென்றது… சிறுவயதில் அடிக்கடி இவனுக்கு ஒரு கனவு வரும். இவன் எப்போதும் பாயில் ... Read More »
திடுக்கிடும் திருப்பங்கள் – 2
March 14, 2015
சட்டென்று ஒரு சில்லென்ற உணர்ச்சி…. பார்த்தால் அவன் பாயில் படுத்திருந்தான்… அவன் வீட்டிலே… அப்போது… இதுவரை கண்டதெல்லாம் கனவா..?!?? குழம்பிய சிந்தனையுடன் வீட்டை விட்டு வெளியே வந்தான்.. வீட்டிற்கு முன்னே அவனது ஒற்றைச்செருப்பு அவனைப் பார்த்து பல்லிளித்தது… அப்போ… இன்னொரு செருப்பு… படபடவென வந்தது அவனுக்கு… தனியாய் இருப்பவனுக்கு தடை போட யாருண்டு… நேற்று கனவிலே யாரையோ துரத்தியவன் இன்று தன் கனவினைத் துரத்த ஆரம்பித்தான்.. கனவில் கண்ட அதே ஒத்தையடிப்பாதை அவனை வரவேற்றது… பகலில் கூட ... Read More »
திடுக்கிடும் திருப்பங்கள் – 1
March 14, 2015
நிலவிற்கும் பயம் வந்து ஒளிந்து கொண்டதோ என்னவோ….. இருட்டோ இருட்டு.. இல்லை ஒரே கும்மிருட்டு எங்கெங்கு காணினும்… அமாவாசை இரவு….. அந்த அமானுஷ்ய அமைதியை குலைக்கும் வகையில் “சரக்” “சரக்” “சரக்” “சரக்” என்ற சத்தம் எங்கிருந்தோ மெதுவாக ஆரம்பித்தது…. அது சிறிது சிறிதாக அபாயகரமாக கேட்கத்துவங்கியது…. இரண்டு கால்கள்… இல்லை இல்லை நான்கு கால்கள் ஓடிக்கொண்டிருந்தன… காலணி அணியாத இரண்டு கால்களை காலணி அணிந்த இரண்டு கால்கள் துரத்திக்கொண்டிருந்தன… சட்டென வழியில் படுத்திருந்த இரண்டு தவளைகள் ... Read More »
தங்கத் தண்டு – 21 இறுதி அத்தியாயம்
March 12, 2015
சுரங்கத்தின் மறு பாதை தனகிரி தாண்டிப் போகும். அங்கிருந்து புதுச்சேரி போய், சுற்றி வளைத்து கடல் மார்க்கமாய் இலங்கை சென்று தப்பித்த விக்டர் மார்ஷல் இப்போது தனியார் விமானத்தில் ஜூடி பக்லே என்ற விமானியுடன் பசிபிக் கடலிலுள்ள எரிமலைத் தீவுக்கு போய்க் கொண்டிருக்கிறான். நூற்று இருபது கிலோ எடையில் ராட்சசன் போல் இருந்த ஜூடி பக்லே கள்ளமறியாதவன். பணத்துக்காக விக்டர் மார்ஷல் ஏவிய வேலைகளைச் செய்து கொண்டிருந்தான். விக்டர் எரிமலைக் குழம்பு வருகிற வழியில் பள்ளம் வெட்டச் ... Read More »
தங்கத் தண்டு – 20
March 12, 2015
தனகிரி – தாமரைக்குளம் அந்தரீஸ், நரேன், சுதர்சனா மூன்று பேரும் நின்றிருந்தனர். மேலே பொதி பொதியாய் மேகங்கள்; கீழே தண்ணென்று பூத்த தாமரைகள்… “ என்ன மேடம், நீங்க பாட்டுக்கு புராணக் கதையில வர்ற மாதிரி நாதா, எனக்கு தாமரைப் பூக்களைப் பறித்துத் தருகிறீர்களான்னு கேட்டு இங்க கொண்டு வந்து நிறுத்திட்டீங்க! ” அந்தரீஸ் பேச்சை ஆரம்பித்தான். “படத்தைப் பாருங்க ! தாமரைப் பூக்களை கண்டு பிடிச்சுட்டோம்! முதலையை கண்டு பிடிக்கணும்! ” என்றாள் சுதர்சனா. “ ... Read More »
தங்கத் தண்டு – 19
March 12, 2015
அம்பல சித்தர் குகையிலிருந்து வெளி வந்தனர் சுதர்சனாவும் நரேனும் அந்தரீஸும். விக்டர் மார்ஷலின் ஒரே நோக்கம் ரசவாத ரகசியம்தான். அது பத்திரமாக இருக்கிறது; அம்பல சித்தர் குகைக்கு மட்டுமல்ல; இரண்டு மலைகளுக்கிடையில் அவன் வந்ததற்கான அறிகுறியே இல்லை ! ஆனால் தனகிரிக்கு வந்திருக்கிறான்; காட்டுவாசிகளை கொன்றிருக்கிறான் ! ஏன்? இப்போது எங்கிருக்கிறான்? என்ன ஆனான்? சுதர்சனா நரேனிடம் கேட்டாள், “சார், ரிது அகோரிகள் கிட்ட மாட்டிக்கிறதுக்கு முன்னாடி அவ கூட்டத்தோட எங்க தங்கியிருந்தா? ” “தனகிரிக்குப் பின்பக்கம், ... Read More »
தங்கத் தண்டு – 18
March 12, 2015
நரேன் மேல் தன் உடம்பு அழுந்த படுத்திருந்தாள் ரிது ! அறைக்குள் ஒரே ஒரு ஜன்னல் வழியாக வெளிச்சமும் குளிர்காற்றும் வந்து கொண்டிருந்தது. நரேன் ஜன்னல் கதவை முழுதும் சாத்தினான் ! அறைக்குள் புழுக்கம் அதிகரித்ததால் ரிது அவனை விட்டு விலகி கட்டாந்தரையின் சில்லிப்பை விரும்பி அங்கு சென்று படுத்துக் கொண்டாள் ! தனக்கு மட்டும் காற்று வரும்படி லேசாக ஜன்னலை திறந்த நரேன், கன்னத்தை துடைத்துக் கொண்டு வசதியாகப் படுத்துக் கொண்டான்………. அவன் மனிதன்தானே? விடிந்தது. ... Read More »
தங்கத் தண்டு – 17
March 12, 2015
அந்தரீஸுக்கும் மூச்சுத் திணறியது. நிலத்தில் போட்ட மீனாகத் திணறி முடித்தான். அவன் வாய் திறக்க முயற்சித்த அதே விநாடி… ஒரு கை அவன் மூக்கையும் வாயையும் பொத்தி குளத்தின் அடித்தரைக்கு இழுத்துப் போனது! அடித்தரையில் அவனைப் படுக்க வைத்து வாயோடு வாய் வைத்து காற்றை ஊதி மூச்சு திணறலை சரிப்படுத்திய பின் திரும்பவும் மூக்கையும் வாயையும் பொத்தியது! இரவு பத்து மணி இருக்கலாம். ரிது நரேனின் மடியில் கை போட்டு கதையளந்து கொண்டிருந்தாள். நரேன் தன் சுபாவத்துக்கு ... Read More »