தன்னுடைய பாக்கெட்டைத் தடவிப் பார்த்தபோது டைரி மற்றும் சில பொருட்கள் அப்படியே இருப்பதைப் பார்த்து நிம்மதியடைந்தார். அந்த டைரியை டிராகுலா பிரபு பார்த்திருந்தால் கண்டிப்பாக அதை அழித்திருப்பார். அந்த டிராகுலா கோட்டையைப் பற்றி தன்னுடைய குறிப்புகளைப் பார்த்திருந்தால் ஒருவேளை தன்னுடைய உயிருக்குக்கூட ஆபத்தை உண்டாக்கியிருக்கலாம். எப்படியோ உயிர் தப்பியது அதிர்ஷ்டம்தான். இரவு முழுவதும் நடந்த நிகழ்ச்சிகளை ஒன்றன்பின் ஒன்றாக கோர்வையாக நினைத்துப் பார்த்தபோது, அந்த அழகிகள் பற்றிய நினைவு மனதை அலைக்கழித்தது. இரவில் பார்த்த அந்த சம்பவம் ... Read More »
Category Archives: தொடர் கதை
ரத்த காட்டேரி – 11
March 17, 2015
கன்னங்கரிய விழிகளும் புறாவின் மூக்கைப் போன்று நீண்டு வளைந்த மூக்கையும் கொண்டு மாநிறத்தில் இரண்டு பெண்கள் தோற்றமளித்தனர். மற்றொருத்தி வீனஸ் தேவதைபோல அப்படி யொரு அழகியாகத் தென்பட்டாள். பவளம் போன்ற அதரங்களும் பளபளக்கும் பளிங்கு வரிசைப் பற்களுமாக அவர்களைப் பார்த்த மாத்திரத்தில் அவருக்குள் ஏதோ ஒரு விசை இழுக்க, தன்னை அவர்கள் முத்தமிடமாட்டார்களா என்று ஏங்கினார். அப்போது தன்னுடைய நேசத்திற்குரிய காதலி மினாவைக்கூட அவர் மறந்துவிட்டார். அந்தப் பெண்கள் இவரைப் பார்த்து அச்சமயம் வாய்விட்டுச் சிரித்தனர். அந்தச் ... Read More »
ரத்த காட்டேரி – 10
March 17, 2015
அதன்பிறகு அந்த பிரம்மாண்டமான படிக்கட்டுகளில் ஏறி கோட்டையின் மேல்புறத்தை அடைந்தார். மேலே இருந்து பார்த்தபோது கோட்டைக்கு வெளிப்புறம் கரிய இருள் சூழ்ந்து காணப்பட்டது. ஆயினும் அங்கே இருக்கும் சுதந்திரம் இங்கே இல்லை என்பது மனதை நெருடியது. எதேச்சையாக கோட்டையின் இன்னொருபுறம்நோக்கி உற்று கவனித்தபோது, நிலவின் வெளிச்சத்தில் தெரிந்த அந்தக் காட்சி விசித்திரமாக இருந்தது. அந்த மாடிப்பகுதியின் தெற்குப் பக்கமாக ஏதோ ஒன்று அசைவதுபோலத் தெரிந்தது. அந்த இடம் டிராகுலா பிரபுவின் அறையிலிருந்து முன்புற முற்றத்தை நோக்கிய பகுதிதான் ... Read More »
ரத்த காட்டேரி – 9
March 17, 2015
அவரது கையானது எதேச்சையாக ஜோனாதன் கழுத்தில் அணிந்திருந்த ஜெபமாலையில் பட்டுவிட்டது. விறுக்கென தீயைத் தொட்டதுபோல கைகளைப் பின்புறமாக இழுத்துக் கொண்டார். அதன்பின்பு மெல்ல தன்னை இயல்பு நிலைக்கு கொண்டுவர டிராகுலா பிரபு முயன்றார். “எப்பொழுதும் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். காயம் ஏற்படாமல் மிகவும் கவனமாக நடந்துகொள்ள வேண்டும். வீண் ஆபத்தை அது விளைவிக்கக் கூடும்” என்று யதார்த்தமாகப் பேசுவது போல டிராகுலா பிரபு பேசினார். அதே சமயம் சட்டென்று அந்த ஜன்னல் கம்பியில் ... Read More »
ரத்த காட்டேரி – 8
March 17, 2015
இங்கிலாந்தில் டிராகுலா பிரபு வாங்க முடிவு செய்திருந்த அந்த எஸ்டேட், பேர்பிளீஸ் என்ற இடத்தில் ஏறத்தாழ இருபது ஏக்கர் பரப்பைக் கொண்டது. கருங்கல் சுவர்களால் நான்குபுறமும் கட்டப்பட்ட அந்த இடத்திற்குள் “ஃபோர் ஃபேசஸ்’ என்ற புராதன காலத்து பங்களா ஒன்று இருந்தது. அந்த பங்களாவையும் நிலப்பகுதியையும் வெவ்வேறு கோணங்களில் புகைப்படங்கள் எடுத்து ஜோனாதன் அவருக்காகக் கொண்டு வந்திருந்தார். இங்கிலாந்திலுள்ள தனது நண்பர் ஹாக்கின்ஸுக்கு கடிதம் எழுதி இதற்குரிய ஏற்பாட்டினைச் செய்திருந்தார் டிராகுலா பிரபு. அந்த இடத்தை முறைப்படி ... Read More »
ரத்த காட்டேரி – 7
March 17, 2015
ஜோனாதன் மறுநாள் மிகவும் தாமதமாகவே படுக்கையிலிருந்து எழுந்தார். இரண்டுநாள் பயணக் களைப்புக்கு நிம்மதியான உறக்கம். காலைக்கடன்களை முடித்துக் கொண்டு சாப்பாட்டு அறைக்கு வந்தார். அவருக்காக பிரபு டேபிள்மீது வைத்துவிட்டுப் போயிருந்த கார்டு ஒன்றை எடுத்து வாசித்தார். “எனக்காகக் காத்திருக்க வேண்டாம். கொஞ்ச நேரத்திற்கு இங்கு இருக்கமாட்டேன். – டிராகுலா.’ டேபிளில் இருந்த சுவையான சிற்றுண்டியை எடுத்து வயிறுமுட்டச் சாப்பிட்டார் ஜோனாதன். சாப்பிட்ட பின்பு அந்த டேபிளைச் சுத்தம் செய்ய வேலைக்காரர் யாரையாவது அழைக்கலாம் என்று நினைத்தார். அதற்கான ... Read More »
ரத்த காட்டேரி – 6
March 17, 2015
பிரபு கடிதத்தை வாங்கி கவனத்துடன் வாசித்துவிட்டு, ஜோனாதனிடமே கொடுத்து வாசிக்கும்படி கூறினார். ஜோனாதன் வாங்கிப் படித்தபோது கடிதத்தின் ஒரு பகுதியில் தன்னைப் பற்றிய வாசகங்களையும் கண்டார். “தொலைதூரப் பயணம் செய்ய முடியாதபடி வாத நோயால் கடுமையாக நான் பாதிக்கப்பட்டுள்ளேன். எனக்கும் தங்களுடைய நாட்டுக்கு வரமுடியாது போனது வருத்தம்தான். இருந்தபோதிலும் என்னுடைய முழுமையான நம்பிக்கைக்குரிய ஒரு பிரதிநிதியை உங்களிடம் அனுப்பி வைத்திருக்கிறேன். ஜோனாதன் ஹார்க்கர் மிகுந்த கெட்டிக்காரர் மட்டுமின்றி விசுவாசமானவரும்கூட. தெளிந்த தீர்மானமான முடிவை எடுப்பதில் வல்லவர் இவர். ... Read More »
ரத்த காட்டேரி – 5
March 17, 2015
ஒன்றும் புரியவில்லை. என்ன செய்வது என்றும் தெரிய வில்லை. நடுக்கமும் வியர்வையும் வழிய நின்று கொண்டிருந்த அவர் தன்னுடைய நிலை இப்படியாகி விட்டதே என்று வருந்தினார். தான் லண்டனில் இருப்பதாகவும் தனக்கு நேர்ந்ததெல்லாம் ஒரு கனவுதான் என்பது போல நினைக்கத் தோன்றியது. நடந்த உண்மை கனவாக முடியாதே! வழக்கறிஞர்களின் உதவியாளர் களுக்கெல்லாம் தன்னைப் போன்ற நிலைமைதானா? தான் இப்போது டிரான்சில்வேனியாவின் கார்பெத்தியன் மலைப் பகுதியில்தான் இருக்கிறோம் என்ற நிஜம் அவரை பயங்கொள்ளச் செய்தது. பொழுது விடியும்போதுதான் இந்தக் ... Read More »
ரத்த காட்டேரி – 4
March 17, 2015
அப்போது எதிர்பாராத நேரத்தில் அச்சம்பவம் நிகழ்ந்தது. பளீரென ஒருவித நீலநிற வெளிச்சமானது அந்த வண்டிக்கு இடதுபுறமாகத் தோன்றியதுதான் தாமதம், அந்த வண்டிக்காரர் படக்கென வண்டியிலிருந்து இறங்கி எங்கேயோ மறைந்து காணாமல் போய்விட்டார். ஜோனாதனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. எவ்வித அசைவுமின்றி அப்படியே உட்கார்ந்திருந்தபோது, ஓநாய்களின் சத்தம் மெல்லக் குறைந்தது. அப்போது அந்த வண்டிக்காரர் திரும்பவும் அங்கே வந்து சேர்ந்தார். மீண்டும் பயணம் தொடர்ந்தது. இதே சம்பவம் திரும்பத் திரும்ப நிகழ்ந்தபோதும் ஜோனாதனுக்கு ஏதும் புரியவில்லை. கடைசி முறையாக ... Read More »
ரத்த காட்டேரி – 3
March 17, 2015
ஜோனாதன் அப்படிப் பார்ப்பதை வண்டிக்காரர் பார்த்துவிட, “அய்யா உங்களை அழைத்துக்கொண்டு செல்ல வேண்டிய வண்டி ஒன்றும் காணவில்லையா? அப்படியென்றால் உங்களை யாரும் எதிர்பார்க்க வில்லை என்றுதானே அர்த்தம். எல்லாம் நல்லதுதான் அய்யா. இதே வண்டியிலேயே இப்போதே புக்கோவினாவுக்கு திரும்பிப் போய் விடுங்கள். நாளைக்காவது நாளை மறுநாளாவது வேண்டுமானால் நாம் திரும்பி வருவோம். அதுதான் உங்களுக்கு நல்லது” என்று வண்டிக்காரர் கூறினார். அச்சமயம் அந்த வண்டிக்காரர் மேலும் ஏதோ பதில் சொல்ல வாய் திறந்தபோது, சாரட்டில் பூட்டப்பட்டிருந்த குதிரைகள் ... Read More »