பிசாசின் அந்தக் குரூரக் கவர்ச்சியில் ஆர்தரைப் பொறுத்தமட்டில் ஒரு மயக்கத்துக்கு ஆட்பட்டிருந்தார். ஆர்தரும் தன் கைகளை அவளுக்கு நேராக நீட்டினார். அந்தப் பிசாசு அவரது கைகளைப் பற்றுவதற்கு முன்னோக்கிப் பாய்ந்தபோது, ஹென்சிங் அவர்களுக்கு நடுவே குதித்து தன்னிடமிருந்த தங்கச் சிலுவையை உயர்த்திக் காட்டினார். அதைப் பார்த்ததும் லூசி பயந்து பின்னோக்கி நகரத் தொடங்கினாள். பயமும் பயங்கரமும் நிறைந்த முகத்தில் கோபம் சிதற, கல்லறைக்குள் நுழைந்து தப்பித்துவிட ஓடினாள் லூசி. கல்லறையின் வாசலுக்கு முன்னால்வரை வந்தவள் இரண்டடி தொலைவிலேயே ... Read More »
Category Archives: தொடர் கதை
ரத்த காட்டேரி – 21
March 17, 2015
அவ்வாறு சொல்லி முடித்த ஹென்சிங் லாந்தர் விளக்கின்மீது கருமையான துணி ஒன்றைப் போட்டு மூடினார். அப்போது இருள் சூழ்ந்து ஒருவித பயங்கரம் ஏற்பட்டது போலிருந்தது. “வாருங்கள். இனி நாம் வெளியே செல்வோம்” என்று கூறினார். எல்லாரும் அவரைப் பின்தொடர்ந்து கல்லறைக்கு வெளியே வந்தபோது ஹென்சிங் தன்னுடைய கைப்பையைத் திறந்து அதிலிருந்து ரொட்டித் துண்டுகள் சிலவற்றை எடுத்து வெள்ளைத் துணி ஒன்றில் முடிந்தார். பின்னர் இரண்டு கைகளிலும் வெண்மையான ஏதோ ஒரு பொருளை எடுத்தவர் அதை ரொட்டித் துண்டுகளுடன் ... Read More »
ரத்த காட்டேரி – 20
March 17, 2015
ஹென்சிங் சவப் பெட்டியை நெருங்கி அந்த மூடியைக் கழற்றி பழையபடி ஈயத் தகட்டின் இருபுறத்தையும் நீக்கியபோது, திகைப்பும் ஆச்சரியமும் பீதியும் ஏற்பட்டது. டாக்டர் ஹென்சிங் உடல் முழுவதும் மின்சாரம் பாய்ச்சியது போல உணர்ந்தார். சவ அடக்கச் சடங்கு நடைபெறுவதற்கு முதல்நாள் இருந்தது போலவே லூசியின் தோற்றம் அப்போது காணப்பட்டது. இன்னும் சொல்லப் போனால் அதைவிட அழகாகவும் கவர்ச்சியாகவும் காணப்பட்டாள். அந்த அழகான- கருஞ்சிவப்பான உதடுகளையும் கவர்ச்சி கரமான கன்னக் கதுப்புகளையும் பார்த்தால் அவள் இறந்து விட்டது போலவே ... Read More »
ரத்த காட்டேரி – 19
March 17, 2015
ஒருவழியாக ஜோனாதன் டிராகுலா கோட்டையிலிருந்து தப்பித்து காதலி மினாவிடம் வந்து சேர்ந்துவிட்டார். டிராகுலா பிரபுவைப் பற்றிய பயம் முற்றிலும் அகன்று விட்டது. அதுபோலவே லண்டனுக்கு வந்துவிட வேண்டும் என்ற டிராகுலா பிரபுவின் நோக்கமும் நிறைவேறிவிட்டதை ஜோனாதன் உணர்ந்தார். இதற்கிடையில் லூசியின் மரணம் குறித்து அறிந்து மிகவும் வேதனைப்பட்டார் ஜோனாதன். அந்த டிராகுலா பிரபுவை வேட்டையாடத் தகுந்த ஒரே மனிதர் டாக்டர் ஹென்சிங்தான் என்று ஏனோ அந்த நேரத்தில் ஜோனாதனுக்குத் தோன்றியது. அதே சமயத்தில் டாக்டர் ஹென்சிங்கும் டாக்டர் ... Read More »
ரத்த காட்டேரி – 18
March 17, 2015
அச்சமயம் ஒரு ஊழியர் கேப்டனை நோக்கி மோதுவதுபோல ஓடிவந்து, மற்றொரு ஊழியரும் அன்று காணவில்லை என்று பதட்டத்துடன் கூறினார். மேலும் கப்பல் திசைமாறிப் போய்க் கொண்டிருப்பதாகவும் கூறினார். அவர்கூறியது உண்மைதான் என்பதை கேப்டனும் கண்டறிந்தார். அன்றைக்கு நள்ளிரவானதும் சுக்கான் பகுதியில் நின்றவரை ஓய்வெடுக்க அனுப்பிவிட்டு கேப்டனே அந்தப் பணியை மேற்கொண்டார். பலத்த காற்று வீசிக் கொண்டிருந்த அச்சமயம், ஒரு ஊழியர் கேப்டனிடம் வந்து மெல்ல காதில் சொன்னார்: “அதை நான் தெளிவாகப் பார்த்துவிட்டேன். அது நமக்கு மிக ... Read More »
ரத்த காட்டேரி – 17
March 17, 2015
மினா தன்னுடைய காதலரைப் பற்றிய அந்தரங்கமான விஷயங்களை தன்னுடைய தோழி லூசியுடன்தான் எப்போதும் பகிர்ந்து கொள்வது வழக்கம். லூசியும் தன்னுடைய காதலர் டாக்டர் ஆர்தரைப் பற்றி பேசுவதால் இருவரின் பேச்சிலும் ஒரு சுவாரஸ்யம் இருக்கும். அவர்கள் இதற்காக அவ்வப்போது கடற்கரைப் பக்கம் செல்லுவ துண்டு. அந்தக் கடற்கரையை ஒட்டி ஒரு மாதா கோவிலும் கல்லறையும் தென்படும். இந்தக் காட்சி மிக ரம்மியமாக அவர் களுக்குத் தோன்றுவதால் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப் பார்கள். ஒருமுறை அப்படி அவர்கள் கடற்கரையில் ... Read More »
ரத்த காட்டேரி – 16
March 17, 2015
அதைத் திறக்கும் சாவி பிரபு அறையில்தான் இருக்க வேண்டும். ஜன்னல் வழியாக எப்படியாவது பிரபுவின் அறைக்குள் சென்றாக வேண்டும். ஒருவேளை இந்த முயற்சியில் பிரபு தன்னைக் கொல்வதாக இருந்தால்கூட பரவாயில்லை. இந்த மரணாவஸ்தை யிலிருந்து உடனடியாக மீள வேண்டும் என்று முடிவு செய்தார். கருங்கல் சுவர் வழியாக ஊர்ந்து இறங்கினார். பிரபுவின் அறையை அடைந்தபோது அந்த அறை காலியாக இருந்தது. அந்த நேரத்தில் டிராகுலா பிரபு எங்கே போயிருப்பார் என்று யூகிக்க முடிந்தது. ஜோனாதன் நேராக மயானப் ... Read More »
ரத்த காட்டேரி – 15
March 17, 2015
அதே சமயம் மிகுந்த பரபரப்புடன் ஜோனாதன் தன்னுடைய பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு அவரது அறையிலிருந்து வெளியேறி சற்றுத் தொலைவு வந்தபோது, அவருக்கு முன்பாக ஏராளமான ஓநாய்கள் உரத்த சத்தமுடன் ஊளையிட்டதைக் கண்டு அப்படியே அதிர்ந்துபோய் நின்றுவிட்டார். இது முழுக்க முழுக்க டிராகுலா பிரபுவின் ஏற்பாடுதான் என்பது விளங்கியது. அதன்பின்பு எதுவுமே நடக்காததைப்போல முன்னால் சென்ற டிராகுலா பிரபு அந்த கருங்கல் கோட்டையின் தாழ்ப்பாளை நீக்கிக் கதவைத் திறந்தபோது, ஓநாய்கள் கூட்டம் கூட்டமாக கதவின் முன்புறம் அணிதிரள ஆரம்பித்தன. ... Read More »
ரத்த காட்டேரி – 14
March 17, 2015
மற்றவர்கள் யாவரும் விழித்திருக்கும் பொழுதுகளில் தான் உறங்குவதும் அவர்கள் உறங்கும் நேரத்தில் தான் விழித்திருப்பதும் டிராகுலா பிரபுவின் பழக்கமாக இருந்தது. பகல் நேரத்தில் டிராகுலா பிரபுவை எத்தனை முயன்றும் பார்க்க முடியவில்லை. எப்படியாவது அவரை பகல் நேரத்தில் அவரது அறைக்குள் நுழைந்து பார்த்துவிட வேண்டும் என ஜோனாதன் முடிவு செய்தார். டிராகுலா பிரபு ஜன்னல் வழியாக பல்லி மாதிரி ஊர்ந்து செல்வாரே- அதுபோலவே தானும் செல்ல வேண்டியதுதான். ஆபத்தான முயற்சிதான் அது என்றாலும், அதனை எப்படியாவது செயல்படுத்திப் ... Read More »
ரத்த காட்டேரி – 13
March 17, 2015
மாடிப்படிகள் வழியே வேகமாக ஏறிச் சென்று, மேலே இருந்து அந்த குதிரை வண்டிக்காரர்களை சத்தம் போட்டு அழைத்தபோது, அவர்கள் அவரைப் பார்த்து தங்களுக்குள் கேலியாக சிரித்துப் பேசிக் கொண்டனர். அந்த வண்டி நிறைய நீண்ட சதுரப் பெட்டிகள் ஏராளமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்தக் குதிரைகள் அவற்றை மிகவும் சுலபமாக இழுத்துச் சென்ற தன்மையிலிருந்தே அவையத்தனையும் காலிப் பெட்டிகள் என்பது முடிவாயிற்று. அந்தப் பெட்டிகள் எல்லாவற்றையும் அந்த கோட்டையின் பின்புறத்திலுள்ள முற்றப்பகுதியில் அவர்கள் அடுக்கி வைப்பதையும் ஜோனாதன் பார்த்தார். ... Read More »