‘குவாண்டம்’, ‘குவாண்டம்’ என்று அறிவியலில் இப்போது அடிக்கடி பேசிக்கொண்டிருக்கிறார்கள். சிலர் அப்படியென்றால் என்னவென்றே தெரியாமல் இருந்தாலும் கூட, அதைப் பற்றிப் பேசிக் கொள்கிறார்கள். ஆனால், பலருக்குக் குவாண்டம் (Quantum) என்றால் என்னவென்று தெரியாது என்பதுதான் உண்மை. இன்றைய உலகிலும், இனி வரப்போகும் உலகிலும், குவாண்டம் தன் பங்கை முழுமையாகச் செலுத்தப் போகிறது. குவாண்டம் இல்லாமல் இனி எதுவுமே இல்லை என்ற நிலையும் வரப்போகிறது. வரப்போகிறது என்ன, வந்துவிட்டது. எனவே ‘குவாண்டம் என்றால் என்ன?’ என்பதை நாம் தெரிந்து ... Read More »
Category Archives: தொடர் கதை
வால்விழுங்கி நாகம் – 5
April 20, 2015
அர்ச்சனா சரியாகத் தூங்கி மூன்றாவது வாரம் இது. திட்டத்தின் படி கோபால் போய்ச்சேர்ந்ததும் சமிக்ஞை தரவேண்டும். ஆனால் தரவில்லை. வாரத்திற்கு ஒரு முறை எல்லாம் சரி என்று தகவலனுப்ப வேண்டும். எதுவுமே வரவில்லை. ரகசியமாக அந்தச் சமிக்ஞைகளை அனுப்ப முடியாமலும் போகலாம் என்பதால், என்ன ஆனாலும் மூன்று வாரத்திற்குள் திரும்பி விட உத்தரவு. நேற்றோடு மூன்று வாரக்கேடு முடிந்தது. இன்னும் திரும்பவில்லை. தண்ணீர் இருக்க வாய்ப்பு மிகவும் குறைவான ஒரு கருங்கிணற்றில் அப்பாவி ஒருவனை நீச்சலடிக்கத் தள்ளிவிடுவதைப்போல் ... Read More »
வால்விழுங்கி நாகம் – 4
April 20, 2015
கோபால் நிச்சயம் வருவான் என்று எண்பது பேர் கொண்ட அவளின் டீமுக்குத் தெரிந்திருந்தது. இவனுக்கான ஏற்பாடுகள் முன்னரே தயார் நிலையில் வைத்திருந்தனர். அர்ச்சனா அவனிடம் விளக்கிய ஒவ்வொரு வார்த்தையும் பல நூறு பக்க கணித சமன்பாடுகளாக உருப்பெற்றுக் கிடந்தது. ஏகப்பட்ட உபகரணங்களுடன் அந்த இடம் வயர்கள் செழித்து வளரும் வயல் போலிருந்தது. கருந்துளையைச் சுவிட்சர்லாந்தில் இருந்து வெற்றிட பெட்டியில் கொண்டு வந்தும் விட்டார்கள். எந்த இடத்தில் கருந்துளையில் நுழைகிறோமோ, ஐயாயிரம் வருடங்களுக்கு முன் அதே இடத்தில் இறங்குவோம். ... Read More »
வால்விழுங்கி நாகம் – 3
April 20, 2015
“கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆச்சு அது கருந்துளைதான்னு எங்களுக்குத் தெரிய. அதை அளவில் பெரிதாக்கவும், ஸ்திரமாக வைக்கவும் இத்தனை வருஷம் ஆகியிருக்கு. இப்போது ஒரு ஆள் அவனுக்குத் தேவையான பொருட்களோட நுழையும் அளவுக்குக் கொண்டு வந்தாச்சு!” “வார்ம்ஹோலின் ஒரு முனை இங்க இருக்கு சரி.. எதிர் முனை?” “அது எங்க கணக்குப்படி இன்னிலேர்ந்து ஐயாயிரம் வருஷத்துக்கு முன்னால் இறுத்தினா மட்டுமே சரிப்படும்னு தெரிஞ்சிருக்கு” ஐயாயிரம் வருடம் என்றதும் அவனுக்கு முதலில் சிந்து சமவெளி தான் நினைவுக்கு வந்தது. ... Read More »
வால்விழுங்கி நாகம் – 2
April 20, 2015
“வாங்க அர்ச்சனா.. கான்ஃபிரன்ஸ் முடிஞ்சதா?” “இல்லை.. ரொம்ப அறுவை.. அதான் நழுவி இங்க ஓடி வந்துட்டேன். நீங்க கிளாஸ்க்கு போகனுமா?” “இல்லை லஞ்சுக்குப் பிறகுதான்.. நீங்க சொல்லுங்க” “கேக்கணும்னு இருந்தேன். அன்னிக்கு பேசிட்டு இருந்தப்போ நீங்க ஒரு வார்த்தை சொன்னீங்க.. சிந்து நாகரிக மக்கள் பல ஆயிரம் வருஷத்துக்கு முன்ன எழுதி வச்சிட்டு போன விஷயங்களைப் படிச்சு புரிஞ்சிக்க என்ன வேணாலும் செய்வேன், எவ்வளவு தூரம் வேணாலும் போவேன்னு..” “அது ஒரு வார்த்தை இல்லை.. பல வார்த்தைகள்” ஒரு ... Read More »
வால்விழுங்கி நாகம் – 1
April 20, 2015
“சுமார் ஐயாயிரம் வருடங்களுக்கு முன் மிகவும் முன்னேறிய ஒரு சமூகம் இருந்தது.. அது அழிவற்றது என்று தன்னைப்பற்றியே எண்ணிக்கொண்டது” டாக்டர் பி.ஆர்.கோபால் (பிஎச்டி) தனது குறிப்புகளின் முதல் வரிகளை ஆயிரம் முறை படித்திருந்தாலும், அதன் மீது கண்கள் ஓடியதும், மனது தன்னையறியாமல் மறுபடி படித்தது. இந்த வருடம் புதிதாகச் சேர்ந்த மாணவர்களுக்கு மறுபடியும் முதலில் இருந்து வரலாற்றைச் சொல்ல வேண்டும். ஆனால் சிந்து சமவெளி நாகரிகம் அவனுக்கு அலுக்காத ஒன்று. சமயத்தில் அதைப்பற்றி ஆழமாக வேறு யாராவது பேசினாலோ ... Read More »
ஒரு மர்ம இரவு – 6
March 23, 2015
வீட்டிற்கு வந்தேன் அப்பா வாசலில் உட்கார்ந்து இருந்தார், என்னை கண்டதும் காலைல இருந்து எங்கடா போன என்றார், கிரிகெட் விளையாட போனம்பா என்று தயங்கி தயங்கி சொன்னேன், காட்டுல வேலை இருக்குனு நான் நேற்றைக்கே சொன்னேன் இல்ல… என்பேச்சை கேட்காம திரும்பவும் கிரிகெட் விளையாட போனியா ? என்று அப்பா கோபமாக கேட்டார், நான்தான் கடலைகொடி எல்லாம் பிடுங்கிட்டேன் இல்ல அப்புறம் என்ன என்றேன், என்னது கடலைகொடி எல்லாம் பிடுங்கிட்டியா? அப்போ நீதான் போய் அந்த கடலைச்செடி ... Read More »
ஒரு மர்ம இரவு – 5
March 23, 2015
மணி மூன்றாம் சாமம் நன்கு, நான் ஊருக்குள் நுழைந்தேன் மணியும் என்னோடு வந்தான், தெருவிளக்குகள் அயர்ந்த உறக்கத்தில் ஒளிர்ந்துகொண்டு இருந்தன, இரவெல்லாம் பறந்து பறந்து அலுத்துப்போன களைப்பில் விளக்கு பூச்சிகள் சோர்வாக தெருவிளக்கை சுற்றி பறந்துகொண்டு இருந்தன. ஒரு சிலர் விழித்துக்கொண்டு மாடு பால் கறந்துகொண்டு இருந்தனர். நான் வீட்டிற்கு சென்றேன் இன்னும் யாரும் எழவில்லை எல்லோரும் உறங்கிக்கொண்டுதான் இருந்தார்கள், நான் சத்தம் போடாமல் சென்று கட்டிலில் படுத்துகொண்டேன், எனக்கான காட்டுவேலையை நான் செய்துவிட்டேன் நாளைக்கு நான் ... Read More »
ஒரு மர்ம இரவு – 4
March 23, 2015
மருதேயன் கழுத்தில் முந்தாநாள் சாத்திய மாலை வாடி வதங்கி கிடந்தது, வரிசையாக குத்திவைக்கப்பட்டு இருந்த அம்புகளில் எலுமிச்சை பழம் குத்தி வைக்கப்பட்டு இருந்தது, திருநீறு வாசனை சுவாசத்தில் நுழைய நான் மருதேயன் கோவிலை கடந்து நடந்தேன், எனது உடம்பெல்லாம் வியர்வையும் மண்ணும் அப்பி இருந்ததால் குளிக்க முடிவு செய்தேன், பாதையின் அருகில் இருந்த ஒட்டன் கிணற்றுக்கு சென்றேன், கிணற்றில் தண்ணீர் நன்றாக சுரந்து கிடந்தது. துளைக்குழியில் நின்று கிணற்றை எட்டிப்பார்த்தேன், துளைகுழி என்றால் கிணற்றில் ஏத்தம் கட்டி ... Read More »
ஒரு மர்ம இரவு – 3
March 23, 2015
என்னை சுற்றி ஆளுக்குமேல் வளர்ந்த அடர்ந்த சோளக்காட்டு தட்டைகள் ஆட்களைபோலவே அமைதியாக அசைந்துகொண்டு இருந்தன, அந்த நெடுங்கரு இரவின் பிரவேச பொழுதில் எனக்கு துணையாக இருந்தது எனது மணியும், அந்த பால் நிலவும், எங்கள் வேல மரத்தில் இருந்த ஆந்தையும்தான் என்பதை தெளிவாக உறுதிசெய்து கொள்ளலாம். சோளகாடு, கடலைகாடு, மொச்சைக்காடு, துவரங்காடு, வரகுகாடு, கரும்புகாடு, குச்சிக்காடு, புடலங்காடு, அவரைக்காடு, மிளகாய் காடு, கத்தரிகாடு, தக்காளிக்காடு, எள்ளுக்காடு, கொத்தமல்லிக்காடு, கடுகுக்காடு, நெல்காடு, பூக்காடு, பன்னபூக்காடு, காவட்டம் புல்காடு, ஏரி ... Read More »