Category Archives: தொடர் கதை

தொலைநகலி!!!

பல அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் தொலைபேசியுடன் கூடவே அதைப்போன்ற வேறொரு கருவியும் உடன் இருப்பதைக் கண்டிருக்கலாம். இதுவே தொலை நகலி அல்லது ஃபேக்ஸ் எந்திரம் எனப்படுவது. தொலைபேசி மூலம் சேய்மையில் இருப்பவரிடமும் தொடர்பு கொண்டு பேச இயலும். எழுதப்பட்ட செய்தி எதையும் இதன் வாயிலாகப் பரிமாற்றம் செய்து கொள்ள முடியாது; ஆனால் தொலைநகலி வாயிலாக இது இயலும். எனவே வணிக உலகில் இந்த எந்திரம் மிகுந்த பயனுள்ளதாக விளங்குகிறது. இங்கிலாந்து நாட்டில் அலெக்சாண்டர் பெயின் (Alexander ... Read More »

பண்டைய நாகரிகங்கள் – 42

ரோம சாம்ராஜ்ஜியம் – மதமும் மனிதர்களும் மத நம்பிக்கைகள் ரோமர்களின் வாழ்க்கை யுத்தத்தையும், மத நம்பிக்கைகளையும் சுற்றியே சுழன்றது. தொட்டில் தொடங்கி, கட்டிலில் தொடர்ந்து, கல்லறை வரை சடங்குகள். குழந்தை பிறந்தால் பூஜை, பதினாறு வயதானதும் பூஜை, திருமணம் செய்தால், யுத்தம் தொடங்கினால், ஜெயித்தால், தோற்றால், மரணமடைந்தால் அனைத்துக்கும் பூஜைதான். ரோம் நகரத்தைப் படைத்த ரோமுலஸ், ரேயஸ் ஆகிய இருவருமே மார்ஸ் என்னும் போர்க் கடவுளின் வாரிசுகள்.  ஜூப்பீடர்  என்னும் சூரியன் தலைமை தெய்வம்.  இவரோடு,  கணக்கில்லாக் ... Read More »

பண்டைய நாகரிகங்கள் – 41

இசை, விளையாட்டு, குளியல், வாழ்க்கை ரோம நாகரிகம் (கி. மு. 753  – கி. பி. 476 ) வசதியுள்ளவர்களின் அன்றாட வாழ்க்கை     அதிகாலை விழிப்பு. ஏழைகளுக்கு அன்னதானம். தன் நிலபுலன், விவசாயம் பற்றி விசாரித்துத் தகுந்த நடவடிகைகள் எடுத்தல், அரசாங்கப் பணிகள். அன்றாட வேலைகள் இத்துடன் முடிந்தன. லேசான சாப்பாடு, கொஞ்சம் தூக்கம். இதற்குப் பிறகு பொதுக் குளியல் அறைகளில் வெந்நீர்க் குளியல், பூங்காக்களில் உலா, உடற் பயிற்சிகள், புத்தகங்கள் படித்தல். மறுபடி வெந்நீர்க் ... Read More »

பண்டைய நாகரிகங்கள் – 40

மாடல் நகரம் இரண்டாம் நூற்றாண்டில் ரோம்தான் மேற்கத்திய உலகின் பெரிய, சிறந்த நகரம். பிரம்மாண்டமான பொதுமக்கள் கூடும் இடம், அதைச் சுற்றி அரசுக் கட்டங்கள் எனச் சீராக வடிவமைக்கப்பட்டிருந்தது. பொது இடங்களுக்கு அருகே குறுகிய தெருக்கள். இந்தத் தெருக்களில், மக்கள், வியாபாரிகள், சாமான் தூக்கிச் செல்லும் அடிமைகள் என ஒரே நெரிசல். இந்தத் தெருக்கள் மனிதர் நடப்பதற்கே. எந்த வண்டிகளும் போகக்கூடாது. மக்கள் தீவுகளாக வாழவில்லை. சமுதாயக் கூட்டு வாழ்க்கை ரோமாபுரியின் பெருமைக்குரியச்   சின்னம். சந்தைகள், ... Read More »

பண்டைய நாகரிகங்கள் – 39

ரோம நாகரிகம் ரோம நாகரிகம் (கி. மு. 753  – கி. பி. 476 ) தனித்துவம் நாம் இதுவரை பார்த்த ஆறு நாகரிகங்களுக்குள் ஒரு ஒற்றுமை உண்டு. மெசபொடோமியா, எகிப்து, சீனா ஆகியவை பெரிய நாடுகள். மாயன் நாகரிகம் நடந்த இடம் இன்று ஐந்து நாடுகளாக இருக்கும் நிலப்பரப்பு. சிந்து சமவெளி சுமார் பதின்மூன்று லட்சம் சதுர மைல் பரப்பளவு. கிரேக்கம் நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட நகர ராஜ்ஜியங்கள் கொண்டது. ரோம நாகரிகம் தழைத்து வளர்ந்தது ரோம் ... Read More »

பண்டைய நாகரிகங்கள் – 38

எழுத்தும் கதையும் மாயர்களின் எழுத்து சித்திர எழுத்து என்ற வகையைச் சேரும். அதாவது வாசிக்கும் முறையில் இல்லாமல், பட அமைப்புடைய எழுதுதல் முறையை அடிப்படையாகக் கொண்டது. தமிழ் அகர வரிசை எப்படி வருகிறது? அ, ஆ, இ, ஈ, எ, ஏ என்று.  மாயர்கள் மொழியில் இவை எழுத்துக்களாக இருக்காது. படங்களாக இருக்கும். இப்படி மாயன் மொழியில் சுமார் 800 குறியீடுகள் இருந்தன.  எழுதக் கற்றுக் கொள்வது கடவுளின் ஆசீர்வாதத்தால் மட்டுமே நடக்கிற காரியம் என்று கருதப்பட்டது. ... Read More »

பண்டைய நாகரிகங்கள் – 37

கலையும் கலை சார்ந்த வாழ்வும் கி. பி. 250 –  900 காலத்தின் சிதிலம் அடைந்த கட்டடங்களை ஆராய்ச்சியாளர்கள்  கண்டுபிடித்திருக்கிறார்கள். எகிப்தின் பிரமிட் போன்ற கட்டடங்கள், மன்னர்களின் அரண்மனைகள், கோவில்கள் ஆகியவை மிகுந்த கலைநயத்தோடு விளங்குகின்றன. குறிப்பாக மனித வடிவங்கள் மிகவும் துல்லியமாகப் படைக்கப்பட்டுள்ளன. மாயர்கள் காலத்தில் மாடுகள், குதிரைகள் போன்ற உழைப்புக்குப் பயன்படும் மிருகங்கள் இருந்ததாக ஆதாரங்கள் இல்லை. அதனால், மனித முயற்சியும் உழைப்புமே இந்தக் கட்டடங்களை உருவாக்கப் பயன்பட்டன. கருங்கல், தண்ணீர் கலந்த சுண்ணாம்பு ... Read More »

பண்டைய நாகரிகங்கள் – 36

நாம் என்ன எண்முறை பயன்படுத்துகிறோம்? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. இவற்றின் முன்னோடியாக இந்தியா வழிகாட்டிய காரணத்தால், இந்த எண்கள் இந்து அராபிய எண்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த எண் முறையின் பெயர் தசாம்ச முறை (Decimal System). தசம் என்றால் பத்து. அதாவது, இந்தக் கணித முறை தச அடிப்படையைக் கொண்டது. அது என்ன தச அடிப்படை? உதாரணமாக 2875 என்ற எண்ணை எடுத்துக் கொள்ளுங்கள். ... Read More »

பண்டைய நாகரிகங்கள் – 35

மனித வாழ்க்கை முறையையும் வாழ்க்கைத் தரத்தையும் நிர்ணயிப்பதில், அவர்கள் வாழும் பகுதியின் வெப்ப தட்ப நிலை பெரும் பங்கு வகிக்கிறது. மாயர்கள் வாழ்ந்த பிரதேசத்தின் கீழ்ப்பகுதியைச் சுற்றி ஏராளமான சுண்ணாம்புக் கல் கிடைத்தது. இதனால், அந்த இடம் வெப்பம் அதிகமானதாக இருந்தது. எப்போதாவதுதான் மழை பெய்யும். தண்ணீர்த் தட்டுப்பாடுதான். மேற்குப் பகுதி வெப்ப நிலையில் நேர் மாறானதாக இருந்தது. இங்கே ஏராளமான மலைகள், பள்ளத்தாக்குகள்.  இந்தப் பிரதேசம் மழைக்காடு (rainforest) எனப்படும். அகண்ட இலைகளையுடைய உயரமான மரங்கள் ... Read More »

பண்டைய நாகரிகங்கள் – 34

மாய நகரம் மாயர்கள் நாகரிக வரளாற்றின் மைல்கற்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடும் நிகழ்ச்சிகள் இவைதாம்: *    கி. மு. 11000 மாயப் பகுதிகளில் மக்கள் முதன் முதலாகக் குடியேறத் தொடங்கினார்கள். இவர்கள் அக்கம் பக்க நாடுகளிலிருந்து வந்திருக்கலாம். இவர்கள் தங்கள் உணவுகளான காய்கறிகள், பழங்கள், பறவைகள், விலங்குகள் ஆகியவற்றை வேட்டையாடி, அவற்றைச் சமைக்காமல், பச்சையாகச் சாப்பிட்டு  வாழ்ந்தார்கள்.   *    கி. மு. 2000 மாய நாகரிகம் தொடங்குகிறது. மக்கள் வேட்டையை மட்டும் நம்பியிருக்காமல், விவசாயத்தில் ஈடுபடத் ... Read More »

Scroll To Top