Home » அதிசயம் ஆனால் உண்மை » அறிவியல் (page 17)

Category Archives: அறிவியல்

விரிவடையும் பிரபஞ்சம் மீண்டும் சுருங்குமா?

எந்த ஒரு வெடிப்பு நிகழ்ந்தாலும், வெடித்துச் சிதறும் பொருட்கள் வேகமாக நாலாப்பக்கமும் பரவலாக சென்று விழுவதைக் கண்டுள்ளோம். அவ்வாறு விழுவதற்குக் காரணம் பூமியின் ஈர்ப்புவிசை. ஈர்ப்புவிசை இல்லாத வெளியில் இந்த வெடிப்பு நிகழுமேயானால் என்னவாகும்? வெடித்துச் சிதறும் பொருட்கள் வெடிப்பின் வேகத்தில் தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கும்; கீழே விழாது. வேறு ஏதாவது ஒரு சக்தி தடுத்து நிறுத்தாவிட்டால் வேகமாய் செல்லும் பொருள் அதன் வேகத்தில் தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கும். வெளியில் நாம் ஒரு கிரிக்கெட் பந்தை மட்டையால் ... Read More »

சூரிய குடும்பம் – 4

இன்றைய தொடரில் சூரியனுக்கு மிக அண்மையிலுள்ள கோளான புதனைப் பற்றிய தகவல்களைப் பார்ப்போம். சூரிய குடும்பத்தில் புளூட்டோவை கிரகமாக ஏற்றுக் கொள்ளாவிட்டால் புதனே மிகச் சிறிய கோளாகும். புதன் சூரியனைச் சுற்றிச் மிக ஒடுக்கமான நீள் வட்டப் பாதையினூடாகச் சுற்றி வருகின்றது. பூமியைப் போலன்றி புதனுக்கு துணைக் கோள்கள் கிடையாது. எனினும் பூமியின் சந்திரனை ஒத்த இயல்புகள் புதனிலும் காணப்படுகின்றன. சந்திரனைப் போலவே புதனுக்கும் வளி மண்டலம் கிடையாது. மேலும் புதனின் தரை மேற்பரப்பில் சந்திரனைப் போலவே ... Read More »

வேற்று கிரகவாசிகள் ஓர் ஆய்வு!!!

இந்த பிரபஞ்சத்தில் பூமியன்றி, வேறு கோள்களில், உயிர்கள் இருக்கின்றனவா அல்லது நாம் மட்டும் இந்த பிரமாண்டத்தில் தனிமையில் இருக்கிறோமா என்ற கேள்வி அனைவரையும் கவர்ந்த ஒன்று. பிரபஞ்சத்தில் உயிர்கள் இருக்கின்றன, அதுவும் பல கோள்களில் இருக்க வாய்ப்பு உள்ளது என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். சில நூறு ஆண்டுகளுக்கு முன் ஒரு கண்டத்தில் இருக்கும் மனிதன், மற்ற கண்டங்களில் மனிதர்கள் வாழ்வது தெரியாமல் இருந்தான். அதுபோல நாமும் இப்பொழுது மற்ற கோள்களில் வாழும் உயிர்களைப் பற்றி அறியாமல் வாழ்கிறோமோ? ... Read More »

சூரிய குடும்பம் – 3

சூரியனிடமிருந்து 3 வது இடத்தில் அமைந்துள்ள கிரகமான பூமி பிரபஞ்சத்தில் உள்ள நன்கு அறியப்பட்ட உயிர் வாழ்க்கைக்கு உகந்த ஒரே கிரகமாக விளங்குகிறது எனலாம். சூரியனைச் சுற்றி அமைந்துள்ள நிலப்பரப்பை உடைய நான்கு கிரகங்களிலும் (Terrestrial Planets) மிகப் பெரியதான பூமி, ஏனைய எல்லா கிரகங்களிலும் மிகவும் அடர்த்தி கூடியதுடன் ஐந்தாவது மிகப் பெரிய கிரகமாகவும் விளங்குகின்றது. சூரிய குடும்பம் தோன்றக் காரணமாக அமைந்த சோலார் நெபுலா எனும் அடர்ந்த வாயுப் படலத்திலிருந்து இயற்கையான திரள் வளர்ச்சி ... Read More »

நூறு கோடி ஆண்டுகள் பழமையான நீர்!!

நூறு கோடி ஆண்டுகள் பழமையான நீர் பூமிக்கடியில் அதிகம் உள்ளது. பூமிக்கடியில் பல கிலோமீட்டர்கள் ஆழத்தில் 100 கோடி ஆண்டுகள் கணக்கில் பழமையான இப்படியான தண்ணீர் காணப்படுகிறது. 11 மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் என்ற அளவில் இந்த பழைய தண்ணீர் இருக்கலாம் என ஆய்வாளர்கள் தற்போது கணித்துள்ளனர். அதாவது உலகிலுள்ள அனைத்து ஆறுகள், ஏரிகள், குளங்கள் அனைத்திலும் இருக்கின்ற நீரை விட புவியின் மேற்பரப்புக்கு மிக ஆழத்தில் இருக்கின்ற இந்த பழைய தண்ணீரின் அளவு அதிகம். அமெரிக்கன் ... Read More »

சூரிய குடும்பம் – 2

சூரிய குடும்பம் – 2

சூரிய குடும்பம் 2 எனும் இத்தொடரில் வானில் சூரியனுக்கு அடுத்து ஓளி கூடிய பொருளாகத் தென்படும் பூமியின் உபகோளான சந்திரனைப் பற்றிய தகவல்களைப் பார்ப்போம். பூமியின் ஒரே ஒரு துணைக் கோளான சந்திரன் சூரிய குடும்பத்தில் ஐந்தாவது மிகப் பெரிய துணைக் கோளாகும். இது சூரியனில் இருந்து மிக அதிக தொலைவிலுள்ள ஒன்பதாவது கிரகமான புளூட்டோவை விட பெரியது என்பது குறிப்பிடத் தக்கது. சூரிய குடும்பத்தின் ஏனைய கிரகங்களை விட பூமிக்கு மிக அருகில் சந்திரன் உள்ளது. ... Read More »

பிரபஞ்சவியல்!!! –  பாகம் 4

பிரபஞ்சவியல்!!! – பாகம் 4

பிரபஞ்சவியல் எனப்படும் Cosmology——நான்கு நட்சத்திரப் பயணங்கள் தொடரின் புதிய அத்தியாயமான பிரபஞ்சவியலில் (Cosmology) தற்போது பிரபஞ்சத்தின் முக்கிய அம்சங்களான கரும் சக்தி மற்றும் கரும் பொருள் குறித்து ஆராய்ந்து வருகின்றோம். சென்ற தொடரில் கரும் பொருள் பற்றிய அடிப்படைத் தகவல்களைப் பார்த்தோம். இன்று இது பற்றிய மேலதிக தகவல்களையும் இதன் சிறப்புக்களையும் பார்ப்போம். பால்வெளி அண்டத்திலுள்ள கரும்பொருள் (The Amount of Dark Matter Inside Milkyway Galaxy) பிரபஞ்சத்தில் கரும் பொருள் சாதாரண கண்ணுக்குத் தெரியும் ... Read More »

சூரிய குடும்பம் – 1

சூரிய குடும்பம் – 1

இத்தொடரில் நமது பூமி அமைந்திருக்கும் பால்வெளி (Milky way)அண்டத்தின் உள்ளே உள்ள சூரிய குடும்பம் பற்றிய விபரங்களை பகிர்ந்து கொள்வோம். வட்ட உருளை எனும் (Disk) ஆகவும் உருளை எனப்படும் (sphere) ஆகவும் இரு பரிமாணங்களில் ஆராயப்படும் பால்வெளி அண்டம் 75 000 ஒளி வருடங்கள் நீளமான விட்டம் உடையது. கிட்டத்தட்ட 200 பில்லியன் நட்சத்திரங்களை உள்ளடக்கிய இப் பால்வெளி அண்டம் பிரபஞ்சத்தில் உள்ள ஏனைய அண்டங்களுடன் ஒப்பிடுகையில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தது. மேலும் நமது பால்வெளி ... Read More »

பிரபஞ்சவியல்!!! – பாகம் 3

பிரபஞ்சவியல் எனப்படும் Cosmology——3 நமது நட்சத்திரப் பயணங்கள் விண்வெளித் தொடரின் புதிய அத்தியாயமான பிரபஞ்சவியல் பகுதியில் முதல் இரண்டு தொடர்களிலும் கரும் சக்தி (Dark energy) பற்றிய சுருக்கமான மற்றும் தெளிவான விளக்கத்தைப் பார்த்தோம். இன்றைய தொடரில் அதன் ஜோடியான கரும் பொருள் (Dark matter) பற்றிய விபரங்களைப் பார்ப்போம். நாம் வாழும் பூமி உட்பட இந்த பிரபஞ்சத்தில் மிக அதிகளவு கனவளவைத் (74%) தன்வசம் கொண்டிருப்பது கரும் சக்தி. இதைப் போல் அதிகளவு திணிவைத் தன் ... Read More »

பிரபஞ்சவியல்!!! – பாகம் 2

பிரபஞ்சவியல் எனப்படும் Cosmology——2 நமது நட்சத்திரப் பயணங்கள் விண்வெளித் தொடரில் சென்ற வாரம் பிரபஞ்சவியல் எனும் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி இருந்தோம். அதில் இன்றைய விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியில் முதல் நிலை வகிப்பதும் அவர்களை மர்மத்தில் ஆழ்த்தி வருவதும் ஆன கரும் சக்தி (Dark Energy) எனும் அகில விரைவாக்கி அல்லது அசுர விலக்கு விசை குறித்த அடிப்படைத் தகவல்களைப் பார்த்தோம். இன்று அது குறித்து மேலதிக தகவல்களையும் இக் கரும் சக்தி எவ்வாறு பிரபஞ்ச அழிவுக்கு வழி ... Read More »

Scroll To Top