Home » அதிசயம் ஆனால் உண்மை » அறிவியல் (page 15)

Category Archives: அறிவியல்

ஹைடெக் சட்டை மற்றும் புளூடூத் கண்ணாடி

ஹைடெக் சட்டை மற்றும் புளூடூத் கண்ணாடி ஸ்காட்வெஸ்ட் நிறுவனம் உங்கள் சட்டையிலேயே நீங்கள் பயன்படுத்தக்கூடிய அனைத்து எலக்ட்ரானிக் பொருட்களையும் அதாவது செல்போன், மற்றும் பாக்கெட் கணிணி, கேமரா, இன்னும் என்னென்ன எலக்ட்ரானிக் கருவிகளை பயன்படுத்துகிறீர்களோ அத்தனையையும் பொருத்திக்கொள்ளும் வகையில் தயாரித்துள்ளது. PAN (Personal Area Network) என்றழைக்கப்படும் இந்த ஹைடெக் சட்டையில் வயர் மற்றும் வயர்லஸ் கருவிகளை உள்ளேயே பொருத்திக்கொண்டு நீங்கள் சாதாரணமாக உங்கள் பயணத்தைத் தொடரலாம். நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கலாம். கிட்டத்தட்ட 40 பாக்கெட்டுகள் வரை இதனுள் ... Read More »

அடுத்த தலைமுறை ஜி.பி.எஸ். சாதனங்கள்

ஜி.பி.எஸ். (Global Positioning System) என்றழைக்கபடும் சாதனங்கள், சாட்டலைட்டின் உதவியுடன், நம்மை வழி நடத்தும் சாதனங்களாக அறிமுகப்படுத்தப்பட்டன. அப்போது அவை தொழில் நுட்பத்தில் புதியதொரு புரட்சியையும், சாதனையையும் ஏற்படுத்தியதாக அறியப்பட்டன. அதன் பின்னர், பெரிய பளிச் என்ற திரைகளுடன், ஸ்மார்ட் போன்கள் வந்தன. ஜி.பி.எஸ். சாதன வசதிகளைக் குறைந்த விலையில் தரும் சாதனங்களாக இவை அமைந்தன. இவை இயக்குவதற்கு எளிதானதாகவும், ஜி.பி.எஸ். சாதனங்களைக் காட்டிலும் விலை குறைவாகவும் இருந்தமையால், மக்கள் ஜிபிஎஸ் வசதி கொண்ட ஸ்மார்ட் போன்களையே ... Read More »

தூக்கமின்மை ஒரு ‘டைம்பாம்’!

பின் தூங்கி முன் எழுவதை சிலர் பெருமையாகவே கூறிக்கொள்வது உண்டு. ஆனால் இது 6 மணி நேரத்திற்கும் குறைவாக போனால் மாரடைப்பு உள்ளிட்ட பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று அபாய சங்கை ஊதுகிறது ஆய்வு ஒன்று! “நீங்கள் என்ன உண்கிறீர்கள் அல்லது அருந்துகிறீர்கள் என்பது மட்டுமே உங்களது உடல் நலத்தை தீர்மானிக்கப்போவதில்லை; தூக்கமும்தான்!” என்று கூறுகிறார்கள் மருத்துவர்கள்! மாரடைப்பு உள்ளிட்ட இருதய சம்பந்தமான நோய்கள் குறித்து சமீப காலமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், தூக்கமின்மையும் அதற்கு ஒரு ... Read More »

சென்ஸார் உலகம் – 1. ஜாக்கிரதை… உங்களை சுற்றி சென்ஸார்

சென்ஸார் உலகம் – 1. ஜாக்கிரதை… உங்களை சுற்றி சென்ஸார்

ஒரு காலத்தில் தனி நபரின் நடவடிக்கைகளை அறிவதற்கு ஒற்றர்கள் அமைத்து நிழல்போல் பின் தொடர்ந்து விபரங்கள் சேகரிக்க வேண்டி இருந்தது. ஆனால் இன்று தகவல் தொடர்பு மற்றும் மற்ற தொழில் துறையில் ஏற்பட்ட அபார வளர்ச்சி நம்மைச் சுற்றி ஆயிரம் கண்கள். நாம் யாராலேயோ அல்லது எதனாலேயோ கண்காணிக்கப்படுகிறோம். பாதுகாப்பு மற்றும் திருட்டு தடுப்பு என்ற பெயரில் அங்கங்கு அமைக்கப்பட்ட சோதனை மற்றும் கண்காணிப்பு சாதனங்கள் நம் தனிமைகளை விலை பேச வந்துவிட்டன. தொழில் நுட்பம் வளர ... Read More »

அணுசக்தி பிறந்த கதை-1

இப்பிரபஞ்சத்தின் எந்த ஒரு ஜீவராசியும் செல் என்ற அடிப்படை அலகைக் கொண்டே உருவாகின்றது. எந்த ஒரு ஜடப்பொருளும் ஒரு சின்னஞ் சிறு அணு என்கிற அலகை அடிப்படையாகக் கொண்டே கட்டமைக்கப்படுகின்றது. அணு ஒரு உரோமத்தின் பருமனில் 10 லட்சத்தில் ஒரு பங்கு அளவிற்கு மிக மிகச் சிறியதான துகள்! ஒரு சாதாரண நுண்ணோக்கி மூலம் ஒரு ஊசி முனைப் புள்ளியில் ஒரு கோடி அணுக்களை நாம் காணமுடியும். இரசாயணக் கோட்பாடுகளின்படி ஒவ்வொரு பொருளின் அணுவும் அதற்கென ஒரு ... Read More »

ஆய கலைகள் 64 எவை? எவை?

1. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்) 2. எழுத்தாற்றல் (லிகிதம்) 3. கணிதம் 4. மறைநூல் (வேதம்) 5. தொன்மம் (புராணம்) 6. இலக்கணம் (வியாகரணம்) 7. நயனூல் (நீதி சாத்திரம்) 8. கணியம் (சோதிட சாத்திரம்) 9. அறநூல் (தரும சாத்திரம்) 10. ஓகநூல் (யோக சாத்திரம்) 11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்) 12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்) 13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்) 14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்) 15. ... Read More »

தொப்புள் கொடி

தொப்புள் கொடி

தொப்புள் கொடி என்பது தமிழகத்தைப் பொறுத்தவரை ரொம்ப சென்ஸிடிவான வார்த்தை!! “தொப்புள் கொடி உறவுகள்” நிறைய உண்டல்லவா நமக்கு. ”நிஜமான” தொப்புள் கொடி மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து வாசிக்க நேர்ந்தது. கிடைத்த சுவாரசியமான தகவல்களை இங்கும் பகிர்ந்து கொள்கிறேன். கருவில் உள்ள குழந்தைக்கு உயிர் ஆதாரம், வெளியுலகத் தொடர்பு என்று “எல்லாமே” தொப்புள் கொடிதான் என்று அறிவோம். சுருங்கச் சொன்னால், தொப்புள் கொடியின்றி அக்குழந்தை இல்லை.  முதலில் தொப்புள்கொடியின் வேலை என்ன என்று பார்ப்போம். பிறந்த ... Read More »

தொலை தொடர்பு கண்காணிப்பு

இன்றைய நவீன அறிவியல் ஆளுமை ஆட்கொண்ட உலகில் “தூரம்” என்ற வார்த்தை அகராதிகளில் காணாமல் போய் கொண்டிருக்கிறது. தூரம் என்பது வெகுதூரமாக இருந்து இப்பொழுது நம் கைக்குள் கொண்டு வந்ததற்கு தொலைத்தொடர்பு மிக உன்னத பங்கு வகிக்கிறது. ஒரு திரைப் படத்தில் நடிகரை இரட்டை வேடத்தில் காட்டுவார்கள். பொழுதுபோக்கு அம்சத்திற்காக எடுக்கப்பட்ட அந்த காட்சிகள் இப்பொழுது நிஜமாகப் போகிறது. “தொலை தோற்றம்” எனப்படும் அதிநவீன தொழில்நுட்பம். நீங்கள் இனிமேல் நியூயார்க்கில் நடைபெறும் ஒரு கருத்தரங்கிற்கு பாஸ்போர்ட், விசா ... Read More »

காகிதம் (பேப்பர்) பிறந்த கதை

காகிதம் (பேப்பர்) பிறந்த கதை – காகிதம் உருவான வரலாறு – History of paper making. எழுத்துக்கள் எப்படி தோன்றியிருக்கும் என்று எப்போதாவது சிந்தித்து பார்த்ததுண்டா நண்பர்களே., மனிதர்களின் நினைவாற்றலின் வலிமை ஒரு குறிப்பிட்ட எல்லையை கொண்டது, அதாவது மனிதனால் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு அனைத்து விசயங்களையும் நினைவில் வைத்துக்கொள்ள முடியாது. அந்த நினைவாற்றலின் எல்லையை தாண்டியும் சில தகவல்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்ட போது தோன்றியது தான் எழுத்து. அன்றைய அரசாங்கத்தின் ... Read More »

சூரிய குடும்பம் – 11

சூரிய குடும்பம் – 11

புளூட்டோவும் அதன் துணைக் கோள் சாரோனும் இன்றைய இறுதிப் பகுதியில் சூரியனிடமிருந்து 9 வது இடத்தில் அமைந்துள்ள விண் பொருளான புளூட்டோ பற்றி ஆராய்வோம். சூரியனைச் சூற்றி 17 டிகிரி சாய்வில் சுற்றி வரும் குறுங்கோளான புளூட்டோ தனது சுற்றுப் பாதையில் சூரியனிடமிருந்து நெப்டியூனை விட அண்மையாகவும் (29.7 Au) அதை விட சேய்மையாகவும் (49.5 AU) வலம் வருகின்றது. 1930 ஆம் ஆண்டு ‘கிளைடு டோம்பா’ எனும் வானியலாளரால் புளூட்டோ கண்டு பிடிக்கப்பட்டது. நெடுங்காலமாக கிரகம் எனக் ... Read More »

Scroll To Top